இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாள்..(என் பிறந்த நாள் என்பதை விட ).காலைல ப்ளாக் எழுதி கிட்டு இருக்கும் போது ஒரு கால்.(போன் கால் தான் ).சரி ..யாராவது எனக்கு வாழ்த்து சொல்லுவாங்க அப்படின்னு நினைச்சா....என் பேரை கேட்டு , அப்புறம் அவரை அறிமுகபடுத்திகிட்டு சொன்னார் ..நான் உங்க ப்ளாக் படிக்கிறேன் அப்படின்னு...எனக்கு ஒரே அதிசயம்..ஆச்சர்யம் ...என்னடா..நாம போடற பதிவையும் படிச்சிட்டு முதல் முதலா ஒருத்தர் போன் பண்ணி இருக்காரே அப்படின்னு ஒரே சந்தேகம் ....சாரி ...சந்தோசம் ....ரொம்ப சிலாகிச்சு பேசினாரு.
சென்னையில் ஹை கோர்ட்டில் அட்வகேட் ஆக பணிபுரிகிறாராம்...நிறைய பேசினார் ...என்னோட பயணம் பத்தின பதிவுகள் அவரை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணி இருக்கிறதாம்..அதுவும் இல்லாமல் இதயம் பேசுகிறது மணியன் அவரோட நடையை ஒத்து இருக்கிறது என்றும் சொன்னார் ....எனக்கு ஆச்சர்யம் ....இப்படியெல்லாம் நம்மை பாராட்டு வாங்களா என்று...எப்படியோ....எனது பதிவுகள் அவரை சந்தோசம் செய்து இருக்கிறது என்பதை நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பாராட்டிய அன்பு நண்பர் அட்வகேட் ராஜ்குமார்.. அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியினை இந்நன்னாளில் காணிக்கை ஆக்குகிறேன்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அப்படின்னா நீங்க வளர ஆரம்பிச்சிட்டீங்கன்னு அர்த்தம். வளருங்கள் எல்.ஐ.சி அளவுக்கு.
ReplyDeleteஆரூர் மூனா செந்தில் said...
ReplyDeleteஅப்படின்னா நீங்க வளர ஆரம்பிச்சிட்டீங்கன்னு அர்த்தம். வளருங்கள் எல்.ஐ.சி அளவுக்கு.
>>
அதற்கு மேல் வளர்ந்தால் ஒத்துக்கொள்ள மாட்டிங்க போல
MANYMORE HAPPY RETURNS OF THE DAY.
ReplyDeleteதங்கள் கனவுகள் அனைத்தும் மெய்படவேண்டுமென்றும் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை தங்களுக்கு வழங்கும்படி இறைவனை வே்ண்டுகிறேன்.