கோவையில புதுசா ஆரம்பிச்சு இருக்கிற டொமினோ பிஸ்ஸா (PIZZA ) க்கு ஒரு போன் போட்டேன்.அழகான ஒரு வாய்ஸ்....அப்படியே அசந்துட்டேன் . ஹி..ஹி ..அது ரெகார்ட் பண்ணியிருக்கிற வாய்ஸ்.நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது பிசியாக இருக்கு அப்படின்னு ...மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து முயற்சி பண்ணியதில் நிஜமாகவே ஒரு ஸ்வீட் வாய்ஸ்.என்ன வேணும்னு கேட்டாங்க...பேரு அட்ரஸ் லாம் கேட்டுவிட்டு (நான் கேட்கலைங்க ..அவங்க கேட்டாங்க..) நான் வெஜ் பீசா 4 பேர் சாப்பிடற மாதிரி ஆர்டர் பண்ணினேன்.அப்புறம் சிக்கன் விங்க்ஸ் , சிக்கன் கிகர்ஸ் இதையும் ஆர்டர் பண்ணினேன்.நான் வெஜ்ல ரொம்ப ஸ்பைசியா ...அப்புறம் கொஞ்சமா என இரண்டு வகை இருக்கு.நான் ரொம்ப ஸ்பைசியா ஆர்டர் பண்ணினேன்.நிறைய வெரைட்டி இருக்கு..அதெல்லாம் வாயிலே நுழைய மாட்டேங்குது.அரை மணிக்குள் வந்து விடும்னு சொன்னாங்க.6 km தூரத்துக்குள் தான் ஹோம் டெலிவரி சொன்னாங்க...நல்லவேளை நாம அந்த டிஸ்டன்ஸ் ல இருக்கிறதால...அதே மாதிரி கொண்டு வந்து சேர்த்தாங்க.நல்லா பேக் பண்ணி சூடா இருந்தது.
டேஸ்ட் நல்லாத்தான் இருக்கு...ஆனா.....விலையும் அருமை...இவங்க விலைய பார்த்தா...மேல் தட்டு வர்க்கங்களை நம்பியே இருக்கிற மாதிரி இருக்கு.எப்பவாவது சாப்பிடணும்ன்னு தோணினா மட்டும் சாப்பிடலாம்.அதே மாதிரி பீட் பேக் (feed back ) அருமை.டெலிவரி செய்த அன்றே கஸ்டமர் கேர் லிருந்து அழைப்பு எப்படி இருக்கிறது என்று அப்புறம் .சாப்பிட்ட இரண்டு நாள் கழித்தும் விசாரிப்பு ...அருமை...கோவை யில் சாய்பாபா காலனியில் இருக்கிறது. Domino's Pizza - 0422- 2442626
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பீஸ்வெல்லாம் ஆர்டர் பண்ணியிருக்கிங்க...என்ன எதாவது விசேசமா....?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteமக்கா கலக்கல் எழுத்து நடை .
ReplyDeleteபோட்டோ சூப்பர் . என்ன கேமரா நண்பா !!!
உங்கள் அடுத்த பதிவுக்கு காத்து இருக்கும் நண்பன் யானைக்குட்டி
மக்கா கலக்கல் எழுத்து நடை .
ReplyDeleteபோட்டோ சூப்பர் . என்ன கேமரா நண்பா !!!
உங்கள் அடுத்த பதிவுக்கு காத்து இருக்கும் நண்பன் யானைக்குட்டி
இதில் என்ன விசேசம்.வீடு ...சும்மா பதிவ தேத்தனும்ல ........
ReplyDeleteவணக்கம் யானைக்குட்டி மக்கா...நீங்க திருநெல்வேலி தானே....அப்புறம் சாம்சங் கேலக்சி ...நன்றி வந்ததுக்கு
ReplyDeleteஅருமையான சுவையான பிஸ்ஸா பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்த சாய்ஸ்..
ReplyDeleteromba super ah irkum....with pepsi
ReplyDelete