Thursday, July 28, 2011

பரளிக்காடு - பயணம் 2

நல்ல சுவையான உணவை உண்டு, கொஞ்சம் ஒய்வு எடுத்தோம்


இந்த செயல் பாட்டினை திறம் பட செயல் படுத்தி வரும் வன அலுவலர் திரு.ஆண்டவர் அவர்களிடம் விடை பெற்று கொண்டு ரசிது வாங்கி கொண்டு பின்னர் குளிப்பதற்கு சிறுகனாறு என்னும் ஆறு சென்றோம்.


அந்த ஆற்றின் நீரோட்டம் நல்ல இழுவை , வேகம் கொண்டது.அங்கு கூழாங் கற்கள் நிறைய உள்ளன.அதில் நல்ல ஒரு குளியல் போட்டோம்.அந்த ஆற்று நீர் மூலிகை கலந்த நீராம்.நல்ல புத்துணர்ச்சி ஏற்பட்டது.மேலும் அங்கு ஆதி வாசிகள் கும்பிடும் கோவில் ஒன்றும் உள்ளது.பின்னர் அங்கிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தோம்.ஒருநாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் பரளி.
பெரியவர்களுக்கு 300 மற்றும் சிறியவர்களுக்கு 100 வசூலிக்கிறார்கள்.இந்த தொகை ஆதிவாசிகளின் நலனுக்கு செலவு செய்கிறார்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, July 25, 2011

பரளிக்காடு -பயணம் 1

சனி அன்றே போன் பண்ணி பதிவு செய்து விட்டபடியால், ஞாயிறு காலை புதிய பயணத்தை தேடி சென்றோம்.என் வீட்டிலிருந்து 8 மணிக்கு கிளம்பி 8 .30 மணிக்கு காரமடை அடைந்தோம்.பின்னர் அங்கிருந்து தோலம்பாளையம் செல்லும் வழியில், தாயனுர் என்ற ஊரிலிருந்து வெள்ளியங்காடு செல்லும் ரோடு பிரிகிறது.அவ்வழியே சென்றால் வெள்ளியங்காடு ஊரை அடையலாம்.இதுதான் அடிவாரம்.முதல் செக்போஸ்ட் நம்மை வரவேற்கிறது .அனுமதி பெற்று மலை யில் பயணிக்கிறோம்.மொத்தம் 10 ஹேர் பின் வளைவுகள் இருக்கின்றன. 30 நிமிட பயணத்தில் பவானி ஆறு செல்லும் பாலம் அடைந்தோம்.


இந்த பவானி ஆறு சிறுகனாறு என்றும் சொல்லபடுகிறது.அங்கே காலை உணவை முடித்துவிட்டு (தயாராய் கொண்டு சென்றிருந்தோம் ) அங்கிருந்து மீண்டும் மலையில் ஏறி இறங்கினால் இரண்டாவது செக்போஸ்ட் வருகிறது.

அங்கேயும் அனுமதி பெற்று பரளி பரிசல் செல்லும் இடத்தினை 10 நிமிடத்தில் அடைந்தோம்.நாங்கதான் முதலில் வந்து சேர்ந்து இருந்தோம்.(நேரம் 10 .20 )அங்கே உள்ள ஊஞ்சலில் இளைப்பாறினோம்.கொஞ்ச நேரத்தில் ஒரு மகளிர் குழு வேனில் வந்து இறங்கினர்.எங்களின் வறட்சியை போக்கினர்.பின்னர் ஆதிவாசி மகளிர் வந்து சுக்கு காபி கொடுத்தனர்.அதை அருந்தி விட்டு பரிசலில் செல்ல ஆயத்தம் ஆனோம்.
பரிசல் பயணம் சுகமாய் இருந்தது.பில்லூர் அணை தேக்கதினை காட்டினார்கள்.தண்ணீர் மிகவும் சில்லென இருந்தது.அத்தீகடவு தண்ணீராம்.இதுதான் கோவையின் தாகத்தினை தீர்க்கிறதாம்.கொஞ்ச தூரம் பயணித்ததும் ஒரு காட்டில் இறக்கி விடுகின்றனர்.

அங்கே ஒய்வு எடுத்தபின் திரும்ப புறப்பட்ட இடத்தினை அடைந்தோம்.கொஞ்ச நேரம் கயிற்று கட்டிலில் ஒய்வு எடுத்து பின் சாப்பிட சென்றோம்.நல்ல உணவினை அளித்தனர்.வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சப்பாத்தி, களி, கீரை , மீன் குழம்பு, சிப்ஸ் தந்தனர்.


பபே சிஸ்டத்தில் பரிமாறினார்கள் யுனிபாரம் அணிந்த அங்குள்ள ஆதிவாசி சுய உதவி குழு மகளிர்.

இன்னும் இருக்கு ...தொடரும்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, July 22, 2011

கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3

கொச்சின் சாலையில் அங்கமாலி என்ற இடத்தில தங்கினோம்.நான் தங்கின ஹோட்டல் இதுதான்.


அப்புறம் நல்ல கிளைமேட் இருந்ததால் பாருக்கு சென்றோம்.எப்பவும் எனக்கு பிடித்த ரம் ஆர்டர் பண்ணி அதுக்கு மேட்சிங்கா ஸ்ப்ரைட் வாங்கி தாகத்த தீர்த்துகிட்டேன்.வெளியே நல்ல மழை..ஒரு 5 ரவுண்டு வரைக்கும் போச்சு..அப்புறம் நாம ஏன் கேரளா டாஸ்மாக் போக கூடாது அப்படின்னு நினைச்சு அங்க போனோம்.
அங்க ஒரே க்யூ..அங்கயும் கூட்டம்தான்.என்ன நம்மாளுங்க கும்பலா குவிவாங்க.ஆனா இங்க க்யூ ல நிக்கிறாங்க.என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்...அப்புறம் நாமும் நின்று பில் போட்டு (மக்களே கவனிக்கவும் பில் போட்டு ...) ரம் 2 லிட்டர் ( 1 லிட்டர் பாட்டில் இரண்டு ) வாங்கினோம். பின்னர் அதுல ஒன்ன காலி பண்ணினது தனிக்கதை.அப்புறம் அங்க இருந்து தான் கொச்சின் போனோம்..கொச்சின் போனதா முன்பே சொல்லிட்டேன் ரெண்டு பதிவா...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

கொச்சின் என்கிற எர்ணாகுளம் பகுதி 2

எர்ணாகுளம் படகு துறையில் இருந்து அக்கரைக்கு செல்ல (அதான் போர்ட் கொச்சின் ) டிக்கெட் வாங்கி கொண்டு படகு பேருந்தில் ஏறினோம்.இந்த படகு நல்ல உட்புற அழகுடன் இருக்கிறது.

டிரைவர் வந்தார், வண்டியை கிளப்பினார்.அப்புறம் என்ன ....கடலில் போய் கொண்டு இருக்கின்றோம்....இரு பக்கமும் பெரிய கட்டிடங்கள், கப்பல்கள்..நல்ல அனுபவம்...அப்புறம் நம்மளை கொண்டு போற மாதிரியே பஸ், வேன், ஸ்கூட்டர், லாரி அனைத்தையும் ஏற்றிக்கொண்டு இன்னொரு வகையான படகு வருகிறது.அதுவும் ரொம்ப த்ரில்லிங் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.


அங்கு இறங்கினவுடன் ஆட்டோ பிடித்து போர்ட் கொச்சின் சென்றோம்.
அங்கு சுற்றுலா மற்றும் வெளி நாட்டினரை கவர நிறைய கடைகள் இருக்கின்றன.


நல்ல ஒரு சுற்றுலா தலம்.கடலில் சென்று வர தனியார் படகுகள் வாடகைக்கு கிடைக்கின்றன.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 21, 2011

கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 1

எனக்கு ரொம்ப பிடிச்ச ஊரு இது.ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன.பயங்கரமான வளர்ச்சி.கேரளா விற்கே உரித்தான பசுமை , மழை சாரல்,சுத்தமான காற்று..அப்புறம் மலையாள பெண்கள் ..ஆகா ..அற்புதம் ....அப்புறம்


கொச்சின் அருகே போர்ட் கொச்சின் என்கிற ஊர் இருக்கிறது.இங்கே செல்ல இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று கடல் வழி..மற்றது தரை வழி.கடல் வழி செல்ல படகு போக்குவரத்து உள்ளது.கடலில் செல்லும் போது அங்கே நிற்கின்ற கப்பல்கள் பார்க்கலாம்.அதுவும் இல்லாமல் தண்ணியில் சென்றால் ( போடுகிற தண்ணி இல்ல ) மிகவும் மகிழ்ச்சி கரமாக இருக்கும்.விலையும் குறைவு.வெறும் 2 .50 ரூபாய்தான்.அந்த துறையினை போட் ஜெட்டி என்று அழைக்கிறார்கள்.


அப்புறம் அங்க போய்ட்டு கேரளாவின் பாரம்பரியமான மீன் பிடி தொழிலை பார்க்கலாம்.டச்சு காரர்கள் வந்து இறங்கிய இடம் இதுதான்.இங்கு அவர்களின் அரண்மனை உள்ளது.அப்புறம் அதிகமான வெளிநாட்டு பயணிகள் குவிகின்றனர்.அங்கு பிடிக்கப்படும் மீன்கள் அங்கேயே விற்பனை செய்யபடுகின்றன.விரும்பினால் சமைத்தும் தருவார்கள்.

கப்பல் கட்டும் தளம் வேறு உள்ளது.ஒவ்வொரு வருடமும் கடற்படை ஆண்டு விழா கொண்டாடுவார்கள் .அன்று மக்களுக்கு கப்பலை சுற்றி பார்க்கஅனுமதி இலவசம்.

இன்னும் இருக்கிறது ..தொடரும் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, July 15, 2011

பாஸ்போர்ட் எடுத்த அனுபவம் ..

ஒரு மாதம் முன்பே ஆன் லைன் இல் பதிவு பண்ணி இருந்ததால் இன்னிக்கு (15 .7 .11 ) காலையிலேயே பாஸ்போர்ட் அலுவலகம் சென்று விட்டேன்.8 மணிக்கு வர சொன்னதால் நான் 7 .30 மணிக்கு போய்ட்டேன்.


அங்க பார்த்தா எனக்கு முன்னாடியே ஒரு 30 பேரு இருக்காங்க.ஆபீஸ் 10 மணிக்கு தான் திறப்பாங்க..ஆனாலும் இவ்ளோ சீக்கிரமாகவா (இதுல ஒருத்தர் 5 .30 கே வந்துட்டாராம்).....நீண்ட கியூ ..என்ன... எல்லாரும் உட்கார்ந்து இருந்தாங்க.(மரத்தடி தான்)
.இதுல ரெண்டு பிரிவு ஒண்ணு ஆர்டினரி ..அப்புறம் தக்கல்...நம்ம எப்பவுமே ஆர்டினரி தானே ..அதனாலே அங்க போய் நின்னுட்டேன் ..ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க... எனக்கோ செம பசி ..பக்கத்துல கடை எதுவுமில்லே ..போனாலும் நம்ம இடம் காலி ஆயிடும் ..அதனாலே அங்கேயே நின்னேன் .9 மணி ஆச்சு ..பக்கத்துல பூட்டி இருந்த ஷட்டர் எல்லாம் ஓபன் ஆகுது ...பார்த்தா...உள்ள எல்லாரும் ஜெராக்ஸ் மிசின், அப்புறம் போட்டோ ஸ்டுடியோ, கம்ப்யூட்டர் எல்லாம் வச்சி இருக்காங்க .ஷட்டர் க்கு மேல எல்லாம் வெவ்வேறு கம்பெனிகள் பெயர், அப்புறம் abt பார்சல் ஆபீஸ்வேற இருக்கு, இது மாதிரி நிறைய .....சைடு பிசினெஸ் ஆக ஆன்லைன் பதிவு, ஜெராக்ஸ் இதெல்லாம் பண்றாங்க ...கொஞ்ச நேரத்துல அப்படியே இன்னொரு .கடையிலே காபி மிசின் எடுத்து வெளிய வச்சாங்க.இருந்த பசிக்கு ஒரு காபி சாப்பிட்டேன்.9 .50 ஆச்சு ..பாஸ்போர்ட் ஆபீசர் வந்தார் சைரன் விளக்கு உள்ள கார்ல


..அப்புறம் 15 பேர் உள்ள அனுப்பினாங்க ..அதுக்கப்புறம் நம்மளை அனுப்பினாங்க ....முன்னாடி இருவர் டோக்கன் கொடுத்து உள்ளே அனுப்பினார்கள் .போனால் நல்ல இன்டிரியர் உடன் ஆபீஸ்

..ஹால் A , ஹால் B அப்படின்னு ரெண்டு அறைகள்.எனக்கு ஹால் A .இதுல 8 முதல் 18 வரை கேபின் ரூம்கள் .8 ம் எண் பில் கவுன்ட்டர், 1 மற்றும் 9 ரேசன் கார்டு, வோட்டர் கார்டு செக்கிங், இது போல ஒவ்வொரு கவுன்ட்டரும் ஒரு செக்கிங். 18 ம் எண் கவுன்ட்டர் பாஸ்போர்ட் டெலிவரி (அது எப்போன்னு தெரியாது).நம்ம வரிசை வந்த வுடன் செக்கிங்.நாம இணைத்து உள்ளவைகள் அனைத்தும் ஒரிஜினல் உடன் செக் பண்ணி சீல் வைக்கிறார்கள் .பின் பில்லிங் கவுன்ட்டர் போய் 1000 ரூபாய் பணமாகவோ வங்கி டிராப்ட் ஆகவோ செலுத்த வேண்டும்.மறக்காமல் நோட்டின் சீரியல் எண் மற்றும் எத்தனை நோட் என்பதை குறிப்பிட வேண்டும்.பின் அந்த அலுவலர் பில் ரசிது தருவார்..அவ்வளவு தான்..இனி கிளம்ப வேண்டியது தான்..நான் கீழே வந்து பார்க்கும் போது..பயங்கர கூட்டம்...


எல்லாம் என்னை மாதிரியே பாஸ்போர்ட் பெற நின்று கொண்டிருந்தனர் ..... முக்கியமா என்னென்ன வேணும் அப்படிங்கறத சொல்லவே இல்லே.
அப்ளிகேசன் பாரம், அதனுடன் உங்களின் அட்ரஸ் ப்ரூப் மொத்தம் 6 இருக்கு.மூன்று போதும்.(ரேசன் கார்ட், வோட்டர் கார்டு,பேங்க் பாஸ் புக்
மற்றும் ஸ்டேட்மென்ட் ) அதன் நகல்கள்,உங்களின் 10 , 12 மார்க் சீட் நகல் , போட்டோ 3 அவ்ளோதான்...நீங்க பக்காவா பாரம் நிரப்பி கை எழுத்து போட்டா போதும்..அப்புறம் ஆன்லைன் ல உங்களோட வருகை தேதியை போட்டு வச்சிடணும்.பின்னர் நீங்கள் பதிவு செய்த தேதியில் போய் பாரம் நேர்ல கொடுக்கணும்(இணைத்து உள்ளவைகள் அனைத்தும் ஒரிஜினல் வேண்டும்) முடிஞ்சா நீங்க பண்ணுங்க..இல்லே இந்த அலுவலகத்தில் இதெற்கென நிறைய ஆபிஸ் இருக்கிறது.100 ரூபாய் தான்..அனைத்தும் செய்து விடுவார்கள்.. .பெயர் மாற்றம் அபீடவிட், திருமண அபீடவிட் மற்றும் நோட்டரி வேலை, இதெல்லாம் 500 ரூபாய் தான்.உங்களுக்கு அலைச்சல் மிச்சம்.
அப்புறம் நீங்க போகும் போது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் இல்லேனா கட்டுசாதம் கொண்டு போய்டுங்க.அப்புறம் 2 மணி நேரம் முன்பே போய் இடம் பிடித்து விடுங்கள்.இல்லேனா லேட் ஆகிடும்.. கார் பார்க்கிங் இருக்கு ..நல்ல விசாலமாக இருக்கிறது அலுவலகம்.வரும் போது காலியா இருந்த பார்கிங் போகும்போது செம புல்...
ஆர்டினரி எனில் 30 days தக்கல் எனில் 15 நாட்களுக்குள் உங்கள் வீடு தேடி வரும் பாஸ்போர்ட்...
இன்னும் கொஞ்சம்...