Saturday, August 31, 2013

பதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு

கிளம்பிட்டோம்...கட்டுச்சோறு கட்டிகிட்டு....
கரெக்டா வண்டி எடுத்தாச்சு..9.45க்கு....

நிகழ்காலம் எழில் அவர்களின் கைமணத்தில் தக்காளி சாதமும் கூடவே அவிச்ச முட்டையும் ,  கலாகுமரன் அவர்கள் வீட்டு அம்மணி கைமணத்தில் மஸ்ரூம் பிரியாணியும், நம்ம கை வண்ணத்தில் சிக்கன் வறுவலும் சாதமும் செஞ்சு கொண்டு வரோம்...இதப்பத்தி நம்ம ஆவிகிட்ட சொல்லவும், அதுவும் ரொம்ப ஆவலா கொஞ்சநேரம் யோசிச்சு என்ன கொண்டு வரட்டும் அப்படின்னு கேட்டுட்டு கடைசியா ஒரு பிட்டைப்போட்டான் பாருங்க...அப்படியே மெர்சலாயிட்டேன்......என்ன சொன்னான் இந்த ஆவிப்பயல் தெரியுமா...நான் வேணா வெறும் வாயை மட்டும் கொண்டு வர்றேனே.....

ஏ......நியாயமாரே....இது அடுக்குமா....?



      
சென்னை வந்தவுடன் முதல் வேலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சமாதிக்கு போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வரணும்...( வந்தவங்களுக்கு மெட்ராசை சுத்திக்காட்டணும்....ஒரு வரலாறு வேணும்ல...) அப்புறம் அப்படியே மெரினா பீச்சுல காத்து வாங்கிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிட்டுகிட்டு காலாற நடந்துகிட்டே அங்க இருக்கிற அம்மணிகளை தரிசனம் பண்ணிட்டுத்தான் பதிவர் சந்திப்பு விழா மண்டபத்திலயே கால் வைப்பேன்....ஹிஹிஹி

நாங்க வந்துட்டோம்...மறக்காம நீங்களும் விழாவிற்கு வந்துடுங்க...அங்க சந்திப்போம்...வணக்கமுங்க...

கிசு கிசு : ஏ.சி வண்டி வேற.....கை வேற நடுங்குது...சிக்கன் வாசம் மூக்கைத்துளைக்குது...கார சாரமா அவிச்ச முட்டை வேற ....என்ன பண்றது.....? சரோஜா...சாமான் நிகாலோ.......ஹிஹிஹிஹி


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++

சென்னையில் துவங்கவிருக்கிற இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமா கோலாகலமா நடக்கப்போகுது.இன்னும் ஒரிரு நாட்களே இருக்கு.எல்லாரும் தீயா வேலை செஞ்சிட்டு இருக்காங்க.அதிலும் முக்கியமான தலக்கட்டுகள்  பெரியவர் முதல் சிறியவர் அனைவரும் முன்னின்று ஏற்பாட்டை செஞ்சிட்டு இருக்காங்க.காலையில இருந்து மாலை வரைக்கும் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கு.கோவையின் பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.பிரபல பதிவர்களோட புத்தகம்லாம் ரிலீஸ் ஆகப்போகுது.அதில்லாம பதிவர்களோட தனித்திறன் நிகழ்வாக பாட்டு, டான்ஸ், கவிதை, நாடகம் இதெல்லாம் இருக்காம். (அப்படியே பக்கத்துல கேண்டீன் ஒண்ணு வச்சிருங்க சாமியோவ்...செமையா கல்லா கட்டிறலாம்..ஹிஹிஹி ) பயங்கரமா கச்சேரி களை கட்டப்போகுது.



சரி..சரி அதை விடுங்க.நம்ம மேட்டருக்கு வாங்க..மத்தியான விருந்துக்கு நான்வெஜ் அயிட்டமெல்லாம் போடறாங்களாம்.அதிலும் நமக்கு பிடிச்ச ஏகப்பட்ட வெரைட்டிகள் இருக்காம்.கடல்ல நீந்தறதுல கப்பலைத் தவிர, ஆகாசத்துல பறக்குறதுல விமானத்தைத் தவிர, ஓடறதுல பஸ் லாரி கார் தவிர, இப்படி எல்லா வகை உயிரினமும் இருக்காம்.ஓடறது போடறது கூட இருக்காம்...ஒரு புடி புடிச்சிட வேண்டியது தான் ஏன்னா இது நம்ம வீட்டு கல்யாணம்...(சாரி..ஒரு ஃப்ளோவுல வந்திடுச்சு... ) இது நம்ம வீட்டு விசேசம்... பூந்து விளையாடலாம்... இந்த சாப்பாட்டு விருந்துல என்னென்ன மெனு இருக்குன்னு தெரியல..எதுவா இருந்தாலும் சாப்பிடுவோம்...ஒரு வேளை கீழே இருக்கிறது எல்லாம் இருக்குமோ...

















உஸ்ஸ்...அப்பாடா...
இப்பவே கண்ணைக்கட்டுதே....
படங்களைப் பார்க்கையிலே
பசி நரம்புகள் சத்தமிடுதே...

சைவப் பிரியர்களே கவலைப்படாதீங்க எங்களைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க..உங்களுக்கும் வகை வகையாய் நிறைய இருக்கு, தயிர் சாதம், ஊறுகாய்ன்னு (அதுவும் பாண்டியன் மட்டை ஊறுகாய்) ஏற்பாடு செஞ்சி இருக்காங்களாம்..ஹிஹிஹி .....ஒரு பிடி பிடிச்சுகுங்க.


எல்லாரும் கண்டிப்பா வந்திடுங்க...ஒரு கை பார்த்திடலாம்..

கிசு கிசு : மத்தியான நேரத்துல என்னை எங்கயும் தேடாதீங்க கண்டிப்பா முத பந்தியில நான் இருப்பேன் ஹிஹிஹி...


பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Monday, August 26, 2013

பயணம் - சிங்கப்பூர் - EAST COAST PARK (ECP) - SINGAPORE, குடில் டேட்டிங், சைக்கிளிங், நீச்சல், பொழுது போக்கு

         ஒரு மதிய வேளை...மனதுக்கு இதமான இடத்துக்கு போவோம் என்றெண்ணி போனது இந்த East coast park பீச்சுக்கு.சிங்கப்பூரின் பெடோக் பகுதிக்கு அருகில் இருக்கிற இந்த பீச்சில் நம்மை புதுப்பித்துக்கொள்ள புத்துணர்ச்சி அடைந்து கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருக்கிறது.பொழுது போக்காய் மீன் பிடித்தல், பட்டம் விடுதல், நீச்சலடித்தல், வாட்டர் சர்ஃபிங், சைக்கிளிங், ரோலர் ஸ்கேட்டிங், கேம்ப் எனப்படும் குடில்கள்,நடைபயணம், மனம் ரிலாக்ஸ் ஆக பீச், குடும்பம் குடும்பமாய் கும்மியடிக்க பார்பிகியூ இடங்கள் என எல்லாமாய் இருக்கிறது.




                   பரந்து விரிந்து கிடக்கும் கடலினைப் பார்த்துக்கொண்டே ஓரு ஓரமாய் நடந்து செல்கையில் முதலில் கண்ணில் பட்டது இந்த குடிசைகள் சாரி குடில்கள் தான்.பச்சைப்புல்வெளியில் பசுமையான மரங்களுக்கு அடியில் ஆங்காங்கே நீல கலரில் குடில்கள் வியாபித்து இருந்தன.( நீலக்கலர் என்றதுமே அப்போது அது ஞாபகத்திற்கு வரவில்லை.) ஒரு வேளை நாடோடிக் கூட்டங்கள் தான் நட்டு வைத்து இருக்கின்றனரோ என ஒரு ஆச்சர்யத்தில் நண்பரைக் கேட்க அவர் சொன்னது இன்னும் படு ஆச்சர்யம்.வீக் எண்ட் களில் தள்ளிக்கொண்டு, அள்ளிக்கொண்டு, கட்டிக்கொண்டு, ஓட்டிக்கொண்டு (இன்னும் என்னென்ன வார்த்தைகள் இருக்கோ ) தனிமையைத்தேடி வரும் ஜோடிகள் சல்லாபிக்க சரசமாட சாரி பேசிக்கொள்ள அப்புறம் நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள பிரைவசி வேண்டி கட்டிக்கொள்ளும் குடில்கள் தான் அவை.




             எந்த தொந்தரவும் இல்லாமல் போலீஸ்க்கு பயப்படாமல், லாட்ஜ்களுக்கு செலவளிக்காமல் திறந்த வெளியில் குடில் அமைத்து தங்களை புதுப்பித்துக்கொள்ளும் / உணர்ந்து கொள்ளும் இடமாக குடில்களை அமைத்து சல்லாபித்துக்கொண்டு இருக்கின்றனர் கொடுத்த வைத்த குடிமக்கள்.இதுக்கு பேரு தான் குடில் டேட்டிங்கா...? குடில் விலை ஒரு சில டாலர்களில் அடங்கிவிடுவது மட்டுமே.அப்புறம் அம்மணிகளுக்கு பண்ற செலவு தவிர மத்தபடி எந்த செலவுமில்லை.ஆக மொத்தம் குறைந்த விலையில் நிறைந்த சுகம்.கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு கடக்கையில் குடிலின் அசைவுகள் நம் உணர்வுகளை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது.



        நம்மூர்லயும் இந்த மாதிரி வசதிகள் வந்துவிட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.ம்ம்ம்..ஒரு ஏக்கப்பெருமூச்சுதான்....தினத்தந்தி பேப்பரில் வர்ற மாதிரி நிறைய அசைவ செய்திகள் இருக்காது.70 வயசு கிழவியை கெடுத்தது, சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றது, அப்புறம் அங்க அவன் கெடுத்தான் இங்க இவன் கெடுத்துட்டான்னு பக்கம் பக்கமா நிச்சயமா நியூஸ் வராது.அதே சமயம் நம்மூர் சட்டம் கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டும்.கண்டிக்க, தண்டிக்க, துண்டிக்க பாரபட்சம் காட்டாமல் இருந்தால் இதுவும் சாத்தியமே.

      அப்படியே பேசிக்கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நோட்டமிட்டதில் இந்த பீச் மிக சுத்தமாக இருக்கிறது.எந்த வித அசுத்தங்களோ, குப்பைக்கூளங்களோ இல்லை. பீச் ஏரியாவில் இந்த குடில்கள்  நிறைய இருந்தாலும் அம்மக்களை யாரும் எந்த வித தொந்தரவும் செய்யாமல் இருக்கின்றனர். குடில் இல்லாத மக்கள் குடும்ப குடும்பமாய் அடுப்பு மூட்டி பார்பிக்யூ சமையல் செய்து களிக்கின்றனர்.இன்னும் நிறைய பேர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பீச்சினை வலம் வருகின்றனர்.இதற்காகவே சைக்கிள் வாடகைக்கு விடும் இடமும் இருக்கிறது.பேமிலி சைக்கிள் எனப்படும் ஒரு சைக்கிளில் குடும்பமே குதூகலமாக பீச்சினை சுற்றி வருகின்றனர்.







            ஒரு சிலர் பட்டம் பறக்க விட்டு கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலர் கடலில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.நம்மளை மாதிரி ஆட்கள் உலாவரும் அம்மணிகளை ரசித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளைக் கண்டபடி இன்னும் சிலர்.இப்படி ஒவ்வொருவரும் அமைதியான மாலைப் பொழுதினை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செலவிடுகின்றனர். 


       
           நன்றாக திட்டமிட்டு மீன்பிடிக்க இடம், வாட்டர் ஸ்கை செய்ய இடம். புல்வெளிகள், சைக்கிள் ஓட்ட பாதை, நடக்க ஒரு பாதை, மரங்கள், சமைத்து சாப்பிடுவர்களுக்கு டேபிள் என அமைத்து இருக்கின்றனர்.



               எல்லாம் ஆற அமர்ந்து பார்த்து ரசித்தபின் நாங்களும் கடலில் குதித்து எங்கள் களியாட்டத்தினை ஆரம்பித்தோம்.(ம்ம்ம்.என்ன பண்றது எங்களுக்குத்தான் குடில் இல்லையே..ஹிஹிஹி ).

               கடலில் குளித்த பின் நல்ல தண்ணீரில் குளிக்க தனித்தனி ஷவர் வைத்து இருக்கின்றனர்.அங்கேயே உடை மாற்றும் அறைகளும் இருக்கின்றன.டாய்லட் வசதிகளும் இருக்கின்றன.ஆனா நம்ம ஊர் பீச் களை நினைக்கையில் ரொம்ப வருத்தமாக இருக்கிறது.நம்ம கவர்மெண்ட்டுக்கு அவ்ளோ தான் முடியும்.மக்கள் தொகைப்பெருக்கம், லஞ்சம், ஊழல் என எல்லாம் பெருகி இருக்கும் போது என்னத்த செய்யுறது..என்னத்த சொல்றது....

                 இருட்ட துவங்கியவுடன் நடையைக்கட்ட ஆரம்பித்தோம்.செல்லும் போது குடில்களை பார்க்கின்ற போது ஒரு ஏக்கப்பெருமூச்சு வெளிவந்தது என்னவோ உண்மைதான்...ஏன்னா நம்மூர்ல தனிமையில் பேசிக்கொண்டிருந்த காதலர்களிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு, (முடிஞ்சா கற்பையே பறிப்பு), பீச்சில் காதலர்களிடையே போலீசார் மாமூல் வசூல், மகாபலிபுரம் ஈசிஆர் ரோட்டுல போற வர்ற காதலர்கள்கிட்டே வண்டியை மறிச்சு பணம் வசூல் இப்படி நடக்கிறத பார்த்தா சிங்கப்பூர் குடில் வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்.

கிசுகிசு : குடிலுக்குள்ள தான் போக முடியல...அட்லீஸ்ட் அதுக்கு முன்னாடியாவது நின்னு போட்டோ எடுத்துக்கலாமே அப்படின்னு சிங்கப்பூர் நண்பருடன்.....

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்


ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Wednesday, August 21, 2013

கோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஏரியாவில் கால் வலிக்க சுத்திட்டு இருக்கும் போது ரொம்ப வறண்டு போய் இருந்ததால் தாகத்துக்கு ஏதாவது குடிக்கலாமே அப்படின்னு ஒரு காம்ப்ளக்ஸ் குள்ள புகுந்தோம்.டேக்கா செண்டர் எனப்படும் அந்த மாலுக்குள் நுழைய ஏகப்பட்ட கடை கண்ணி(ன்னி)கள்.துணிக்கடை, ஹோட்டல், என நிறைய....ஒரு சுத்து சுத்திட்டு வந்து தோதா ஒரு இடத்தில் உட்கார பக்கத்தில ஒரு ஜூஸ் கடை...அதில் கொஞ்சம் வித்தியாசமா ஒரு பானம் இருந்துச்சு.கருப்பு கலர், பச்சை கலர், வெள்ளை  கலர் என கலர் கலரா இருக்க ஒரு அம்மணி வந்து வாங்கி குடிக்கவும் எனக்கு ஆர்வம்..என்னவா இருக்கும் அப்படின்னு.நமக்குன்னு ஒண்ணு கேட்கலாம்னு பார்த்தா அந்த கடைக்காரர் நம்ம ஊர்க்காரர்.விவரத்தை கேட்கவும் புட்டு புட்டு வைத்தார்.அது பேரு சென்டால் அப்படின்னு விவரத்தை சொல்ல.. சரி ..நமக்கு ஒரு கிளாஸ் என கேட்க ஸ்பெசலாய்  போட ஆரம்பித்தார்.பனங்கருப்பட்டி போட்டு தேங்காய் பால் ஊற்றி அரிசியில செஞ்ச நூடுல்ஸ் போட்டு ஐஸ்கட்டிகள் நிறைய போட்டு தந்தார்.
       ஓரு ஓரமா உட்கார்ந்து போக வர இருந்த அம்மணிகளை ரசித்துக்கொண்டே குடித்ததில்  சீக்கிரம் காலியாகிப்போனது.இந்த பானம் மிக நன்றாக இருக்கிறது..பனங்கருப்பட்டி வாசத்தில் தேங்காய்ப்பால் கலந்து ஜில்லென்று குடிக்க மிக சுவையாக இருக்கிறது.உடம்புக்கு குளிர்ச்சியைத்தரும் பானம் என்று கூடுதல் தகவலை சொன்னார்.இதன் விலை 1.20 டாலர்தான்.நன்றாக இருக்கிறது.





நிறைய தமிழர்கள் புழங்கும் இந்த இடத்தில் அவ்வப்போது அழகழகாய் வெளிநாட்டு அம்மணிகளின் வருகை மனதிற்கு இதமளிக்கிறது.
கண்டிப்பா அந்தப்பக்கம் போனீங்கன்னா குடிச்சுப்பாருங்க...செமையா இருக்கும்.
இந்த பானம் பத்தி ஒரு சிறு தகவல் இது மலேசியாவின் மலாக்காவில் மிகப்பிரபலமான பானம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Sunday, August 18, 2013

பயணம் - சிங்கப்பூர் - MARINA BAY Sands , Singapore

கடந்த ஒரு வாரமா சிங்கப்பூர்ல ஊர் சுத்திட்டு இருந்தேன்.மிகப் பிரம்மாண்டமான அதே சமயம் மிகப் பிரமாதமான ஊர்.என்ன ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு, சுத்தம், அப்புறம் அழகழகான அம்மணிகள் என அம்சமாய் இருக்கிறது சிங்கப்பூர்.சிங்கப்பூர்ல மெரினா பே சாண்ட்ஸ் என்கிற இடத்திற்கு போனேன்.கப்பல் மாதிரி இருக்கிற கட்டிடம்.அண்ணாந்து பார்த்தா நிச்சயம் கழுத்து சுளுக்கிக்கும்.அவ்ளோ உயரமான கட்டிடம்.



ஸ்கைபார்க் எனப்படும் உச்சிக்கு மேலே போய் சுத்திப்பார்க்க  20 டாலர்.பில்டிங்கின் அண்டர்கிரவுண்டில் இருக்கிற கவுண்டரில் டிக்கெட் வாங்கிட்டு உள்ளே நுழைகையில் இந்த பில்டிங்கின் மாடல் இருக்கிறது.அதை பார்த்துவிட்டு நகர்கையில் நம்மை இழுத்துப்பிடித்து போட்டோ எடுக்கிறார்கள்.நாங்களும் போஸ் கொடுத்துவிட்டு லிஃப்ட்க்குள் போனோம். லிஃப்ட் மேலே போக போக காது உய்ங்...கிறது.56 மாடிக்கு போக வெறும் 32 செகண்ட்ஸ் தான்.செம பாஸ்ட்..கதவை திறந்து வெளிய பார்த்தா நம்ம போட்டோவை (அந்த பிரம்மாண்டமான கப்பல் பில்டிங் பேக்ரவுண்ட்ல நிக்க வைச்சு  எடுத்த போட்டோ) வச்சி கூவிக்கிட்டு இருந்தாங்க. அட...அதுக்குள்ளயா...என ஆச்சரியப்பட்டே 30 டாலர் கொடுத்து வாங்கிக் கொண்டோம்.(வரலாறு வேணும்ல).



அப்படியே நடந்து போனா கப்பலோட மேற்பரப்புல இருக்கோம்.சுத்தியும் கண்ணாடித்தடுப்பு வைத்திருக்கிறார்கள்.அதில சாய்ந்துகிட்டு ஒவ்வொருத்தரும் செமையா போஸ் கொடுத்துகிட்டு இருக்காங்க.நாங்களும் அந்த ஜோதில ஐக்கியமாகிட்டோம்.மேலிருந்து கீழே பார்த்தால் எல்லாம் துக்குனூண்டு தெரியுது...சிங்கப்பூரோட ஒட்டு மொத்த அழகும் தெரியுது.கடல், கட்டிடம், ரோடு என எல்லாம் மிக அழகாய் தெரிகிறது.இந்த பில்டிங்கில் தான் இன்பினிடி ஃபூல் என்கிற நீச்சல் குளம் இருக்கிறது.இதில் நமக்கு குளிக்க அனுமதி இல்லை.எட்ட நின்னு பார்க்க மட்டுமே.அப்படி எட்டி பார்த்துவிட்டு பெருமூச்சினை விட்டபடி வேற பக்கம் நகர்ந்தோம்.






இந்த கப்பலின் மேற்பரப்பில் சுத்தி சுத்தி பார்த்துகொண்டே அதிசயப்பட்டோம். சிங்கப்பூர் அழகை ரசித்துக்கொண்டே இருக்கிறோம்..நேரம் போனதே தெரியவில்லை.அம்மணிகள் வேற அரைகுறை ஆடைகளுடன் உலாவுகிறார்கள்...அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை.சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு (அம்மணிகளை இல்லை..அங்கிருந்து தெரிகிற சிங்கப்பூர் அழகினை) கிளம்பினோம்.

பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...