Friday, February 17, 2012

குச்சி ஐஸ்..சேமியா ஐஸ்

குச்சி ஐஸ்..சேமியா ஐஸ் ...
கலர் கலராய் ....நாம சிறு வயசுல சாப்பிட்டு இருப்போம்...இப்போ இந்த மாதிரி ஐஸ்லாம் கிடைக்கிறது இல்ல...எங்கயாவது கிராமம் பக்கம் போகும்போதுதான் யாரவது விற்று கொண்டு போகிறதை பார்க்க முடியும்.

அப்படித்தான் நான் கோவையில் இருந்து காரமடை செல்லும் போது ஒருத்தர் வண்டியில் ஐஸ் பெட்டி கொண்டு போறதை பார்த்து, அவரை நிறுத்தி ஐஸ் வாங்கி சாப்பிட்டு பார்த்தேன்.நம்மள பார்த்த வுடன் அவருக்கு ரொம்ப சந்தோசம் ..என்ன ஐஸ் வேணும்னு கேட்டு இப்போ மார்கெட்டுல இருக்கிற சாக்கோ பார் , மேங்கோ என சொல்ல, நமக்கு அதெல்லாம் வேணாம்,,,,,குச்சி சேமியா ஐஸ் கொடுங்க என கேட்கவும்...மனுஷன் முகத்த பார்க்கணுமே....அப்புறம் அவர்கிட்ட நம்ம சிறு வயது புராணம் சொல்ல அவரும் சந்தோசமாய் சேமியா ஐஸ் எடுத்து தந்தார் ..ஐஸ் அப்புறம் அவரையும் போட்டோ எடுத்தேன்.






சாப்பிடும் போது இளம் வயதில் சாப்பிட்ட ஞாபகம் உருண்டோடியது.டவுசர் போட்ட காலத்தில் ஊருக்குள் கொண்டு வரும் ஐஸ் ஹாரன் சத்தம் கேட்டு அம்மாகிட்ட நாலணா வோ இல்லை எட்டணாவோ வாங்கிகிட்டு ஒரு வித சந்தோசத்துடன் ஒரு கையில் டவுசரை பிடித்து கொண்டு ஐஸ் காரரை நோக்கி ஓடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.ஐஸ் வாங்கும்போது பெட்டிக்குள் இன்னும் என்ன என்ன இருக்கும் என எட்டிஎட்டி பார்ப்பது, அப்புறம் அந்த ஆட்டோ ஹாரனை கொஞ்சநேரம் அழுத்தி ஒலி எழுப்புவதும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் பழைய இரும்பு சாமானுக்கு ஐஸ் தரும் ஆள் வந்து விட்டால் போதும், வீட்டில் எங்காவது உபயோகமற்று கிடக்கும் பொருள் ஏதாவது போட்டு ஐஸ் வாங்கி சாப்பிட்டதும் ஞாபகத்தில் இருக்கிறது.அப்படி ஒரு பொருளை ஐஸ் வாங்க போட்டு அம்மாவிடம் செமத்தியாக அடி வாங்கினதும் ஞாபகத்தில் இருக்கிறது ...இப்படி நிறைய....

இப்போதெல்லாம் ஐஸ் வண்டியை பார்க்கும் போது மறக்காமல்  குச்சி ஐஸ் அல்லது சேமியா ஐஸ் வாங்கி சாப்பிடும் போது மனதுக்கு இளம் பிராயம் நினைப்பு வருவதில் மிகுந்த சந்தோசம் அடைகிறேன்.கால் வலிக்க ஊர் முழுக்க வேகாத வெய்யிலில் சுற்றி ஐஸ் விற்கும் நபரை கண்டவுடன் அவரை நிறுத்தி அவரிடம் ஐஸ் வாங்கி விட்டு ஐஸ் க்கு உண்டான தொகையை விட அதிகமாய் கொடுப்பது இப்போதெல்லாம் பழகி விட்டு இருக்கிறது.

நேசங்களுடன் ....
ஜீவானந்தம்
 

8 comments:

  1. குச்சி ஐஸ், சேமியா ஐஸ்லாம் ஓக்கே. நீங்க சின்ன வசுல பண்ண சேட்டைலாம் பதிவா போட்டீங்கன்னா நல்லா இருக்குமே ஹி ஹி

    ReplyDelete
  2. படிக்கும் போதே மனசுக்குள் பூ பூத்த மாதிரி இருக்கு..

    ReplyDelete
  3. பால் ஐஸ்...விட்டுட்டீங்க...
    நமக்கு பிடிச்சது எதிர் வீட்டு ஐஸ் தான்...:)

    ReplyDelete
  4. இந்த வெயில் நேரத்தில ஐஸ் யப்பத்தின பதிவு அருமை.ஸ்கூல்ல படிக்கிறப்ப 'நெ ஓன்' பெல் அடிச்ச ஒடனே அந்த அஞ்சி நிமிச கேப்ல குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு...அதுல கூட்டாளிக்கு ஒரு காக்கா கடி கடிச்சி சாப்பிட்ட ஞாபகம்.நினைவூட்டலுக்கு நன்றி..... ஐஸ்கிரீம் ,மில்க்க்ஷேக் னு எத்தன வந்தாலும் குச்சி ஐஸ்ச அடிச்சுக்க முடியாது....

    ReplyDelete
  5. அருமையான ஐஸ் ப்கிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. திரு கோவை நேரம்,

    தங்களுக்கு Versatile Blogger என்கிற விருது தந்துள்ளேன். வாழ்த்துக்கள்

    http://veeduthirumbal.blogspot.in

    அன்புடன்

    மோகன்குமார்

    ReplyDelete
  7. திரு கோவை நேரம்,

    தங்களுக்கு Versatile Blogger என்கிற விருது தந்துள்ளேன். வாழ்த்துக்கள்

    http://veeduthirumbal.blogspot.in

    அன்புடன்

    மோகன்குமார்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....