Tuesday, November 27, 2012

Fun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு, கோவை



Fun republic
கோவையில் பீளமேடு அருகே புதிதாக தோன்றி இருக்கும் இன்னொரு ஒரு ஷாப்பிங் மால்.இதன் உள் கட்டமைப்பு வட்ட வடிவில் நன்றாக இருக்கிறது.அனைத்தும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் நான்கு ஃப்ளோர்கள் இருக்கின்றன.பெரும்பாலான கடைகள் இப்போதுதான் நிர்மாணித்துக்கொண்டு வருகின்றன.அதிகம் ரிலையன்ஸ் மார்ட் இருக்கிறது.
 
 
மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டரில் மொத்தம் ஐந்து ஸ்கிரீன்கள் இருக்கின்றன.
தியேட்டர் துல்லியம் நன்றாக இருக்கிறது.அப்புறம் ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணி செல்லும்போது ஏகப்பட்ட பார்மாலிட்டிஸ் செய்கிறார்கள். அதுவே நேரம் விரையம் ஆகிறது.
அதுபோலவே ஃபுட் கோர்ட்.. குறைந்த கடைகள்...நிறைந்த விலை...ரொம்ப அதிகமாத்தான் இருக்கு.இங்கும் ஸ்மார்ட் கார்டு வசதிதான்.கார்டில் பணம் ஃபில் ஆனதுக்கு அப்புறம் தான் ஆர்டர் செய்ய வேண்டி இருக்கிறது...சத்தியமா பசிக்கு சாப்பிடறவன் இங்கு செல்ல மாட்டான். கடலை போட சரியான இடம் இதுதான்.
எப்பவும் போல அம்மணிகள் கூட்டம் இருக்கிறது.ஹோப்ஸ் காலேஜ் அம்மணிகள் அனைத்தும் இங்குதான் சுற்றி திரிகின்றனர்.இந்த ரோட்டிலே நிறைய காலேஜ் இருப்பதால் அதிகம் அம்மணிகளை காண முடிகிறது..கூடவே மலர் தேடும் வண்டுகளும்... ஒவ்வொரு ஃப்ளோர்லயும் போடப்பட்டு இருக்குற சேர்களில் அவர்களின் ஆக்கிரமப்பு அதிகமாகவே இருக்கிறது.அவ்வப்போது கடந்து செல்லும் ஆடவர்களின் மனதிலும் பெரும் ஆக்கிரமிப்பை உருவாக்குகின்றனர்.ம்ம்ம்ம்ம்...
ஹோப்ஸ் ரோட்டிலே சுற்றித்திரிந்த அம்மணிகளுக்கு ஒரு குடை இது.....

கார் பார்க்கிங் இருக்கிறது.அதற்கும் காசு தான்.இன்னும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு நாலு மணி நேரம் கழித்து பார்த்தால் காரின் நிறம் மாறி இருப்பது உறுதி..அவ்ளோ புழுதி....

ஏற்கனவே ப்ருக்ஃபீல்ட்ஸ் எனும் மால் ஐ பிரமாண்டமாய் பார்த்த்தினால் என்னவோ அதிகம் ஈர்க்கவில்லை.அதுவுமில்லாமல் டிராஃபிக்கில் அவ்ளோ தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.அந்த பகுதி மக்களுக்கு இது ஓகே.
காந்திபுரத்தில் இருந்து பீளமேடு ஹோப்ஸ் செல்லும் வழியில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, November 23, 2012

Rags to Pads - குறும்படம் - ஒரு பார்வை


Rags to Pads
குறும்படம்
நம்ம ஊரைச் சேர்ந்த திரு அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் கண்டுபிடித்துள்ள சானிடரி நாப்கின் பறறிய குறும்படம் இது.கிராமப்புற பெண்களுக்கு தரமான அதே சமயம் ஆரோக்கியமான, விலை குறைவான சானிடரி நாப்கின் தயாரித்து இருக்கிறார்.இவரும் இவரது கண்டுபிடிப்புமே இந்த குறும்படத்தின் நாயகர்கள்.அமெரிக்காவில் வசிக்கும் திருமதி சித்ரா ஜெயராம் என்பவர் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.இக்குறும்படம் தற்போது மிகப்பெரிய போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதியை எட்டியுள்ளது.

இது குறித்து சித்ரா ஜெயராம் அளித்துள்ள தகவல்கள் :

I'm Chithra.. A film-maker working on highlighting social issues via thoughtful documentaries. Originally a physical therapist and a chennai-vasi but now living in far away land and dreaming of making it in a fantasy world. I have a request.

"Rags to Pads" is my 3min film (https://vimeo.com/51889563) about a man (Arunachalam Muruganantham) who wore a sanitary pad to make women hygiene products accessible in India. Rags to Pads has now successfully made it to the semi-final stage of the prestigious Focus Forward Filmmaker Competition, competing with 94 other entries from 69 countries. I seek your help to spread the word about this remarkable man who has made talking about menstrual hygiene cool and trendy in parts of the world were this is completely taboo.

His innovation has helped women make and use hygienic products to manage periods. There are many others like him who are doing similar work in small rural pockets. But women like Indhumathy (in the film) are the most important people who not only take the pads to the doorsteps of other women but also educate and raise awareness.In doing so they are improving the health of women and in turn their entire families. It is these foot soldiers who often go unthanked. I hope my film did a bit more justice in acknowledging them as well. 

I would like your help in taking this movie and its message to a larger audience.  Please watch, if u like vote and share with your network. If you are able to facebook or tweet about it, it will be awesome. 

If you are pressed for time, here are some sample tweets: 
  1. Video: Story of a man who wore a sanitary pad: #arunachalam#muruganantham & the women who got empowered! :https://vimeo.com/51889563 
  2. An Indian entrepreneur makes a big contribution to women's menstrual health with his innovative sanitary napkin design:  vimeo.com/51889563 
  3. Watch, Vote and Share "Rags to Pads" a film about an Indian inventor who made women hygiene products accessible:  vimeo.com/51889563 

இந்த குறும்படம் காண


 கண்டிப்பாக இந்த குறும்படத்தை அனைவரும் ஆதரிப்போம்.விழிப்புணர்வை உண்டாக்குவோம்.கிராமப்புற பெண்களின் சுயதொழில் கனவை இதன் மூலம் நிறைவேற்றுவோம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்கிற தனி மனிதனின் சாதனையை பாராட்டுவோம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்.
இன்னும் கொஞ்சம்...

Thursday, November 22, 2012

துப்பாக்கி - ஒரு பார்வை

சத்தியமா இது சினிமா விமர்சனம் இல்ல....பல்வேறு பதிவுலக ஜாம்பவான்கள் இந்த படத்தை பத்தி நிறைய எழுதிட்டாங்க...இனி நாம என்ன சொல்லுறது.
நாமக்கல்லில் குலோத்துங்கன் காம்ப்ளக்ஸ் என்று ஒரு தியேட்டர் இருந்தது.மொத்தம் நான்கு ஸ்கிரீன்கள்.இப்போது  எல் எம் ஆர் மல்டிபிலக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.இதில் தான் துப்பாக்கி  ரிலீஸ்.விஜய் ரசிகர் மன்ற டிக்கெட் கிடைத்ததால் முதல் காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது.டிக்கெட் விலை 200 தான்.(அதுக்கப்புறம் 500 வரைக்கும் போனது தனி...)
தியேட்டர் விஜய் பேனர்களாலும் ஃபேன்ஸ் களாலும் நிரம்பி வழிகிறது.ஒரே சில்வண்டுகள் கூட்டம்.விசிலடித்துக்கொண்டும், ஆரவாரித்துக் கொண்டும் அது ஒரு அனுபவம் அவர்களுக்கு..
நமக்கும் ஒரு புது அனுபவம்.முதன் முதல் விஜய் படம் முதல் காட்சி.......காலை 6 மணிக்கே செம கூட்டம்...ரசிகர்களுடன் போட்டி போட்டு பார்க்க ஒரு சில அம்மணிகளும் வந்து இருந்தது அதிசயம்.

 
 
 
 
 
 

துப்பாக்கி படம் நன்றாக இருக்கிறது.பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வகையில் மிக நன்றாக இருக்கிறது.

மேலும் விமர்சனம் படிக்க
ஆருர்மூனா செந்தில்
ஜாக்கி சேகர்

உண்மைத்தமிழன்


நேசங்களுடன்

ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 21, 2012

பேஸ்புக் கவிதைகள் - 4

எவ்வளவோ  வேலைப் பளு இருந்தாலும் அவளின் நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால் வந்த கவிதைகள்.பேஸ் புக்கில் கிறுக்கியவை... 
தயக்கூட்டில்
லப்டப் லப்டப் என்ற
இன்னிசையாய்
இனியவள்
உன் பெயரே
இசைக்கப்படுகிறது..
ன் பார்வை
உன் பேச்சு
உன் சிரிப்பு
அனைத்தும்
நீ
இல்லாத நாட்களில்
உன்னை
ஞாகபப்படுத்துகிறது..
நிம்மதியற்று
இருக்கும்
நேரங்களில்
உன்
நினைவுகளே
மருந்தாய்...
தறி விட முடியாது
அவ்வளவு எளிதில்.
ஊன் வரை
ஊடுருவியுள்ள
உன் காதலை..
ன்னியவள்
குரல் கேட்டதும்
காத்திருந்த இதயம்
கனிந்து போனது
காதலால்.,
யுகம் யுகமாய்
கழிகிறது..
ஒவ்வொரு நாளும்..
உன்னைக் காணும் வரை..
மின்னலாய்
மங்கை உன் பார்வை
இடியாய் இறங்கியது
இதயத்தினுள்
காதல் எனும் மழையாய்..
 
 
 

  
வேதனையைத் தருகிறது
நீ இன்னமும்
வெளிக்காட்டாமல் இருக்கும்
எனக்கான காதலை....
றக்க முடியவில்லை
மனதில் பதிந்த
கல்வெட்டுக்களாய்.
மங்கை உன்
நினைவுகள்..
ன்னோடு பேசிய
வார்த்தைகள்
மவுனமே ஆனாலும்
புரிந்து கொண்டது
இதயம்
உன் மீது கொண்ட காதலை..
றக்கத்திலும்
விழித்துக்கொண்டு
இருக்கிறது
இனியவளின்
நினைவுகள்...
நீ
உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தையிலும்
உணர்கிறேன்
எனக்கான காதலை.


னக்குள்   இருக்கும்
கவிஞனின்  உறக்கம்
கலைத்த  பெருமை
உனக்கே  வாய்க்கட்டும்  ............நன்றி.....அவளுக்கு........

 கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும்......ஹி..ஹி..


நேசங்களுடன்
ஜீவானந்தம்
   
   
இன்னும் கொஞ்சம்...

Tuesday, November 20, 2012

இந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2

இது புது பதிவு...

இன்னிக்கு ரொம்ப உபயோகமான பதிவு....ஞானப்பல் எனப்படும் விஸ்டம் டீத் எடக்கு மடக்கா முளைஞ்சதனால் வலி வரவே நேற்று இரண்டு மணி நேரம் போராடி பல்லை பிடிங்கியாச்சு...சத்தியமா நான் பிடுங்கல....ரெண்டு டாக்டர் அம்மணிகள் தான்...அங்க இருக்கிற வரைக்கும் வலியே தெரியல...(ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்பு....ஹி ஹி ஹி ).பல்லை பிடுங்கி கைல கொடுத்து வீட்டுக்கு அனுப்பவும் தான் ஒரே வலி...
32 பல்லு முளைச்சு இருக்கனும்.எனக்கு இதுவரைக்கும் 31 தான் இருக்கு.பல்லே வரல..அதுக்கு பதிலா வலி வரவும் தான் நம்ம பல்லு பையன் எங்கோ எடக்கு மடக்கா சிக்கி இருக்கான் அவனை வெளிய கொண்டு வரணுமே அப்ப்டின்னு நினைச்சி தான் டாக்டர்கிட்டே போனேன்...அவங்க நம்ம பல்லை பிடிங்கியே ஆகனும் அப்படின்னு கொக்கு மாதிரி அட....ஒத்தக் கால்ல நிக்கிறாங்க....
சரி...அம்மணிகள் கெஞ்சறது கண்டா மனசு தாங்காது..சரின்னு சொல்லவும் 

பல் பிடுங்கும் வைபவம் 

 நிகழும் மங்களகரமான ஸ்ரீ நந்தன வருடம் 
கார்த்திகை மாதம் 4ம் நாள் 19.11.12 திங்கள் கிழமை 
பஞ்சமி திதியும் பூராட நட்சத்திரமும் அமிர்த யோகமும்  
கூடிய சுபயோக சுப தினத்தில் 
மாலை 4 .30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் 
எனது பல் இரண்டு டாக்டர் அம்மணிகளின்
மேற்பார்வையில் பிடுங்கப்பட்டது...

பிடுங்கின பல்லோட வீங்கின வாயோட 
வந்து இந்த போஸ்ட் போட்டுட்டு இருக்கேன்...



இது பழைய பதிவு:

பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க மக்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....

பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் பிடு‌ங்கவே‌ கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல் நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு  ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.பல்லு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும்  சொத்தை, கூச்சம், பற்குழி போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.


இப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......

கடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால் நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய் பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும் சொத்தை ஆகி இருக்கிறது, அதனால் ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளலாம் என்றார்கள். 
மரத்து போகிற ஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான் கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன் பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சி இருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய் பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடைலாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல... அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....

ஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும் சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும் கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும், உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.

முதலில் மரத்து போகும் ஊசியை கடைவாய் உள்ளே  குத்தினார்கள்.பாதி கன்னம் மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன். எல்லாம் சுத்தம் செய்தவுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.

அப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப் போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெட்டல் கேப், செராமிக் கேப் என இரண்டு வகை..மெட்டல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப் விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும். 

(கருப்பு தான்  போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அம்மணி டாக்டருக்கு ஒரே சிரிப்பு...சிதற அடிக்குது மனசை.,...அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை கிடைச்சிடுச்சு.....) 
சரின்னு செராமிக் போட சொன்னேன்.

அதுக்கு அப்புறம் பல்லின் அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள் சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல் , கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில் மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)

எப்படியோ பல்லை பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....
இரண்டு வருடம் முன்பே வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ  இவ்ளோ வலியும் வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....

அதுக்கு தான் சொல்றேன்....மீண்டும் முதல் வரிக்கு வாங்க.....


இதெல்லாம் போன பல்லுக்கு நடந்தது...இந்த பல்லுக்கு அதே மாதிரிதான் ரொம்ப பாடுபட்டு, போராடி பிடிங்கினாங்க...கஷ்டப்பட்டு பிடுங்கியதால் 3500 கொடுத்து இருக்கேன்,,,அடுத்த ட்ரீட்மெண்ட் வியாழன் அன்று இருக்கு.....ரூட் கேனால் வேற பண்ணணுமாம்....அனேகமா அவங்க இந்த வருட கிருஸ்துமஸ் நல்லா கொண்டாடுவாங்க அப்படின்னு நினைக்கிறேன்...ஹி ஹி ஹி ..


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, November 19, 2012

கோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்

நம்ம நண்பர் திருமணத்திற்காக திருப்பூர்ல ரயில்வே ஸ்டேசன் அருகே தங்கி இருந்தோம். அப்போ மதியம் எங்காவது ஒரு ஹோட்டலுக்கு போலாம் அப்படின்னு  முடிவு பண்ணி பொடி நடையா குமரன் ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்கும் போது கண்ணுல பசுமையா பட்ட போர்டு ஹனிபா ஹோட்டல்....பேரை பார்க்கும் போதே இது தேறும் என்பது தோணியதால் உள்ளே நுழைந்தோம்....
 
 சின்ன கடைதான்...மூணு மணி மேல் ஆகிவிட்டது ஆயினும் நிறைய பேர் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.நமக்கு தோதான இடத்தை ஆக்ரமித்து கொண்டு என்ன இருக்கிறது என கேட்க, பிரியாணி அப்புறம் சிக்கன் 65  தான் இருக்கிறது மற்ற அனைத்தும் முடிந்து விட்டது என சொல்ல கொஞ்சம் வருத்தப்பட்டு தான் போனோம்...சரி இருக்கிறதை சாப்பிடுவோம் என பிரியாணி, சிக்கன் சொன்னோம்..ஒவ்வொரு டேபிளிலும் தண்ணீர் வைத்து இருக்கின்றனர்.கூடவே பச்சை கலராய் ஒரு ஜூஸ் வைத்து இருக்கின்றனர்.சில பேர் ரசித்து ருசித்து குடித்து கொண்டு இருந்தனர்.என்னவென்று இருக்கும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போதே பிரியாணி கொண்டுவந்தனர்.இலையில் வைத்தவுடன் கொஞ்சம் கூட பிரியாமல் அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் போல இருக்கவே கொஞ்சம் டவுட் வர ஆரம்பித்தது.எடுத்து சுவைத்ததில் சுத்தமாய் பிரியாணி நன்றாகவே இல்லை.தக்காளி சாதம் போலவே இருக்கிறது. பாய் கடை என்று தான் உள்ளே நுழைந்தோம்.ஆனால் பிரியாணிக்கான டேஸ்ட் கொஞ்சம் கூட இல்லை..பசி ருசி அறியாது என்பர்.நமக்கு அந்த நேரத்தில் கூட எல்லாம் தெரிய வைக்கிறது.
 
சில்லி சிக்கனும் அது போலதான்.சுவை என்பதே இல்லை..கூட பொறித்த கருவேப்பிலை மட்டும் மொறு மொறு வென்று நன்றாக இருந்தது...
ஆனாலும் இந்த பதிவு எதற்கு என்றால் அந்த பச்சை கலர் ஜூஸ் ...என்னவென்று கேட்டால் ஹனிபா ஸ்பெசல் ஜூஸ் அப்படின்னு சொன்னார்கள் ......செம டேஸ்ட்...
பச்சை கலராய் இருக்கிறது.எந்த வித பழங்கள் என்று தெரியவில்லை.மிக நன்றாக இருக்கிறது.ஐந்து வித பழங்கள் கலந்த ஜூஸ் என்று சர்வர் சொன்னார்...அம்புட்டு டேஸ்ட்... பிரியாணி மற்றும் சிக்கன் சுவைகளை இது தூக்கி நிறுத்தி விட்டது...
நான் இரண்டு கிளாஸ் வாங்கி ரசித்து ருசித்து குடித்தேன் அதுபோலவே நண்பர்கள் அனைவரும் விரும்பி குடித்தனர்.இதிலும் ஃபுல்,  ஆப்  என்று தருகிறார்கள்.(சும்மா இருந்தாலும் ஞாபகபடுத்தி விடுகிறார்கள்....).விலை 25 ரூபாய்...இதை சாப்பிடவே இங்கு போலாம்..மற்றவை உங்களின் விருப்பம்..

 
 
 பிரியாணி மட்டும் சாப்பிட்டு இருக்கிறேன்.மற்ற எதுவும் சாப்பிடாததால் அவைகளை பத்தி நோ கமெண்ட்ஸ்..பிரியாணி சுமார் தான்..விலை கொஞ்சம் அந்த ஊருக்கு அதிகம் தான்.இரண்டு பிரியாணி, ஒரு சில்லி, ஜூஸ் சாப்பிட்டது என மொத்தம் 311 ரூபாய்.அந்தபக்கம் போறவங்க ட்ரை பண்ணி பாருங்க...மறக்காமல் அந்த ஹனிபா ஸ்பெசல் ...
திருப்பூர் குமரன் ரோட்டில் கரூர் வைஸ்யா பேங்க் அருகில் இருக்கிறது...

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, November 12, 2012

வெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4

ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ் முடித்து விட்டு வந்து சேர்ந்த இடம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர்.ஓங்கி உயர்ந்த, பளபளப்பான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கட்டிடங்கள், அடுத்து அடுத்து தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள் என ஊர் முழுக்க உயர்ந்த கட்டிடங்கள்.நம்ம ஜெய் பார்த்த மாதிரி அதாங்க பட்டி காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி அண்ணாந்து பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கி கொண்டது தான் மிச்சம்.









முதலில் சென்ற இடம் கேஎல் டவர்.இது மலேசியாவின் முக்கிய லேண்ட்மார்க் ஆக இருக்கிறது.இந்த டவர் மலேசியாவின் தொலை தொடர்பு மற்றும் ஒளிபரப்பு விசயங்களுக்காக பயன்படுத்துகின்றனர்.ஒரு மலை மீது 421 மீட்டர் உயரத்தில் இது அமைக்க பட்டு இருக்கிறது.இதன் மேலே சென்றால் ஒட்டு மொத்த கோலாலம்பூர் அழகையும் காணலாம்.
அப்புறம் சென்ற இடம் ட்வின் டவர்.பெட்ரோனாஸ் டவர் என்று அழைக்கப்படும் ரொம்ப உயரமான கட்டிடம்..அண்ணாந்து பார்க்கவே முடியல...அவ்ளோ உயரம்...இரண்டும் ஒன்று போலவே இருக்கிறது. இரண்டிற்கும் இடையே இணைப்பு பாலம் வேறு உயரத்தில் இருக்கிறது.(451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது).மேலே செல்ல வில்லை.அங்கிருந்து பார்த்தால் இன்னும் அழகாக தெரியும் கோலாலம்பூர்.

 
 
 அடுத்து சென்றது இஸ்தானா நெகரா எனப்படும் அரண்மனைக்கு.மலேசியா அரசின் மன்னராட்சி முறை இன்னும் இருக்கிறது என்பதற்கு இந்த அரண்மனை ஒரு எடுத்துக்காட்டு.பரந்து விரிந்து இருக்கிறது.உள்ளே செல்ல வில்லை.வெளியே  இருந்து பார்த்து ரசித்தோம்.

அப்புறம் இன்னும் ஒரு சில இடங்கள்.அப்படி ஒன்றும் அதிகம் ஈர்க்கவில்லை.மலேசியாவை உருவாக்கியவர்களுக்காக நினைவு சின்னம் இருக்கும் இடம் அங்கு ஒரு சில போட்டோக்கள் மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றோம்.


மலேசியாவில் கண்டு களிக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன.ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட முடியாது போல.ரெண்டு மூணு மாசம் வேணும்.ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட வேண்டும்.எனது பயணம் மலேசியா கோலாலம்பூர் சுற்றியே அமைந்து இருந்தது.அதனால் குறைவான இடங்களை பார்க்க நேரிட்டது,மீண்டும் செல்ல கூடிய ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.மிக முக்கியமான இடங்கள் நிறைய இருக்கின்றன.விரைவில் வாய்ப்புகள் வரும் என்றே நினைக்கிறேன்.

கிசுகிசு : இந்த பதிவிலும் அம்மணிகள் பத்தின வார்த்தைகள் இடம் பெறவில்லை...ஹி ஹி ஹி

நேசங்களுடன்
 ஜீவானந்தம்.
இன்னும் கொஞ்சம்...