Monday, August 29, 2011

மலைக்கோட்டை - திண்டுக்கல்


திருச்சியில மட்டும் தான் மலைக்கோட்டையா ..? திண்டுக்கல்லிலும் ஒரு கோட்டை இருக்கு.திப்புசுல்தான் கோட்டை என்றும் , கட்டபொம்மன் தம்பி தங்கி இருந்த கோட்டை என்றும் சொல்கிறார்கள்.அடிக்கிற வெய்யிலில் மேலே செல்ல முடியவில்லை.திண்டுக்கல் ரொம்ப வெயில்.முடியல.அப்புறம் மேலே செல்ல 5 ரூபாய் வசூல் செய்கிறார்கள்.

எப்படியாவது கோட்டை மேல ஏறி திண்டுக்கல்ல படம் பிடிக்கணும்
இன்னும் கொஞ்சம்...

Friday, August 26, 2011

கோவை மெஸ் - பேமஸ் ஜிகர்தண்டா, மதுரை

மதுரை அப்படின்னாலே மீனாட்சி அம்மன் கோவில் தான்.அதுக்கு அப்புறம் மல்லி, அப்புறம் விடிய விடிய சூடா கிடைக்கிற இட்லி, (யாருப்பா அது ..இங்க வந்து அழகிரி பேரை சொல்றது ..)அப்புறம் நாயக்கர் மஹால், காந்தி மண்டபம்..இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்.
    ஆனா இதையெல்லாம் தாண்டி ரொம்ப பேமஸ் என்னன்னா அது ஜிகர்தண்டா தான்.என்னா சுவை ..என்னா டேஸ்ட்...அய்யோ ..சும்மா ஜில்லுனு கொஞ்சம் வாயில் இறங்கினால் அடடா ...அற்புதம்.மறக்க முடியாத சுவை.நம்ம பேமஸ் ஜிகர்தண்டா கடையில எப்பவும் கூட்டம் இருக்கிறது.மதுரைக்கு எப்போ போனாலும் குடிக்கிற பானம் இதுதான். நிறைய ஜிகர்தண்டா கடைகள் இருந்தாலும் இந்த பேமஸ் ஜிகர்தண்டா தான் டேஸ்ட்ல பெஸ்ட்.சாதா 10 ரூபாய் , ஸ்பெசல் 30 .அப்புறம் பாசந்தி கிடைக்கும்.விளக்குதூண் கீழ மாரட் வீதி அருகில் இருக்கிறது கடை.நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, August 25, 2011

கோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, திண்டுக்கல்

 திண்டுக்கல் வேணு பிரியாணி - திண்டுக்கல்
என்னமோ தெரியல இந்த வாரம் பிரியாணி வாரம் போல இருக்கு.பொள்ளாச்சிக்கு அப்புறம் திண்டுக்கல்...விசயத்துக்கு வாரேன்.நேற்று திண்டுக்கல் போனேன்.நிறைய ஊரில கிளைகளை பரப்பி இருக்கிற வேணு பிரியாணி கடைக்கு போனேன்.சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற மாதிரி திண்டுக்கல் வேணு பிரியாணி கடைக்கு போனேன்.

மதியம் 12 .30 மணிக்கு போனதால் இடம் கிடைத்தது.பிரியாணி, வஞ்சிரம், கோலா உருண்டை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம் .மிக மிக ......சுவையுடன் ...மிக ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.அப்புறம் வெளியே வந்து பார்த்தால் கூட்டம் கியூல நிக்குது.அப்புறம் உட்காருவதற்கு தென்னை ஓலை வேயப்பட்ட கூரை இருக்கிறது.3 மணி இல்லேனா 3 30 மணிக்குள் தீர்ந்து விடுமாம்.நீந்துறது, நடக்கறது , ஓடறது அப்புறம் பறக்கிறது (விமானம்) தவிர அனைத்து அசைவ வகைகள் இருக்கின்றன.சாப்பிட தான் வயிற்றுல இடம் இல்ல.வேணு பிரியாணி தெற்கு ரத வீதியில் இருக்கிறது.அரை பிளேட் பிரியாணி 130 வஞ்சிரம் ரொம்ப பெரிய சைஸ் 120 ....விலை யை விட தரமும் சுவையும் ரொம்ப ரொம்ப அதிகம்....நான் ஏசி மற்றும் ஏசி ஹால் இருக்கிறது.நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Saturday, August 20, 2011

கோவை மெஸ் - தாஜ் பிரியாணி... நா.மூ சுங்கம் , பொள்ளாச்சி

பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை போற வழியில நா.மூ .சுங்கம் அப்படிங்கிற ஊருல பிரியாணி கடை இருக்கிறது.மிகவும் சுவையாய் இருக்கும் என்று நம் பங்காளிகள் உசுப்பேத்தி விட்டதால் அந்த கடைக்கு போனேன்.பொள்ளாச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நா.மூ .சுங்கம் உள்ளது.அங்கே இடது பக்கம் திரும்பினால் தாஜ் பிரியாணி என்ற கடை நம்மை வரவேற்கிறது.

கீற்று கொட்டகை அமைப்பில் நான்கு டேபிள்களுடன் உள்ளது.உள்ளே மகளிர் மற்றும் குடும்பத்தினருடன் வருபவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு (33 % ) உள்ளது.மட்டன் பிரியாணி சாப்பிட்டேன்.அப்புறம் எனக்கு ரொம்ப பசியாய் இருந்ததால் (ரொம்ப நேரம் சுத்தி இந்த கடையை தேடி அலைந்ததால்மணி 3 க்கும் மேலே ஆகிவிட்டது ) ருசியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதிகம் போட்டோ கூட எடுக்கவில்லை. அப்புறம் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆனைமலை இருக்கிறது. கண்ணுக்கு ரொம்ப குளிர்ச்சியாய் (அம்மணிகள் அல்ல ) வயல் வெளிகள் இருக்கின்றன.பசுமையை போர்த்திக்கொண்டு நல்ல குளிர்ச்சியான கிளைமேட் உடன், சிறு தூறலுடன் இருக்கின்றது.இங்குதான் அதிகம் சினிமா படபிடிப்புகள் நடக்குமாம்.மீண்டும் செல்ல வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது.புகைப்படங்கள் எடுக்கவில்லை.அடுத்த பதிவில் இயற்கையை காண்பிக்கின்றேன்...

நேசங்களுடன்  
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, August 15, 2011

கோவை மெஸ் : இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி


திருநெல்வேலி புகழ் இருட்டுக்கடை அல்வா அமைந்திருக்கும் இடம்.
சாயந்திரம் சும்மா கூட்டம் அள்ளும்...சீக்கிரமாகவே அனைத்தும் காலியாகி விடும் ...அப்புறம் அங்கு ஒரே ஒரு லைட் மட்டும் தான் அங்கு எரிந்து கொண்டிருக்கும்.இருட்டுவதற்கு முன்னாடியே எல்லாம் விற்று தீர்ந்துவிடுமாம்..


திருநெல்வேலி போனால் அல்வா சுவைக்க மறந்து விடாதீர்கள். நெல்லை அப்பர் கோவில் அருகே உள்ள கடை மட்டும்தான் ஒரிஜினல்.நிறைய போலிகள் வேற இருக்கின்றன .. ஏமாந்து விடாதீர்கள்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, August 14, 2011

கோவை புத்தக திருவிழா ..


இன்னிக்கி நான் இந்த திருவிழாவிற்கு போனேன்.அப்படி ஒண்ணும் கூட்டம் வரல .ரொம்ப டல்.ஈரோடு போல கூட்டம் இல்லை .அப்புறம் நம்ம உலக சினிமா ரசிகன் வைத்திருக்கிற ஸ்டால் போனேன்.
(ஸ்டால் 69 )அவரையும் மீட் பண்ணினேன்.அவருகிட்ட சில பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.நிறைய கலக்சன்ஸ் வைத்து இருக்கிறார் அவரிடமிருந்து காட் பாதர் படம் வாங்கினேன்.அப்புறம் எனது மகளுக்கு சின்ன பிரசன்ட் ஆக ஒரு டிவிடி தந்தார்.அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய ஸ்டால்கள் உள்ளன.
நானும் எனக்கு பிடித்த சுஜாதா நாவல் கள் வாங்கி கொண்டேன்.அப்புறம் ரொம்ப வெய்யில் ஆதலால் உள்ளே ஒரே புழுக்கம் ..வேர்வை....மக்கள் அனைவரும் புழுங்கி கொண்டே புத்தகம் பார்க்கின்றனர்.ஆதலால் புத்தக பிரியர்களே சாயங்காலம் சென்று வாங்குங்கள்.
இன்னும் கொஞ்சம்...

Saturday, August 13, 2011

நெல்லைஅப்பர் கோவில் திருநெல்வேலி

திருநெல்வேலி அப்படின்னாலே ஞாபகத்திற்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான் .அதையும் மீறி வருவது நெல்லைஅப்பர் கோவில் அப்புறம் தாமிரபரணி.....அப்புறம் எலேய் மக்கா..என்னல பண்றிய ....இப்படியான வட்டார நெல்லை தமிழ்.....கேட்கவும் பழகவும் இனிமையா இருக்கும் .என்ன வெயில் கொஞ்சம் சுள்ளுன்னு அடிக்கும் .

எனது பார்வையில் நெல்லைஅப்பர் கோவில் படங்கள்


அப்புறம் இன்னொன்னு ரொம்ப பேமஸ்.....இப்போ ரொம்ப களை கட்டி இருக்கிற பாளையங்கோட்டை சிறை ...

இது எப்படி இருக்கு .....


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, August 8, 2011

பொள்ளாச்சி ரோட்டுல ....டைட்டானிக் கப்பல்

இன்னிக்கு பொள்ளாச்சி போனேன் .ஈச்சனாரி கோவில் தாண்டி, பைபாஸ் தாண்டி
போற வழியில மைலேரிபாளையம் என்கிற ஊரில் ஒரு காலேஜ் இருக்கு .கோயம்புத்தூர் மரைன் காலேஜ்.கப்பல் மாதிரியே கட்டிடம் கட்டி இருக்காங்க.மாணவர்கள் யுனி பாரம் எல்லாம் கப்பல வேலை செய்யிற ஆளுங்க மாதிரியே போட்டுட்டு இருக்காங்க ...ரொம்ப அருமையா கட்டி இருக்காங்க ..தூரத்துல இருந்து பார்க்கும் போது கப்பல் தரை தட்டி இருக்கிற மாதிரியே இருக்கு ...
படங்களை கிளிக்கி பெருசா பாருங்க

நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Monday, August 1, 2011

நண்பர்கள் தினம்-சுவையுடன்

இன்னிக்கு ஆகஸ்ட் 1 ..நண்பர்கள் தினம்.எனவே எனது பதிவுலக நண்பர்களுக்காக இனிப்புடன் ஆரம்பிக்கின்றேன்..
நேற்று ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்காக.R .S புரத்தில் உள்ள பூமராங் எனும் கடைக்கு சென்றேன்.நல்ல கூட்டம்..அதுவும் மங்கையர் கூட்டம் ..(ஹி..ஹி..ஹி, போறதே சைட் அடிக்கதானே ) உள்ளே நல்ல வகைகளுடன் (அம்மணிகளும் தான் ) நிறைய இருந்தன.எங்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டோம்.விலை மிக அதிகமாக இருக்கிறது.குவாலிட்டி இருக்கு அதனால் விலை ஓகே .அப்புறம் என்ன குறை எனில் டிஸ்போச பில் டம்ளரில் மில்க் ஷேக் தருகிறார்கள்.(நாம சரக்குக்கு மட்டும் தான் யூஸ் பண்ணுவோம் ) தண்ணீரும் அப்படியே தருகிறார்கள்....


அப்புறம் கடலை போட வரும் ஜோடிகள் தான் அதிகம் ....அதிலும் மாடர்ன் அம்மணிகள் அதிகம் ..ஹி ஹி..ஹி..

நேசங்களுடன்

ஜீவானந்தம்.
 
இன்னும் கொஞ்சம்...