நண்பரின் கல்யாணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடை பெற்றதால் அங்கு சென்றேன்.கல்யாண வீட்டார் அவங்க வேலையில் பிசியாக இருந்ததினால் சும்மா நாமளும் எவ்ளோ நேரம் தான் இருக்கிறது என்பதினால் கோவிலை படமாய் எடுத்து தள்ளினேன்.இருக்கிற எல்லா கோபுரமும் சென்று போட்டோ எடுத்தேன்..அப்புறம் பொற்றாமரை கோவில் படியில் உட்கார்ந்து கொண்டு போற வர அனைத்து பக்தர்கள் மற்றும் வெளி நாட்டு பயணிகள் இவர்களை எல்லாம் நோட்டம் விட்டு கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருந்தேன்..அப்புறம் கல்யாணம் முடிஞ்சு வெளியே இருக்கிற ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அப்படியே...கொஞ்ச நேரம் உலாத்தி விட்டு கோவை கிளம்பினேன்.
உங்களின் பார்வைக்கு :
சிற்ப கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு இக்கோவில.நிறைய மண்டபங்கள் , நிறைய தூண்கள் , சிற்பங்கள் என தமிழர் கலையை பறை சாற்றும் அதிசய கோவில்...
இதற்கென வரலாறு நிறைய இருக்கிறது..நமக்கு இப்போதைக்கு வேணாம்....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நண்பா... மதுரையில் பிறந்து சென்னையில் வசி்க்கும் என்னை இந்தப் புகைப்படங்களின் மூலம் மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று மகிழ வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
எத்தனை தரம் சென்று பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஒரு ஊர் மதுரை. படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. மதுரை ஸ்பெசலான மல்லி, இட்லி பற்றி சொல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன். ஜிகர்தண்டா பத்தியும் சொல்லலியே. அதுக்குன்னு தனி போஸ்ட் வருமா?
ReplyDeleteஜிகர் தண்டா பத்தி முன்பே தனி பதிவா போட்டு விட்டேனே http://kovaineram.blogspot.in/2011/08/blog-post_26.html
ReplyDelete