Tuesday, February 28, 2012

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்


நண்பரின் கல்யாணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை பெற்றதால் அங்கு சென்றேன்.கல்யாண வீட்டார் அவங்க வேலையில் பிசியாக இருந்ததினால் சும்மா நாமளும் எவ்ளோ நேரம் தான் இருக்கிறது என்பதினால் கோவிலை படமாய் எடுத்து தள்ளினேன்.இருக்கிற எல்லா கோபுரமும் சென்று போட்டோ எடுத்தேன்..அப்புறம் பொற்றாமரை கோவில் படியில் உட்கார்ந்து கொண்டு போற வர அனைத்து பக்தர்கள் மற்றும் வெளி நாட்டு பயணிகள் இவர்களை எல்லாம் நோட்டம் விட்டு கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருந்தேன்..அப்புறம் கல்யாணம் முடிஞ்சு வெளியே இருக்கிற ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அப்படியே...கொஞ்ச நேரம் உலாத்தி விட்டு கோவை கிளம்பினேன்.
உங்களின் பார்வைக்கு  :சிற்ப கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு இக்கோவில.நிறைய மண்டபங்கள் , நிறைய தூண்கள் , சிற்பங்கள் என தமிழர் கலையை பறை சாற்றும் அதிசய கோவில்...
இதற்கென வரலாறு நிறைய இருக்கிறது..நமக்கு இப்போதைக்கு வேணாம்....
அப்புறம் நம்ம ஏரியா பக்கம் வருவீங்க......ம்கூம் ...

அப்புறம்...முக்கியமா இன்னொண்ணு ..ஜிகர்தண்டா...

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 22, 2012

கோவை மெஸ் - ஹரி பவனம் - நான் வெஜ் ஹோட்டல் (Hari Bavanam)


கோவையில் நல்லா திருப்தியா நான் வெஜ் சாப்பிடணுமா......புல் மீல்ஸ் க்கு மட்டன் குழம்பு . சிக்கன் குழம்பு, நாட்டுகோழி குழம்பு, மீன் குழம்பு, அப்புறம் பொரியல், சாம்பார், பருப்பு, ரசம், மோர் என கலந்து கட்டி அடிக்கனுமா....அதுக்கு ஹரி பவன் தான் பெஸ்ட்...

மொத்தம் மூணு கிளைகள் இருக்கு.முதல் பவன் காந்தி புரம் 3 வது வீதியில் இருக்கிறது.வீட்டு சாப்பாடு போல இருக்கும் என சிம்பாலிக்கா காட்டுவதற்வாகவே போல இருக்கும் வீட்டு அமைப்பு ஹோட்டல்.அதுக்குள்ளே நுழைஞ்சா திரும்பின பக்கம் எல்லாம் ஒவ்வொரு அறை இருக்கும் , உள்ளே டேபிள் இருக்கும்.ரொம்ப சுவையான கார சாரமான உணவு வகைகள் கிடைக்கும்.அடுத்த கிளை RTO  ஆபீஸ் ரோட்டுல இருக்கு..இது எப்பவும் போல ஹோட்டல் தான்..
அடுத்து பீளமேட்டுல இருக்கு..இங்க தான் நேற்று போனேன்.புதிய இன்டீரியர் அமைப்பில் மிக விசாலமாக இருக்கிறது.மட்டன், சிக்கன் மீன் என அனைத்திலும் ஏகப்பட்ட வகை இருக்கிறது.சுட சுட சாதம் கொண்டு வந்து வைப்பாங்க அப்புறம் வாளி..வாளி யா தான் எல்லா குழம்பும் டேபிள் மேல வைப்பாங்க...(அதுல பீஸ் இருந்தா உங்க அதிர்ஷ்டம். ஹி..ஹி ..ஹி ).பீட்ரூட் சட்னி இங்க ரொம்ப நல்லா இருக்கும்.ஆட்டுல இருக்கிற அத்தனை பார்ட்ஸ் வறுவலும் இங்க கிடைக்கும்.தலைக்கறி, போட்டி, ஈரல், கறிசுக்கா, என அனைத்தும். நான் சாப்பாடு அப்புறம் வஞ்சிரம், போட்டி  சாப்பிட்டேன்..ஏற்கனவே ரசித்து ருசித்த  சாப்பிட்ட சுவைதான்.அருமை...
அப்புறம் வெளிய இவங்களோட பீடா ஸ்டால்  ஒண்ணு  இருக்கு.அதுல ரோஜா இதழ் போட்ட பீடா வச்சிருக்காங்க...நல்ல டேஸ்ட்.(இந்த கிளையில எப்பவுமே கல்லூரி பெண்களின் கூட்டம் அதிகமா இருக்கு..அந்த மலர்களை பார்த்து இந்த ரோஜா பீடா ஆரம்பிச்சு இருப்பாங்களோ....?ஒருவேளை இவங்களை கூட்டிக்கிட்டு வந்து கனமான பர்ஸ பசங்க காலியாக்குவாங்கன்னு தெரிஞ்சே தான் இந்த பீடாவுல ரோஜா இதழ வச்சிருப்பாங்களோ////)..

விதவிதமா செட்டி நாட்டு வகைகளை பிடி பிடிக்கணும்னா இங்க தாரளாமாய் போலாம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, February 17, 2012

குச்சி ஐஸ்..சேமியா ஐஸ்

குச்சி ஐஸ்..சேமியா ஐஸ் ...
கலர் கலராய் ....நாம சிறு வயசுல சாப்பிட்டு இருப்போம்...இப்போ இந்த மாதிரி ஐஸ்லாம் கிடைக்கிறது இல்ல...எங்கயாவது கிராமம் பக்கம் போகும்போதுதான் யாரவது விற்று கொண்டு போகிறதை பார்க்க முடியும்.

அப்படித்தான் நான் கோவையில் இருந்து காரமடை செல்லும் போது ஒருத்தர் வண்டியில் ஐஸ் பெட்டி கொண்டு போறதை பார்த்து, அவரை நிறுத்தி ஐஸ் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன்.நம்மள பார்த்த வுடன் அவருக்கு ரொம்ப சந்தோசம் ..என்ன ஐஸ் வேணும்னு கேட்டு இப்போ மார்கெட்டுல இருக்கிற சாக்கோ பார் , மேங்கோ என சொல்ல, நமக்கு அதெல்லாம் வேணாம்,,,,,குச்சி சேமியா ஐஸ் கொடுங்க என கேட்கவும்...மனுஷன் முகத்த பார்க்கணுமே....அப்புறம் அவர்கிட்ட நம்ம சிறு வயது புராணம் சொல்ல அவரும் சந்தோசமாய் சேமியா ஐஸ் எடுத்து தந்தார் ..ஐஸ் அப்புறம் அவரையும் போட்டோ எடுத்தேன்.


சாப்பிடும் போது இளம் வயதில் சாப்பிட்ட ஞாபகம் உருண்டோடியது.டவுசர் போட்ட காலத்தில் ஊருக்குள் கொண்டு வரும் ஐஸ் ஹாரன் சத்தம் கேட்டு அம்மாகிட்ட நாலணா வோ இல்லை எட்டணாவோ வாங்கிகிட்டு ஒரு வித சந்தோசத்துடன் ஒரு கையில் டவுசரை பிடித்து கொண்டு ஐஸ் காரரை நோக்கி ஓடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.ஐஸ் வாங்கும்போது பெட்டிக்குள் இன்னும் என்ன என்ன இருக்கும் என எட்டிஎட்டி பார்ப்பது, அப்புறம் அந்த ஆட்டோ ஹாரனை கொஞ்சநேரம் அழுத்தி ஒலி எழுப்புவதும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் பழைய இரும்பு சாமானுக்கு ஐஸ் தரும் ஆள் வந்து விட்டால் போதும், வீட்டில் எங்காவது உபயோகமற்று கிடக்கும் பொருள் ஏதாவது போட்டு ஐஸ் வாங்கி சாப்பிட்டதும் ஞாபகத்தில் இருக்கிறது.அப்படி ஒரு பொருளை ஐஸ் வாங்க போட்டு அம்மாவிடம் செமத்தியாக அடி வாங்கினதும் ஞாபகத்தில் இருக்கிறது ...இப்படி நிறைய....

இப்போதெல்லாம் ஐஸ் வண்டியை பார்க்கும் போது மறக்காமல்  குச்சி ஐஸ் அல்லது சேமியா ஐஸ் வாங்கி சாப்பிடும் போது மனதுக்கு இளம் பிராயம் நினைப்பு வருவதில் மிகுந்த சந்தோசம் அடைகிறேன்.கால் வலிக்க ஊர் முழுக்க வேகாத வெய்யிலில் சுற்றி ஐஸ் விற்கும் நபரை கண்டவுடன் அவரை நிறுத்தி அவரிடம் ஐஸ் வாங்கி விட்டு ஐஸ் க்கு உண்டான தொகையை விட அதிகமாய் கொடுப்பது இப்போதெல்லாம் பழகி விட்டு இருக்கிறது.

நேசங்களுடன் ....
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Thursday, February 16, 2012

கோவை மெஸ் - டொமினோ பிஸ்ஸா (PIZZA ), சாய் பாபா காலனி , கோவை


கோவையில புதுசா ஆரம்பிச்சு இருக்கிற டொமினோ பிஸ்ஸா (PIZZA ) க்கு ஒரு போன் போட்டேன்.அழகான ஒரு வாய்ஸ்....அப்படியே அசந்துட்டேன் . ஹி..ஹி ..அது  ரெகார்ட் பண்ணியிருக்கிற வாய்ஸ்.நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது பிசியாக இருக்கு அப்படின்னு ...மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து முயற்சி பண்ணியதில் நிஜமாகவே ஒரு ஸ்வீட் வாய்ஸ்.என்ன வேணும்னு கேட்டாங்க...பேரு அட்ரஸ் லாம் கேட்டுவிட்டு (நான் கேட்கலைங்க ..அவங்க கேட்டாங்க..) நான் வெஜ் பீசா 4 பேர் சாப்பிடற மாதிரி ஆர்டர் பண்ணினேன்.அப்புறம் சிக்கன் விங்க்ஸ் , சிக்கன் கிகர்ஸ் இதையும் ஆர்டர் பண்ணினேன்.நான் வெஜ்ல ரொம்ப ஸ்பைசியா ...அப்புறம் கொஞ்சமா என இரண்டு வகை இருக்கு.நான் ரொம்ப ஸ்பைசியா ஆர்டர் பண்ணினேன்.நிறைய வெரைட்டி இருக்கு..அதெல்லாம் வாயிலே நுழைய மாட்டேங்குது.அரை மணிக்குள் வந்து விடும்னு சொன்னாங்க.6 km தூரத்துக்குள் தான் ஹோம் டெலிவரி சொன்னாங்க...நல்லவேளை நாம அந்த டிஸ்டன்ஸ் ல இருக்கிறதால...அதே மாதிரி கொண்டு வந்து சேர்த்தாங்க.நல்லா பேக் பண்ணி சூடா இருந்தது.

டேஸ்ட் நல்லாத்தான் இருக்கு...ஆனா.....விலையும் அருமை...இவங்க விலைய பார்த்தா...மேல் தட்டு வர்க்கங்களை நம்பியே இருக்கிற மாதிரி இருக்கு.எப்பவாவது சாப்பிடணும்ன்னு தோணினா மட்டும் சாப்பிடலாம்.அதே மாதிரி பீட் பேக் (feed back ) அருமை.டெலிவரி செய்த அன்றே கஸ்டமர் கேர் லிருந்து அழைப்பு எப்படி இருக்கிறது என்று அப்புறம் .சாப்பிட்ட இரண்டு நாள் கழித்தும் விசாரிப்பு ...அருமை...கோவை யில் சாய்பாபா காலனியில் இருக்கிறது.  Domino's Pizza - 0422- 2442626

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 15, 2012

ராசிபுரம் ஒரு பார்வை

ராசிபுரம்:
திடீர் வேலை நிமித்தமாக போன மாதம் ராசிபுரம் சென்றேன்.நாமக்கல் மாவட்டத்தில் இந்த ராசிபுரம் இருக்கிறது.கோவையிலிருந்து நம்ம குதிரையில (அதாங்க நம்ம தேளு ..)கிளம்பினோம்.காங்கேயம் அப்புறம் முத்தூர், கொடுமுடி , நொய்யல், வேலாயுதம் பாளையம் (இந்த ஊரை பத்தி தனி பதிவு போடணும் ...) நாமக்கல், ஆண்டலூர் கேட் அப்புறம் ராசிபுரம் என வந்து சேர்ந்தோம்.

ரொம்ப சின்ன ஊருதான்.இங்க விவாசாயம் தான் அதிகம்.அப்புறம் பட்டு துணி நெய்கிறார்கள்.அதிகமா கல்வி நிலையங்கள் இருக்கிற ஊர் இது தான்.ரொம்ப வெயில் வேற ....இங்க ஒரு கடை பார்த்தோம்....சிவாஜி ரசிகன் என நினைக்கிறேன்..வசந்த மாளிகை என அவரோட சைக்கிள் கடைக்கு பேரு வச்சி இருக்காரு.அப்புறம் முதல் முதலா  இந்த ஊருக்கு ரயில் வர போகுது.நாமக்கல் மாவட்டத்திற்கு ரயில் சேவை இல்லாமல் இருந்தது.இப்போ நிறைவேறி இருக்கு.சேலம் நாமக்கல், கரூர் என புதிதாய் ரயில் இருப்பு பாதை அமைத்து இருக்கிறார்கள்.நாங்க போன அன்னிக்குத்தான் நண்பன் படம் ரிலீஸ்.


அங்க வேலைலாம் முடித்து விட்டு வர்ற வழியில தான் காவிரி ஆறு ஓடுது.வேலாயுதம் பாளையம் மற்றும் வேலூர் இந்த இரண்டு ஊர்களும் இந்த காவிரி ஆற்றினால் பிரிக்கப்படுகிறது.நம்ம குதிரைய கொஞ்ச நேரம் குளிப்பாட்டுவோம் அப்படின்னு நினைச்சு வண்டிய ஆத்துல விட்டோம்.நல்லா கழுவி விட்டு நாங்களும் இரண்டு மணி நேரம் நீரில் ஜலக் கிரீடை பண்ணிட்டு மேட்டுக்கு வந்தோம்.வேலாயுதம் பாளையம் வாத்து கறிக்கு பேமஸ்.அங்க நல்லா சூடா இட்லி அப்புறம் ஒரு புல் வாத்துகறி வாங்கி சாப்பிட்டு விட்டு அப்புறம் கோவைக்கு கிளம்பினோம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, February 13, 2012

காதலர் தின வாழ்த்துக்கள்

14.2.2012 
காதலர் தின வாழ்த்துக்கள்

இந்த இனிய நாளில் என் இனிய நினைவுகளை பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.கடந்த கால சுவடுகளை பார்க்கிற போது நம்மையும் அறியாமல் ஒரு வித ஈர்ப்பு வரும் அப்படிதான் இந்த கவிதையும்...

பொக்கிஷமா வச்சிக்கிட்டு இருந்த ஒரு பையினுள் துழாவியபோது கிடைத்த கணம்  ரொம்ப அருமை .. (சரி நமக்கும் பதிவ தேத்த ஒரு விஷயம் கிடைத்து விட்டது என்ற சந்தோசம்தான் )
படிக்கிற காலத்துல கடித தொடர்பால் ஏற்பட்டது எங்க காதல்.அப்போ வெறும் கடிதம் தான்.முகம் தெரியாமலே இருவரும் காதல் கொண்டோம்.1997  இல் கடித தொடர்பு ஆரம்பித்து 1999 இல்  பார்க்கலாம் என்று முடிவெடுத்து சேலம் பேருந்து நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்து கொண்டோம் .அப்போது ஏற்பட்ட எனது மனநிலையினை கவிதை என்ற பெயரில் வடித்த வரிகள்.

(இந்த கவிதையினை(அப்படி வச்சிக்கிங்க ) இப்போ ப்ளாக்ல எழுதும்போது  போராளி படத்துல நரேஷ் சொல்லுவாரே கவிதை ....கடைசியில மூணு புள்ளி....அதுதான் ஞாபகத்திற்கு வருது ...ஹி..ஹி.. ஹி... ) 
 29 .10 .1999 

உள்ளங்களை பரிமாற்றி
உயிர்களில் கலந்தவர்கள்
இன்று
விழிகளை சந்தித்த நாள்...

முக்கனிகளுள்
முக்கியத்துவம் பெற்ற
மாங்கனிக்கு பெயர் போன
சேலம் மாநகரம்
எந்தன் இதயக்கனியை
தொலைத்துவிட்ட இடம்
பரபரப்பு மிக்க
பேருந்து நிலையம்...

எத்தனையோ பேர்க்கு நடுவில்
எதிர்பார்ப்புடன்
என்னவளை
எதிர் நோக்கிக்
காத்திருந்தேன்....

அவளா....
இவளா... என்று
இனிதே
இதயத்தினுள்....
நடுக்கத்துடன்
சிறு கலக்கத்துடன்....

என்னையுமறியாமல்
என்னுள்
ஏதோமாற்றம்....

பணிப்பெண்களுக்கு
இடையில் வரும்
இளவரசியாய்....
விண்மீன் கூட்டங்களுக்கு
இடையில் வரும்
ஒற்றை நிலவாய்
அவள்....

அந்தி நிறத்து
கூந்தலைக் கொண்ட
தேவதையாய்
அவள்...

மை தீட்டும்
மலர் விழிகளுக்கு
மெருகூட்டுவதாய்
அமைந்த கண்ணாடியுடன்
அவள்...

பருவமெய்திய
பாலினும் வெண்மையவள்
பக்கத்தில் வந்தபோது
பனியின் குளிர்ச்சி
பரவசத்துடன்
பதில் கேட்டேன்
மஹாவா..?  என்று

அவளின்
செவ்விதழ்களில்
செந்தேன் மட்டுமல்ல
இன்னிசையும்
இனிதாய் வரும்
என்பதனை
அவளின்
"ஆம்" இல்
அறிந்து கொண்டேன்
இருவரும்
பேச மறந்து
சிலைஆனோம்

இரு ஜோடி விழிகளின்
பார்வையில்
இதயங்கள் பேசினாலும்
அதரங்கள்
அசையவில்லை
ஆயினும்
சூழ்நிலை உணர்ந்து
மௌனத்தை கலைத்தோம்

இந்த நாள்....
நெஞ்சில் நிறைந்தவள்
இன்று
விழிகளுக்கு
விருந்தளித்த நாள்....

கனவில் மட்டுமே
வந்து போனவள்
இன்று
கண்களுக்கு
காட்சியளித்த நாள்

கடிதங்களிலே
காதல் மணம்
வீசியவளின்
பூமுகம்
பார்த்த  நாள்

முகங் காணாது
ஏற்பட்ட காதலின்
முடிவாய்
இன்று
முகம் பார்த்த  நாள்...

நிழலை மட்டுமே
நேசித்த நான்
இன்று
நிஜத்தை கண்ட நாள்

நித்திரையில்
நித்தமும் வந்தவள்
இன்று
நேரில் வந்த நாள்...

வார்த்தைகளாய்
படித்த உன் குரலை
வசந்த கீதமாய்
கேட்ட  நாள்....

எனக்குள்ளே
உருவகித்து இருந்த
உருவத்தை
இன்று
உணர்ந்த நாள்...

உன்
நினைவுகளில்
நலிந்து போனவன்
இன்று
நலமான நாள்...

இதயத்தில்
தொடங்கிய காதல்
இன்று
விழிகளில்
வழிந்த நாள்...

காதல் வரம் கேட்டு
காத்திருந்தவனுக்கு
இன்று
தேவதையின்
தரிசனம்
கிடைத்த நாள்...

இந்த நாள்
என்
வாழ் நாளில் மீப்பெரு
வசந்தத்தை
வருவித்த நாள்...

இந்த காதல்
இனிமையாய்
நிறைவேற
ஆண்டவனை
இனிதே பிரார்த்திக்கின்றேன்...

இப்படி எழுதி என்னவளுக்கு வாழ்த்துக்களை சொன்னேன்.

கிசுகிசு  :
எப்படியெல்லாம் ஐஸ் வச்சி கவுத்தி இருக்கேன்னு பாருங்க ... இப்போ இப்படி எல்லாம் சொல்ல முடியுமா.....அதான் கல்யாணம் பண்ணியாச்சே ..ஹி ஹி ஹி
இன்னும் கொஞ்சம்...

Sunday, February 12, 2012

ஸ்ரீ காளிபராசக்தி அம்மன்-சிந்தலக்கரை

 மதுரை பை பாஸ் வழியே திருச்செந்தூர் போற போது சிந்தலக்கரை என்கிற ஊரில் ஒரு கோவிலை பார்த்தேன் .மிக பிரமாண்டமாய் (ஷங்கர் பட செட்டிங் போல ) நாகம் தலையுடன் விஷ்ணு அல்லது கிருஷ்ணா திருவுருவ சிலை...ரோட்டில் போகிற போது மிகவும் உயரமான நிலையில் இச் சிலை.இதை கண்டவுடன் வண்டியிலிருந்து இறங்கி ஒரு சில போட்டோக்களை எடுத்து கொண்டேன் மேலும் ஸ்ரீ காளிபராசக்தி அம்மன் வேற பயமுறுத்துகிற  பயங்கர ஆக்ரோஷமான நிலையில் சிலை வடித்து இருக்கிறார்கள்.அப்புறம் இன்னொரு சிலை கையில் மாடு பிடித்து கொண்டு ....கிட்டதட்ட 40  அடி உயரம் இருக்கலாம் .
சித்தர் பீடம் வேற இருக்கிறது.பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பது அங்குள்ள கூட்டம் பார்த்தாலே தெரிகிறது.திடீர் தெரு வோர கடைகளில் பேரிச்சை விற்பனை அதிகமாக இருக்கிறது.ஒருவேளை இங்கு பேரிச்சை தான் பிரசாதமோ ...?
இன்னும் கொஞ்சம்...