Monday, October 12, 2015

குறும்படம் - சரக்கு என்னுது சைடிஷ் எமனுது

வணக்கம்...
                            ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி...
                    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நம்ம வேலை நடப்பதால் அங்கதான் அதிகம் முகாமிட்டு இருக்கிறேன்.திருப்பத்தூரில் உள்ள முக்கிய அனைத்து உணவகங்களிலும் ஒரு கை பார்த்து இருக்கிறேன்.
                அவ்வப்போது ஓரிரு நாட்கள் கோவையில் தலைகாட்டுவதோடு சரி....சமீபத்தில் ஏற்காடு வேறு சென்றிருந்தேன்..கொஞ்சம் இளைப்பாறுதல் வேண்டி..அங்கேயும் ஒரு வேலை நிமித்தமாகத்தான் சென்றிருந்தேன்..டூ இன் ஒன் புரோகிராம்..
              இதற்கிடையில் இடைவிடாத பணிகளுக்கு இடையிலேயும் ஒரு குறும்படத்தில் குடிக்க...சாரி நடிக்க வாய்ப்பு வந்தது.நண்பர் கோவை சதிஸ் அவர்கள் ஒரு விழிப்புணர்வு குறும்படம் எடுப்பதாகவும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒண்டிப்புதூர் அகிம்சா அறக்கட்டளை சார்பாக பொது திடலில் திரையிடப்போவதாகவும் சொன்னார்.அந்த குறும்படத்தில் எனக்கேற்ற ஒரு கேரக்டர் இருப்பதால் அதை செய்ய முடியுமா என கேட்க அந்த பிஸியான வேளையிலும் ஓகே சொல்லிவிட்டு குறும்படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்..


             கோவையின் இருகூர் பகுதிகளில் எனது பகுதிகள் படமாக்கப்பட்டவுடன் நான் திரும்பவும் திருப்பத்தூருக்கே சென்று விட்டேன்.அதற்கப்புறம் குறும்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ஆகஸ்ட் 15 அன்று திரையிடப்பட்டது.இது வரைக்கும் நான் பார்க்கவில்லை.போன வாரம் தான் குறும்பட சிடியினை எனது ஆபிஸில் தந்து விட்டு போனார் சதிஸ்..
         என்ன ஆச்சர்யம்….மிக நன்றாக வந்திருக்கிறது.நண்பர்கள் அனைவரும் நடித்து (?) இருக்கின்றோம்.நம்மூரு கவிதாயினி கோவை மு சரளா கூட ஒரு காட்சியில் தலைகாட்டி இருக்கிறார்கள்.பேராசிரியர் அன்பு சிவா, நண்பர் கார்த்திக், பஷீர், சக்திவேல், கேமரா மேன் மது, டைரக்டர் சதிஸ் இவர்களது ஒத்துழைப்பால் நன்றாக வந்திருக்கிறது.
டைட்டில் தான் ரொம்ப பெருசு...

குறும்படம் காண


என்ன....குறும்படத்தில் பகார்டி தராம லா மார்டின் கொடுத்துட்டாப்புல டைரக்டரு......அதுதான் கொஞ்சம் வருத்தம்....


பாருங்க….உங்களுக்கு பிடிச்சா ஒரு லைக் மட்டும்…..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
         





இன்னும் கொஞ்சம்...