Friday, June 29, 2012

ஸ்ரீ பகவதி என்கிற மலையம்மன் கோவில் - தியாகதுருகம்

ஸ்ரீ பகவதி என்கிற மலையம்மன் கோவில்

கள்ளக்குறிச்சி தாண்டி உளுந்தூர்பேட்டை செல்லும் பைபாஸ் ரோட்டிற்கு அருகில் இந்த மலை குன்று இருக்கிறது.அநேகமாக தியாகதுருகம் என்கிற ஊர் ஆகத்தான் இருக்கும்.பெரிய பெரிய உருவத்தில் எங்கும் பாறைகள் உருண்டை உருண்டையாய்... தட்டை தட்டையாய் பல்வேறு வடிவங்களில் ...குகைகள் போன்று வேறு இருக்கிறது.இந்த குன்றிலும் ஒரு கோவில் இருக்கிறது.சென்னை போயிட்டு இருக்கும் போது எதேச்சையாய் கண்ணில் தென்பட்டதால் உள்ளே ஒரு விசிட்  விட்டேன்.









அமைதியாகத்தான் இருக்கிறது.மலை என்பதினால் என்னவோ வரவேற்பது நம்ம முன்னோர்கள் தான். உள்ளே நுழைந்தவுடன்  இடதுபுறம் பாறைக்குகையில் ஒரு தெய்வம். வலது புறம் ஒரு குதிரை சிலை.மேலே செல்ல கருங்கல் படிகள்...பார்க்க கொஞ்ச தூரமே இருந்தாலும் நடக்கும் போது செமையான கால் வலி.மேலே சென்று பார்க்கும் போது ஒரு பாறையில் தண்ணீர் தங்குவதற்காக குழி செதுக்கி  இருக்கிறார்கள்.இந்த தண்ணீர் அங்கு உள்ள நம் முன்னோர்களின் (குரங்கார்கள்) தாகத்தை தீர்க்க கூடியதாக இருக்கிறது.பாறைகளுக்கு இடையில் மரங்கள் நிறைய பசுமையாக இருக்கிறது.பாறைகளின் மேற்பகுதியில்  ஒரு புளியமரம் ஒன்று இருக்கிறது.இந்த மரத்திற்கு எதிரில் உள்ள குகையில் இந்த அம்மன் இருக்கிறாள். விநாயகர் சன்னதி ஒன்றும் மேலே இருக்கிறது.கஷ்டப்பட்டு மேலேறி வந்ததுக்கு ஒரு கும்பிடுவையும் போட்டுவிட்டு கீழே இறங்கினோம்.

முக்கிய  விசேச தினங்களில் இங்கு பூஜை நடைபெறும் என்று அங்கு ஒரு வெளங்காதவன்...அதுதாங்க...மாடு மேய்க்கிறவர் சொன்னார்.
இந்த மலையை சுற்றிலும் பாறைகள் மரங்கள் மட்டுமே இருக்கின்றன.சமூக விரோதிகளின் கூடாரமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ஒளிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் குகைகள் இருக்கின்றன.திப்பு சுல்தான் காலத்து பீரங்கி கள் இருகின்றனவாம்.இப்போது தொல் பொருள் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம்.
காதலர்க்கும் மத்தவங்களுக்கும் ரொம்ப ஏத்த இடம் போல இருக்கு.ஆனா சூதானமா நடந்துக்கணும்.ஏன்னா சமூக விரோதிகளின் பொல்லாப்புக்கு ஆளாயிடுவோம்...பீ கேர்புல்........


நேசங்களுடன்
ஜீவானந்தம்  

இன்னும் கொஞ்சம்...

Tuesday, June 26, 2012

கோவைநேரம் - என் விகடனில்


இந்த வார 27.6.2012 ஆனந்த விகடனின் கோவை பதிப்பு என் விகடனில் நம்ம கோவை நேரம் இடம் பெற்று விட்டது.
எப்படியோ நம்மளையும் படிக்க ஆள் இருக்காங்க அப்படின்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.



விகடனில் இடம்பெற வாய்ப்பளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 

நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...

Sunday, June 24, 2012

பாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1


பாண்டிச்சேரி  குடிமகன்களின் தேசம் - 1

                        எச்சரிக்கை
                  குடி குடியை கெடுக்கும்
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மட்டும்.

வணக்கம் (குடி)மக்களே.......
இது கொஞ்சம் மப்பான பதிவு...
ஏதோ...... படம் ஆரம்பிக்கும் போது சர்டிபிகேட் காட்டுவாங்களே அது மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சு..ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.
ஓகே...மேட்டருக்கு வருவோம்....
பாண்டியில் இருந்து ஈ சி ஆர் ரோட்டில் கிளம்பினோம்.செல்லும் வழியில் கொஞ்ச தூரம் எங்கும் நம்ம கடைகளை காணோம்...கேட்டால் இது தமிழ்நாடு பார்டராம்.....கொஞ்ச தூரம் சென்றவுடன்  மீண்டும் பாண்டி நம்மை வர வேற்றது..முதல் வேலையாக நம்ம கடையை தேடி சென்றோம்..அருகிலேயே சாராய கடையும்.அரசு நடத்தும் சாராய கடை....தகர சீட் ஷெட் போட்டு எந்த ஒரு உட்காரும் வசதியோ இல்லாமல் இருக்கிறது.



உள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது. சீல் வைக்கப்பட்ட இரண்டு கேனில் சாராயம்.அதை அளந்து கொடுக்க கேனுக்கு ஒருவர். ஐந்து ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சாராயத்துடன் சோடா கலந்தே தருகிறார்கள்.தொட்டு கொள்ள சத்தியமாய் மட்டை ஊறுகாய் இல்லை.(எடுத்து செல்ல மறந்து விட்டேன்)சரக்குக்கு சைட் டிஷ் கொடுக்கும் இரண்டு மூதாட்டிகளின் வாழ்வாதாரமாக இந்த கடை இருக்கிறது.மாங்காய், சுண்டல், அவிச்ச முட்டை, மீன், கிழங்கு, கருவாடு என அனைத்தும் இருக்கிறது.கொஞ்சம் சுகதாரமற்று சாராயக்கடைக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறது.
பாண்டிச்சேரி அரசே வில்லியனூர் என்கிற ஊருக்கு அருகில் சாராய ஆலை வைத்து இருக்கிறதாம்.மூன்று டாக்டர்களின் மேற்பார்வையில் இது தயாரிக்க படுகிறதாம்.சொன்னது அங்குள்ள ஒரு பங்காளி...நம்ம பங்குக்கு நாமும் கொஞ்சம் (ஹி ஹி ஹி ) டேஸ்ட் பார்த்து விட்டு வெளியேறினோம்.அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லை.வோட்கா போன்று வாசமில்லாமல் இருக்கிறது....அப்புறம் இன்னும் திருப்தி அடையாமல் அடுத்து  சென்றது அருகில் உள்ள ஈ சி ஆர் ஒயின்ஸ்...

நல்ல விசாலமாக பீச்சுக்கு அருகில் இருக்கிற இந்த கடையில் தஞ்சமடைந்தோம்.ரொம்பவும் பிடித்த போஸ்டர் பீரினை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தோம்.(இந்த பீர் கொஞ்சம் கூட கசப்பே இல்லாமல் குடிக்க குடிக்க சுவையாய் இருக்கிறது)...கூடவே சைடு டிஷ் ஆக கணவாய் மீன், பீப் வறுவல் நெத்திலி 65....என....




கணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ நெத்திலி அளவுக்கு மீன் பிடிக்கவில்லை.நன்றாக இருந்தது என்று நண்பர் சொன்னார்.ஆனால்.பீப் பெப்பர் வறுவல் செம டேஸ்ட்...நல்ல மிருதுவாக இருக்கிறது இந்த வறுவல்...அப்புறம் நெத்திலி மீன்...சொல்லவே தேவையில்லை..அவ்ளோ சுவை....சரியான பதத்தில்..உப்பும் மசாலாவும்...நாக்கில் இன்னும் எச்சில் ஊறுகிறது...சரியான சைடு டிஷ்...
எப்படியோ...போதும் போதும் என்கிற அளவுக்கு.....சாப்பிட்டு விட்டு வேணும்கிற அளவுக்கு பார்சல் வாங்கிட்டு செங்கல் பட்டு கிளம்பினோம்.....
கிசுகிசு : இதை படித்து விட்டு உங்களுக்கு ஞாபகம் எடுத்தால் கம்பெனி பொறுப்பாகாது..அப்புறம் இது என்னோட 200வது பதிவு.ரொம்ப மப்பான பதிவு,,,

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Friday, June 22, 2012

பாண்டிச்சேரி ...குடிமகன்களின் தேசம்


பாண்டிச்சேரி ...குடிமகன்களின் தேசம்
திண்டிவனத்தில் இருந்து பாண்டி செல்லும் ரோட்டில் செல்ல செல்ல மனம் ரொம்ப குதூகலம் அடைந்து கொண்டு இருந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் பாண்டியை அடைந்து விடுவோம் என்பதினால்....
ஜிப்மர் மருத்துவமனை தாண்டியவுடன் நம்ம பங்காளி ஒருவர் தள்ளாடியபடியே வர நமக்கோ கை நடுங்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் மக்களை ஏற்றிய கூண்டுவண்டி ஒன்றும் தடுமாறியபடியே...
சீக்கிரம் ரூம் போடறோம்...ஒரு கட்டிங் போடறோம்...அப்படியே டிஸ்கஸ் பண்றோம்...என்று சொல்லியபடியே பீச் அடைந்தோம்..சாயங்காலம் நேரம் வண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லாததால் இரண்டு தெருக்கள் தள்ளி ஒயிட் டவுனில் வண்டியை பார்க் பண்ணிவிட்டு பீச் நோக்கி நடந்தோம்...
பீச் ரோட்டில் நிறைய பேர் வாக்கிங்கும் ஒரு சில பேர் கடலை நோக்கி உட்கார்ந்தும்...இன்னும் சில பேர் கடலை போட்டு கொண்டும் ..அதுக்கு தகுந்த மாதிரியே தள்ளு வண்டியில் கடலை வறுத்து கொண்டும் இருக்கின்றனர் (ஒரு பாக்கெட் பத்து ரூபாய்.) அதை வாங்கி தின்றபடியே நடந்த சில பேரும்....அந்த பீச் ரோட்டை முழுவதும் நிறைத்து இருந்தனர்..முழுக்க மனித தலைகள்....அதிலும் ஒரு சுகம்...நிறைய அம்மணிகள் அழகழகாய்...அரைடவுசருடன் ....திரும்பி செல்ல மனமில்லாமல்..நின்று இருந்தோம்..ஆயினும் பாண்டிக்கு வந்த நம் கடமை நம்மை ஞாபக படுத்தியதால்...பீச் காற்றினை கொஞ்சம் உள்வாங்கி கொண்டு வெளியேறினோம்...
அருகில் இருந்த ஹோட்டல் கான்டினென்டலில் ரூம் போட்டு விட்டு நம்ம கச்சேரியை ஆரம்பித்தோம்..... 

அடுத்த நாள் காலை சுகமாய் விடிந்தது...காலை ஒன்பது மணிக்கு ரூமை காலி செய்து விட்டு பீச் ரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு வேணும்கிற அளவுக்கு போட்டோ போஸ் லாம் எடுத்து கிட்டு அப்படியே நடந்தோம்... 





மகாத்மா காந்தி சிலையின் முன்னால் ஒரு சில போட்டோக்களும்..(எனக்கொரு டவுட்டு...குடிமகன்களின் தேசத்தில் மதுவை எதிர்த்த மகாத்மா காந்தி அவர்களின் சிலை எதுக்கு வைக்கணும்..?) .பாண்டிச்சேரி தலைமை செயலகம் முன்பும் ஒரு சில போட்டோக்களும் எடுத்து காலை டிபனை கொஞ்சமாய் முடித்து கொண்டு மார்க்கெட் கிளம்பினோம்.
மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக இருக்கிறது.சிவப்பு தொப்பி போலிஸ்காரர் ஒருத்தர் டிராபிக் சரி செய்து கொண்டும், எங்கள் வண்டிக்கு வழி விடாமல் இலைகளை ஏத்திக்கொண்டு திருக்குறளின் பெருமையை பறை சாற்றும் விதமாக அவரது வண்டியில் குறளும் விளக்கமும் எழுதி இருந்ததால் அவரின் செயலுக்கு நன்றி தெரிவித்துவிட்டு , மார்க்கெட்டில் வண்டியை பார்க் செய்து விட்டு பர்ச்சேஸ் அனைத்தும் முடித்து விட்டு செல்கையில்...ஓரிடத்தில் செம மீன் கவிச்சி...அந்த வாசத்தை மோப்பம் பிடித்து கொண்டே சென்றதில் அது ஒரு மீன் மார்க்கெட்....உள்ளே நுழைந்த வுடன் ஏகப்பட்ட அம்மணிகள்...அனைவரும் கொஞ்சம் கொஞ்சமா மீன்கள் வைத்து கொண்டு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள்..ஏகப்பட்ட மீன் வகைகள்...அம்மணிகளும் தான்.......உள்ளூர் கிழவி முதல் வெளியூர் அம்மணிகள் வரை....


கொஞ்ச நேரம் சுவாசித்து விட்டு வெளியேறினோம்..அடுத்த  பதிவு மப்பான பதிவு...இருங்க வாறேன்

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
 
இன்னும் கொஞ்சம்...

Sunday, June 17, 2012

க்ரில் சிக்கன்..

க்ரில் சிக்கன்..

நாமும் எவ்வளவு நாள்தான் ஹோட்டலில் போய் சாப்பிடறது...அப்புறம்  ஒரு பதிவ போடறது...இப்படியே இருந்தா என்ன பண்றது..?அதனால இன்னிக்கு எங்க வீட்டுல கிரில் சிக்கன் பண்ணினதை ஒரு பதிவா போடறேன்.நாங்க இப்போதான் புதுசா ஒரு ஓவன் வாங்கினோம்.அதுல எப்படியாவது கிரில் சிக்கன் பண்ணியே ஆகணும் அப்படிங்கிற முடிவோட கறி கடைக்கு போய் ரெண்டு பெரிய லெக் பீஸ் வாங்கி வந்தேன்.அப்படியே கொஞ்சம் ரெண்டு பக்கமும் கீறி விட்டு வாங்கினேன்.
வீட்டுக்கு வந்து சிக்கன் மசாலா, முட்டை வெள்ளை கரு, கார்ன் பவுடர், கொஞ்சம் உப்பு, வரமிளகாய் பொடி, கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் எண்ணெய் இதெல்லாம் கலக்கி அந்த சிக்கன் பீஸ்ல தடவி கொஞ்ச நேரம் ஊற வச்சிட்டு அப்புறம் அதை எடுத்து ஓவனில் கிரில் மேல இந்த பீஸை வைத்து 20 நிமிஷம் டைம் செட் பண்ணி ஓவனை ஆன் பண்ணியாச்சு...கொஞ்ச கொஞ்சமா அதன் வாசம் வர ஆரம்பிச்சது. திரும்பவும் திருப்பி வச்சு இன்னும் ஒரு இருவது நிமிஷம் .....முழுசா டைம் முடிஞ்சவுடன் எடுத்து பார்த்தா நல்லா வெந்து இருக்கு.கொஞ்சநேரம் கழிச்சு எடுத்து சாப்பிட்டு பார்த்தா செம டேஸ்ட்...ரொம்ப நல்லா வந்தும் ...வெந்தும்  சுவையா இருக்கு...

நாங்க பண்ணின சிக்கன் இதுதான்...




எப்படியோ சைடு டிஷுக்கு இது சாப்பிட நல்லாத்தான்  இருக்கு.அடுத்த முறை மட்டன் சமைக்கணும்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, June 16, 2012

மணமகன் தேவை


மணமகன்  தேவை

வணக்கம் நண்பர்களே
ஒரு சின்ன உதவி....இந்த பதிவ படிக்கிறவங்க ....படிக்கிறவங்களோட நண்பர்களோ ..அல்லது தெரிஞ்சவங்களோ யாராச்சும் தேவேந்திர குல வேளாளர் இனத்தில் பெண் தேடிட்டு இருந்தாங்கன்னா.....சொல்லுங்க..
எனக்கு தெரிஞ்ச என் தோழி ஒருத்தர் மாப்பிளை தேடிட்டு இருக்காங்க.அவங்க PWD துறையில் AE யா இருக்காங்க.33 டு 36 வயசுக்குள் யாராவது இருந்தாங்கன்னா எனக்கு தெரியபடுத்துங்க.
பி.இ முடித்து திருச்சியில் பணியில் இருக்காங்க.அவங்க படிப்புக்கு ஏத்த நல்ல வரன் தேவைப்படுது.மத்த விவரங்களை நாம போன்ல பேசிக்கலாம்.

தொடர்புக்கு 9894401474

கிசு கிசு : ஒரு நல்ல நோக்கம் நிறைவேறனும் அப்படிங்கிறதுக்காக இந்த பதிவ போட்டு இருக்கேன்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்  
இன்னும் கொஞ்சம்...

Thursday, June 14, 2012

பரப்பலாறு நீர் தேக்க அணை - ஒட்டன்சத்திரம்

       சுருளி பால்ஸ் போய்ட்டு திரும்பி வரும்போது ஒட்டன்சத்திரத்தில் ஒரு மலை இருக்கு, அதுல போனா பாச்சலூர் என்கிற மலை கிராமத்திற்கு போலாம் என்று நம்ம நண்பர் சொன்னதினால் வண்டியை அங்க திருப்பினோம்.மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமாக இந்த பாச்சலூர் இருக்கிறது.ஓரிரு ஹேர்பின் வளைவுகள் கொண்ட மலை பாதையில் பயணித்தோம்.மலையில் பயணிக்கிற உணர்வுகள் போன்று எதுவுமே இல்லை.பசுமையோ, குளிர்ச்சியோ எதுவுமே இல்லை.ஆனாலும் புதிய இடத்தை காண போகிற ஆவல் நிறைந்து இருந்தது.


        வடகாடு என்கிற ஊர் முதலில் நம்மை வரவேற்கிறது.எல்லைக் கருப்பண்ண சாமியும் வரவேற்கிறார்.ஒரு கும்பிடு போட்டு விட்டு கொஞ்ச தூரத்தில் சென்றதும் பரப்பலாறு நீர் தேக்க அணை வளைவினை பார்த்தோம்.பார்த்ததும் பாச்சலூர் செல்லும் திட்டத்தை ஒதுக்கி விட்டு அணைக்கு கிளம்பினோம்.(இருட்டானதும் ஒரு வகையில் காரணம் )


       அணைக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி இருந்தால் தான் உள்ளே விடுவோம் என்றனர்.அங்கே வேலை செய்யும் ஒருவருடன் கேட்டபோது அவர் எங்கோ போன் போட்டு நமக்கு உள்ளே செல்ல அனுமதி அளித்தார்.கொஞ்ச தூரம் உள்ளே சென்றவுடன் நீர் தேக்க அணை பார்த்தோம்.மலைகளுக்கு இடையில் இந்த நீர் தேக்கம் அமைந்து இருக்கிறது.தண்ணீர் திறந்து விடும் இடம் நிறைய பாறைகளை கொண்டு இருக்கிறது.தண்ணீர் செல்லும் அழகே தனி.
 
 

  இங்கே தங்க ரூம் வசதி அனைத்தும் இருக்கிறது.பொதுப்பணித்துறையில் அனுமதி வாங்க வேண்டும்.பரந்த நீர் தேக்கத்தில் தண்ணீர் குடிக்க யானைகள், காட்டு எருமைகள் கூட்டம் கூட்டமாய் வருமாம்.நாங்க சென்ற போது நீர் தேக்கத்தின் அடுத்த பகுதியில் கூட்டம் கூட்டமாக காட்டு எருமைகள் நீர் குடிக்க வந்ததை பார்த்தோம்.நம்ம கேமராவில் ஜூம் வசதி அதிகம் இல்லை.இருந்தாலும் எடுத்து விட்டோம்.அணைக்கட்டில் நிறைய மீன் கிடைக்குமாம்.ஒருவர் மீன் பிடித்து கொண்டு இருந்ததையும் பார்த்தோம் நல்ல அருமையான சுற்றுலா இடம்.அமைதியான சூழ்நிலை.துளிகூட மாசு இல்லாத காற்று.மீண்டும் செல்லக் கூடிய ஏக்கத்தினை ஏற்படுத்தி விட்டது.
இந்த அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பல ஏக்கர்களுக்கு திறந்து விட படுகிறது.மேலும் ஒட்டன்சத்திரம் ஊரின் குடிநீர் தேவையை தீர்க்கிறது
          (அதோ தூரத்துல தெரியுது பாருங்க...அதுதான் காட்டு எருமைங்க.) 
            ( நல்லா பாருங்க...ஒருத்தர் மீன் பிடிச்சிட்டு இருக்கிறதை..)
இங்கே இருந்து இன்னும் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் பாச்சலூர் இருக்கிறது.எஸ்டேட்கள் மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறதாம்.பாச்சலூர் வழியே கொடைக்கானல் செல்லும் வழியும் இருக்கிறதாம்.கண்டிப்பாய் அடுத்த முறை போகணும்.இந்த ஊருக்கு வர மினி பஸ் இருக்கிறது.இயற்கையை விரும்புவர்கள், நேசிப்பவர்கள், கண்டிப்பா போகலாம்.
திண்டுக்கல்  மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து, பரப்பலாறு அணை  பாச்சலூர் செல்லலாம் 

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...