Tuesday, July 9, 2019

கோவை மெஸ் -ஹோட்டல் தேவி , கடலூர், KOVAI MESS - HOTEL DEVI , CUDDALORE

                   சிதம்பரம் போன போது பக்கத்துல தான் பாண்டிச்சேரி பார்டரு...போனா கொஞ்சம் குவாலிட்டியா நமக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று உள் மனசு சொல்லியதால் தமிழக அரசாங்கத்தின் வருமானத்தை இன்று ஒரு நாள் தள்ளி வைக்கலாம் என்று நினைத்த படியே கடலூருக்கு பஸ் ஏறினேன்.ஆகவேண்டியதை எல்லாம் முடித்து விட்டு, சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போகலாம் என்று நிறைய பேரை கேட்டதில் அனைவரும் சொன்னது இந்த ஹோட்டலைத் தான்.

கடலூரில் உள்ள மிகப் பிரபலமான உணவகம் தேவி ஹோட்டல்.கடலூர் டூ சிதம்பரம் ரோட்டில் இருக்கிறது.கடலூரின் வெயிலுக்கு ஒதுங்க கூடிய ஏசி ரெஸ்டாரண்டாய் இந்த ஹோட்டல் இருக்கிறது.

ஏசி ஹோட்டல்.இன்டீரியர் அமைப்பில் அருமையாக இருக்கிறது.மதிய நேரம் என்பதால் என்னவோ கூட்டம் முண்டியடிக்கிறது.தோதான இடம் தேடி அமர்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் முழுக்க முழுக்க குடும்பங்கள் தான்.வீட்டில் யாரும் சமைப்பதில்லை போல....


உள் அமர்ந்ததும் முதலில் சூப் ஒன்றை தருகிறார்கள்.அதற்கு பின் ஆர்டர்.ஆர்டரிட்டதும் வரிசையாய் வந்து சேர்கிறது.இறால் பிரை. அளவான சைசில் உள்ள இறால்களுடன் மசால் சேர்ந்து செம ருசியாய் இருக்கிறது.அதே போல குடல் வறுவலும்.செம டேஸ்ட்.
அளவான காரத்துடன் மிக மிக அம்சமாய் இருக்கிறது.





இங்கே ஸ்பெசல் என சொல்லப்படும் மல்லி சிக்கன் பயங்கர சுவை.அமோகம்.மொறு மொறுவென்று சில்லியாக சாப்பிட சுவையாக இருக்கிறது.பச்சை பசேலென சுவையுடன் இருக்கிறது.
ஹோட்டல் நிறைந்து இருக்கிறது.கூட்டம் கூட்டமாய் குவிகிறார்கள்.விதவிதமான அனைத்து உணவுகளும் மிக ருசியாய் கிடைக்கிறது.

கடலூரில் தவற விடாத உணவகம் தேவி ஹோட்டல்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

INFUSIONS - CHOCOLATE, RAM NAGAR, COIMBATORE - சாக்லேட் , கோவை

சாக்லேட்.
இதை மிகவும் விரும்பி சாப்பிடாதவர்கள் இவ்வுலகில் இருக்கவே முடியாது.
குழந்தைகள், பெண்களின் பேவரைட் சாக்லேட் தான்.அன்பை சொல்ல அழகான வழி மைசூர்பாவில் மட்டுமல்ல இந்த சாக்லேட்டிலும் இருக்கிறது.
சிறுவயதில் இருந்தே சாக்லேட் என்பதை பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்டிருப்பதை இதுவரைக்கும் சாப்பிட்டுக் கொண்டு வந்திருக்கிறோம்.
கோடை மலை வாசஸ்தலங்களுக்கு போனால் மில்க் சாக்லெட், காபி சாக்லேட் , நட்ஸ் போட்ட சாக்லேட்களை சாப்பிட்டிருக்கிறோம்.






ஆனால் இங்கொருவர் சாக்லேட் தயாரிப்பில் பலவித சுவைகளில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்..அதுவும் எப்படி.. நம்மூரில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களின் சுவைகளில் கேரளாவில் இருந்து தருவிக்கப்படும் இயற்கை கோகோ வை பயன்படுத்தி சுவை மணம் மாறாமல் தருகிறார்.

கிரீன் சில்லி சாக்லேட்.
பீட்ரூட் ஹல்வா சாக்லேட்
மேங்கோ சாக்லேட்
முருங்கை லெமன் சாக்லேட்
கோகோனட் சாக்லேட்
ப்ரூ காபி சாக்லேட்
மேங்கோ லஸ்ஸி சாக்லேட்
பனைவெல்லம் சாக்லேட்
ராகி சாக்லேட்
மஞ்சள் பெப்பர் சாக்லேட்
இப்படி நிறைய வெரைட்டிகள்..
கோகோவினை மட்டும் முதன்மையாக கொண்டு, அதனுள் நம்மூர் வகை பழங்களை அதன் தன்மை கெடாது சுவையூட்டி இந்த வகை சாக்லேட்களை தயாரிக்கிறார்.இதற்காக இவர் தனி ஆய்வகம் ஒன்றை நடத்தியும் வருகிறார்.சாக்லேட் தயாரிப்பில் புதுமைகளை புகுத்தியதற்காக இவர் அவார்ட் கூட வாங்கி இருக்கிறார்.
அமெரிக்காவில் சாக்லேட் பற்றின துறையில் மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு சாக்லேட் மீதான ஆர்வத்தில் இந்த INFUSIONS எனப்படும் சாக்லேட் அவுட்லெட்ஐ திறந்திருக்கிறார்.
கோவை ராம்நகரில் தாரகராம் சில்க்ஸ் அருகே இந்த கடை இருக்கிறது.
சாக்லேட் வகையில் அனைத்து மெனுக்களும் இருக்கின்றன.
இன்னும் புதுப்புது வெரைட்டிகளை தயாரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
சாக்லேட் மெனுக்களின் விலை கோவைக்கு ஏற்றார் போல் இருக்கிறது.

வீடியோ வடிவில் காண நமது kovai food street youtube சேனலை பாருங்கள்.KOVAI STREET FOOD

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...