பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் - தென் திருப்பதி, மலை வையாவூர், காஞ்சி புரம் மாவட்டம்
ரதத்தின் மீது காட்சி
அளித்தததின் அடையாளமாய் ரத சக்கரமும் குதிரை கால் குளம்பும் ஒரு பாறையில் இன்றும் இருக்கிறது
நேசங்களுடன்
ஜீவானந்தம்
போன முறை வேடந்தாங்கல் போன போது மலை மீது ஒரு கோவிலை கண்டேன்.அது தென் திருப்பதி கோவில் என்று கேள்விப்பட்டதோடு சரி. அப்போ போக நேரமில்லாத தால் நேற்று மீண்டும் தரிசனம் பெற சென்றேன்.
இயற்கை சூழ்ந்த மலை.மலை அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் அரச மர பிள்ளையார் கோவில் ஒன்றும் இருக்கிறது.
இந்த ஊரில் தான் ஆஞ்ச நேயர் சஞ்சீவி பர்வதத்தை தனது கைகளில் சுமந்து வந்த போது
இந்த இடத்தில் சற்று இளைப்பாற எண்ணி, மலையை கீழே வைக்காமல் தனது ஒரு
கையிலிருந்து மறுகைக்கு மலையை மாற்றிக் கொண்டாராம். எனவே, மலையை கீழே
வைக்காத ஊர் என்பதே மருவி மலை வையாவூரானது என்று ஒரு தல வரலாறு இருக்கிறது.இங்கே நர்த்தன அவதாரம் எடுத்து இருக்கிற கோலத்தில் காட்சி அளிக்கிறார் ஆஞ்ச நேயர்.
இக்கோயிலின் ஆஞ்சநேயரை வேண்டுபவர் தங்கள் எண்ணங்களை வெள்ளைத் தாளில் எழுதி
அதன்மீது மட்டையுடன் கூடிய தேங்காயை வைத்து மஞ்சள் துணியில் முடிந்து
அனுமனின் பாதத்தில் வைத்து வணங்குகின்றனர். பின்னர் அதை கோயிலில் அதற்கென
இருக்கும் கொம்பில் கட்டி விட்டுச் சென்றால் நாற்பத்தெட்டு நாட்களுக்குள்
அவர்களது எண்ணம் கை கூடுகிறது என்பது நம்பிக்கையாக உள்ளது.
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றியும், வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
இவரின் எதிர்ப்பக்கத்தில் இருக்கிற மலையில் தான் பிரசன்ன வெங்கடேச பெருமாள் அருள் புரிகிறார்.அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.வண்டிகள் செல்ல ஒரு மலைப்பாதையும் இருக்கின்றன.
நான் மட்டுமே படியில் சென்றால் சீக்கிரம் இளைத்தும்... களைத்தும் விடுவோம் என்று எண்ணி காரிலேயே மலைப்பாதையில் சென்றேன்.ஒரே ஒரு ஹேர் பின் வளைவுடன் அழகாய் வளைந்து செல்கிறது.மலை பாதை தற்போது செப்பனிடப்பட்டு வருகிறது.இந்த
மலைப்பாதையில் செல்லு போது சுற்றிலும் பார்த்தால் இயற்கை பசுந்தோலை போர்த்தி கண்ணுக்கு குளிர்ச்சியாக
இருக்கிறது.மலையை சுற்றிலும் இயற்கை அன்னையின் மடியில் பசுமை தோட்டங்கள் பரந்து
விரிந்து கிடக்கிறது.கோவிலை அடைந்தோம்.ரொம்ப அமைதி தவழ்கிறது.நல்ல விசாலமான கோவிலாகத் தான் இது இருக்கிறது.
இந்த கோவிலுக்கும் ஒரு வரலாறு
இருக்கிறது.மன்னன் அபராஜிதவர்மப்
பல்லவன். திருப்பதி பெருமாளின் அழகில்
மயங்கி அதே நினைவுகளுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, ஒரு மலையைக் கண்டார்.
தன்னுடைய எண்ணத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் திருப்பதி ஸ்ரீனிவாசனை
அங்கேயும் எழுந்தருளும்படி வேண்டினார்.அபராஜிதன் மனத்தில் தோன்றிய
பிரான், அவருக்காக
அங்கே ஒரு ரதத்தில் காட்சி தந்தார்.
குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதத்தில்
இருந்தபடி மன்னருக்கு அருள்புரிந்தார்
திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமான்.தன் நாட்டின்
பாதுகாப்புக்காக ரதத்தில் செங்கோல் பூண்டு காட்சி தந்த பெருமாளுக்கு பிரசன்ன வேங்கடேசர் என
திருநாமம் இட்டு அழைத்தார்.பின்னர், இந்த மலை மீது ஒரு கோயிலையும் கட்டுவித்தார்.பிற்காலத்தில்,
ராஜா தோடர்மால்
திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் பல செய்வித்தார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் அமையப் பெற்ற தலம் இது. திருமலை திருப்பதியைப் போல் விளங்கும் தலமும்கூட. கோவிலை சுற்றி வலம் செல்ல பாதை சுத்தமாய்
இருக்கிறது.முதலில் நம்மை வரவேற்பது கொடி மரம்.இதற்கு எதிரில் லட்சுமி வராகர் கோவில் இருக்கிறது.மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வார், வேணுகோபாலர், ராமர் சந்நிதிகள் இருக்கின்றன.அலர்மேல்மங்கைத் தாயார் இதே மலையில், தனி சந்நிதி கொண்டுள்ளார்.மலை மீது, வலம் வந்து
பெருமாள் சந்நிதிக்குள் சென்றால், இங்கே மூலஸ்தானத்தில் பெருமாள்
செங்கோலுடன் ராஜகோலத்தில் காட்சி தருகிறார்.இவரது இரு மார்புகளிலும்
இரண்டு மகாலட்சுமிகள் என்றும் நீங்காது அருள் புரிகின்றனர்.
திருப்பதியில் எவ்வாறு வராக சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்கச் செல்ல வேண்டுமோ அதே போன்றுதான் இங்கும்.
கோவிலின் பின்புற சுவற்றில் சிறு சிறு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு
இருக்கின்றன. இது என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை.
மலை அடிவாரத்தின் கீழே நிறைய குடிசைகள் அழகாய் வைக்கோலால் போர்த்தப்பட்டு இருக்கிறது.
நல்ல இயற்கை சூழலில்
குடி கொண்டுள்ள திருப்பதி பெருமானை வணங்கி மேன்மை அடைவோம்.
கோவில் நடை திறக்கப்படும் நேரம்:
காலை 8.00 to 12 மணி வரை மாலை 4 to 7
ஆஞ்ச நேயர் கோவில் :சனி ஞாயிறு மட்டும் காலை 8 to 1 மணி வரை.
அப்புறம் எப்பவாவது அய்யர் ப்ரீயா இருந்தா வந்து திறப்பாராம்..(அவரே சொன்னது..)ஏன்னா அதிக வருமானம் இல்லாத கோவிலாம்.(கடவுளே காணிக்கை கேட்குதே..)
ஆஞ்ச நேயர் கோவில் :சனி ஞாயிறு மட்டும் காலை 8 to 1 மணி வரை.
அப்புறம் எப்பவாவது அய்யர் ப்ரீயா இருந்தா வந்து திறப்பாராம்..(அவரே சொன்னது..)ஏன்னா அதிக வருமானம் இல்லாத கோவிலாம்.(கடவுளே காணிக்கை கேட்குதே..)
செல்லும் வழி :
மதுராந்தகம் டு செங்கல்பட்டு ரோட்டில் படாளம் கூட்டு ரோட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மலை வையாவூர் இருக்கிறது.
கிசு கிசு : கோவில் ன்னா சாமி இருக்கிறதும், மலை ன்னா மாமி சாரி அம்மணி இருக்கிறதும் சகஜம். (கடலை போட ஏத்த இடமாத்தான் இந்த மலை கோவில் இருக்கிறது போல )
கிசு கிசு : கோவில் ன்னா சாமி இருக்கிறதும், மலை ன்னா மாமி சாரி அம்மணி இருக்கிறதும் சகஜம். (கடலை போட ஏத்த இடமாத்தான் இந்த மலை கோவில் இருக்கிறது போல )
நேசங்களுடன்
ஜீவானந்தம்