Monday, October 31, 2011

சூரி.....வெண்ணிலா கபடி குழு

சூரி...
தற்போது வெள்ளித்திரையில் பவனி வரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.காமெடியில் தற்போது பிரபலம் அடைந்து வரும் சூரி அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு.தமிழ் திரை உலகில் காமெடியனாக  முன்னேறி கொண்டு இருக்கும் சூரி மதுரை மாவட்டத்தில்  ராஜாக்கூர் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்து இன்று சென்னையில் மையம் கொண்டுள்ள காமெடி புயல்.இவர் ஆரம்பத்தில் திரையுலகில் நுழைய பட்ட கஷ்டங்கள் ஏராளம்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக உள்ளே நுழைந்து திரை உலகில் காலடி வைத்தார்.இவரின் முதல் படம் கார்த்திக் நடித்த கண்ணன் வருவான்.பத்தோடு பதினொன்றாக நடித்த படம்.பின்னர் ஜி.இந்த படத்திலும் அப்படியே.அப்புறம் காதல் படத்தில் முதன் முதல் ஆக  டயலாக் உடன் பேசி நடித்தார்.அதற்கு அப்புறம் தீபாவளி என்ற படத்தில் கொஞ்சம் நிறையவே பேசி நடித்தார்.அதன் பின்னர் நல்ல வாய்ப்புக்கு எதிர்பார்த்த போது தான் சுசீந்திரன் என்ற அற்புத விளக்கு அவரை ஏற்றி வைத்தது.வெண்ணிலா கபடி குழுவில் இடம் பெற்ற சூரி நகைச்சுவை கலந்த குண சித்திர வேடத்தில் படம் முழுவதும் வந்து கலக்கி இருப்பார்.பரோட்டா சாப்பிடும் காட்சியில் தான் அவரது முகம் பரிட்சியம் ஆனது.அதன் பின்னர் தான் அவர் தமிழகம் முழுவதும் தெரிய ஆரம்பித்தார்.அப்புறம் நாய்க்குட்டி என்ற ஒரு படத்தில் இரண்டாவது கதா நாயகனாக  நடித்து இருந்தார்.படம் பப்படம் ஆகவே மறுபடியும் முயற்சி.அப்புறம் களவாணி படம் கை கொடுத்தது .கஞ்சா கருப்பு வுடன் இவர் அடித்த லூட்டி மிகவும் ரசிக்க தகுந்தவை..


மீண்டும் அற்புத விளக்கு சுசீந்திரன் நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கின் நண்பன் வேடத்தில் நடிக்க வைக்க மீண்டும் தெரிய ஆரம்பித்தார்.


அப்புறம் குள்ள நரிக்கூட்டம், போடி நாயக்கனூர் கணேசன், அழகர் சாமியின் குதிரை , பிள்ளையார் தெரு கடைசி வீடு என நிறைய படங்களில் நடித்து இருந்தாலும்

இளைய தளபதி விஜய் உடன் நடித்த வேலாயுதம் படம் மிக வெற்றியை கொடுக்க இப்போது நிறைய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.


பாராட்டுகளும் விமர்சனங்களும் நிறைய குவிந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்.அதுவும் தளபதியும் இயக்குனர் ராஜாவும்  பாராட்டியதில் மனுஷர் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார்.விஜய் உடன் நடித்த சந்தோஷத்தில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்.(ட்ரெயின் காமடியில் ரொம்ப கலக்கி இருப்பார்.கண்ணில் நீர் வர கூடிய காமெடி அது.)அப்புறம் தற்போது சசி குமாரின் போராளி படம் முடிவடைந்து திரைக்கு வர காத்திருக்கிறது.அந்த படம் இன்னும் தன்னை மேலே கொண்டு போகும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் .இவர் இன்னும் மென் மேலும் பல வெற்றிகளை பெற நாமும் வாழ்த்துவோம்......

கிசுகிசு  : சூரி எனது நண்பர் என்கிற முறையில் தனிப்பட்ட பதிவு ....
நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...

Saturday, October 29, 2011

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 3

பாரதியாரின் இல்லத்தில் எடுத்த புகைப்படங்கள்.எப்பவாவது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாரதி வாழ்ந்த வீட்டிற்கு சென்று பாருங்கள்.அதை விட வேற பாக்கியம் இந்த உலகத்தில் இல்லை.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, October 20, 2011

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2

பாரதியார் எழுதிய கவிதைகள் , அவரது வரலாறு , அவரின் கால கட்டத்தில் இருந்த அறிஞர்கள் புகைப்படம்  என்று அரிய தொகுப்புக்கள் உள்ளன.அவரின் கையொப்ப பிரதி கூட இன்னும் வைத்து இருக்கிறார்கள்.

 மேலும் அவர் பயன் படுத்திய பொருட்கள் போன்றவைகளையும் வைத்து இருக்கின்றனர்.

இன்னும் தொடரும் .....


நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...

Tuesday, October 18, 2011

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்

எட்டயபுரம்.மகாகவி பாரதியார் பிறந்த இடம்.மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கிறது.
பாரதியின் வீடு தற்போது நினைவுச்சின்னங்களாக ஆக்கப்பட்டிருக்கிறது.அவர் வாழ்ந்த இடத்தினை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

''வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.''

''பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு. ''

போன்ற தேச பக்தி நிறைந்த பாடல்கள் இயற்றிய பாரதியாரின் இல்லத்தினை காணும் போது உடல் சிலிர்க்கிறது...

இன்னும் தொடரும் .....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...

திருச்செந்தூர் முருகன் கோவில் புகைப்படங்கள்இன்னும் கொஞ்சம்...

திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தேன்.இப்போது கோவில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக வெளி பிரகாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.அப்புறம் தரிசனம் பெற செல்பவர்கள் வரிசையாக செல்ல வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.தரிசனம் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தால் ரொம்ப தூரம் செல்ல வேண்டிய பிரமை ஏற்படுகிறது.உள்ளே மாடிப்படிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.எல்லாம் கடந்து சென்றால் முருகனை தாரளமாக தரிசித்து வரலாம்.முருகனின் கோஷம் அரோகரா அதிகம் ஒலிக்கவில்லை.ஆயினும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.நாழிகிணறு என்று ஒரு சுனை இருக்கிறது.மொத்தம் உள்ள 24 சுனைகளில் இந்த நாழி கிணறில் மட்டுமே நீர் வருகிறது.கோவிலை ஒட்டி உள்ள கடல் எப்போதும் அலையுடன் இருக்கிறது.பக்தர்கள் அதில் நீராடி கொண்டு இருக்கின்றனர்.கோவையில் இருந்து திருந்செந்தூர் 490 கிலோமீட்டர் இருக்கிறது.பல்லடம், திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என சென்றோம்.


இன்னும் தொடரும் .....
திருச்செந்தூர் பயணத்தில் எடுத்த புகைப்படங்கள்
இன்னும் கொஞ்சம்...

Monday, October 10, 2011

திண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலை
திண்டுக்கல் டு திருச்சி சாலையில் பயணிக்கும் போது எடுத்தது.
ஓங்கி உயர்ந்த மலை, தவழும் வெண் மேகம் கொண்ட வானம்,இயற்கையை அள்ளி தெளித்து இருக்கிறது

இன்னும் கொஞ்சம்...

Friday, October 7, 2011

விஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்

சென்னை அரும்பாக்கம் , வடபழனி நூறடி சாலையில் இருக்கிறது இந்த விஜய் பார்க் ஹோட்டல்.
கிட்டத்தட்ட 13 ஹால் கள் உள்ளன.அனைத்தும் திருமண வரவேற்பு , பிறந்தநாள் விழா, மற்றும் இன்ன பிற விருந்துகள் நடைபெறும் ஹால் களாக இருக்கின்றன.சமீபத்தில் எனது நண்பரின் மகனது முதல் பிறந்த நாள் விழாவினை 6 மாடியில் ஒரு ஹாலில் ஏற்பாடு செய்து இருந்தார்.மொத்தம் 75 பேருக்காக உணவு ஆர்டர் பண்ணியிருந்தார்.பபே முறையில் உணவு வழங்கினர்.கிட்டத்தட்ட ஒரு 12 வகை உணவுகள் இருக்கும்.எந்த ஒரு உணவும் ருசியே இல்லை.ரொம்ப மட்டகரமான சுவையுடன் இருந்தன.தயிர் சாதம் கூட நன்றாக இல்லை என்றால் பார்த்துக்குங்க...
அப்புறம் வந்தவர்கள் எதோ ஒரு வேகத்தில் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர்.சீக்கிரம் வேறு தட்டுகள் காலி ஆகிவிட்டன.உணவு மட்டும் அப்படியே இருக்கிறது.இன்னும் 50 பேர்கள் சாப்பிடலாம்.ஆனால் தட்டுகள் இல்லை.கூடுதலாக கேட்டால் அவ்ளோதான் தரமுடியும் என்று வீம்புடன் பதில் அளிக்கின்றனர்.குழந்தைகள் சாப்பிட்டதையும் கணக்கில் கொண்டு, தட்டுகளை குறைத்து விட்டனர்.மொத்தம் 75 தட்டுகள் தான் கணக்கு என்று திரும்ப திரும்ப சொல்லி கூடுதல் தர மறுத்து விட்டனர்.
உணவு சுவையாய் இருந்தால் கூட பரவாயில்லை.மட்டம் வேறு.லேட்டாய் வந்த உறவினர்கள், மற்றும் விழாவினை நடத்திய இவென்ட் மேனேஜ்மென்ட் மக்கள் என ஒருத்தரும் சாப்பிடவில்லை..பின்னர் நான் போய் ப்ளோர் மேனேஜரை பயங்கரமாக சத்தம் போட்டுவிட்டு தான் வந்தேன்.ஒண்ணையும் வாய்ல வைக்க முடியல.முதல நீங்க டேஸ்ட் பார்த்தீங்களா என்றும் கேட்டேன்.சுவையும் இல்லை , நல்ல சேவையும் இல்லை பின்னே எதுக்கு வாடகைக்கு விடறீங்க....பண்ணாடைகளா....விலை மட்டும் அதிகம்.ஒரு பிளேட் 350 ப்ளஸ் வரி....வீட்டுல சமைக்கிறத விட ரொம்ப டேஸ்டா இருக்கும்னு தான் ஹோட்டலுக்கு போறோம் ..அங்கேயும் இத விட மோசமா இருந்தா .....
இன்னும் கொஞ்சம்...

Sunday, October 2, 2011

சென்னையில் இன்று

தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இன்று என்னுடைய பயணம் தொடர்கிறது.சென்னை ரொம்ப மாறிவிட்டது.இப்போ கூட போலீஸ் கிட்ட ஹெல்மட் இல்லாமல் மாட்டினதுக்கு உடனே பிரிண்ட் அவுட் கொடுத்து பைன் வசூல் செய்கிறார்கள்.நல்ல முன்னேற்றம் ...
இன்னும் கொஞ்சம்...