Tuesday, January 31, 2012

அருள்மிகு கொல்லா புரி அம்மன்.

தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இக்கோயில் இருக்கிறது.ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்கு குத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிகளை, வேல்களை பார்த்தாலே தெரிகிறது.இக்கோயில் செல்லும் வழிகளில் உள்ள புளிய மரங்களில் நிறைய கோழிகள் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தன.வேண்டுதல் நிறைவேற அங்குள்ள மக்கள் கோழிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவார்களாம்.திருட்டு சம்பந்த பட்ட வேண்டுதல்கள் தான் நிறைய வருமாம்.சுற்று  வட்டார மக்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இதுதானாம்.









இக்கோவில் தருமபுரி டு போச்சம்பள்ளி செல்லும் வழியில் இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 25, 2012

அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் - ஜலகாம் பாறை - ஏலகிரி - திருப்பத்தூர்

ஜலகாம் பாறை....ஏலகிரி மலையினை ஒட்டி அமைந்துள்ள ஒரு திருத்தலம்.முருகன் தம்பதி சமேதராக சிவலிங்க வடிவில் உள்ள கோவிலில் அருள் பாலிக்கிறார். இங்கு ஏலகிரி மலைகளில் இருந்து உருவாகும் சிறு அருவி திருமால் முருகன் தீர்த்தம் என்று அழைக்கபடுகிறது.திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது.மலை சூழ்ந்த இடம் ஆதலால் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.வெங்கடேச பெருமாளின் பாதம் பட்ட இடம் ஆதலால் அவர்க்கும் ஒரு கோவில் அமைத்து கும்பிடுகின்றனர்












அமைதி...அமைதி...அப்படி ஒரு அமைதி...சலசலக்கும் அருவி சத்தம், கோவில் மணி யோசை என மிக அருமையாக இருக்கிறது.மலையின் மேல் கோவில் இருந்தாலும் அடிவாரம் என்று ஒன்றும் இல்லை.ஆனாலும் அங்கு கடை கண்ணிகள் இருக்கிறது.சுட சுட பணியாரம் , கரும்பு ஜூஸ், என திடீர் கடைகள் நிறைய இருக்கின்றன.





அருவியில் நீர் (கொஞ்சமாக) தற்போது வந்து கொண்டிருக்கிறது.குளிக்க ஜில்ல்னு இருக்கிறது.ஒரு சில சீசன்களில் மட்டும்தான் அதிகம் வருமாம்.
ஆனால் எப்போதும் நீர் வரத்து இருக்குமாம்.அப்புறம் நம்ம முன்னோர்கள் இங்கும் வாசம் செய்கிறார்கள்.அப்புறம் எப்பவும் போல நம்ம அம்மணிகள் அவங்கங்க ஆளுகளோட...திருப்பத்தூரில் இருந்து 20  கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜலகாம்பாறை இருக்கிறது

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 24, 2012

சென்னிமலை சரித்திரம் சிபியுடன் ஒரு சந்திப்பு

கடந்த பொங்கலன்று ஊருக்கு செல்லும் போது நாம் ஏன் பதிவுலக சக்கரவர்த்தி (ஹி..ஹி..ஹி பில்டப் போதுமா சிபி )சிபியை சந்திக்க கூடாது என்று எண்ணி அவர்க்கு போன் போட்டேன்.சிங்கமும் சிங்கிள் ஆகத்தான் இருக்கிறது என்று சொல்லியது (ஹி ஹி அவரு வீட்டுல அன்னிக்கு தொரத்தி விட்டுட்டாங்க..) காங்கேயம் வந்து போன் போட்டேன்.19  கிலோமீட்டர்ல சென்னிமலை இருக்கு அங்க வாங்க அப்படின்னு சொன்னாரு.கிளம்பினோம்.இருபுறமும் புளியமரம் நிறைய இருக்கிறது.



ரோடும் சூப்பரா இருக்கு.போற வழியில சென்னி மலை அருகில் மலையை வெட்டி ரோடு போட்டு இருக்காங்க. மலை உச்சியில் ஒரு முருகன் கோவில் இருக்கிறது (கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது.முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.)

சென்னி மலை வந்து பிராட்டியம்மன் கோவில் கேட்டு சிங்கத்துக்கு ஆக வெய்டிங்.(இந்த கோவில் இப்போ கும்பாபிசேகம் செய்ய தயார் ஆயிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்) அப்ப சிபி நம்ம மேதை கணக்குல ஊதா பச்சை கலர் டி ஷர்ட் போட்டு இன் பண்ணிட்டு அந்த கூலிங் கிளாஸ் (பிரிக்க முடியாதது சிபியும் கூலிங் கிளாஸ் யும் ) போட்டு  சும்மா ஹீரோ கணக்கா வந்து நிக்கிறாரு.அசந்துட்டேன்.அப்புறம் எங்களை அவரோட வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு.அண்ணன் ரொம்ப உபசரிச்சாரு.அப்போ அவர்கிட்ட இருந்த போன் பார்த்தேன்.1000 வது பதிவுல சொன்னமாதிரியே நோக்கியா மாடல் தான் வச்சிருந்தாரு.(ஒத்துகிட்டேன் ...உங்களுக்கு ஞாபக சக்தி ஜாஸ்தின்னு ..).
அவரு வச்சிருந்த போன் இதுதான்.


அப்புறம் சாப்பிட முறுக்கு,  மிக்சர், தண்ணி ( நம்ம தண்ணி இல்ல..ஆனாலும் குடுத்தது எல்லாம் அதுக்கு மாட்சிங்  ) எல்லாம் தந்து ரொம்ப அன்பா கவனிச்சாரு.அவரின் வரலாறுகள், பதிவுகள் போடும் முறை என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.என் பொண்ணும் அவரும்  ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க .அப்புறம் நிறைய போட்டோ எடுத்துகிட்டோம்



வீட்டுல மாட்டி இருந்த ஒரு குழந்தை போட்டோ என் கவனத்தை ஈர்த்தது.யாருன்னு கேட்டா....ஹி ஹி ஹி   நான்தான் அப்படின்னு சொன்னாரு.பதிவுலகமே பார்க்காத அவரது கவர்ச்சி போட்டோ இதுதான்.(ஹி ஹி ஹி )அவரோட இளமை கால போட்டோ இதுதான்.


சென்னிமலை சிகரம், பதிவுலக சித்தர் இதுமாதிரி நிறைய அடைமொழிகளை சொல்லி இனிய சந்தோசத்துடன் அவரிடம் இருந்து பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு விடை பெற்றோம்.
முகம்தெரியாத பதிவர்களாக பழகி நண்பர்களாக எங்களை ஒன்று சேர்த்த இந்த பதிவுலகத்திற்கு நன்றி.


கிசு கிசு : ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்னிக்கு சிபியை சென்னிமலையில் பார்க்கலாம்.

நேசங்களுடன்  
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, January 23, 2012

ஏலகிரி மலை - திருப்பத்தூர்

திருப்பத்தூர்க்கு அருகில் உள்ள கோடை மலை வாசஸ்தலம் ஏலகிரி.ஒரு சில ஹேர் பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதைகள் உடைய ஒரு பிக்னிக் ஸ்பாட்.அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது.படகு துறை இருக்கிறது.அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது.13  வளைவுகள் இருக்கிறது.ஒவ்வொரு வளைவிற்கும் .கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி , பேகன் என அழகிய தமிழ் பெயர்கள்.ட்ரெக்கிங் செல்ல அருமையான இடம்.மலை பழங்கள் என பலாபழம் ராம சீதா பழம் போன்றவை இருக்கிறது.இவை யாவும் ஏலகிரியில் விளைகின்றன என்று.... சொல்லி விற்கின்றனர். கொம்பு தேன் மற்றும் மலை தேன் என்றும் விற்கிறார்கள்.
மத்தபடி பெருசா ஒண்ணும் இங்க இல்ல...என்ன.....இங்க
நிறைய ஜோடிகள் கூட்டம் மட்டுமே.கூட்டிகிட்டு அப்புறம் ஓட்டிகிட்டு வந்தது அப்புறம் அள்ளிகிட்டு வந்ததும் தள்ளிகிட்டு வந்ததும்தான் அதிகமாக இருக்கிறது.(ஹி..ஹி ஹி ..)






அப்புறம் நமது முன்னோர்கள் நிறைய பேர் இருக்காங்க வழியெங்கும். ஒரு அம்மா படகு இல்லம் அருகில் மீன் வறுத்து விற்கிறார்கள்.நல்ல சுவையுடன் இருக்கிறது





 ஒருநாளில் சென்று வர ஏலகிரி ஓகே.அதிக செலவும் இருக்காது

நேசங்களுடன்
ஜீவானந்தம்




இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 18, 2012

டாக்ஸி டாக்ஸி - 40506070 - Taxi Taxi-கோவையின் பெருமை-1

டாக்ஸி டாக்ஸி

கோவையில் இருக்கும் போது பல வருசங்களுக்கு முன்பு வாடகைக்கு கார்ல போகணும்னா ரொம்ப விலை அதிக மாக இருக்கும்.அப்போ இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லாம் ரொம்ப விலை சொல்லுவாங்க.அடாவடியா பேசுவாங்க. கேட்டால் பெட்ரோல் விலை அதிகமா இருக்கு அதான் என்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்க ஸ்டாண்ட் போட்டு வர்ற  ஆளுங்க கிட்ட  வாடகை அதிகமா கேட்டு இம்சையை கொடுப்பாங்க...அதுவும் ராத்திரி நேரம் னா அவங்க சொல்றது தான் ரேட்டு.கைல இருக்கிற மூட்டை முடிச்சை பார்த்தாலே போதும் அவங்க காட்டுல மழைதான்.

பக்கத்துல இருக்கிற கேரளாவில் கூட மீட்டர் போட்டு தான் ஓட்டுறாங்க.மீதி சில்லறை ஒரு ரூபாய் இருந்தாலும் திருப்பி கொடுத்து விடுவாங்க.ஆனா நம்மாளுங்க மீட்டர் மேல கேட்டு சூடு வைப்பாங்க.அதுவும் சொல்லி வைச்ச மாதிரி எல்லா ஆட்டோ களும் ஒரே ரேட்டு சொல்லுவாங்க.

இதெல்லாம் அனுபவிச்ச யாரோ ஒருத்தர் கோவைக்கு முதல் முதலாய் கால் டாக்சி யை அறிமுகம் செஞ்சாங்க.நிறைய கால் டாக்ஸி அறிமுகம் ஆச்சு.கூப்பிட்ட உடனே சரியான ரெஸ்பான்ஸ்.அரைமணி நேரத்தில் வந்து பிக்கப் செய்வது.எந்த இடத்தில் இருக்கிறமோ அங்கேயே வந்து பிக்கப் செய்வது என பயங்கரமாய் முன்னேற்றம் ஆச்சு.விலையும் குறைவு.

 ஆட்டோனா மூணு பேர் பின்னாடியும் டிரைவர்கிட்ட ஒருத்தரும் அரை சீட்டுல குத்த வச்சு உட்கார்ந்து வரணும்.லக்கேஜ் இருந்தா கொஞ்சம் கஷ்டம்.ஆனா கால் டாக்சியில் எல்லாம் (ஓம்னி வேன்தான்) ஏழு பேர் தாரளாமாய் போலாம்.

எத்தனையோ கால் டாக்சி இப்போ இருந்தாலும், இப்போ அறிமுகம் செய்து இருக்கிற டாக்ஸி டாக்ஸி ரொம்ப பிரபலம் ஆயிட்டு வர்றது.காரணம் என்னன்னா நல்ல மரியாதை, யுனிபார்ம் போட்ட ......அதுவும் தொப்பி போட்ட டிரைவர், முதல் முறையாய்  கம்ப்யூட்டர் பில், ஜிபிஎஸ் சிஸ்டம், சீட் எல்சீடி என டிஜிட்டல் மயம், குளிரூட்டப்பட்ட  சொகுசு வண்டி அதுவும் போர்ட் பியஸ்டா, டாடா மான்சா என வெள்ளை கலரில் சிவப்பு லோகோ என கலர் புல் காக்டைலாக வந்து இருக்கிறது.நல்ல விளம்பரம் வேற இருப்பதால் இப்போது நம்பர் ஒன் ஆக இருக்கிறது.நல்ல சேவை, நிறைவான கட்டணம், என அசத்தி கொண்டு இருக்கிறது.கோவை மட்டுமல்ல ஒருநாளில் சென்று வரக்கூடிய பேகேஜ் முறையும் இருக்கிறது.
 




                           0422 - 40506070 

இதுதான் இந்த டாக்ஸி டாக்ஸி நம்பர்.ஆனந்த் பழனிசாமி என்பவர் இந்த சேவையை தொடங்கி இருக்கிறார்.
இன்னும் கொஞ்சம்...

Tuesday, January 10, 2012

வேண்டுகோள் - முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

தானே புயலின் கொடூர தாண்டவத்தால் சின்னா பின்ன மாகி போன கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காகவும் பாதிக்க பட்ட மக்களுக்காக நிவாரண நிதிகளை வழங்கவும் தமிழக அரசு நன்கொடை வசூலிக்க முடிவு செய்து இருக்கிறது.

ஏதோ நம்மால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட நமது சகோதரர்கள்/சகோதரிகளுக்கு வழங்கும் படி பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறேன்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயரில் காசோலைகள் அல்லது DD  மூலம் அளிக்கலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி

அரசு இணைசெயலாளர் மற்றும் பொருளாளர்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி
நிதித்துறை
தமிழ்நாடு அரசு
தலைமை செயலகம்
சென்னை - 600009

இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
ஏதோ என்னால் முடிந்த தொகையினை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளேன்.என்னை மாதிரியே தாங்களும் தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளித்து நமது கடலூர் மக்களின் இழந்து போன வாழ்வாதாரத்தை மீட்டு எடுப்போம்.

உங்களின் பார்வைக்கு  மாதிரி படிவம்.(ஹி..ஹி..ஹி..)




 இவண்

கோவைநேரம்



இன்னும் கொஞ்சம்...

Friday, January 6, 2012

பாட்டு புத்தகம் - மலரும் நினைவுகள்



ஒரு காலத்துல பள்ளி கூடத்துல படிக்கும் போது பாட்டு பாடணும்னா அதுக்கு இருந்த ஒரே வரப்ரசாதம் பாட்டு புக் தான்.பள்ளி கூடத்துல படிக்கும் போது நம்ம அம்மணிகளை இம்ப்ரஸ் பண்ண பாட்டு புக் வாங்கி படிச்சு அவங்களை கவுக்கிறது ஒரு வழியாய் இருந்தது. ரொம்ப குறைந்த விலையில் 25 பைசாவிற்கு கிடைக்கும். இதை வாங்கி பள்ளி ஆண்டு விழாக்களில் பாட்டு போட்டியில் பங்கு பெற கையில் பாட்டு புக் வைத்து பாடியது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

நான்கே பக்கம் அதில் விமர்சனம் வேற. ராகம் தெரியுதோ இல்லையோ எப்படியாவது பாடிக்கொண்டு ...ஹிஹி.ஹி......படித்துகொண்டு இருப்போம். பள்ளி இடைவேளைகளில் சத்தம் போட்டு பாடி பக்கத்து கிளாஸ் பிள்ளைகளை கவனிக்க வைப்போம்.தியேட்டர் வாசலில் , கோவில் திருவிழாக்களில், அப்புறம் முக்கியமான ஊர்களில் பிளாட்பாரம் களில் போட்டு விற்று கொண்டு இருந்தார்கள்.இப்போ கால போக்கில் அவை அழிந்து விட்டன.

இன்றும் எங்காவது ஒரு மூலையில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.அப்படி விற்பவர்களிடம் போய் வாங்கி படிக்க ஆசையாய் இருந்தாலும் கூச்சமாக இருக்கிறது, இந்த காலத்திலும் இதை வாங்கி படிக்கிறானே என்று மற்றவர்கள் பார்ப்பார்களே என்றுதான்.

கீழே இருக்கிற அனைத்தும் என் தந்தை காலத்து படங்கள்.அவர் ஆசையாய் வாங்கி வைத்து இருந்தவை.அவரின் அலமாரியை குடைந்த போது கிடைத்த பொக்கிசங்கள் இவை.








என்னை பொறுத்த வரையில் 85 டு 95 காலகட்டத்தில் வெளியான பாட்டு புத்தகங்கள் படித்து இருக்கிறேன்.அதிகமா கரகாட்டகாரன், எங்க சின்ன ராசா, காக்கி சட்டை, போன்ற படங்களை வாசித்து இருக்கிறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...