Tuesday, December 27, 2011

சென்னையில் ஒரு நாள்

சென்னையில் இருந்த போது நான் எடுத்த போட்டோக்கள்.

பாரிஸ் கார்னர் இல் ஏகப்பட்ட நெரிசல் .கிருஸ்துமஸ் ஆதலால் நிறைய கூட்டம்....யப்பா .. என்னா கூட்டம்....வண்டி பார்க் பண்ண இடமே கிடைக்கல.நாம நகரவே வேணாம் ..அப்படியே கூட்டம் தள்ளிகிட்டு போகுது.பரபரப்பா விற்பனை நடக்குது.பேன்சி பொருட்கள் நிறைய கிடைக்கிறது.எல்லாம் மகளிர் கூட்டம் தான்..வித வித மாய்...கண்ணுக்கு குளிர்ச்சியாய் ....
அப்புறம் எல்லாம் சேட்டு கடைகள் தான் அதிகமாய் இருக்கிறது.அவங்க பேசுற தமிழ கேட்டால் போதும் நமக்கு மறந்திடும் போல இருக்கு ஒரு பய பில் தரல.அரசாங்கம் இவங்களை கவனிச்சா போதும்..நல்ல வருவாய் கிடைக்கும் .(ஒருவேளை இவங்க அரசாங்கத்தை கவனிக்கிறாங்களோ என்னமோ தெரியல ..).நிறைய பிளாட்பாரம் கடைகள் தான் ...அப்புறம் எம்ஜியார் அவர்களின் பல்வேறு புகைப்பட தொகுப்புகளை வைத்து இருந்தனர் ..





தேங்காய் பூ வைத்து இருக்காங்க...இது வயிற்றில் உள்ள ஒரு சில வியாதிகளை நீக்கும் என சொல்லி விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.அதையும் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன்.நல்லாத்தான் இருக்கு

இன்னும் இருக்கு ..அடுத்த பதிவில் 

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

பிரபல பதிவருடன் ( ஜாக்கி )சந்திப்பு

சனிக்கிழமை வேலை விசயமாக தமிழகத்தின் தலைநகருக்கு வந்தேன்..
சென்னையில் இருந்த காரணத்தினால் ஜாக்கி அவர்களிடம் அனுமதி பெற்று அவரை சந்திக்க கிளம்பினேன்.ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்ட பல பதிவர்கள் மட்டும்தான் போட்டோ போடுவாங்களா......  நாங்களும் போடுவோம்ல .......

சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்த தருணம் அற்புதம்.

ஜாக்கி மற்றும் அவங்க சம்சாரம் அப்புறம் யாழினி இவங்களை சந்தித்ததில் ரொம்ப பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.ஜாக்கி வீட்டில் அவருடன் பேசியபோது நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.

ஜாக்கி உடன் இருந்த நிமிடங்கள் மிகவும் ஒவ்வொன்றும் அருமை.ஜாக்கி எப்போதும் கேமராவும் கையும் மாக இருக்கிறார்.அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டேன்.


 ஜாக்கி என்னமா போஸ் கொடுக்கிறார் பாருங்க ...

அப்புறம் சென்னையில் எடுத்த புகைப்படங்கள் அடுத்த பதிவில்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 21, 2011

பரூக் பீல்ட்ஸ் - கோவை

பரூக் பீல்ட்ஸ் - கோவை 
கோவை மாநகரம் கண்டிராத மிகப்பெரிய வணிக வளாகம் இது.கிட்டத்தட்ட 4 .5 லட்சம்  சதுர அடி பரப்பளவில் அமைந்து இருக்கிறது.நான்கு மாடிகள் கொண்டு முதல் மூன்று தளங்களிலும்  பல்வேறு முன்னணி நிறுவனங்களின் கடைகள், ஹோட்டல் , ATM என பரந்து விரிந்து கிடக்கிறது.


நான்காவது மாடியில் சத்யம் சினிமாஸ் நடத்தும் 6 ஸ்க்ரீன்கள் இருக்கின்றன.முதல் முறையாக இந்த மாதிரி தியேட்டரை கோவை வாசிகள் அனுபவித்து இருக்க மாட்டார்கள். (வெளியூரில் /வெளி நாடுகளில் இருக்கிற கோவை வாசிகளுக்கு இது பொருந்தாது ).டிஜிட்டல் ஸ்க்ரீன், நல்ல இன்டீரியர் டிசைன், யுனிபார்ம் போட்ட யுவன் யுவதிகள், நல்ல சர்வீஸ்..இது போன்ற அம்சங்களை  பார்த்து இருக்கமாட்டார்கள்.




நான்கு  மாடிகளிலும் எஸ்கலேட்டர்  இருக்கிறது.லிப்ட் வர  ரொம்ப நேரம் ஆகிவிட்டால் இதில் இறங்கி தரை தளம் வந்து விடலாம்,நமக்கும் இதுல  வர நல்லா தான் இருக்கிறது. குழந்தைகளின் பொழுது போக்கே இதில் விளையாடுவதுதான்.(முதல் முதலாய் கணபதி சில்க்ஸ் , அப்புறம் போத்தீஸ்  இந்த இரண்டு நிறுவனங்களிலும் எஸ்கலேட்டர் இருக்கிறது ) நெல்லையின் புகழ் பெற்ற RMKV  சில்க்ஸ் இங்கு தான் இருக்கிறது.
கோவையில் இத்தனை மலர்களா ச்சே.ச்சே...அம்மணிகளா.... ( ஹி..ஹி ..ஹி பொண்ணுங்க தான் ) என வியக்க வைக்கும் அளவிற்கு அவ்ளோ பேரு ....இங்க தான் சுத்தி கிட்டு இருக்காங்க ...கோவையில் எந்த ஒரு பொழுது போக்கு இடம் இல்லாத காரணத்தினால் இங்கு எப்போதும் கூட்டம் அள்ளும் என்பது உறுதி..
வடகோவையில் இருந்து அவினாசி மேம்பாலம் செல்லும் பரூக் பான்ட் ரோட்டில் இருக்கிறது.காந்தி புரம் பஸ்ஸ்டாண்ட் டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம்...

Friday, December 16, 2011

மம்பட்டியான் - சிபியின் ஞாபகம்

இன்னிக்கு மம்பட்டியான் படம் பார்த்தேன்.ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் இந்த படம் ஒளிப்பதிவில் மிகவும் நன்றாக இருக்கிறது.சின்ன பொண்ணு சேலை பாடலில் மீரா ஜாஸ்மின் அவ்ளோ அழகு.கேமரா மேன் க்கு ஒரு சல்யூட்.அப்புறம் பிரசாந்த் முறுக்கி கொண்டு நடித்து இருக்கிறார்.படத்தில் வசனம் அதிகம் இல்லாததால் நன்றாக இருக்கிறது.வடிவேல் உடன் அலப்பறை செய்யும் ஒரு சிறுவனின் காமெடி அருமை.சில்க் பதிலாக முமைத் கான் .பார்க்க சகிக்காத முகம்...ஒட்ட வில்லை படத்துக்கு.

படம் பார்க்கும் போது சிபியின் ஞாபகம் வந்தது.அவர் இயக்குனரிடம் என்ன என்ன கேள்விகள் கேட்பார் என்று ..
1 ) திருவிழாவில் ஆடும் முமைத் கானுக்கு காலில் தங்க கொலுசு எப்படி
2 ) மீரா ஜாஸ்மின் வீட்டில்  பிரசாந் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அடுப்பில் பாத்திரத்துடன்  இன்னமும் எரிந்து கொண்டு இருக்கும் .அது யாருக்காக சமைக்கிறார்..?
3 ) பிரசாந்த் சாட்டை அடி  50 வாங்கும் போது அவரின் உடம்பில் காயம்பட்ட வரிகள் 5  அல்லது  6 மட்டுமே இருந்தது ஏன்  ?
4 ) மீரா ஜாஸ்மின் தண்ணீர் பானையை இடுப்பில் வைக்காமல் கையில் பிடித்து கொண்டு இடுப்பில் வைத்தது போல இருக்கிறார் .ஆனால் அவர் கூட வரும் பெண்கள் சரியாய் வைத்து இருக்கின்றனர்..
இது மாதிரி நிறைய சொல்லி கொண்டு போகலாம் ...








இந்த படம் பரூக் பீல்ட்ஸ் தியேட்டரில் இன்னிக்கு ரிலீஸ்.இந்த தியேட்டரில் படம் பார்த்தே ஆக வேண்டும் என்பதினால் சென்றேன்.இங்கு மொத்தம் 6 ஸ்க்ரீன் இருக்கிறது.சத்யம் தியேட்டர் இதனை நடத்துவதால் ரொம்ப ரிச் ஆக இருக்கிறது.எல்லாம் டிஜிட்டல் மயம்.கோவைக்கு இது புதுசு.நான் பார்த்த ஸ்க்ரீனில் மொத்தம் 190 சீட்கள் என நினைக்கிறேன்.ஒளிப்பதிவு துல்லியம்.

ப்ரூக் பீல்ட்ஸ் பத்தி அடுத்த பதிவு போடறேன்.
இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 14, 2011

மின் கட்டணம் குறைய இரு வழிகள்

தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2011.

மின்துறை அமைச்சகம் வெளியுட்டுள்ள விளம்பரம்
சுய மற்றும் நாட்டின் ஆதாயத்திற்கு என எரிசக்தியை சேமிக்கவும்
இன்னிக்கு இந்த தினமாம் .அதனால் நானும் என் பங்கிற்கு என்னால் முடிந்த அளவிற்கு சேமிக்க போகிறேன்.தேசிய எரிசக்தி விருதுகள் கிடைக்குமாம் ..
ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு இருவழிகளில் கட்டுபடுத்துவேன்.அது எப்படின்னா .

இந்த மாதிரி நீங்களும் உபயோக படுத்தினீங்க என்றால் நமக்கு எந்த ஒரு அணு உலை யும் தேவை இல்லை ..(ஹி..ஹி ஹி..ஹி )

இன்னும் கொஞ்சம்...

Saturday, December 10, 2011

ரத்த தானம்





நீங்கள் அறிய வேண்டிய உண்மைகள் :

தினமும் விபத்து மற்றும் நோய் வாய்ப்பட்டோரோருக்கு மருத்துவமனைகளில் போதிய ரத்தம் தேவை படுகிறது

18 - 65 வயதிற்கு உட்பட்ட நல்ல உடல் நிலையில் உள்ள ஆண் பெண் யாவரும் ரத்தம் கொடுக்கலாம்.

3 -6 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.ரத்தம் கொடுப்பது எளிது. 10 -15 நிமிடங்கள் மட்டுமே செலவாகும்.பெரிதாக வலி இருக்காது. நீங்கள் கொடுக்கும் ரத்தத்தை உடல் 8 வாரங்களில் ஈடு கட்டி விடும்.

சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முத‌ல் 350 ‌மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே ரத்த தானத்தின் போது எடுக்கப்படும். 

தொடர்ந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு நெடுநாள் வாழ வாய்ப்புண்டு.

ரத்த தானம் செய்பவர்களுக்கு மூளை மற்றும் இருதய அடைப்புகள் குறைவாகவே வருகின்றன என்பது மருத்துவ ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட ஒன்றாகும்.

உங்களின் ரத்த வகை என்ன வென்று தெரியுமா ...? அந்த தகவலை உங்களின் உடமைகளுடன் வைத்து இருங்கள்.உங்கள் உயிரை காக்க கூடிய தகவல் அது.

தொடர்ந்து ரத்த தானம் அளியுங்கள் ..பல உயிர்களை காக்க உதவுங்கள்....

ரத்தம் கொடுப்பதற்கு உறவு தேவையில்லை. குருப் மட்டுமே போதும்

ரத்தம் உங்களிடம் இருந்து பெரும் போது அனீமியா, ரத்த அழுத்தம், உடல் எடை, ஹெபாடிடிஸ் பி, ஹெபாடிடிஸ் சி, எய்ட்ஸ், பால்வினை வியாதிகள், மலேரியா போன்ற சோதனைகளை கண்ட பின்பே பெறுகிறார்கள்.

ரத்தத்தின் வகைகள்
ஏ, பி, ஓ, ஏபி.
அதிலும்  ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.

June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக கடைபிடிக்கபடுகிறது

சில துளிகள் :
கோவை யில் உள்ள அனைத்து ரத்த வங்கி களிலும் ரத்தம் செலுத்தி இருக்கிறேன்.

சேவை மனப்பான்மையுடன் 14 தடவை இது வரைக்கும் கொடுத்து இருக்கிறேன்.எனது வகை ஓ நெகடிவ் ஆதலால் மிகவும் அரிதானவை.நோயாளிகளை நேரில் கண்ட பின்பே இது வரைக்கும் கொடுத்து இருக்கிறேன். (யாரும் வாங்கி வச்சு வித்துடக் கூடாது அல்லவா..:)

கோவையில் உள்ள Blood  Donar Association இல் உறுப்பினராக உள்ளேன்.
எந்த வகை இரத்தம் என்றாலும், மருத்துவரின் அனுமதியோடு வரும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம்.
எனது போன் நம்பர்  : 99653  31401 .



இன்னும் கொஞ்சம்...

Thursday, December 8, 2011

ஒஸ்தி - போராளி

ஒஸ்தி  இன்னிக்கு படம் ரிலீஸ் ஆவதினால் போலாம்னு நினைச்சு தியேட்டருக்கு போனால் இன்னிக்கு காட்சி ரத்து அப்படின்னு போர்டு போட்டிருக்கு.சிம்பு ரசிகர்கள் கூட்டம் அள்ளுது.ஆனால் அங்க ஒரே களேபரம்.ரசிகர்கள் உள்ளே வந்துவிட கூடாது என்பதற்காக ஆளுங்க தடி கொண்டு மிரட்டி கொண்டு இருந்தனர்...எதுனால ரத்து அப்படின்னு தெரியல....ஒருவேளை பொட்டி வரலையோ ...
        வந்த வேலை வீணாய் போய்விட கூடாது என்பதற்காக போராளி போனேன்.படம் நன்றாக இருக்கிறது.நல்ல காமெடி ஆக படம் போகிறது.ஒரு சில பதிவர்கள் சொல்லும் விமர்சனம் கண்டு போக வேணாம்.அவங்க தான் படத்தோட தலைவிதியை  நிர்ணயிக்கிறதா நினைச்சுகிறாங்க.ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை இருக்கும்.உங்க ரசனைய நீங்க தான் கண்டு பிடிக்கணும்.
             அப்புறம் இங்க தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம்.அப்புறம் காண்டீனில் எல்லாம் விலை அதிகம்.ஒரு முட்டை பப்ஸ் - 25 ரூபாய், பாப்கார்ன்  - 20 ரூபாய், கோன் ஐஸ் - 15  ரூபாய்...இப்படி அநியாத்திற்கு விலை விற்றால் எவன் தியேட்டருக்கு வருவான்.தள்ளிட்டு வர்றவனும், கடலை போடறவனும் மட்டும் தான் வருவான்.(சத்தியமா நான் யாரையும் தள்ளிட்டு போகல , கடலை போடவும் போகல ..)



இங்க சாந்தி, காவேரி தியேட்டரில் படம் ஓடுகிறது.



இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 7, 2011

நாமக்கல் கோட்டையின் தோற்றம்

நாமக்கல்லில் ஒரு ஞாயிறு (4.12.11) காலை ....
மீன் வாங்க சந்தைக்கு சென்ற போது நாமக்கல் கோட்டையின் தோற்றம்



 சந்தையில் அணிவகுத்த மீன்கள்



இன்னும் கொஞ்சம்...

Friday, December 2, 2011

கோவை மெஸ் - KFC - சிக்கன், R.S.புரம், கோவை


               கோவை ஆர்.எஸ் .புரத்தில் உள்ள KFC சென்றோம்...நிறைய வகைகள் இருக்கின்றன.எவ்வளவு சாப்பிட்டாலும் வயிற்றில் இன்னும் இடம் இருப்பது போலவே இருக்கிறது ( பர்ஸ் காலியாவது வேற விஷயம் ).நல்ல சுவையுடன் இருக்கிறது.நாம் இதுவரைக்கும் சில்லி சிக்கன், கிரில் , சுக்கா, தந்தூரி போன்ற எண்ணெய் வடியும் வகைகளைத்தான் சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் KFC முற்றிலும் வேறாக இருக்கிறது.மொறு மொறுவென்று சிக்கன் நல்ல சுவையுடன் இருக்கிறது.பாப்கார்ன் சிக்கன், பக்கெட் சிக்கன் , பர்கர், க்ரஷர்ஸ் என நிறைய்ய்ய ........வெரைட்டி .
விலையோ ரொம்ப அதிகம்.




இன்டீரியர் மிகவும் நன்றாக இருக்கிறது..மேல்தட்டு மக்களை , நவ நாகரீக யுவதிகள் மற்றும் இளைஞர்கள் களை அதிகம் காண முடிகிறது.கடலை வறுக்கும் கூட்டம்தான் அதிகம் இருக்கிறது ...

 note : KFC என்பது Kentucky fried chicken 

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...

Saturday, November 26, 2011

கோவில் குளம் - அகஸ்தீஸ்வரர் கோவில் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR), கரூர்

திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR)                
முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்ட கோவில் உள்ள ஆலயம்.(புதியதாய் கட்டிய கோவிலுக்கு மட்டுமே தமிழில் அர்ச்சனை). மூன்று ஆறுகள் கூடும் இடம் திருமுக்கூடலூர்.இங்கு அமராவதி நதிக்கரை ஓரமாக இக்கோவில் அமைந்து இருக்கிறது.பல நூற்றாண்டு களுக்கு முன்னரே  இக்கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.இக்கோவிலின் தல வரலாறு தெரியவில்லை.ஆனால் சோழ மன்னன் கட்டிய கோவில் என்று நம்பப்படுகிறது.இப்போது இக்கோவில் பராமரிப்பின்றி சிதில மடைந்து இருக்கிறது.கல்வெட்டுகள், ஒரே கல்லில் செதுக்கிய தூண்கள், அதில் சிற்பங்கள், கருங்கல்லில் செய்யப்பட்ட மண்டபங்கள், இப்படி நுண்ணிய அரிய கட்டிட சான்றுகள் இருக்கின்றன.தொல் பொருள் துறையினரால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.
 பிரதோஷம் , பௌர்ணமி அன்று மிகவும் சிறப்பாய்  பூஜை செய்யப்படுகிறது. அன்று நல்ல கூட்டம் காணப்படும். 























கோவிலை சுற்றி கோட்டை மதில் சுவர் உள்ளது.தற்போது இந்த கோவிலை கிருஷ்ணன் மற்றும் அவரது வாரிசுகள் நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர்.


செல்ல வழி : கரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவு.4 ம் எண் பேருந்து திருமுக்கூடலூர் செல்லும்.

கிசுகிசு: இந்த ஊர்ல தான் நான் பொறந்தேன் வளர்ந்தேன்.எப்படியோ எங்க ஊரை பத்தி ஒரு பதிவ போட்டுட்டேன்..

THIRUMUKKUDALUR, KARUR DISTRICT

நேசங்களுடன்

ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...