M.S.R பிரியாணி ஹோட்டல்
கோவையில் நிறைய முஸ்லிம் அன்பர்கள் இருக்கிறதால் இங்க பெரியாடு என்கிற மட்டன் (மாட்டு இறைச்சி) அதிகம்.அதனால் பீப் பிரியாணி கோவையில் பல இடங்களில் நல்ல சுவையா கிடைக்கிறது.இதுல ரொம்ப முக்கியமான ஹோட்டல் போத்தனூர் டு சுந்தராபுரம் ரோட்டில் இருக்கிற MSR ஹோட்டல் ரொம்ப பேமஸ்.போத்தனூர் வழியா செல்லும் போது திடீர்னு ஞாபகம் வந்ததால் இந்த ஹோட்டலுக்கு போனோம்.
முன்புறம் சின்ன கடை போல் தான் இருக்கிறது ஆனால் உள்ளே ஏகப்பட்ட இடம்.நிறைய பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் சுவரை ஒட்டி ஓரு அடி அகல டேபிள் டாப் வைத்து இருக்கின்றனர்.போய் அமர்ந்ததும் நமக்கு வேண்டிய பிரியாணி, சில்லி பீப், பீப் சுக்கா வறுவல் ஆர்டர் பண்ணினோம்.
நல்ல வாசத்துடன் பிரியாணி இருந்தாலும் சுவை முன்பு போல் இல்லை. கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது.ஆனாலும் நன்றாக இருக்கிறது .ரொம்ப வருடங்களுக்கு முன்பு இன்னும் சுவையாக இருந்தது.அப்புறம் கறி மெதுமெதுவென்று பஞ்சு போல் நன்றாக இருக்கிறது.வறுவல் கொஞ்சம் காரத்துடன் இருக்க, குடிமகன்களுக்கு ஏற்ற சைட் டிஷ் போல் இருக்கிறது.அப்புறம் சில்லி வறுவல் நன்றாக இருக்கிறது. என்ன ...ரொம்ப நேரம் எண்ணையில் பொரிக்க வைப்பதினால் என்னவோ கொஞ்சம் சிவந்து இருக்கிறது.மத்தபடி டேஸ்ட் ஓகே.இரண்டு பிரியாணி ஒரு வறுவல்,ஒரு சில்லி 120 ரூபாய்.சாப்பிட்டு கையை கழுவிய பின்னும் பிரியாணியின் வாசம் இருக்கத்தான் செய்கிறது.
மதிய நேரம் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.அப்புறம் சிக்கன் , காடை மீன் என்று எல்லா வகையும் இருந்தாலும் இங்க பீப் மட்டும் அதிகமா விற்பனை ஆகும்.பீப் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்.விலையும் குறைவுதான்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்