Saturday, May 25, 2013

பயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathavalam, Guruvayoor,Kerala)

குருவாயூரில் இருந்த போது பக்கத்துல என்ன இடம் இருக்கு சுத்திப்பார்க்க அப்படின்னு ஒரு ஆட்டோ டிரைவரை கேட்க அவரு கூட்டிட்டு போன இடம் யானைத்தாவளம் என்கிற ஆனை கொட்டில்.
 
அங்க போனா பார்க்கிங் லாம் செம கூட்டம்...ரக வாரியா கேரள அம்மணிகள்....பார்த்துகிட்டே போனா வெளியவே ரெண்டு யானைகள் பிளிரிகிட்டு இருந்தது...அம்மாடி...எம்மாம் பெரிய யானை...அப்படின்னு ஆச்சர்யப்பட்டுக் கொண்டே உள்ளே நுழைய ஐந்து ரூபாய் டிக்கட் வாங்கிட்டு கேமராவிற்கு 25ம் கொடுத்துட்டு உள்ளே போனால் எவ்ளோ யானைகள்...கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட யானைகள்.(சமீபத்தில் தான் மூன்று யானைகள் இறந்து விட்டனவாம்.மொத்தம் 62 இருக்கிறது.)
யம்மாடி ஒவ்வொன்னும் எவ்ளோ பெருசு.... தந்தம் இருக்கிறது...இல்லாதது என நிறைய....பக்கத்துல நின்னு பார்க்க பிரமாண்டமா இருக்குது.. கூடவே கொஞ்சம் பயமும் இருக்குது .....மதம் கிதம் பிடிச்சு நம்மள சட்னி ஆக்கிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு பம்மிகிட்டே தான் பார்த்தேன்.காட்டுக்குள்ள யானைகள் எப்படி இருக்கும் அதே மாதிரித்தான் இருக்கு.என்ன..... எல்லா யானையையும் சங்கிலியால் கட்டி வைத்து இருக்கிறார்கள்...
தண்ணி தொட்டிகிட்ட ஒரு யானையை குளிக்க வச்சிக்கிட்டு இருந்தாங்க.பாகன் என்ன சொல்றாரோ அதை கேட்டு புரிஞ்சு நடக்குது...காலை இப்படி வைக்குது..அப்படி வைக்குது...தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி முதுகு மேல ஊத்துது.. அந்த பக்கம் பார்த்தா இன்னொரு யானை தீனி எடுத்துகிட்டு பொறுப்பா போகுது... ஆச்சர்யம் தான்.அவ்ளோ பெரிய யானையை அடக்கி ஆள்ராங்களே அப்படின்னு...
 
 
இப்படி எங்க பார்த்தாலும் யானைதான்..அதிலும் ஒவ்வொரு யானையும் பண்ற சேட்டை இருக்கே...ஒண்ணு குச்சி எடுத்து உடம்ப சொறியுது.இன்னொன்னு முன்னங்காலை அப்படி இப்படி ஆட்டி டான்ஸ் ஆடுது.பார்க்க குதூகலமா இருக்கு.பார்க்க வரும் அத்தனை பேர்களையும் கவர்கிறது.இந்த யானைகள் தான் கேரளாவில நடக்கிற திருவிழாக்களில் பங்கேற்குதுன்னு நினைக்கிறேன்.எல்லாத்தையும் மேக்கப் பண்ணி வரிசையா திருவிழாவில் நிறுத்தி விடுவாங்க போல...ஒரே சமயத்தில் இவ்ளோ யானைகளை பார்ப்பது அரிது தான்.

கண்டிப்பாக குருவாயூர் போனால் தவற விட கூடாத இடம்.கோவிலில் இருந்து கிட்ட தட்ட 3 கிலோ மீட்டர் இருக்கும்.ஆட்டோ டிரைவர்கள் யாரும் மீட்டர் போட்டு ஓட்டறதில்ல.குத்து மதிப்பாதான் வாங்குறாங்க. ஆனா நம்ம ஊரை விட கம்மிதான்.

கிசுகிசு : கடைசி வரைக்கும் நம்ம மாணிக்கத்தை (கும்கி) தேடிப்பார்த்தேன்...கிடைக்கல..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 21, 2013

அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா கணவாய், ராசிபுரம், நாமக்கல்

கொஞ்ச நாள் முன்னாடி ராசி புரம் வழியா ஆத்தூர் செல்லும் போது மெட்டாலா என்கிற இடத்தில் போற வர்ற நிறைய வண்டிகள் நின்று சாமி கும்பிட்டுவிட்டு போனதை பார்த்து விட்டு நானும் அப்படியே வண்டியை ஓரம் கட்டினேன்.அவ்வப்போது வந்து நிற்கும் எதாவது ஒரு காரிலோ வேனிலோ அம்மணிகள் இறங்கி தரிசனம் செய்வது வாடிக்கையாக இருக்கிறது.இந்த ரோடு ஆத்தூர் கள்ளக்குறிச்சி சென்னை செல்லும் வழியாதலால் அதிகம் வண்டிகள் செல்கின்றன.இரு புறங்களிலும் பசுமையான புளியமரங்களை காணலாம்.சரி கோவிலுக்கு வருவோம்.இந்த மெட்டாலா கணுவாய் பசுமையான மலை சூழ்ந்த இடம்.இயற்கை அன்னை வாரி இறைத்து இருக்கிறாள் பசுமையை.கண்ணுக்கெட்டின தூரம் மலைதான்.அதிகாலை வேளையில் மிக ரம்யமாக இருக்கிறது.
 
மலை சூழ்ந்த இந்த இடத்தில் ஒரு ஆஞ்ச நேயர் கோவில்.உருண்டைப் பாறைக் கல்லைப் பிரதானமாக வைத்து மகா மண்டபம் கட்டி இருக்கின்றனர்.அந்த பாறையில் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர், இரண்டடி உயரத்தில், நின்ற நிலையில், சாந்த வடிவத்தில் திருக்காட்சி அளிக்கிறார்.ஆஞ்சனேயரை சுற்றி செப்பு பட்டையங்கள் கொண்டு ஜோடிக்கப்பட்டு இருக்கிறது.
 
இந்த கோவிலை அடுத்து சிவன், விநாயகர், நவக்கிரகங்கள் சன்னதி இருக்கிறது.ஆஞ்சனேயரின் பலதரப்பட்ட வடிவங்கள் கொண்ட சிறு சிலைகள் இருக்கின்றன.இந்த ஸ்தலத்தில் புளியமரமே தல விருட்சமாக இருக்கிறது போல.மேலும் கோவிலின் பின்புறத்தில் சிறு வடிவில் உள்ள ஆஞ்சனேயர் சிலைகளுக்கு எதிரில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சோட்டானிக்கரை பகவதி அம்மன், கொல்லூர் மூகாம்பிகை அம்மன், திருக்கடையூர் அபிராமி, காசி விசாலாட்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், சரஸ்வதி பராசக்தி, லட்சுமி, புவனேஸ்வரி போன்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
 
தமிழகத்திலேயே தீமிதியுடன் திருவிழா நடைபெறும் ஒரே ஆஞ்சநேயர் திருக்கோயில் இதுதான் என்றே சொல்லலாம். ஆண்டுதோறும் பங்குனி மாதம்  நடைபெறும் இத்திருவிழாவில், கடைசி ஞாயிறு அன்று பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.
இந்த கோவில் வரலாறு என்னவெனில் மெட்டாலா கணவாயில் எனும் இந்த இடம் ஒரு காலத்தில் கொடிய வனவிலங்குகள் உலவும் வனமாக இருந்தது. இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில்  கொண்டவுடன் அழகான திருத்தலமாக மாறிவிட்டது. கோரைப் புற்களிடையே ஓடியதால் கோரையாறு என்ற பெயருடன், காவிரி, திருக்கோயிலுக்கு  எதிரே ஓடிக் கொண்டிருக்கிறது. கன்னிமார் ஊற்று என்ற சிறு சுனை அருவியும் உண்டு. 
நாமக்கல் குடவரைக் கோயில்களைக் கட்டிய அதியன் குணசீலன் என்ற, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் உருவாக்கிய  கோயில் இது. அப்போது காவல் தெய்வமாக இந்த அனுமன் சிலை செதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த கோவிலில் நம் முன்னோர்கள் வாசம் செய்கிறார்கள்.அனுமனின் ஆதரவாளர்களான இக்குரங்குகள் யாரையும் துன்புறுத்துவதில்லை.இங்கே வசிக்கும் குரங்களுக்கு உணவு கொடுப்பதற்காகவே பழம் பொரி கொண்ட கடைகள் இருக்கின்றன.இந்த கோவிலை ஒட்டி நந்த வனம் ஒன்று இருக்கிறது.ஒரு சில பூச்செடிகளைக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர  பலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதூர்யம் முதலியவை கிட்டும். ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் ஆனந்தாயா மலையடி வாரத்தின் பாதையோரமாக மெட்டாலா கணவாயில் எனும் இத்தலம் அமைந்துள்ளது. 
அந்தப்பக்கமாக போகும் போது கண்டிப்பாக ஒரு வருகையை உறுதி செய்துவிட்டுப்போங்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

 
இன்னும் கொஞ்சம்...

Friday, May 17, 2013

அருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவில், அவினாசி, திருப்பூர்

                அவினாசி வழியா சேலம் செல்லும் போதெல்லாம் இங்க இருக்கிற சிவன் கோவிலை பார்த்து ிசம் பண்ணும் அப்பின்னநினைப்பேன்.ரொம்ப காலமா அது நிறைவேறாம போய் இருந்தது.எப்படியோ இப்பொழுது நிறைவேறி இருக்கிறது.மிக விசாலமாக இருக்கிறது இந்தக்கோவில்.பரந்து விரிந்து கிடக்கிற கோவிலின் ஆரம்பமாய் அரசமரத்தடி பிள்ளையார் வீற்றிருக்கிறார்.கார் பார்க்கிங்கில் வண்டியிறத்ிவிட்டு நக்க ஆரம்பித்ேன்.வெயிலின் ாக்கம் வெறங்கால்கில் ெரிந்து. ஆனாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் வேடந்தங்கல் பைகள் போல அம்மிகள் விசட்டி வந்தில் வி ஆனு மினுள்....மில் ிவின் ிசம் பெறுவோம் பின் சிலின் ிசம்  என ுடிவு பண்ணி உள்ளே நுழந்தேன்
        சிவ சிவ என பெயர் பொறித்த கோவில் கோபுரம் நம்மை வரவேற்கிறது.கோபுரம் நுழைவாயில் முன் கொடிமரம் இருக்கிறது.உள் நுழைந்ததும் ஏகப்பட்ட தூண்கள்.உள்ளே கோவிலும் பரந்து விரிந்து இருக்கிறது.சிவனை நோக்கி நந்தியும் கொடிமரமும் இருக்கிறது.முதலில் சிவனை சுற்றி இருக்கிற அத்தனை சன்னிதிகளிலும் ஒரு வருகைப்பதிவினை உறுதி செய்திவிட்டு சிவனை தரிசிக்க கருவறைக்குள் நுழைந்தேன்.ஐந்து தலை பாம்பின் கீழ் சிவன் லிங்கம் வடிவில் வீற்றிருக்கிறார்.மனமுருக வேண்டிக்கொண்டு வெளியேறினேன்.
           கோவில் பிரகாரத்தில் சனிபகவானுக்கு தனி சன்னதியும் நவக்கிரக நாயகர்களுக்கு தனி சன்னதியும் இருக்கிறது.அதுபோலவே பிள்ளையார், முருகன் ஆகியோருக்கும் தனி சன்னதி இருக்கிறது.காலபைரவர் சந்நிதி உள்பிரகாரத்தில் இருப்பது இங்கு மட்டும் தான்; இவருக்கு வடைமாலை அணிவிப்பது விசேஷமான பிரார்த்தனையாம்.
         கோவிலின் தல பெருமை சொல்லும் கல்வெட்டுகள் இருக்கின்றன.63 நாயன்மார்கள், வராகி, வீரபத்ரன், சாமுண்டி போன்ற தெய்வங்களும், பஞ்ச பூத லிங்கங்களும் கோவில் பிரகாரத்தில் இருக்கின்றன.இந்த கோவில் அருகிலேயே கருணாம்பிகா சன்னதியும் இருக்கிறது.இங்கு அம்மன் ஆட்சிபீட நாயகி என்பதால் சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறாள்.
                   சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி ராஜகோபுரமும், கொடி மரமும் உள்ளது.  சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

              கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.
        காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தலத்ின் இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது முதல் தலம்.
              இதன் தல வரலாறு என்னவெனில் சுந்தரர் இவ்வூரில் உள்ள தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒரு வீட்டில் பூணூல் கல்யாணம் நடப்பதையும், மற்றொரு வீட்டில் பெற்றோர் சோகமாக இருப்பதையும் கண்டார். இதற்கான காரணத்தை விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பையன்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்ற வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
           இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவிநாசியப்பரின் அருளால் முதலை வாய்க்குள் 3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். இவனை பெற்றோரிடம் அழைத்து சென்று அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில் 3 நாட்கள் "முதலைவாய்ப்பிள்ளை உற்ஸவம்' நடக்கிறது.
இக்கோவிுக்கு வெளியாமைக்குளம் இருக்கிறு.இந்தோவிலின் முக்கிய ிருவிாவாக ேரோட்டம் இருக்கிறு.சித்ிரை மத்ில் வெகு விமிசையாகைபெறும்.
 
காலை 5 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.


ேசங்ுடன்
ீவானந்தம்

  

இன்னும் கொஞ்சம்...

Wednesday, May 15, 2013

முனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்


பதிவுலகில் மிகப்பிரபலமான பதிவரான முனைவர் பட்டாபட்டி வெங்கிடபதி என்கிற ராஜ் கடந்த ஞாயிறு அன்று வெளிநாட்டில் காலமானார்.அவரின் உடல் விமானம் மூலம் சென்னை வந்து பின் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு மதியம் வந்து சேர்ந்தது.அவரது பூத உடல் அவரின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வைக்கு சிறிது நேரம் வைக்கப்பட்டு பின் பெரியநாயக்கன் பாளையம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது இறுதி சடங்கில் நான்,வீடு சுரேஸ்குமார், வெளங்காதவன், மங்குனி அமைச்சர், உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
இன்னும் கொஞ்சம்...

Tuesday, May 7, 2013

கோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை

R.S.புரம்.ஒரு மதிய வேளை...பசி பட்டைய கிளப்பவே டி பி ரோட்டுல இருக்கிற அசைவ ஹோட்டலான ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் போனோம்.கூட்டம் நிறைந்து இருந்தது.இந்த ஹோட்டலில் எப்பவும் கூட்டம் இருந்து கிட்டே இருக்கும்.ஏன்னா இந்த டி பி ரோடு ஏரியாவுல ஒரு நல்ல விலை குறைவான டேஸ்ட் இருக்கிற ஒரு அசைவ மெஸ் இதுதான்.நல்ல காரம் சாரமா சாப்பிடனும்னா இங்க போலாம்.இந்த ஹோட்டலில் தனிச்சிறப்பு என்னவெனில் பரிமாறும் சர்வர்கள் அனைத்தும் மகளிர் மட்டுமே முதலாளி தவிர்த்து.
 நாங்கள் போனபோது பக்கத்து டேபிளில் அம்மணிகள் கூட்டம் ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தது.அவர்களுக்கு தோதுவாய் அருகில் உள்ள டேபிளில் அமர்ந்து கொண்டோம்.வந்த சர்வர் பெண்மணியிடம் பிரியாணி, சாப்பாடு, வஞ்சிரம் மீன், மட்டன் சுக்கா, பணியாரம் இதெல்லாம் ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம்.அசைவத்தில் ஒவ்வொரு அயிட்டமாக போர்டில் எழுதி வைத்து இருந்தனர்.பார்த்துக்கொண்டே எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
நம்ம கூட வந்த நண்பர் குழந்தை மாதிரி...எலும்பில்லாம தான் சாப்பிடுவார். மூளை, ஈரல், போன்லெஸ் சிக்கன் இப்படித்தான்...அவரு ஆசையா மூளை இருக்கான்னு அந்த பெண்மணியிடம் கேட்க, ஒரு படத்தில் வந்த காமெடி ஞாபகம் வந்து தொலைக்க.....அடேய்...அப்படிலாம் கேட்காத....ஆட்டு மூளை இருக்கான்னு கேளு என்று சொல்லவும் அப்படியே வாய் மொழிந்தான்.அது போலவே அந்த பெண்மணியும் இல்லை என்று சொல்லவும் ரொம்பவும்.....ஃபீலிங்ஸ்....
எனக்கு பிரியாணியும் பக்கத்து இலைக்கு சாப்பாடும் வந்தது.மூன்று வித குழம்பு...மட்டன், சிக்கன், மீன் என ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்தனர்.இதுவே ஹரி பவன் என்றால் வாளி வாளியாக வைத்து இருப்பார்கள்.கூடவே தேடிப்பார்த்தால் கொஞ்சம் பீஸ் இருக்கும்.குழம்பு கறி இன்னும் சுவையாக இருக்கும்.இங்கு குழம்பு நன்றாக இருந்தது.
பிரியாணி சுமார் ரகம் தான்.ஆனால் மட்டன் நன்றாக வெந்து இருந்தது.கூட இருக்கிற குழம்புடன் கலந்து கட்டி அடிக்க சுவையுடன் தான் இருந்தது.
வஞ்சிரம் மீன் சுவை...அது எப்போதும் நன்றாக இருக்கும்.என்ன.... அளவில் சிறியதாக இருந்தது.ஆனா டேஸ்ட் சூப்பர்.
அதுபோலவே மட்டன் சுக்கா...ஒரு 6 பீஸ் தான் இருக்கும்.பெப்பர் போட்டு பிரட்டி இருந்தனர்.சுவை நன்றாக இருந்தது.
கடைசியாக வந்த ஒன்று பணியாரம்.முட்டையில் செய்தது.இது எப்போது ஆர்டர் பண்ணினாலும் சூடாக கேளுங்கள்..அப்போது தான் நன்றாக இருக்கும்.இந்த தடவை ஆறி போனதை வைத்து விட்டனர்.டேஸ்ட் சுமார்தான்.சூடாய் இருந்தால் சூப்பராக இருக்கும்.அப்படியே சிக்கன் மட்டன் குழம்பில் தொட்டு சாப்பிட சூப்பராய் இருக்கும்.
அதுக்கப்புறம் நண்பர் ஒவ்வொரு குழம்பு ஊத்தி ஒரு வெட்டி வெட்டிக்கொண்டிருந்தார்.கடைசியில் ரசம் , தயிர் என முடித்து விட்டு திருப்தியாய் வெளியே வந்தோம்.
இதெல்லாம் சேர்த்து விலை 355 ஆனது.விலை குறைவு தான்.இந்த காஸ்ட்லி R.S.புரம் ஏரியாவில் இந்த ஹோட்டல்தான் விலை குறைவு.கொஞ்ச தூரம் தள்ளி சென்றால் KFC சிக்கன் இருக்கிறது. அந்தப்பக்கம் சென்றால் அன்னபூர்ணா இருக்கிறது.இரண்டும் விலை அதிகம்.அதுவுமில்லாமல் வீட்டு முறைப்படி செய்து தருவதால் மிக நன்றாக இருக்கிறது.
டிபி ரோட்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எதிரில் இந்த ஹோட்டல் அமைந்து இருக்கிறது.ஒரு சின்ன சந்து மாதிரி தான் செல்லும்.ஆனால் உள்ளே விசாலமான இடத்தில் அமைந்து இருக்கிறது.தகர சீட் போட்டு இருப்பதால் மதியம் சென்றால் வேர்க்க விறுவிறுக்க   சாப்பிடலாம்.அது  இரு சுகமான அனுபவத்தினை தரும்.
அப்புறம் இங்க முடித்து விட்டு சிக்னல் தாண்டி இருக்கிற பெட்ரோல் பங்க் அருகில் குல்பி ஐஸ் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, May 4, 2013

ஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச்சூர், கேரளா

நம்ம தோழர் ஒருத்தரு ரொம்ப வருசமா இந்த கோவிலுக்கு போவாரு.இந்த தடவை நானும் வருவேன்னு சொல்லி அதிகாலையில் கோவை டூ எர்ணாகுளம் டிரெய்ன் ஏறி காலை எட்டுமணிக்குள் திருச்சூர் அடைந்தோம். ஸ்டேசனில் கால் வைத்தவுடன் சும்மா....ஜக ஜோதியா இருக்கு திருச்சூர் ரயில்வே ஸ்டேசன்...காலையில் பள்ளி கல்லூரி, அலுவலங்களுக்கு செல்லும்  ஏகப்பட்ட அம்மணிகள்...அசின், நயன் தாரா, லட்சுமி மேனன் பாவனா வடிவில்....நீண்ட கரு கரு கூந்தலுடன்  உருண்டை விழிகளுடனும்.....தாராளமான மனசுடனும்........ம்ம்ம்..வருங்கால நாயகிகளை மனதார வாழ்த்திவிட்டு ராமரை தரிசிக்க கிளம்பினோம்..

அதற்கு முன் கேரள பாரம்பரிய உணவான புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
திருச்சூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருப்பரயார்.நாங்கள் சென்றபோது கோவில் விசேசம் போல.அலங்கார பூக்கள் கொண்டு வீதியில் நடனமாடிக்கொண்டு இருந்தனர்.செண்டை மேளம் கொட்டி மிக அழகாக இருந்தது அந்த நிகழ்வு. (ஒருவேளை எங்களை வரவேற்க கேரள சமஸ்தான ராஜா ஏற்பாடு செய்து இருப்பாரோ )
 கோவிலுக்கு செல்லும் இருபுறமும் எப்பவும் போல நிறைய பிளாட்பார கடைகள்.வேஷ்டி, துண்டுகள், பக்தி பிரச்சார பாடல் கேசட்டுகள், அப்புறம் கேரளாவின் பாரம்பரிய லாட்டரி சீட்டு விற்பனை.வேடிக்கை பார்த்தபடியே கோவிலுக்கு நடையைக்கட்டினோம்.
வீடு போன்ற அமைப்பில் இருக்கிற கோவிலுக்குள் பயபக்தியுடன் உள்நுழைந்தோம்.கேரள கோவில்களில் உள்ளே நுழையும் போது சட்டையை கழட்டி விட்டுத்தான் செல்லவேண்டும்.நாங்களும் அதுபோலவே நாங்களும் வெற்றுடம்புடன் நுழைந்தோம்.கேரளாவின் பாரம்பரிய முறையில் இருக்கிறது கோவில்.கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட சிற்பங்கள், புராதன சின்னங்கள் என அழகாய் இருக்கிறது.திருச்சூரின் வடக்கும்நாதன் கோவிலை போன்றே இங்கும் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பு.கோவிலை ஒட்டியே திருப்பரையாறு என்கிற புழா ஓடுகிறது.பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது.
பரந்து விரிந்து இருக்கிறது கோவில்.இந்த கோவிலில் மீனூட்டு என்கிற நேர்த்திக்கடன் மிகப்பிரபலமானது.ஆற்றில் இருக்கும் மீன்களுக்கு உணவு வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாக வைத்து இருக்கின்றனர்.அதுபோலவே வெடி வெடிப்பதும்..இதற்காகவே தனி கவுண்டர் வைத்து இருக்கின்றனர்.நாங்களும் எங்களது பங்குக்கு வெடியும் மீன் உணவும் வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினோம்.பின் ராமரை தரிசிக்க வரிசையாய் வீடு போன்ற அமைப்பில் இருக்கும் கோவிலுக்குள் உள் நுழைந்தோம்.
 
 
பயபக்தியுடன் ஸ்ரீராமரை வேண்டிக்கொண்டோம்.இங்கே அமைந்திருக்கும் விக்ரகம் நான்கு கைகளுடன் கூடிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகும்.இந்த மூலவரில் பிரம்மா மற்றும் பரமசிவனின் அம்சங்களும் அடங்கியுள்ளதால், இறைவனை திருமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.மேலும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கோசலை கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் சுவாமிகளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
 இந்த கோவிலின் வரலாறு என்னவெனில் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் நான்கு விக்கிரங்கள் கிடைத்ததாம்.ராமர், லட்சுமனன், பரதன், சத்ருக்கன் ஆகியோரின் விக்கிரங்களே அவைகள்.இந்த விக்கிரங்களை பிரதிஷ்டை செய்ய பிரசன்னம் பார்த்த போது ஸ்ரீராமரை திருப்பரையாறிலும், லட்சுமணரை மூழிக்குளம், பரதரை இரிஞ்ஞாலகுடாவிலும், சத்ருக்கனை பாயம்மல் என்கிற இடங்களிலும் கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.இந்தியாவிலேயே ஒரே மாவட்டத்தில் நால்வருக்கும் கோவில் இருப்பது இங்கு தான்.
இந்த விக்கிரங்களை துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் பூஜிக்கப்பட்டவை என்றும் துவாரகை கடலில் மூழ்கிய போது அவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் நம்பப்படுகிறது.மேலும் நான்கு வேதங்களையும் இந்த விக்கிரங்கள் குறிக்கின்றன.ஸ்ரீராமர் ரிக் வேதமும், லட்சுமணர் யஜுர் வேதமும், பரதர் சாம வேதத்தினையும், சத்ருகன் அதர்வண வேதத்தினையும் குறிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.இந்த நால்வரையும் ஒரே நாளில் உச்சிகாலத்திற்குள் வேண்டிக்கொண்டால் அனைத்து துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.இதற்கு நாலம்பலம் காணல் என்றும் அழைப்பர்.

கோவிலுக்கு செல்லும் வழி - திருச்சூரில் இருந்து திருப்பரையார், 25 கிலோ மீட்டர் தொலைவு, பஸ் வசதிகள் இருக்கின்றன.
 விசேச விழா - பூரம் மற்றும் ஏகாதசி திருவிழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.
நேரம் -4.30 am to 12.30 pm, 4.30 pm to 8 pm.

கிசுகிசு : கோவிலில் எப்பவும் போல மலையாள அம்மணிகள்..கேரள உடை உடுத்தி பார்க்கவே அம்புட்டு அழகாய்....ம்ம்ம்...கொடுத்துவைத்தவர்கள்.
கோவில் போய்ட்டு திரும்பி வரும் போது நமக்காகவே திறந்து வைத்தது போல ஒரு கள்ளுக்கடை.நம்ம சொந்தக்காரங்களோட வருகைக்கு காத்திருந்த கடையில் மூன்றாவது ஆளாக நுழைந்தேன்.மேலும் தொடர .கள்ளு


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...