Wednesday, February 22, 2012

கோவை மெஸ் - ஹரி பவனம் - நான் வெஜ் ஹோட்டல் (Hari Bavanam)


கோவையில் நல்லா திருப்தியா நான் வெஜ் சாப்பிடணுமா......புல் மீல்ஸ் க்கு மட்டன் குழம்பு . சிக்கன் குழம்பு, நாட்டுகோழி குழம்பு, மீன் குழம்பு, அப்புறம் பொரியல், சாம்பார், பருப்பு, ரசம், மோர் என கலந்து கட்டி அடிக்கனுமா....அதுக்கு ஹரி பவன் தான் பெஸ்ட்...

மொத்தம் மூணு கிளைகள் இருக்கு.முதல் பவன் காந்தி புரம் 3 வது வீதியில் இருக்கிறது.வீட்டு சாப்பாடு போல இருக்கும் என சிம்பாலிக்கா காட்டுவதற்வாகவே போல இருக்கும் வீட்டு அமைப்பு ஹோட்டல்.அதுக்குள்ளே நுழைஞ்சா திரும்பின பக்கம் எல்லாம் ஒவ்வொரு அறை இருக்கும் , உள்ளே டேபிள் இருக்கும்.ரொம்ப சுவையான கார சாரமான உணவு வகைகள் கிடைக்கும்.அடுத்த கிளை RTO  ஆபீஸ் ரோட்டுல இருக்கு..இது எப்பவும் போல ஹோட்டல் தான்..












அடுத்து பீளமேட்டுல இருக்கு..இங்க தான் நேற்று போனேன்.புதிய இன்டீரியர் அமைப்பில் மிக விசாலமாக இருக்கிறது.மட்டன், சிக்கன் மீன் என அனைத்திலும் ஏகப்பட்ட வகை இருக்கிறது.சுட சுட சாதம் கொண்டு வந்து வைப்பாங்க அப்புறம் வாளி..வாளி யா தான் எல்லா குழம்பும் டேபிள் மேல வைப்பாங்க...(அதுல பீஸ் இருந்தா உங்க அதிர்ஷ்டம். ஹி..ஹி ..ஹி ).பீட்ரூட் சட்னி இங்க ரொம்ப நல்லா இருக்கும்.ஆட்டுல இருக்கிற அத்தனை பார்ட்ஸ் வறுவலும் இங்க கிடைக்கும்.தலைக்கறி, போட்டி, ஈரல், கறிசுக்கா, என அனைத்தும். நான் சாப்பாடு அப்புறம் வஞ்சிரம், போட்டி  சாப்பிட்டேன்..ஏற்கனவே ரசித்து ருசித்த  சாப்பிட்ட சுவைதான்.அருமை...
அப்புறம் வெளிய இவங்களோட பீடா ஸ்டால்  ஒண்ணு  இருக்கு.அதுல ரோஜா இதழ் போட்ட பீடா வச்சிருக்காங்க...நல்ல டேஸ்ட்.(இந்த கிளையில எப்பவுமே கல்லூரி பெண்களின் கூட்டம் அதிகமா இருக்கு..அந்த மலர்களை பார்த்து இந்த ரோஜா பீடா ஆரம்பிச்சு இருப்பாங்களோ....?ஒருவேளை இவங்களை கூட்டிக்கிட்டு வந்து கனமான பர்ஸ பசங்க காலியாக்குவாங்கன்னு தெரிஞ்சே தான் இந்த பீடாவுல ரோஜா இதழ வச்சிருப்பாங்களோ////)..

விதவிதமா செட்டி நாட்டு வகைகளை பிடி பிடிக்கணும்னா இங்க தாரளாமாய் போலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

9 comments:

  1. கோவை வரும்போது உங்களைத்தான் கைடா கூட்டி பொகலாம்ன்னு இருக்கேன். சுவையான சாப்பாடு கிடைக்கும் ஹோட்டலுக்கு கூட்டி போவீங்க பாருங்க.

    ReplyDelete
  2. கண்டிப்பா..வாங்க...ராஜி ..(பில் நீங்க தானே தருவீங்க.....)

    ReplyDelete
  3. அய்யா நல்ல எழுதறீங்க. நெடு நாள் உங்க பதிவை படிச்சிட்டு இருக்கேன். நான் பழைய கோயமுத்தூர் வாசி. எப்பவும் கோவை மக்கள் மீது ஒரு பாசம் தான். ஒரு சின்ன விண்ணப்பம். நீங்க சாப்பிட்ட அயிட்டதொட விலையையும் போட்ட நல்ல இருக்கும். இத பாத்து உங்கள் மீது யாராவது பொறமை பட்ட அதுக்கு நான் பொறுப்பு இல்லை. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி ....சிங்கை ஜெயராமன் said...விலைய போடலாம்....ஆனா அதை பார்த்து அவங்க வராம விட்டிட்டா அந்த டேஸ்ட் அவங்களால உணர முடியாது.இப்போ இருக்கிற விலைவாசில கோவையில் எப்போதும் ரேட்டு அதிகம் தான்....

    ReplyDelete
  5. அன்புடைய நண்பரே! உங்களுடைய பதிவினை ரசித்து! உங்களுக்கு சகபதிவர்களை கவுரவிக்கும் பொருட்டு ஜெர்மானிய Liebster Blog விருதினை என் வலைதளத்தில்

    வழங்கியுள்ளேன் தாங்கள் ஏற்றுக்கொண்டால் எனக்கு மிக மகிழ்ச்சியிளிக்கும் உங்களை அன்புடன் எதிர்பார்த்து

    அன்புடன்
    வீடு K.S.சுரேஸ்குமார்


    "விருதுகள் எனும் ஊக்கமருந்து!"

    ReplyDelete
  6. உங்க பதிவு எனது டாஸ்போர்டில் வரமாட்டேங்கிதே?வீடு சுரேஷ் பதிவு மூலமாதான் வந்தேன்.ரொம்ப நாளா எழுதலையோன்னு பாத்தா இப்ப வரைக்கும் எழுதியிருக்கீங்க,அதுவும் நம்ம ஊருங்களை பத்தி எழுதியிருக்கீங்க படிக்காம மிஸ் பண்ணிட்டனே.

    ReplyDelete
  7. வீடு சுரேஷ் குமார் அவர்களே...ரொம்ப நன்றி .எனக்கும் விருது தர்றீங்களே..

    ReplyDelete
  8. superb hotel ... Economical as well... (speacially Peelamedu Hotel)... Good work

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....