Wednesday, February 8, 2012

திண்டுக்கல் வேணு பிரியாணி. - கோவை

திண்டுக்கல் வேணு பிரியாணி.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தின் மேலே நல்ல இன்டீரியர் அமைப்புடன் இரண்டாவது கிளையை ஆரம்பித்துள்ள வேணு பிரியாணி ஹோட்டல் க்கு சென்றோம்.நல்ல விசாலமான இடம், நல்ல இண்டீரியர் டிசைன்  என ஹோட்டல் களை கட்டுகிறது.அதே சுவை , திண்டுக்கலில் சாப்பிட்ட அதே சுவை இங்கும் இருப்பது தனி சிறப்பே.கோலா உருண்டை, வஞ்சிரம் மீன், மட்டன் பிரியாணி , ஈரல் , நண்டு என அனைத்து வகைகளும் இருக்கின்றன.பார்சல் வாங்க தனி கவுண்டரே அமைத்து இருக்கின்றனர்.கார் பார்கிங் செய்ய 10  ரூபாய் தர வேண்டி இருக்கிறது, காரணம் கோவை மாநகராட்சி யின் பார்க்கிங் மேலே தான் இருக்கிறது.இவர்களுக்கு என்று தனி இடம் இல்லை.ஒவ்வொரு தடவையும் செல்லும் போது பார்க்கிங் செய்ய பணம் அழ வேண்டி இருக்கிறது.












 பர்ஸ் நல்ல கனமா இருக்கிறவங்க தாராளமா சாப்பிட போக கூடிய இடம் தான்.


2 comments:

  1. பர்ஸ் நல்லா கனமா இருக்குறவங்க தாராளமாக போய் சாப்பிட கூடிய இடம்தான்...,
    >>>>
    அப்போ உங்க பர்ஸ் ரொம்ப கனம்ன்னு சொல்லுங்க சகோ

    ReplyDelete
  2. அப்படி வேற இருக்கா......ராஜி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....