Sunday, September 25, 2011

மதுரை கண்காட்சி - சுத்தம்

இப்போ மதுரை தமுக்கம் மைதானத்தில் விவசாய கண்காட்சி மற்றும் மலர் கண்காட்சி நடை பெற்று கொண்டிருக்கிறது.உள்ளே போனால் சும்மா ஒப்புக்கு நடை பெற்றுகொண்டிருக்கிறது.கொஞ்சம் தென்னங்கன்றுகள் இருந்தால் விவசாயமா..?அதிகம் பேன்சி ஸ்டோர் மற்றும் ஊறுகாய் கடைகள், உள்ளன.எந்த ஒரு ஸ்டாலும் மனதை ஈர்க்கவில்லை அப்படி இருக்கிறது.மலரினால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் மட்டும் பரவாயில்லை.அதைவிட கொடுமை ..விளம்பரங்களில் இதுவரை நீங்கள் கண்டிராத அரியவகை மீன் கண்காட்சி என்று போட்டு இருக்கிறார்கள் ..உள்ளே பார்த்தால் நம் வீட்டில் வளர்ப்போம் அல்லவா.. அந்த வகையான மீன்கள் மட்டுமே உள்ளன ....என்ன கொடுமை டா ...இதுக்கு 30 ரூபாய் நுழைவு கட்டணம் வேற ....








அப்புறம் எப்பவும் கண்காட்சினா பஜ்ஜி, கரும்பு ஜூஸ் இதெல்லாம் இருக்கும் .அது கண்டிப்பா இங்க இருக்கு ....
இன்னும் கொஞ்சம்...

கோவை மெஸ் - சந்திரன் மெஸ் - தல்லாகுளம், மதுரை

மதுரையில் மையம் கொண்டிருந்த வேளை......மதுரை அப்படினாலே மீனாட்சி கோவில் அப்புறம் அருவா, வெட்டு குத்து .....இதுதான்......
அதுக்கப்புறம் மெஸ்.எங்கு பார்த்தாலும் மெஸ் தான் ...சந்திரன் மெஸ், அம்மா மெஸ் , கோனார் மெஸ் , அன்பகம் மெஸ் ..இப்படி மதுரையின் அனைத்து சந்து பொந்து களிலும் எதாவது ஒரு மெஸ் இருக்கிறது...நான் போனது சந்திரன் மெஸ்.கோரிபாளையம் அடுத்து தல்லாகுளத்தில் இருக்கிறது.மதியம் மட்டுமே அனைத்து வகை அசைவ உணவுகள் கிடைக்கும்.கோலா உருண்டை, நண்டு பொரியல் (போன்லெஸ்), நண்டு ஆம்லேட், அயிரை மீன் குழம்பு, நெஞ்சு கறி, நாட்டுக்கோழி வறுவல் ..அப்படின்னு ஏகத்துக்கும் இருக்கிறது .என்ன....  கொஞ்சம் காரம் சாரம் அதிகம் ..நம்ம பங்காளிகளுக்கு சைடு டிஷ்க்கு ஏத்தகடை ...நான் தெரியாத்தனமா நண்டு சாப்பிட்டிட்டு, அங்க அடிக்கிற வெய்யிலில் சூட்டை கிளப்பி விட்டது...யப்பா ..முடியல ....மதுரை பயங்கர வெயில்......மெஸ்ல ஏசியில் ( கொஞ்சம் இருட்டாக ) சாப்பிட்டதால் போட்டோ எடுக்க முடியவில்லை...மத்தபடி டேஸ்ட் பண்ணி பார்க்கிறவங்க தாராளமா போகலாம் ...




நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Sunday, September 11, 2011

கோவை மெஸ் - திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை, திண்டுக்கல்

திண்டுக்கல் அப்படினாலே பூட்டு தான் பேமஸ்.ஆனா இப்போ பிரியாணி தான் பேமஸ்.அவ்ளோ பிரியாணி கடை இருக்கிறது திண்டுக்கல்லில்.அதில் மிக்க பாரம்பரிய சுவை கொண்ட பிரியாணியை அறிமுகப்படுத்தியது தலப்பா கட்டி பிரியாணி கடைதான்.இந்த கடை முதலில் பெட்டிக்கடை போல செயல் பட்டு கொண்டிருந்ததாம்.இப்போது அக்கடைக்கு எதிர்புறத்தில் புதிய கிளை இருக்கிறது .பழைய கடை பார்சல் கட்டி தருவதற்காக இருக்கிறது.எப்பவும் போல கூட்டம் அள்ளுகிறது.அப்புறம் சுவை முன்பு மாதிரி இப்போது இல்லை என்கிற வருத்தம் வந்து சாப்பிடும் அனைவரது சொல்லிலும் இருக்கிறது.ஆனாலும் வெளியூர் வாசிகள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள்.அப்புறம் கோவையில் உள்ள தலப்பா கட்டி பிரியாணி கடையில் தலைக்கறி அவ்வளவு சுவையாய் இருக்கும்.ஆனால் திண்டுக்கல்லில் நன்றாகவே இல்லை.பிரியாணிக்கு பருப்பு போட்ட தால்ச்சா கொடுக்கிறார்கள்.திண்டுக்கல் போனால் சாப்பிட்டு பார்க்கலாம்

 

 நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...