Wednesday, February 15, 2012

ராசிபுரம் ஒரு பார்வை

ராசிபுரம்:
திடீர் வேலை நிமித்தமாக போன மாதம் ராசிபுரம் சென்றேன்.நாமக்கல் மாவட்டத்தில் இந்த ராசிபுரம் இருக்கிறது.கோவையிலிருந்து நம்ம குதிரையில (அதாங்க நம்ம தேளு ..)கிளம்பினோம்.காங்கேயம் அப்புறம் முத்தூர், கொடுமுடி , நொய்யல், வேலாயுதம் பாளையம் (இந்த ஊரை பத்தி தனி பதிவு போடணும் ...) நாமக்கல், ஆண்டலூர் கேட் அப்புறம் ராசிபுரம் என வந்து சேர்ந்தோம்.





ரொம்ப சின்ன ஊருதான்.இங்க விவாசாயம் தான் அதிகம்.அப்புறம் பட்டு துணி நெய்கிறார்கள்.அதிகமா கல்வி நிலையங்கள் இருக்கிற ஊர் இது தான்.ரொம்ப வெயில் வேற ....இங்க ஒரு கடை பார்த்தோம்....சிவாஜி ரசிகன் என நினைக்கிறேன்..வசந்த மாளிகை என அவரோட சைக்கிள் கடைக்கு பேரு வச்சி இருக்காரு.அப்புறம் முதல் முதலா  இந்த ஊருக்கு ரயில் வர போகுது.நாமக்கல் மாவட்டத்திற்கு ரயில் சேவை இல்லாமல் இருந்தது.இப்போ நிறைவேறி இருக்கு.சேலம் நாமக்கல், கரூர் என புதிதாய் ரயில் இருப்பு பாதை அமைத்து இருக்கிறார்கள்.நாங்க போன அன்னிக்குத்தான் நண்பன் படம் ரிலீஸ்.


அங்க வேலைலாம் முடித்து விட்டு வர்ற வழியில தான் காவிரி ஆறு ஓடுது.வேலாயுதம் பாளையம் மற்றும் வேலூர் இந்த இரண்டு ஊர்களும் இந்த காவிரி ஆற்றினால் பிரிக்கப்படுகிறது.நம்ம குதிரைய கொஞ்ச நேரம் குளிப்பாட்டுவோம் அப்படின்னு நினைச்சு வண்டிய ஆத்துல விட்டோம்.



நல்லா கழுவி விட்டு நாங்களும் இரண்டு மணி நேரம் நீரில் ஜலக் கிரீடை பண்ணிட்டு மேட்டுக்கு வந்தோம்.வேலாயுதம் பாளையம் வாத்து கறிக்கு பேமஸ்.அங்க நல்லா சூடா இட்லி அப்புறம் ஒரு புல் வாத்துகறி வாங்கி சாப்பிட்டு விட்டு அப்புறம் கோவைக்கு கிளம்பினோம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

4 comments:

  1. மாப்ள நல்லா இருந்துதா வாத்து...என்ன தான் சொல்லுங்க ஆத்துல குளிக்கர சுகமே தனி தான்யா!

    ReplyDelete
  2. வாங்க...வாங்க...விக்கி...ரொம்ப நல்லா இருந்துச்சு....

    ReplyDelete
  3. நான் சேலத்தில் பணிபுரிந்தபோது ஒரு முறை ராசிபுரம் சென்றிருக்கிறேன், அலுவலக விஷயமாக.பட்டுத்தறி நிறைய உண்டு இந்த ஊரில்.ராசிபுரம் பட்டு புகழ்பெற்றது.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....