ஹோட்டல் அப்பன்ஸ், சிவகாசி
சிவகாசி....பேரை சொன்னாலே பக்குனு பட்டாசு ஞாபகம் தான் வரும்..குட்டி ஜப்பான் என்று அழைக்ககூடிய ஒரு சிறு நகரம்.கந்தக பூமியில் ஒரு நாள் இருந்த போது சாப்பிட எங்கு போலாம் என்று அருகில் கேட்டபோது அப்பன்ஸ் போங்க..கொஞ்சம் நல்லா இருக்கும் என்று சொன்னதால் அங்கு சென்றோம்.
போர்டு மட்டும் ரொம்ப சின்னதாக இருக்கிறது..ஆனால் கடை கொஞ்சம் விசாலமாகவே இருக்கிறது.ஏசி வசதியுடன் இருக்கிறது.அதுக்கும் காசு என்பது பில் வரும் போது தான் தெரிகிறது.
உள்ளே நுழைந்தவுடன் சுடச்சுட புரோட்டா ரெடியாகி கொண்டு இருக்கிறது. பார்சல் ஏரியா தனியாக இருக்கிறது.முதலில் ஒரு ஹால்..ஏசி இல்லாத இடம்.உள்ளே இன்னும் செல்ல இரண்டு பெரிய ரூம்கள்....ஏசி வசதியுடன்... சுவரெங்கும் வால் பேப்பர் ஒட்டப்பட்டு நவீனபடுத்தப்பட்டு கொஞ்சம் மங்கிய வெளிச்சமுடன் இருக்கிறது (5 ஸ்டார் ரேஞ்சாம்...).
இந்த ஹோட்டல் ஸ்பெசல் என்ன என்று கேட்க, சிக்கன் அம்பரலா...சொல்ல சரி ஏதோ புது அயிட்டம் போல என்று அதை ஆர்டர் பண்ணினேன்.கூடவே மட்டன் பிரியாணி, ஆம்லெட்....
பிரியாணிக்கு அப்புறம் அந்த அம்பரலா வந்தது..... குடை வடிவில் சிக்கன் லெக் பீஸ்...அட....(புதுசு புதுசாத்தான் கண்டுபிடிக்கிறாங்கய்யா......)
ஒரு பிளேட்டில் இரண்டு குடை...கூடவே குடையின் நிழலில் எலுமிச்சை, மற்றும் கொஞ்சம் வெங்காயம்..
( குடை சிக்கன்.பிளாஷ் அடித்து போட்டோ )
பிரியாணி சுவை நன்றாக இருக்கிறது.சாப்பிட்டு கொஞ்சம் சாதம் வாங்கி ரசம் ஊற்றி சாப்பிட்டோம்..ரசம் நன்றாக இருக்கிறது.சிவகாசி மக்கள் விரும்பி செல்லும் இடம் என்பது வரும் நபர்களை பார்த்தாலே தெரிகிறது...
எல்லாம் சாப்பிட்டவுடன் பில் வர, கூடவே ஏசிக்கும் சார்ஜ் செய்து இருந்தனர்.(இப்படி வாங்கலாமா....ASK ). (சென்னையில் விருகம் பாக்கம், சாலி கிராமம்,வடபழனி டாஸ்மாக்கில் ஏசிக்கு என்று தனியாக சார்ஜ் செய்வார்கள்..)
எப்படியோ...அடிக்கிற வெய்யிலுக்கு இங்க போனா இளைப்பாறலாம்...காசு கொடுத்து...
விலை அந்த ஊருக்கு ஏற்றபடி தான் இருக்கிறது.
இந்த ஹோட்டல் சிவகாசியில் மூன்று இடங்களில் கிளை பரப்பி இருக்காம்.கொஞ்சம் ஃபேமஸான ஹோட்டல் என்பது கூட்டம் வருவதை பார்த்தால் தெரிகிறது.
சாப்பிட்டு விட்டு வெளியில் வர
கண்களில் ஒரு மத்தாப்பு வெளிச்சம்...
பட்டாசு நகரில் பாவைகள்...
அய்யன் நாடார் ஜானகி அம்மாள்
கல்லூரி அம்மணிகள்....
பார்த்தவுடன் பற்றிக்கொண்டது..
அணுகுண்டாய் அம்மணிகள்
ஆகிவிட்டால் என்செய்வது
என்றெண்ணி புஸ்வானமாய்
புன்னகைத்து புறப்பட்டோம்....
இந்த ஹோட்டல் சிவகாசி காவல் நிலையம் அருகில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்.