Saturday, November 26, 2011

கோவில் குளம் - அகஸ்தீஸ்வரர் கோவில் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR), கரூர்

திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR)                
முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்ட கோவில் உள்ள ஆலயம்.(புதியதாய் கட்டிய கோவிலுக்கு மட்டுமே தமிழில் அர்ச்சனை). மூன்று ஆறுகள் கூடும் இடம் திருமுக்கூடலூர்.இங்கு அமராவதி நதிக்கரை ஓரமாக இக்கோவில் அமைந்து இருக்கிறது.பல நூற்றாண்டு களுக்கு முன்னரே  இக்கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.இக்கோவிலின் தல வரலாறு தெரியவில்லை.ஆனால் சோழ மன்னன் கட்டிய கோவில் என்று நம்பப்படுகிறது.இப்போது இக்கோவில் பராமரிப்பின்றி சிதில மடைந்து இருக்கிறது.கல்வெட்டுகள், ஒரே கல்லில் செதுக்கிய தூண்கள், அதில் சிற்பங்கள், கருங்கல்லில் செய்யப்பட்ட மண்டபங்கள், இப்படி நுண்ணிய அரிய கட்டிட சான்றுகள் இருக்கின்றன.தொல் பொருள் துறையினரால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.
 பிரதோஷம் , பௌர்ணமி அன்று மிகவும் சிறப்பாய்  பூஜை செய்யப்படுகிறது. அன்று நல்ல கூட்டம் காணப்படும். கோவிலை சுற்றி கோட்டை மதில் சுவர் உள்ளது.தற்போது இந்த கோவிலை கிருஷ்ணன் மற்றும் அவரது வாரிசுகள் நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர்.


செல்ல வழி : கரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவு.4 ம் எண் பேருந்து திருமுக்கூடலூர் செல்லும்.

கிசுகிசு: இந்த ஊர்ல தான் நான் பொறந்தேன் வளர்ந்தேன்.எப்படியோ எங்க ஊரை பத்தி ஒரு பதிவ போட்டுட்டேன்..

THIRUMUKKUDALUR, KARUR DISTRICT

நேசங்களுடன்

ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Friday, November 18, 2011

மலம்புழா அணை -பாலக்காடு

                 போன வாரம் சண்டே கேரளா போலாம்னு முடிவு பண்ணி பக்கத்துல இருக்கிற மலம்புழா அணைக்கு போனோம்.ரொம்ப மாறி இருக்கிறது அணை.

     3 வருடங்களுக்கு முன்பு செல்லும் போது ரொம்ப பசுமை ஆக இருந்தது.இப்போ வெறும் கான்க்ரிட் இடங்களாக ஆக்கி விட்டார்கள்.அழகு படுத்துகிறார்களாம்..எங்கும் மரங்களை காணோம்.கொஞ்சம் பசுமை மட்டுமே இருக்கிறது.ரொம்ப வெய்யில் காரணமாக ஒதுங்க இடம் இல்லாமல் ஆகி விட்டார்கள்.ஆங்காங்கே அடிக்கிற வெய்யிலிலும் சரசம் கொள்ளும் ஜோடிகளும் இருக்கின்றார்கள்.       ஒரு வருடம் கழித்து செல்லுங்கள்.பார்க்க அழகாய் இருக்கும்.அப்புறம் அணையில் நல்ல நீர்மட்டம் இருக்கிறது.பால் போல் நுரைத்து பொங்கும் அணை நீர் பார்க்க சுவாரஸ்யம்.கார்டன் செல்ல கம்ப்யூட்டர் அக்செஸ் கார்ட் தருகிறார்கள்.அதை ஸ்க்ரப் பண்ணியவுடன் தடுப்பு திறக்கிறது.(அட்வான்ஸ் டெக்னாலஜி யாம்...நம்மள போகவிட்டு புற முதுகுல சாரி பின்னாடி சாத்துது..)

     அப்புறம் ரோப் கார் இருக்கிறது.அதில் சென்றால் முழுவதும் கீழே காணலாம்.படகு சவாரியில் செல்லும்போது ஒருவித த்ரில் இருக்கிறது.படகினை இப்படி அப்படி ஒடித்து ஓட்டி நம்மை பயமுறுத்துகின்றனர்..ஆனாலும் நன்றாக இருக்கிறது.6 பேர் செல்ல 180 வசூல் செய்கின்றனர்.ஆனால் 10 நிமிடம் குறைவாகவே இருக்கிறது.


         அணையில் திறந்து விடப்படும் நீரின் வெள்ளோட்டம் மிக அருகில் இருந்து காணலாம்.இதெல்லாம் முடித்து விட்டு வெளியில் வந்தோம்.
        அப்புறம் பாம்பு பண்ணை இருக்கிறது.(பாவம் பாம்புகள் )ராஜ நாகம் இருக்கிறது.ஒரு பெரிய கூண்டு .அதில் எட்டி பார்த்தால் ஒரே ஒரு பச்சோந்தி மட்டுமே இருக்கிறது ..(மவுசு தான் ..)சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.

              சிறுவர்கள் விளையாட பொழுது போக்கு பூங்கா இருக்கிறது.

வெளியில் வந்து எங்களின் தாகத்தை தீர்க்க அருகிலிருந்த ஹோட்டல் சென்று சாப்பிட்டோம்.கேரள உணவான மீன், மட்டை அரிசி.. மற்றும் இறைச்சி......பின்னர்...... ஒருநாளில் சென்று வர ஏற்ற இடம்..முக்கியமாய் காதல் இளசுகளுக்கு ....கள்ள பெருசுகளுக்கு....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Saturday, November 12, 2011

கோவை மெஸ் - உப்பிட்டு (போளி) - பொங்கலூர்....


உப்பிட்டு (போளி) பொங்கலூர்.
கோவையில் இருந்து கரூர் செல்லும் வழியில் பல்லடம் தாண்டி பொங்கலூர் இருக்கிறது.இந்த ஊருக்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன.ஒன்று பெரும் அரசியல்வாதி பொங்கலூர் பழனிசாமி பிறந்த ஊர்.மற்றது உப்பிட்டு.போளி என்று அழைக்கப்படும் பலகாரம்.மிகுந்த சுவையுடன் செய்யப்படும் இந்த பலகாரம் இங்கு ரொம்ப பிரசித்தம்.வெளியூர் வாசிகள் விரும்பி வாங்கி செல்லும் பலகாரமாய் இருக்கிறது.சுட சுட போட்டு தருகிறார்கள்.சுவையும் அதிகம்.தேங்காய் போளி, பருப்பு போளி என்று இரண்டு சுவைகளில் கிடைக்கிறது.விலையும் குறைவுதான்.5  ரூபாய் மட்டுமே.அந்த பக்கம் போகும்போது மிஸ் பண்ணி விடாதீர்கள் ... 

கிசு  கிசு (update - 10.5.2012):
இந்த கடை ரொம்ப நாளா பூட்டி கிடக்குது..ஒருவேளை நம்ம போட்டோ எடுத்த நேரம் சரியில்லையோ...அப்புறம் அந்த ஊர்ல நிறைய கடைகள் இருக்கு.

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Tuesday, November 8, 2011

வீரபாண்டிய கட்டபொம்மன் - பாகம் 2

வீரபாண்டிய கட்ட பொம்மன் ...தொடர்ச்சி.. கட்டபொம்மன் காலத்தில் பயன் படுத்திய பொருட்கள் சில இன்னும் இருக்கின்றன.அவர் வணங்கிய ஜக்கம்மா கோவில் இன்னும் இருக்கிறது.
கட்டபொம்மனுடன் ஏற்பட்ட போரில் இறந்த வெள்ளையர்களின் கல்லறை இன்னும் ஒட்டபிடாரம் என்ற ஊரில் இருக்கிறது.மேலும் கட்டபொம்மனின் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த பேரன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.பொம்முவின் 212 வது நினைவு நாள் அன்று வீரபாண்டியனின் கோட்டைக்கு சென்றோம்.வீரத்திற்கும் தீரத்திற்கும் பெயர் போன கட்டபொம்மனின் கோட்டையை எப்போவாவது செல்லும் போது காண தவறாதீர்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, November 2, 2011

வீரபாண்டிய கட்டபொம்மன் - பாகம் 1

மதுரை டு தூத்துக்குடி செல்லும் வழியில் பாஞ்சாலஞ்குறிச்சி என்ற அறிவிப்பு பலகைகண்டுகுறுக்குசாலையில்இருந்துஉள்ளே பயணித்தோம்.
பாஞ்சாலஞ்குறிச்சி என்றாலே வீரம் விளைந்த மண்ணு என்பார்கள்.வேட்டைக்கு சென்ற போது முயல் நாயை விரட்டியதால் வீரம் செறிந்த இடம் என்று அங்கு கோட்டையை கட்ட ஆரம்பித்தான் கட்டபொம்மன். ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு அடி பணியாததால் அவனது கோட்டையை தரை மட்டம் ஆக்கினர் ஆங்கிலேயர்.(அதெல்லாம் வரலாறு..)அந்த இடம் தற்போது தொல்லியல் துறை வசம் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிற்து.கட்டபொம்மன் காலத்தில் இருந்த கட்டிட அஸ்திவாரங்களை மாதிரியாக கொண்டு தமிழக அரசு மாதிரி கோட்டை ஒன்றை நிறுவியுள்ளது. அதனுள் கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகள் வரையப்பட்டு இருக்கின்றன.

இன்னும் தொடரும்.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்இன்னும் கொஞ்சம்...