Wednesday, March 23, 2011

அரசு பொருட்காட்சி - கோவை


நம்ம கோவையில் இப்போ நடை பெற்று கொண்டிருக்கிறது ...தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி ஒரு இலவச விளம்பரம் இதுதான் ...பொருள் காட்சி என்ற பெயரில் அவர்களின் சுய தம்பட்டம் ..என்ன ..மக்களை கவர்வதற்கு ஒரு சில விளையாட்டுகள் , அப்புறம் ஏகப்பட்ட கடை கன்னிகள்,நிறைய ஸ்டால் , ஆவின் பால், அப்புறம் திகில் குகை , குழந்தைகளை கவர நிறைய விளையாட்டுகள் .முக்கியமா கோவை மாவட்ட காவல் துறையின் சார்பா வைக்கப்பட்டிருந்த ஸ்டால் மிகவும் அருமை ... .....அப்புறம் ரொம்ப முக்கியமா டெல்லி அப்பளம் ....ஊட்டி மிளகாய் பஜ்ஜி ...நுழைவு டிக்கெட் விலை 5 மற்றும் 3 ..ஆனா உள்ளே ஏகப்பட்ட விலை ..டெல்லி அப்பளம் 30 ரூபாய் , பஜ்ஜி 20 ரூபாய் , ராட்டினம் 30 , டிராகன் 30 அப்படின்னு ஏகப்பட்ட விலை ..அப்படி ஒண்ணும் கூட்டம் அதிகமா இல்லை ..கோவையில் மக்களுக்கு எந்த விதமான பொழுது போக்கு வசதியும் இல்லை .இந்த மாதிரி எதாவது இருந்தா கூட்டம் அள்ளும்.ஞாயிறு அன்னிக்கு மட்டும் கூட்டம் அதிகமா காணப்படும் ...ஆனா இப்போ அப்படி ஒண்ணும் கூட்டம் அதிகமா இல்லை ...மக்கள் ரொம்ப வெறுப்பில இருக்காங்களோ ....
இன்னும் கொஞ்சம்...

ராஜ் டிவி - ஏமாத்து வேலை

ராஜ் டிவி யில் மறுபடியும் அந்த ப்ரோக்ராம் பார்த்தேன் ....எப்படியெல்லாம் பதில் சொல்லி நம்மளை போன் பண்ண வைக்கிறாங்க..இதுவும் ஒரு வகையில் மனோ வசியம் மாதிரித்தான் ....தப்பு தப்பா பதில் சொல்லுறத பார்த்து நாம போன் பண்ணலாம் அப்படின்னு தூண்டறது .....மக்களே தயவு செய்து போன் பண்ணி ஏமாந்து விடாதீர்கள் ...


இன்னிக்கு காட்டின படத்துல விஜயகாந்த் , மம்முட்டி இருக்காங்க ..ஆனா பதில் சொன்ன எல்லாரும் , கார்த்திக் பிரபு , ராஜ்கிரண் , மோகன் , மாதவன் மோகன்லால் , பிருதிவி கார்த்திக் , அப்படின்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்ச நேரத்துல இருந்து இப்படியே தப்பு தப்பா சொல்றாங்க..அப்புறம் நமக்கு என்ன தோணும் நாம ஏன் முயற்சி பண்ண கூடாது அப்படின்னு.கை வேற பரபர ன்னு அரிச்சுக்கும்.பரிசு தொகை வேற அதிகம்.விழுந்தா லக்கு தான் அப்படின்னு நினைச்சு போன் பண்ண ஆரம்பிப்போம்.அப்புறம் தான் இருக்கு உங்களுக்கு சங்கதி.சும்மா வெயிட்டிங்ல உங்கள போட்டு உங்க பைசாவ அபகரிச்சு விடுவாங்க. ....அப்புறம் என்ன அவங்க காட்டில மழைதான்....நமக்கு .....நம்ம  போன் பில் எகிறிடும்.....
இப்போ  ராஜ் டிவி மட்டுமில்லீங்க .வடக்கத்திய சேனல் கூட இப்படி ஏமாத்தறாங்கோ.


இவங்களுக்கு  அண்ணன் ..விஜய் டிவி ஒரு கேடி 

அதுக்கும் மேல இன்னொருத்தர் சன் டிவி --கையில் ஒரு கோடி


நேசங்களுடன்  
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 16, 2011

போத்திஸ் கோலாகலம்

இன்று கோவையில் மாபெரும் திறப்பு விழா.போத்திஸ் தன்னுடைய ஐந்தாவது கிளையை கோவையில் கோலாகலமாக திறந்து வைத்தது .மிகுந்த கூட்டத்துடன் இன்று ஒப்பணகார வீதி காணப்பட்டது ..பயங்கர ட்ராபிக் ஜாம் .நல்ல வடிவமைப்புடன் மிகுந்த பரப்பளவில் போத்திஸ் இருக்கிறது .அலை அலையாய் மக்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர் ...


நாங்களும் உள்ளே சென்று இரண்டு சட்டைகளை வாங்கினோம் .திறப்பு விழா சலுகை எதுவும் இல்லை .ஆனால் குறைந்த விலைதான் ..அப்புறம் நம்ம கலக்க போவது யாரு வெங்கடேஷ் வந்திருந்தார் .அவரிடம் பேசி கொண்டு இருந்தோம் ..
அப்புறம் முன்னாடி வரவேற்புக்கு நல்ல அந்த கால அரசி, மன்னர் , சேவகன் போல உடை அணிந்து கொண்டு வரவேற்றனர் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Saturday, March 12, 2011

வாய்க்கால்

பவானி வாய்க்கால் இது.


எப்பவும் இது கரை நிறைஞ்சு (புரண்டு ) ஓடும் .இப்போ வறண்டு கம்மியா போகுது ..ஒரு வேளை கோடை காலம் வந்ததினால் வற்றி விட்டதோ ? நான் இந்த வாய்க்காலில் நல்லா நீச்சல் அடித்திருக்கிறேன். இப்போ போகும்போது இப்படி வற்றி இருக்கிறது


...இந்த வாய்க்காலை நம்பித்தான் கோபி, சத்தியமங்கலம் , புளியம்பட்டி பகுதி விவசாயமே உள்ளது ..
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 9, 2011

நடமாடும் ஹோட்டல் - கொச்சின்

கொச்சின் பக்கம் இருக்கிற ஆலுவா அப்படிங்கிற ஊருக்கு போய் இருந்த போது அங்க ஒரு இடத்துல நின்னுகிட்டு இருந்தேன் .அப்போ ஒரு மஞ்ச நிற வண்டி வந்தது .அதை ரோடு ஓரமா நிறுத்தி ரெண்டு சேட்டன் மாரு இறங்கினாங்க .கொஞ்ச நேரத்துல இருக்கிற எல்லா கதவையும் திறந்து நடமாடும் ஹோட்டல் ஆக்கிட்டாங்கஉள்ளே நூடுல்ஸ், பிரியாணி, பீப் கறி, அப்பம், அப்படின்னு ஏகப்பட்ட வகைகள்.வரும் போதே கொண்டு வந்த எல்லாம் சுட சுட ரெடி பண்றாங்க.வெளியே புட்டு , சாயா (டீ)  ரெடியா இருக்கு.வண்டிக்கு மேல இருந்து டேபிள், சேர், எடுத்து போட்டு ஒரு சாமியானா கட்டி ஹோட்டல் ஆக்கிட்டாங்க.11 மணி வரைக்கும் கடை இருக்குமாம்.4 மணிக்கே வந்து கடையை விரிச்சிடறாங்களாம்.நான் புட்டும் சுண்டலும், கப்பா வும் வாங்கி சாப்பிட்டேன் .மறக்காம நம்ம பேவரிட் புல்ஸ் ஐ வாங்கி சாப்பிட்டேன்.எல்லாம் சுவையோ சுவை ....

புல்ஸ் ஐ அப்படீனா நம்ம ஊரு ஆப்பாயில் ங்க..மாட்டோட கண்ணு மாதிரி இருக்கிறதால் இது புல்ஸ் ஐ..எப்படியெல்லாம் பேரு வைக்கிறாங்க பாருங்க.
ரோட்டோர  கடை என்பதினால் நல்ல கூட்டம் அள்ளுது..

நேசங்களுடன் 
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, March 7, 2011

சந்தைக்கு வந்த கிளி - பொன்மலை திருச்சி

நம்ம தலைவர் பாட்டு பத்தின பதிவு இல்ல .திருச்சி பொன்மலை ல நடந்த சந்தைக்கு போனேன்

.நம்ம கிராமத்து நினைவுகளை கிள்ளி பார்த்து விட்டது .அப்புறம் நிறைய உள்ளூர் வியாபாரிகள் கடை பரப்பியிருந்தனர்.அதிலும் ஏகப்பட்ட உயிரினங்களோட விற்பனைதான் அதிகம் இருந்தது .வாத்து, கோழி , புறா, கிளி, முயல்,காடை, கௌதாரி அப்படின்னு ...நல்ல கூட்டம் ( மக்களும்தான் )

மீன் கடை நிறைய இருந்தது.நல்ல வகை வகையான மீன்கள், வாவல், திருக்கை , விரால், இறால், நண்டு, ஆரான், அப்படின்னு நிறைய ....விலையும் கம்மியா தான் இருந்தது.


நாங்களும் எங்க பங்குக்கு ஒரு சில மீன்களை வாங்கி வந்தோம் ..வீட்டுல ஒரே மீன் வாசம்...நல்ல சுவையா சாப்பிட்டோம் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, March 5, 2011

ராஜ் டிவி

ராஜ் டிவி ல ஒரு ப்ரோக்ராம் பார்த்தேன் .சரியான ஏமாத்து பேர்வழிங்க .ஒரு நடிகர் முகத்த கொஞ்சம் மறைச்சு இவர் யாருன்னு சொன்னா 30000 பரிசாம்.இந்த வாரம் நம்ம சூர்யா விக்ரம். பார்த்த வுடனே சொல்லிடலாம் .ஆனா கால் பண்ணின எல்லாரும் தப்பு தப்பா சொன்னாங்க.ஒருத்தர் ஜீவா ஆர்யா அப்படினு சொல்றான், இன்னொருத்தன் மாதவன் சிவா அப்படின்னு சொல்றான் .ஒருத்தரும் சரியாய் சொல்லல. டைம் போய்ட்டு இருக்கு, கடைசியில 5000 பரிசு சொல்லி ஒருத்தர் சரியாய் சொன்னார்.எனக்கென்ன சந்தேகம் னா இவங்களே போன் பண்ணி தப்பு தப்பா சொல்லுவாங்களோ அப்படின்னு ..ஒரு நிமிடத்துக்கு 10 ரூபாய் ...எவ்ளோ பேரு கால் பண்ணி பண்ணி காசை இழந்திருப்பாங்க.நம்ம ஆளுகளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல .எந்த முட்டாள் பயலாவது 30000 பணம் தருவானா? கிட்டத்தட்ட ஒரு100 பேரு 10 நிமிடம் கால் பண்ணினா 1000 x 10 = 10000 ...அம்மாடியோவ் ...எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...இதுல வெய்டிங் வேற ....
இன்னும் கொஞ்சம்...

மருதமலை

மருதமலை


கோவைல இருக்கிற ஒரு மலை வாசஸ்தலம் .நம்ம முருகன் குடி கொண்டிருக்கிற இடம் .எப்பவுமே பக்தர்கள் வந்து போய்ட்டு இருப்பாங்க.அப்புறம் நம்ம காலேஜ் பசங்க வந்து கடலை போடுற இடம்.எப்பவுமே நிறைய ஜோடிகள் சுத்திகிட்டு இருக்கும்.
அவங்களுக்கு தோதா நல்ல ஒதுக்கு புறமான இடங்கள்..ம்கூம் ....என்ன பண்றது ...அப்புறம்
இங்க எழந்த பழம், அன்னாசி. மாங்காய் எப்பவுமே கிடைக்கும் சாப்பிட ..அங்க இருக்கிற ஆதிவாசி குடும்பங்கள் தான் இந்த மாதிரி கடைகள் வச்சிருக்காங்க .. .
இன்னும் கொஞ்சம்...