Saturday, April 28, 2012

பொன்னூத்தம்மன் கோவில் - வரப்பாளையம் - கோவை


பொன்னூத்தம்மன் கோவில்

கோவை டு மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலூர் தாண்டி வட மதுரை என்ற ஊர் இருக்கிறது.அந்த ஊரில் இருந்து தடாகம் செல்லும் வழியில் பன்னிமடை என்கிற ஊர்  இருக்கிறது.அந்த ஊரில் இருந்து வரப்பாளையம் என்னும் ஊரை அடைய வேண்டும்.வழி நெடிகிலும் பசுமை நிறைந்த தோப்புகளை காணலாம்.கோவிலுக்கு செல்லும் வழியில் ஆலமரம் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் கோவில் அடிவாரம் இருக்கிறது.கோவில் செல்லும் மலை பாதையை இரும்பு கேட் போட்டு வைத்து இருக்கின்றனர்.ஆள் அரவமற்ற காடு, ஓங்கி உயர்ந்த மலை. பயங்கர நிசப்தம்... சுற்றிலும் கண்ணுக்கெட்டும் தூரம் பசுமை...
பக்தியை விரும்புகிறவர்கள், இயற்கையை ரசிப்பவர்கள்,  தனிமையை விரும்புகிறவர்கள் அப்புறம் தள்ளிட்டு போறவங்க தாரளாமா போகலாம்.




மலையின் கரடு முரடான பாதை இப்போது கொஞ்சம் செப்பனிடப்பட்டு செல்லும் அளவுக்கு வைத்து இருக்கிறார்கள். கொஞ்சதூரம் சென்றவுடன் கோவிலின் படிகள் நம்மை வரவேற்கின்றன.படிகளை தாண்டி சென்றவுடன் பாறைகள் சூழ்ந்த இடத்திற்கு இடையில் கோவில் இருக்கிறது.அனைத்து சுவர்களுக்கும் மஞ்சள் நிறம் அடித்து இருக்கின்றனர்.பார்க்கவே தெய்வீக அம்சமாக இருக்கிறது.கோவிலின் ஒரு பாறையின் அடியில் குகை போன்ற அமைப்பில் அம்மன் உள்ளே வீற்று இருக்கிறார்.இங்கே நீர் ஊற்று எப்போதும் ஊறிக் கொண்டே இருக்கிறது.இதனால் தான் இந்த அம்மனுக்கு பொன்னூத்தம்மன் என்று பெயர்.










ரொம்ப குறுகலாக உள்ள இந்த குகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்து அம்மனை தரிசித்து விட்டு வந்தோம்.அப்புறம் முருகன், விநாயகர், ஆஞ்ச நேயர், சிவன் சன்னதி, நவகிரக சன்னதி இருக்கிறது.ஆலமரத்து பிள்ளையார் வேற இருக்கிறார்.மலைகளுக்கு இடையில் இந்த கோவில் அமைந்து இருப்பது வியப்புக்குரியது.மேலும் ஒரு பாறையின் கீழே உள்ள குகையில் சித்தர் தங்கி இருந்த இடமும் இருக்கிறது.
இரண்டு நாள் முன்பு பெய்த மழையினால் சுற்றுப்புறம் எங்கும் பசுமை நிறைந்து இருக்கிறது.நீர்கசியும் மலை முகட்டினையும் காணலாம்.இந்த கோவிலின் மலையில் இருந்து எதிர்புறம் பார்த்தால் அங்கே அனுவாவி சுப்பிரமணியர் கோவில் தெரிகிறது.இந்த பொன்னூத்தம்மன் கோவிலில் அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடைபெறும்.இந்த கோவில் வரை செல்ல பஸ் வசதி எதுவும் இல்லை.ஆனால் வரப்பாளையம் வர மினி பஸ் வசதி இருக்கிறது.குடும்பத்துடன் செல்பவர்கள் அம்மனுக்காக கோழி, கிடா வெட்ட அனுமதி உண்டு.அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வரும் வசதியும் இருக்கிறது.





இந்த கோவில் ரொம்ப தனிமையில் இருப்பதால் சமூக விரோதிகள் கூடும் இடமாக இருக்கிறது.நாங்கள் செல்லும் போது ஓர் இடத்தில் அனைவரும் மது அருந்தி கொண்டு சீட்டு விளையாடி கொண்டு இருந்தனர்.அப்புறம் யானைகள் தொல்லை அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிகை போர்டு  வைத்து இருந்தனர்.அப்புறம் இந்த கோவிலின் பூசாரியையும் போட்டோ எடுத்து கொண்டோம்.
இந்த  கோவிலுக்கு செல்வதினால் நிச்சயமாக ஒரு புது வித அனுபவம் ஏற்படும் என்பது உறுதி.
துடியலூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் இருக்கிறது
.
நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Friday, April 27, 2012

நம்ம ப்ளாக் டாட் காம் ஆக மாற்றம்


மாறிட்டோம்ல...

வணக்கம் தமிழ் உலக பதிவர்களே...

இன்று முதல் நம்ம ப்ளாக் ....கோவை நேரம்

காம்.....ஆக மாறுகிறது..


ஆதரவு அளிக்கும் படி அனைத்து பதிவர்களையும் நட்போடு வேண்டி கொள்கிறேன்.

இந்த  . காம் வாங்க நான் பட்ட பாடு இருக்கே...யப்பாடி ..இதையே ஒரு பதிவா போடலாம் ..

இதை வாங்க உதவி செய்த நண்பர் சம்பத் ( தமிழ் பேரன்ட்ஸ் )  , தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர்க்கு மனம் கனிந்த நன்றிகள் 

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, April 25, 2012

சிட்டி டவர் - CFC - சிட்டி பிரைடு சிக்கன்

  



கோயம்புத்தூர்
CFC ...காந்திபுரம் சிட்டி டவர் ஹோட்டலில் இருக்கிற பிரத்யோக சிக்கன் சென்டர்.போன வாரம் சாப்பிட போனேன்.அப்படி ஒண்ணும் டேஸ்ட் இல்லை.முன்னெல்லாம் இது ரொம்ப பேமஸ் ஆக இருந்துச்சு.சிக்கனை மொறு மொறு என்று பக்கோடா மாதிரி கையில் எண்ணெய் ஒட்டாமல் பிரைடு பண்ணி இருந்ததினால் இங்கு கூட்டம் அதிகமா இருந்தது.இப்போ என்னடானா ரொம்ப மோசமா இருக்கு. பார்சல் வாங்கிறவர்கள் மட்டுமே வருகிறார்கள்.ஆர்டர் பண்ணின சிக்கன் சுவை இப்போதைக்கு சரியில்லை. கிரில் சிக்கன் மட்டும் சுவையுடன் இருந்தது. மத்த கிரிஸ்பி சிக்கன் எதுவும் சரியில்லை.சரியான உப்போ காரமோ இல்லாமல் இருக்கிறது.  விலை குறைவுதான்.ஆனால் ருசி இல்லையே.இது கூட காம்போ என்று பெப்சி வைக்கிறார்கள்.சிக்கன் விளம்பரத்தை விட பெப்சி விளம்பரம் தான் அதிகமா இருக்கு.





சரியான பிளேட் கூட வைக்க மாட்டேன்கிறார்கள். பிளாஸ்டிக் கப், பேப்பர் பிளேட் என டாஸ்மாக் ஐ ஞாபக படுத்துகிறார்கள்.கோவையின் மிகப் பிரபல மான ஹோட்டல் ஏன் இப்படி உணவின் சுவையையும் தரத்தையும் இப்படி கெடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. (ஒருவேளை கடைய உள்வாடகைக்கு விட்டு இருப்பாங்களோ) மிக பிரபலமான இந்த ஹோட்டலில் பார் கூட இல்லை என்பது வருந்த தக்க விஷயம்.மொறுமொறு சிக்கன் சாப்பிடணும் எனில் விலை அதிகம் எனினும் KFC எவ்ளோ பரவாயில்லை. 

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...