SWIGGY :
நம்மூர்ல ஆரஞ்சு நிற டீ சர்ட் போட்ட ஒரு குரூப் சமீபத்துல இருந்து கோவைல எங்க பார்த்தாலும் சுத்திட்டு இருந்தாங்க.என்ன சேதி ன்னு பார்த்தா ஸ்விக்கி
SWIGGY என்கிற உணவு டெலிவரி பண்ற ஆளுங்க..சரி நாமும் ஒரு நாள் உபயோகப்படுத்துவோம்னு டவுண்லோட் பண்ணி வச்சேன்.இன்னிக்கு இந்த ஆப் பின் செயல்பாடுகள் எப்படி இருக்கு அப்படிங்கிறத தெரிந்து கொள்வதற்காக இதன் மூலம் மதிய உணவை ஆர்டரினேன் கோவையில் அஞ்சணன்னு ஹோட்டல் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க.
சரி..இந்த கடைல இருந்து ஆதரிப்போம்/ ஆரம்பிப்போம்னு நினைச்சு ஆர்டரை போட்டேன்.கறிவிருந்து அப்படிங்கிற மதியம் மீல்ஸ், நண்டு வறுவல் இதை இரண்டையும் ஆர்டர் பண்ணேன்.
மொபைல் ஆப் கரெக்டா 33
நிமிசத்துல டெலிவரி அப்படின்னு காட்டுச்சு.பணத்தை கிரடிட், டெபிட் , ஆன்லைன் மற்றும் கேஷா பில் பண்ணலாம் என்கிற முறையில் கேஷ் தேர்ந்தெடுத்து ஆர்டரை போட்டுட்டு மத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்.கொஞ்ச நேரம்தான்..25
நிமிசம் இருக்கும்..அதற்குள் டெலிவரி/ ஸ்விக்கி பாய் வந்து சேர, பார்சலை வாங்கி பணம் கொடுத்துவிட்டேன்.நல்ல சர்வீஸ்.கடையில் வாங்கின பில்லோடு சுடச்சுட பார்சலை கொடுத்து விட்டு போகிறார்கள்.ஆப்பில் இருக்கும் ரேட்டும் கடை ரேட்டும் ஒன்றுதான்.ஆனால் ஸ்விக்கி ஆஃபரில் விலையை குறைத்து தருகிறார்கள்.ரூ
575 க்கு பதிலாக டிஸ்கவுண்டில் ரூ
320 டெலிவரி சார்ஜோடு வாங்கி செல்கிறார்கள்.கடைக்கு போய் சாப்பிடுவதற்கு பதிலாக பார்சலே வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.அந்தளவுக்கு விலை குறைவாக இருக்கிறது.(கொஞ்ச நாள் தான்.பின் நன்கு பிரபலம் ஆனவுடன் விலை ஏற்றிவிடப் போவது சகஜம்).கார்ல போய் ட்ராஃபிக்கில் சிக்கி, கடையில் ஒரு மணி நேரம் காத்திருந்து சாப்பிட்டுட்டு வர்றதுக்கு பதில் பேசாம பிடிச்ச ஹோட்டல்ல, பிடித்த மெனுவை ஆர்டர் போட்டுட்டு நிம்மதியா அக்கடானு இருந்துக்கலாம் நம் வீட்டிலேயே.
ஆனாலும் இதிலும் ஒரு பிரச்சினை. நம் வசதிக்காக பார்சல் வாங்குவதில் என்ன பிரச்சினை எனில் ஊர்ப்பட்ட பிளாஸ்டிக் காகிதங்கள், டப்பாக்கள் வந்து சேர்கின்றன நம்மிடத்தில்.ஒவ்வொரு குழம்பு மற்றும் பொரியல், ரசம், மோர் என அனைத்திற்கும் தனித்தனி பிளாஸ்டிக் கவர்கள், டப்பாக்கள். கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பாலீதீன் கவர்கள்.நம் சோம்பேறி தனத்தினால் சுற்றுப்புற சூழலை கெடுக்கிறோம் என்பது மட்டும் புலப்படுகிறது.என்ன செய்வது..ஆன்ட்ராய்டு போன் நம்மை சோம்பேறி ஆக்கிவிட்டது என்பது மட்டும் நிஜம்..சரி..இப்போ சாப்பாட்டிற்கு வருவோம்.ரொம்ப நாள் கழித்து புது ஆட்களுடன் இறக்குமதி ஆயிருக்கும் அஞ்சணன் ஹோட்டல் சுவை பற்றி பார்ப்போம்.
அழகான குட்டி குட்டி டப்பாக்களுடன் கறிவிருந்து ஸ்பெஷல் நல்ல பேக்கிங்கில் இருந்தது.மட்டன் வறுவல், குடல் வறுவல், மீன் சில்லி, சிக்கன் வறுவல்,நா.கோ.வறுவல்,ரத்தப்பொரியல் இப்படி பல அயிட்டங்கள் இந்தகறிவிருந்தில்.குழம்பு அயிட்டங்கள் தனித்தனி கவர்களில் பேக் செய்யப்பட்டிருந்தது.சுவை கொஞ்சம் சுமார்தான்.ஒன்றிரண்டு அயிட்டங்கள் தான் தேறின.இரத்தப்பொரியல், சிக்கன் வறுவல் ஓகே.மற்றவை அனைத்தும் கொஞ்சம் சுமார் ரகங்களே.நல்ல மிளகாய் காரம் கண்களில் தெரிகிறது சாப்பிட்டவுடன்.முட்டை பிரியாணியில் முட்டை மட்டுமே செம டேஸ்ட்.பிரியாணியில் சம்பா அரிசி அரை குறை வேக்காட்டில் இருந்தது.ஒப்புக்கு மணம் ஏதோ கொஞ்சம் வீசியது.நண்டு வறுவல் இதுவும் சுமார்தான்.நன்கு காரமாக இருக்கிறது.ஆனால் சுவை குறைவாக இருக்கிறது.ரசம் செம டேஸ்ட்..காரமாய் சாப்பிட்டதற்கு இந்த தக்காளி ரசம் மிக அருமையாக இருக்கிறது.ஜூ.கு ரசம் போலவே இருக்கிறது.ஒருவேளை கடையில் போய் வாழை இலையில் பரிமாறப்பட்டு சாப்பிட்டிருந்தால் நன்றாக இருக்குமோ என்னமோ...

நேசங்களுடன்
ஜீவானந்தம்