Monday, June 27, 2011

கோவை மெஸ் - ஸ்ரீ அன்ன பூர்ணா ஹோட்டல். - அவினாசி லிங்கம் கிளை, கோவை

கோவை மாநகரின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம்.இந்த ஹோட்டலில் மக்கள் எப்போதும் குவிகிறார்கள்.விலையும் அதிகம், சுவையும் அதிகம்.இங்கு ரோஸ் மில்க் மிகவும் சசுவையாய் இருக்கும்.
அப்புறம் இந்த ஹோட்டல் ஏகப்பட்ட கிளைகளை கோவையில் கொண்டுள்ளது.பசிக்கு சாப்பிட செல்பவர்களுக்கு உடனடியாக இங்கு உணவு கிடைக்காது.கொஞ்ச நேரம் ஆகும்.தாமதமாக தான் ஆர்டர் எடுக்க வருகிறார்கள்.இந்த ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு தாமதம் தெரியாது.நாங்கள் சாப்பிட வந்த போது எங்கள் டேபிளில் மற்றும் பக்கத்துக்கு டேபிளில் கூட தண்ணீர் வைக்க வில்லை.வாடிக்கையாளர் சேவை கொஞ்சம் தேவை.புதியதாய் கார் பார்க்கிங் வசதி செய்து இருக்கிறார்கள்.இருந்தாலும் அவர்களின் ஹோட்டல் முன்பு எப்போதும் கார்களின் வரிசை அதிகமாக இருக்கும்.நாங்கள் சாப்பிட்ட கிளை வடகோவை அவினாசி லிங்கம் கல்லூரி அருகில்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்  

இன்னும் கொஞ்சம்...

Friday, June 24, 2011

கோவை மெஸ் - நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல், கோட்டை மேடு,, கோவை

நம்ம ஊருல மிகவும் பிரசித்தி பெற்ற இடம் கோட்டை மேடு.நிறைய கோட்டைலாம் இருக்கு அதனாலதான் இந்த இடத்துக்கு அந்த பேரு அப்படின்னு நினைக்காதீங்க.எனக்கும் அந்த இடத்தோட பெயர்க்காரணம் தெரியல ..முஸ்லிம் அன்பர்கள் நிறையபேரு வசிக்கிறாங்க.அந்த இடத்துல நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல் இருக்கிறது

நல்ல சுவையுடன் பிரியாணி கிடைக்கும்.முக்கியமா பீப் பிரியாணி, சுக்கா, சில்லி அனைத்தும் நல்ல சுவையுடன் கிடைக்கும்.சிக்கன் , மட்டன் கூட கிடைக்கும்.ஆனால் அதிகமா விற்பனை ஆவது பீப் மட்டும் தான்.எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.விலையும் குறைவாகத்தான் இருக்கிறது.நாங்க மூணு பேரு போனோம்.நான்கு பிரியாணி இரண்டு சுக்கா ரூபாய் 170 .00 மட்டும் தான்.விலையோ குறைவு சுவையோ அதிகம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Wednesday, June 22, 2011

சுகமான பயணம்...சிதம்பரம்

கடந்த வியாழன் அன்று இரவு சிதம்பரம் போக பிளான் பண்ணிட்டு ஆன்லைன் மூலம் KPN ட்ராவல்ஸ் இல் டிக்கெட் புக் பண்ணினேன்.டிக்கெட் புக் பண்ணும்போதே ஜன்னல் ஓர டிக்கெட் தான் புக் பண்ணினேன்.(எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன பண்றது ) 9 மணிக்கு பஸ் புறப்படும் நேரம்.நான் 8 .30 மணிக்கு நம்ம ஆம்னி பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன்.நம்ம ஹீரோ நிக்கிறாரு(ஹி..ஹி ..பஸ் தான்)
ஏசி வண்டி தான்.(போன வாரம் தான் கொண்டு போய் சாத்துனாங்களே..21 பேரை.... )நானும் உள்ள போறேன் ..ங்கொய்யால..ஒருத்தனையும் காணோம்..எல்லாரும் பயந்துட்டாங்க போல இருக்கு யாரும் வரல.


அப்புறம் ஒரு பெண்மணி மட்டும் வந்து ஏறினாங்க.9 .15 ஆச்சு.வண்டியை எடுத்தாச்சு.நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருக்கோம்..வண்டி செம ஸ்பீட்.அவினாசி யில் வண்டி நின்னுச்சு.நாலு பேரு ஏறினாங்க.ஆக மொத்தம் ஆறு பேரோட வண்டி கிளம்புச்சு.எனக்கு தூக்கம் சுத்தமா வரல.வண்டியோட ஸ்பீட் அப்புறம் 21 பேரோட ஞாபகம்..பின்னாடி ரெண்டு பேரு மார்ச்சுவரில பொணத்த எப்படி வெள்ளை துணியில சுத்தி வைப்பாங்களோ அப்படி போர்த்திக்கிட்டு ரெண்டு பேரும் தூங்கறாங்க.அதை பார்க்கவும் வேற பயம்..ஞாபகங்கள் சுத்தி சுத்தி அடிக்குது. ரொம்ப குளிர் வேற ..பெட்ஷீட் குடுக்காம ஒரு சின்ன ஷால் குடுத்தாங்க..அத வச்சிக்கிட்டு வேற ரொம்ப போராட்டம்.1 .15 க்கு சேலம் வந்துச்சு.2 .15 க்கு ஆத்தூர் அப்புறம் 4 .15 க்கு நெய்வேலி அப்புறம் 5 .15 க்கு சிதம்பரம்..எல்லாம் 15 நிமிட முடிவிலேயே ஒவ்வொரு ஊரும் வந்துச்சு.நானும் தூக்கம் வராம அப்படி இப்படி புரண்டு கொண்டிருந்தேன்.எப்படியோ சிதம்பரம் வந்த வுடன் தான் நிம்மதியை அடைந்தேன்..எப்படியோ உயிர் தப்பியாச்சு என்று ...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 19, 2011

சிதம்பரம் பயணம் 2

கோவிலுக்கு செல்லும் நான்கு கோபுரங்களின் வழியின் இருபுறங்களிலும் நடை பாதை கடைகள் நிறையவே இருக்கின்றன.
சிதம்பரம் ரொம்ப வெயிலாக இருக்கிறது.சொல்லி கொள்கிற மாதிரி ஹோட்டல் எதுவும் இல்லை.சின்ன பஸ் ஸ்டாண்ட் மட்டுமே உள்ளது.நிறைய கவரிங் கடைகள் உள்ளன.டூரிஸ்ட் இடம் ஆனதால் லாட்ஜ் தங்கும் விலை அதிகமா இருக்கிறது.நவ நாகரீக யுவதிகளை எங்கும் காண முடிவதில்லை.நடராஜர் கோவிலால் மட்டும் தான் சிதம்பரம் ஊருக்கு சிறப்பு .

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

சிதம்பரம் பயணம் 1

 சிதம்பரம் நடராஜர் கோவில்
சனிக்கிழமை அன்னிக்கு சிதம்பரம் கோவிலுக்கு போனேன் ,நல்ல பரந்து விரிந்த கோவில்..

ஏனோ பராமரிப்பின்றி கிடக்கிறது.பூஜை வேளைகளில் மட்டும் கதவை திறந்து வைக்கிறார்கள். நான்கு கோபுரங்களின் வழியே கோவிலின் உள்ளே செல்லலாம்.குளம் இருக்கிறது.நான் போன நேரம் மதியம் ஆனதால் உள்ளே வெயில் வாட்டி வதைத்து விட்டது.அப்புறம் மக்கள் எல்லாரும் குறுக்கு வழி சாலையாக இக்கோவிலின் பிரகாரத்தை உபயோகம் செய்கிறார்கள்.ஒவ்வொருவரும் கையிலே செருப்பை பிடித்து கொண்டு வலம் வருகிறார்கள் (ஹி..ஹி..ஹி..கோவிலுக்குள்ளே செருப்பு போடாமல் இருக்கவாம்) அதாவது குறுக்கால பூந்து வெளிய வருவது.
அப்புறம் கூட்டம் ஒண்ணும் அதிகமா இல்லே.மகனால், மருமகளால் கைவிடப்பட்ட இரண்டு முதியோர் பிச்சை எடுத்து கொண்டு இருந்தனர்.
அப்புறம் எப்போவாவது வரும் கஸ்டமரை நோக்கி கிளியும் அவரது ஓனரும் காத்துகிட்டு இருந்தார்கள் .அப்புறம் எப்பவும் வழக்கம் போல கோவில்களில் மட்டுமே தங்களது அன்பை பரிமாறி கொள்ளும் நல்ல / கள்ள உறவினர்களும் அங்கங்கே இருந்தனர்.கோவிலின் சுற்று சுவரில் கல்வெட்டு இருக்கிறது அப்புறம் கோவில் மட்டும் நல்ல பராமரிப்பினை மேற் கொண்டால் வருமானம் பல மடங்கு பெருகும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, June 14, 2011

மருதமலை பயணம்

இன்னிக்கு எங்காவது போலாம்னு பிளான் பண்ணி பக்கத்துல இருக்கிற மருதமலை முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் (தோம் )
.எத்தனை தடவை போனாலும் அலுக்காத கோவில் நம்ம மருதமலை கோவில்தான்.எப்பவும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்( நான் கோவில் சுத்தி உள்ள பசுமையை சொன்னேன்...ஹி ..ஹி ..ஹி எப்படி ஒரு சமாளிப்பு...)
இன்னிக்கு பார்த்தா செம கூட்டம்.எல்லாம் குடும்பத்தோட வந்திருக்கிறாங்க (ஹி ..ஹி நானும்தான் குடும்பத்தோட)..என்னனு கேட்டா பிரதோஷம் மாம்...அப்புறம் தான் தெரிஞ்சது ..காலேஜ் திறக்க இன்னும் 10 நாள் இருக்கே ..அப்புறம் எப்புடி கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்...அப்புறம் என்ன பண்றது ..அங்க இருக்கிற கடையெல்லாம் போட்டோ எடுத்து இந்த பதிவை தேத்திட்டேன் ..
மலை வழியில அங்கங்கே நம்ம காதல் பறவைகள், கள்ள பறவைகள் உட்கார்ந்திருக்கும்..பார்க்க பரவசமாய் இருக்கும் ..இன்னிக்கு ரோடே வெறிச்சோடி இருக்குது .....அப்புறம் கோவில் திருப்பணி நடை பெறுகிறது .புதிதாக கோவிலை கட்டிகொண்டிருக்கிறார்கள் மேலே செல்ல மாடிப்படி அமைத்து கொண்டு இருக்கிறார்கள்..எப்படியோ ஒரு செய்தி சொல்லிட்டோம் அப்புறம் யாராவது மொக்கை பதிவு போடறேன்னு சொல்லிட கூடாதில்ல...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 5, 2011

கேரளா திருச்சூர் பயணம்

கடவுளின் தேசமான கேரளாவிற்கு வேலை விஷயமா போயிருந்தேன். ரொம்ப கொள்ளை அழகு.இருமருங்கிலும் பச்சை பசேல் ஆக, மழையின் சாரல் எப்போதும் தூறி கொண்டிருக்க ஒரு விதமான ரம்மிய சூழல் வழி எங்கும்........இடைவிடாது மழை தன்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தது.


அப்புறம் காலை உணவாக நம்ம கேரளா ஸ்பெசல் புட்டு அதுக்கு ஏத்த கடலை கறி சாப்பிட்டேன்.காலையில் கேரளா வாசி களோட மெனு என்னன்னா புட்டு கடலை கறி, வெள்ளை அப்பம் பீப் கறி , முட்டை கறி , மீன் கறி இப்படி நான் வெஜ் ஆக இருக்கிறது.அப்புறம் நம்ம ஊரு இட்லி , தோசை எல்லாம் இருக்கு. ஆனா சட்னி சாம்பார் நல்லாவே இருக்காது.அவ்ளோ கேவலமா இருக்கும்.எவ்ளோ தண்ணி ஊத்த முடியுமோ அவ்ளோ தண்ணி ஊத்தி சட்னி வைப்பாங்க.பருப்பே இல்லாத சாம்பார் இங்க மட்டும்தான்.அதனால எப்பவும் முட்டை கறி பீப் கறி அப்படின்னு சாப்பிட்டேன்.நம்ம ஊரு ஹோட்டல் களும் இருக்கு என்ன இருந்தாலும் அவங்க பாணி வகையில சாப்பிடறது தான் சுவையே.

அப்புறம் திருச்சூர் போற வழியில குதிரன் மலை அப்பிடின்னு ஒரு மலை இருக்கு.அங்க ஒரு காவல் தெய்வம் இருக்கு.போற வர்ற வாகன ஓட்டிகள் காசை விட்டு எறிவார்கள்.(இறங்கி போய் உண்டியல காசு போட கஷ்டப் பட்டு வீசுவார்கள்).நிறைய வழிபாடுகள் நடக்கும்.நானும் என் பங்குக்கு வீசாம இறங்கி போய் உண்டியல போட்டேன்.அப்புறம் மதிய உணவாக மட்டை அரி சாப்பாடு.நம்மூர் ரேசன் அரிசி போல இருக்கும்.அதுதான் கேரளா வோட பாரம்பரிய அரிசி.ரொம்ப சுவையா இருக்கும்.இதுக்கு ஏத்த மீன் கறி, பீப் கறி குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும்.நான் எப்ப போனாலும் இந்த மட்டை அரிசி சாப்பாடுதான் விரும்பி சாப்பிடுவேன்.


பொரியல், கூட்டு, ஊறுகாய் எல்லாம் வைப்பாங்க ஆனா எதுவுமே நல்லா இருக்காது.அப்பளம் தவிர.

அப்புறம் நாங்க பண்ணின வேலை இதுதான்.ஆர்ட் செட்டிங்க்ஸ்


NRI பெஸ்டிவல் ஷாப்பிங் அப்படின்னு பிசினஸ் டெவலப்.நம்ம ஊரு ஆடி தள்ளுபடி மாதிரி..(எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க)

அப்புறம் வேலை முடிஞ்சு வரும் போது வடக்கன் சேரி அப்படிங்கிற ஊரு இருக்கு.அங்க நேந்திரம் சிப்ஸ் கடைகள் நிறைய இருக்கு.எப்பவும் சூடா போட்டுகிட்டே இருப்பாங்க.கூட்டம் எப்பவும் அள்ளும்.கேரளாவிலிருந்து திரும்பி போகிற அனைத்து சுற்றுலா வாசிகளும் சிப்ஸ் வாங்குகிற இடம் இங்கதான்.ஒரு கிலோ சிப்ஸ் ரூபாய் 130 . அப்புறம் அல்வா இங்க கிடைக்கும்.சபரி மலை சீசன் அப்போ இங்க சொல்லவே வேணாம் ..அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.அப்புறம் திருச்சுர்ல சுத்தி பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல.இங்க இருந்து குருவாயூர் 29 கிலோமீட்டர்தான்.அப்புறம் கொச்சின் 70 கிலோமீட்டர்.அங்க போனால் பீச் இருக்கிறது.மத்த படி விசேஷம் இல்லை.நிறைய தேவாலயங்கள் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...