வேலன் ஹோட்டல்
திருப்பூர்ல ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல் ...இப்போ புதுசா கோவையில ராம்நகர் ல திறந்து இருக்காங்க..இங்கேயும் போய் பார்க்கலாமே (பார்க்க மட்டுமல்ல சாப்பிட்டு அப்பிடியே நாம பிளாக்ல பதிவ தேத்தலாம்) அப்படின்னு ஒரு நாள் மதிய நேரம் அங்க போனோம்..ம்கூம் ..ரொம்ப அருமையா இன்டீரியர் பண்ணி இருக்காங்க...(மெயினா அதைத்தானே பார்க்க போறது ...)
முதல் ப்ளோர்ல ரெஸ்டாரன்ட் இருக்கு ..அடுத்த ப்ளோர்ல பபே டைனிங் இருக்கு.அப்புறம் ரூப் டாப்ல வேற வச்சி இருக்காங்க..நாங்க போனது பபே..நிறைய வெரைட்டி ..ரொம்ப இருக்கு ..என்ன சாப்பிட தான் முடியல..வெஜ்ல ஏகப்பட்ட ஐட்டம் .நான்வெஜ்ல ஒரு சில மட்டும்தான்.எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பார்த்தேன்.(இப்படியெல்லாம் ரொம்ப வெரைட்டி இருக்கும்னு தெரிஞ்சு இருந்தால் ஒரு நாள் முன்பே பட்டினி கிடந்து வயிற்ற காய போட்டு இருப்பேன்)
5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு சர்விஸ் எல்லாம்.கேக் பிஸ்கட்ல நல்லா டெகரேசன் பண்ணி வச்சி இருந்தாங்க ......கடைசியா ரவை பாயசம் கொடுத்தாங்க ...ரொம்ப அருமை...நம்ம கேபிள் சொல்வாரே டிவைன் ...அது தான் ...(நாம இனி வேற பேரை வைக்கணும் ..)அவ்ளோ டேஸ்ட் ..அப்புறம்... எல்லாம் சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துச்சு பாரு பில்லு...(அடடா...இப்படி வந்து மாட்டிக்கணுமா...).காசுக்கு கேத்த டேஸ்ட் ...இனி நாம அந்த பக்கம் போவோம்.....? அதான் உள்ளே நுழையும் போதே யாரையும் காணாம் னு பார்த்தேன் .....சிபி சொல்லுவாரே ..ஒரு தடவை ட்ரை பண்ணலாம் அப்படின்னு அதான்...ஹி ஹி ஹி ஹி
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஜீவானந்தம்
4 இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி பார்சல் !!!
ReplyDeleteஎனது பதிவில் உறுப்பினர் ஆனதற்கு நன்றி !!
http://www.sathivenkat.blogspot.in/2012/02/blog-post.html
காசுக்கேற்ற பனியாரம் போல !
ReplyDeleteவாங்க சதிஸ்...அங்க இட்லி பார்சல் பண்ண முடியும்னு தெரியல //
ReplyDeleteகாசுக்கேற்ற பனியாரம் போல !அப்புறம்...ஏழைக்கு ஏத்த எள்ளு உருண்டை...இதையும் சொல்ல லாமே கோவை எம் தங்கவேல்
ReplyDelete