கோலாலம்பூரில் இருந்து முதலில் சுற்றிப் பார்க்கப் போன இடம் பத்துமலை என்கிற பட்டு கேவ்ஸ் (Batu Caves )..அப்பா அம்மா கிட்டே கோவிச்சுகிட்டு மலை ஏறின நம்ம ஊரு முருகன் இருக்கிற இடம்..ஜக ஜக என தங்க கலரில் மிக உயரமாக ஜொலிக்கும் முருகன்.வெளிநாட்டிலும் நம்ம ஊர் கடவுளுக்கு இவ்வளவு வரவேற்பா என ஆச்சரிய பட வைக்கிறது இந்த கோவில். உள்ளே நுழையும் போதே பெரிய வேல் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி இடம் நல்ல விஸ்தாரமாக இருக்கிறது.முறையாய் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.(நம்ம ஊர் மாதிரி குப்பை கூளங்கள் காணோம்).மலையின் அருகே ஓடுகிற பத்து என்கிற ஆறின் பெயரால் இந்த குகை அழைக்கப்படுகிறது.இந்த முருகன் கோவிலை நிர்மாணித்தது ஒரு தமிழர் என்பது இன்னும் ஆச்சரியமே...
அடிவாரத்தில் இருந்து குகைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.நமக்கு படியில் செல்ல தெம்பு இல்லாத காரணத்தினால் கீழேயே இருந்து முருகனை தரிசித்தோம்.கூடவே வெளி நாட்டு அம்மணிகளையும்...
மேலே இருக்கிற குகைக் கோவிலில் சுண்ணாம்புக் குன்றுகளிலான பல குகைகள் இருக்கின்றன.அரிய வகை விலங்கினங்களும் தாவரங்களும் இருக்கின்றனவாம்..இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.சரி..சரி..நமக்கு எதுக்கு வரலாறு எல்லாம்...
சும்மா ஜக ஜகன்னு ஜொலிக்கிறாரு முருகன்..அவர மாதிரியே ஒரு சில அம்மணிகளும் ஜொலிக்குதுங்க...என்ன பண்றது..நம்ம முருகனுக்கு வந்த வாய்ப்ப பாருங்க...வெளிநாட்டுல சும்மா ஜெக ஜோதியா.....
அடிவாரத்தில் நிறைய புறாக்களின் கூட்டம் இருக்கிறது.அவை பறப்பதும் அமர்வதும் என அழகாய் இருக்கிறது....அதை சுற்றி ஒரே கூட்டம்....புறாவை பார்க்கவா இல்ல அம்மணிகளை பார்க்கவான்னு தெரியல...
தமிழக கோவில்களில் இருப்பது போலவே இங்கும் ஒரு சில பிளாட்பார கடைகள்.தமிழ் பெயர்ப்பலகை தாங்கிய ஹோட்டல், என சிறப்பாய் இருக்கிறது.
இந்த பத்துமலை கோவில் அருகிலேயே ராமாயண குகை என சொல்லப்படுகிற குகைக்கு செல்லும் வழியில் ஆஞ்சனேயர் சிலை ஒன்றும் இருக்கிறது.அப்புறம்...இங்க தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுமாம்.
நேர்த்திக் கடன்களுக்காக பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக்
காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பல காவடிகள் எடுப்பார்களாம் இந்து, சீன, மலாய் மக்கள்...
கோலாலம்பூரில் இருந்து 15 கிலோ மீட்டருக்குள் இந்த பத்து மலை இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்