Thursday, March 29, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK


ஒரு கல் ஒரு கண்ணாடி...

இந்த  படத்துக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் எதுவும் தேவையில்லை...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..



உதயநிதி ஸ்டாலின் ......இன்னிக்கு ஹன்சிகா...நாளைக்கு இன்னும் புத்தம் புதுசா...இன்னும் இளசா....அனேகமா...அடுத்த பவர் ஸ்டார்  மாதிரி வருவார்னு நினைக்கறேன்.

ம்கூம்...

என்ன பண்றது...காசு இருந்தா காக்கா கூட அழகாயிடும்... ( எல்லாம் ஒரு வயித்தெரிச்சல் தான்....)

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Tuesday, March 27, 2012

கோவை மெஸ் - ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் - sri Ragu Restaurant

ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் :

சரவணம் பட்டி குமரகுரு காலேஜ் பின்புறம் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் தள்ளி இந்த ஹோட்டல் இருக்கிறது.
இந்த ஏரியாவில் வேலை செய்கிற சாப்ட்வேர் பார்ட்டிகளுக்கு, காலேஜ் வாசிகளுக்கு என்று திறக்க பட்ட ஹோட்டல். தனித் தனி குடில் அமைப்பில் இது இருக்கிறது.ஹால் வசதியும் இருக்கிறது.நண்பரின் கல்யாண நாள் என்பதினால் இங்கு சென்றோம்...எப்பவும் போல ஆர்டர் பண்ணிட்டு இருபது நிமிஷம் காத்திட்டு இருந்தோம்...குல்ச்சா, சிக்கென் டிக்கா, லாலி பாப், பிரைட் ரைஸ், சிக்கன் மசால், பிரான் பிரை ..இதை எல்லாம் எதிர் பார்த்திட்டு...


ஆனா வந்தது என்னவோ பக்கத்து குடிலுக்கு அம்மணிகள் தான்...அந்த இரவு வேளையிலும் எவ்வளவு அழகாய் தெரிகிறார்கள்..டவுசரும் டீ ஷர்ட் போட்டு உயர்த்தி போட்ட கொண்டையுடன்.....சாப்ட்வேர் சாப்ட்வேர் தான்  ...ஹி ஹி ஹி ... அப்படியே கொஞ்ச நேரம் ...(ச்சே...அதுக்குள்ள ஆர்டர் போட்டது எல்லாம்  வந்திடுச்சே..) கழிச்சு எல்லாம் வந்து குவிந்தன..

சிக்கன் டிக்கா...ரொம்ப அருமை...அப்படியே...மாவு மாதிரி கரைகிறது...செம..செம..அப்புறம் குல்ச்சா...இது ரொம்ப சாப்ட் .இதுவும் அருமை...
லாலி பாப் தான் சைசிலும் சுவையிலும் மாற்றம்...சுவை சுத்தம்...சைஸ்..ரொம்ப சின்ன சைஸ்....காக்கா மாதிரி இருக்குமோ என ஒரு டவுட்...



அப்புறம் பிரைட் ரைஸ் எதுவும் நன்றாகவே இல்லை..ஏதோ பண்ணின மாதிரி இருந்தது.அப்புறம் பிரான் பிரையும் அப்படிதான்...சுவை இல்லை..ஆரம்பித்த புதிதில் ரொம்ப நன்றாக இருந்ததாம்...இப்போ குறைந்து விட்டது...அப்புறம்...எப்படியோ எல்லாம் காலி பண்ணிட்டு வந்தோம்...ஏதோ பக்கத்து குடிலில் அந்த அம்மணிகள் இருந்ததினால் என்னவோ ரொம்ப அமைதியாய் அனைத்தையும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம். (உணவைத்தான் ) சிக்கன் டிக்கா... குல்ச்சா...இது ரெண்டும் ரொம்ப அருமை.....



விலை லாம் சாப்ட்வேர் ஆளுங்களுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு...

துடியலூர் டு சரவணம்பட்டி ரூட்டில் குமரகுரு காலேஜ் இருக்கு அதை ஒட்டி செல்லும் ரோட்டில் இந்த ஹோட்டல் இருக்கிறது...காலேஜ் அம்மணிகள், சாப்ட்வேர் அம்மணிகள் இவங்களை அதிகம் பார்க்கலாம்.காதல் தேசம் படத்தில் வருகிற மாதிரி க..க..க்க. கல்லூரி சாலை....கலர்புல் சாலை..... 

கிசுகிசு:
இங்க  நிறைய சாப்ட்வேர் கம்பனிகள், காலேஜ் இருக்கிறதால் அதிகம் லேடீஸ் ஹாஸ்டல் இருக்கு. (வரலாறு முக்கியம் ) அதிகம் வெளிமாநிலத்தை சேர்ந்தவங்க இருக்காங்க......அப்புறம் நிறைய நீக்ரோஸ் கூட...

நேசங்களுடன் 
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, March 26, 2012

குரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச்சி


குரங்கு அருவி மங்கி பால்ஸ்
இன்னிக்கு எங்காவது வெளில போலாம்னு முடிவு பண்ணிட்டு வீட்டுல இருந்து காலை டிபன்க்காக இட்லி சட்டினி லாம் எடுத்து  கிட்டு காலையில் 9 மணிக்கு பொள்ளாச்சி பக்கம் இருக்கிற மங்கி பால்ஸ் போனோம்...(பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இருக்கிறது) முதல்ல ஆழியார் ..அப்புறம் செக் போஸ்ட்.

(ஒருஆளுக்கு 15 ரூபாய் டிக்கெட் வாங்குறாங்க) .அப்புறம் மங்கி பால்ஸ்.போன உடன் நம்மை அந்த அருவிக்கு சொந்த காரங்க ளான குரங்குகள் நம்மை வரவேற்கின்றன.
 

உள்ளே போனால் தண்ணீர் வரத்து கம்மியா இருக்கு..அங்க இருக்கிற பாறைலாம் பல்லு இளிக்குது..எல்லாம் வறண்டு போய் இருக்கு...ஏதோ அருவி அப்படிங்கிற துக்காக கொஞ்சம் சன்னமா வருது...




ஓகே..முதல்ல சாப்பிட்டு விட்டு வருவோம் ன்னு நினைச்சு வால்பாறை ரூட்டுல கொஞ்ச தூரம் மேல போனோம்...இரண்டு ஹேர் பின் வளைவுகள் போய் அங்க ஒரு இடத்துல காரை நிறுத்தி விட்டு இருந்த ஒரு பாலம் மேல உட்கார்ந்து, எதிர்த்தாப்புல  தெரிஞ்ச ஆழியார் டேம் அணை தண்ணீரை பார்த்து கிட்டே கொண்டு போன இட்லி களை உள்ளே தள்ளுனோம்...


அப்புறம் அப்படி இப்படி போட்டோ எடுத்து கிட்டு மீண்டும் மங்கி பால்ஸ் வந்தோம்.மீண்டும் குரங்குகள் வரவேற்றன.குளிக்க ஆயத்தம் ஆகி பாறையோடு பாறையா வந்து கிட்டு இருக்கிற தண்ணீர்ல கை வச்சி குளிச்சோம்..பல்லி மாதிரி ஒட்டிகிட்டே குளிச்சோம்...தண்ணீர் குறைவா இருந்தாலும் குளிர்ச்சி ரொம்ப அதிகமா இருந்துச்சு...அங்க அடிச்ச வெயிலுக்கு இது ரொம்ப இதமா இருந்துச்சு...ஒரு மணி நேரம் பக்கம் அந்த இனிய குளிரினை அனுபவித்தோம்...எப்பவும் போல மக்கள் வந்து கொண்டே இருந்தனர்..தண்ணீர் வரத்து கம்மியா இருந்தது னால என்னவோ வந்தவங்க முகம் சுருங்கி போய் ஆச்சரியம் கலந்த பார்வையில் குளிக்கிறவங்களை பார்த்துட்டு போனாங்க.....

இந்த சீசனுக்கு தண்ணீர் ரொம்ப வரும்.. என்னமோ தெரியல..இப்படி வறண்டு போய் கிடக்கு...வால்பாறை போற ரூட்டுல இரண்டு பக்கமும் எப்பவும் பசுமையா இருக்கும்.இப்போ அது கூட இல்ல..ரொம்ப காஞ்சு போய் இருக்கு..மழை பெய்ய ஆரம்பித்து விட்டால் இங்கு எப்போதும் பசுமை இருக்கும் என்பது உறுதி..
இது ரொம்ப நல்ல இடம்...எப்பவும் பசுமையா இருக்கும்.இதை பார்த்தால் நம் மனசும் லேசாகும்..பக்கத்துல ஆழியார் டேம் இருக்கு..அங்க பார்க் லாம் இருக்கு..ஒரு நாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் இது...பொள்ளாச்சி யில் இருந்து வால்பாறை செல்லும் அனைத்து பஸ் களும் இங்கு செல்லும்.

பொள்ளாச்சி  யில் இருந்து ஆழியார் செல்லும் வழியில் நா.மூ .சுங்கம் இருக்கு அங்க ஒரு ஹோட்டல் இருக்கு தாஜ் பிரியாணி... பொள்ளாச்சி பக்கத்தில் 
வரும்போது  இந்த கடைக்கு போனேன்..கூட்டம் அள்ளுது...அப்புறம் பக்கத்துல ரெண்டு மூணு கடை புதுசா ஓபன் ஆகி இருக்கு...
அப்புறம் இதுக்கு எதிர்த்த ரோட்டுல டாஸ்மாக் இருக்கு.இன்னிக்கு தான் கவனிச்சேன்.....(வரலாறு முக்கியம்)

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Sunday, March 25, 2012

பவானி சாகர் அணை (Bavani Sagar Dam)


பவானி சாகர் அணை
கோவை பக்கத்துல எங்காவது நீர் இருக்கிற இடத்துக்கு போகணும் எனில் அதுக்கு பவானி சாகர் அணை ஓகே. ஒரு நாள் சுற்றுலாவிற்கு இது ஏத்த இடம். போய் சத்தியமங்கலம் மாவட்டத்தில் இருக்கிற இந்த அணைக்கு கோவையில் இருந்து காரமடை வழியாக செல்லலாம். கோவையில் இருந்து 70 கிலோ மீட்டர் இருக்கும்னு நினைக்கிறேன்..
காவிரியோட துணை நதி யான பவானி ஆறுக்கு குறுக்கே இந்த அணை கட்ட பட்டு ஈரோடு , கோபி, சத்தியமங்கலம் பாசனத்திற்கு பயன் படும் வகையில் இந்த அணை நீர் திறந்து விட படுகிறது.அப்புறம் அணையில் ஏகப்பட்ட மீன் களை பார்க்கலாம்









அப்புறம் இங்க எப்பவும் போல சனி ஞாயிறு கூட்டம் இருக்கும்.கோவை, சத்தி, ஈரோடு பக்கம் இருக்கிறவங்க அதிகம் இங்க கூடுவாங்க.
குழந்தைகள் பார்க் இருக்கு.குழந்தைகள் விளையாட நிறைய இடம் இருக்கு..அவங்களுக்கு நல்லா பொழுது போகும்.டைனோசர் லாம் இருக்குன்னா பார்த்துங்க...அப்புறம் ஒரே ஒரு அன்ன பறவை ..பாவம் ரொம்ப கஷ்ட பட்டு இருக்குன்னு நினைக்கிறேன்..



அணையின் மேல் மட்டம் வரைக்கும் போலாம்.மிகவும் ரம்மியமாக இருக்கும்.அப்புறம் இங்க திடீர் கடைகள் நிறைய இருக்கும் மீன் எண்ணையில் பொரிச்சது வச்சி இருப்பாங்க...தயவு செஞ்சு வாங்கி சாப்பிட்டு விடாதீங்க...அப்புறம் வாயிலேயும் வயித்துலேயும் போயிடும்...
ஒரு நாள் வர்றவங்க தானே அப்படின்னு மீன் சுத்தம் பண்ணாமல், செவுள் எடுக்காமல் மசாலா தடவி அப்படியே எண்ணையில் பொரிச்சு தருவாங்க...சாப்பீட்டீங்க....அவ்ளோதான்...புதுசா டேம் மீன் பிடிச்சு வச்சி இருப்பாங்க..அதை வேணா வாங்கி வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க...
அப்புறம் நம்ம ஜாதி காரங்களும் அதாங்க....குடிமகன்கள் அதிகமா வருவாங்க...ரொம்ப ஜாலியா மீன் சாப்பிட்டு கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமா இருப்பாங்க..அப்புறம் அதிகமா காதல் ஜோடிகள், மத்த ஜோடிகளை ஆங்காங்கே பார்க்கலாம்.இந்த பார்க் லாம் இவங்களுக்கு ரொம்ப வசதி போல...எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ...(ம்ம்...வயித்து எரிச்சல் தான்...). 

அப்புறம் அணையில் இருந்து வருகிற வாய்க்காலில் குளிக்கலாம்...நான் ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சேன்...ரொம்ப ஆழம் அதிகமாக இருக்கு....இங்க போக ரொம்ப செலவு வைக்காது..நாங்க கார்ல போனதுனால பஸ் ரூட் தெரியல..ஆனா பஸ் லாம் வருது...சனி ஞாயிறு கூட்டம் இருக்கும்..
ஒருநாள் எங்காவது போகாலாம் அப்படின்னு நினைத்தால்...இது கொஞ்சம் பெட்டர்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 21, 2012

கோவை - தியேட்டர்கள் (Theatres of kovai)

கோவையில் உள்ள தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை

கோவை ஒரு தொழில் நகரம் என்பதினால் என்னவோ இங்கு பொழுது போக்க கூடிய அம்சங்கள் எதுவும் அதிகம் இல்லை.பார்க் அப்படின்னு சொன்னா வ ஊசி பார்க், காந்தி பார்க் இதுதான்... அப்புறம் கோவில் ன்னு எடுத்துகிட்டா மருதமலை கோவில் , அனுவாவி சுப்பிரமணியர் கோவில், ஈச்சனாரி கோவில், பேரூர் கோவில், போன்ற இடங்கள் தான் இருக்கிறது.(நம்ம ஊர்  இளசு களுக்கு என்ன பக்தியா வேணும் ...கூட்டிட்டு போகிற தெய்வத்த கும்பிடணுமா... இல்ல அங்க இருக்கிற தெய்வத்த கும்பிடணுமா ....) அப்புறம் ரெண்டு குளம் இருக்கு போட்டிங் போற மாதிரி...சிங்காநல்லூர், அப்புறம் சூலூர்...சிங்கா நல்லூர்ல போட்டிங் நிறுத்தி யாச்சு. ஆனாலும் அங்க ஏதாவது ரெண்டு இளசு கள் கடலை போட்டுட்டு தான்  இருக்கும்... .சூலூர்ல மட்டும் சனி ஞாயிறு நடக்குது. ரொம்ப தூரம் போகணும்னா....சிறுவாணி, மங்கி பால்ஸ், ஆழியாறு, பொள்ளாச்சி, திருமூர்த்தி அணை, உடுமலை, ஆனைகட்டி இப்படி...இந்த பக்கம் போகணும்னா....கல்லாறு, குன்னூர் , ஊட்டி இப்படி....இங்கெல்லாம் போனால் சீக்கிரம் வீடோ ஹாஸ்டலோ திரும்ப முடியாது ...கிடைக்கிற நேரத்துல இருக்கிறத என்ஜாய் பண்ணனும் அப்படிங்கிறதால நம்ம ஊர்  இளசுகளுக்கு தியேட்டர் பக்கம் தான் ஏதோ கொஞ்சம் ஆறுதல் கிடைக்குது.

அதனால் கோவையில் இருக்கிற தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை..

கே ஜி காம்ப்ளக்ஸ்
இந்த தியேட்டர் கோவை நீதிமன்றம் அருகில் இருக்கிறது.மொத்தம் 4 தியேட்டர் ராகம் தானம் பல்லவி, அனுபல்லவி என இருக்கு. ரொம்ப பேமஸ் ஆன தியேட்டர் இப்போ ரிலையன்ஸ் க்ரூப் பிக் சினிமாஸ் தத்து எடுத்து இருக்கிறது.இதன் அருகிலேயே கே ஜி மருத்துவமனை இருக்கிறது (படம் ரொம்ப மொக்கையா இருந்து யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா இங்கயே அட்மிட் பண்ணிகிடலாம் ..)


கற்பகம் காம்ப்ளக்ஸ்

காந்திபுரம் 100 அடி ரோட்டில் இருக்கிறது.இங்கு 3 தியேட்டர்கள் இருக்கு.கங்கா, யமுனா, காவேரி என இருக்கிறது.இங்க கேண்டீன் ல கொஞ்சம் விலை அதிகம்.
 
செந்தில் குமரன் காம்ப்ளக்ஸ் 

காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இது இருக்கிறது.செந்தில், குமரன் என இரண்டு தியேட்டர் இருக்கிறது.கோவையில் ISO வாங்கின முதல் தியேட்டர். 

கவிதா தியேட்டர்
இதுவும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது.இதுக்கு பக்கத்திலேயே நம்ம டாஸ்மாக் இருக்கு.

பாபா காம்ப்ளக்ஸ்
பூ மார்க்கெட் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அர்ச்சனா தர்சனா,என இரண்டு தியேட்டர்கள். 


VR காம்ப்ளக்ஸ்
வடகோவை மேம்பாலம் அருகே இந்த தியேட்டர் இருக்கிறது.சென்ட்ரல் , கனக தாரா என இரண்டு தியேட்டர்கள் இருக்கிறது.ரொம்ப நாள் ஓடாம இருந்து இப்போ புதுபிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி தியேட்டர்
இந்த தியேட்டரும் வட கோவையில் தான் இருக்கிறது.அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே வெளி யாகும்.இப்போ இந்த தியேட்டர் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.

சண்முகா தியேட்டர்
இந்த தியேட்டரும் பூ மார்க்கெட் அருகில் தான் இருக்கிறது.அதிகமான மலையாள, ஆங்கில பிட்டு படங்கள் மட்டுமே வெளி யாகும்.என்ன அதிசயம் ன்னு தெரியல..இப்போ எம் ஜி யார் படம் போட்டு இருக்காங்க

ஜி பி தியேட்டர்
கோவை டு சத்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது. பிரீதம் , கீதம் என இரண்டு தியேட்டர் இருக்கிறது அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே தமிழ் டப்பிங் கில் வெளி யாகும்.அப்பப்ப பிட்டு படம் வரும்

கே என் எம் காம்ப்ளக்ஸ்
கோவை ரயில் நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.சாந்தி சாரதா என இரண்டு தியேட்டர் இருக்கிறது. இதன் அருகில் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறது
.
கர்னாடிக் தியேட்டர்
கோவை கோனியம்மன் கோவில் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அதிகம் ஹிந்தி படங்கள் மட்டுமே வெளி யாகும்.

ராயல் தியேட்டர்
இதுவும் ரயில் நிலையம் அருகில் தான் இருக்கிறது.மலையாள புது ரிலீஸ் படங்கள் அதிகம் வெளியாகும்.

நாஸ் தியேட்டர்
டவுன் ஹாலிலிருந்து உக்கடம் செல்லும் வழியில் இது இருக்கிறது.ரொம்ப பழைய படங்கள் செகண்ட் ரிலீஸ் படங்கள் வெளியாகும்.

டிலைட் தியேட்டர்
டவுன் ஹால் அருகில் இருக்கிற வெரைட்டி ஹால் ரோட்டில் இது இருக்கிறது.தமிழ் திரைப்பட முன்னோடி வின்சென்ட் அவர்களின் தியேட்டர் இது.இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் தியேட்டர் ஆக இருக்கிறது.அதிகம் எம்ஜியார் சிவாஜி பழைய படங்கள் மட்டுமே வெளியாகும்.

 
சமீபத்தில் ஆரம்பிச்ச ஷாப்பிங் மால் பரூக் பீல்ட்ஸ் ல மொத்தம் 6 அரங்கு கள் இருக்கு.இதன் வரவு கோவைக்கு புதிய அடையாளத்தை கொடுத்திருக்கு எனலாம். (இளசுகளுக்கு ஏற்ற இடம்....)


மஹாராஜா மல்டிபிலக்ஸ்
நீலம்பூர் அருகில் மஹாராஜா தீம் பார்க் அருகிலே இது அமைந்து இருக்கு. இங்கேயும் இரண்டு அரங்குகள் இருக்கிறது.

இப்போ பீளமேடு அருகிலே ஒரு ஷாப்பிங் கட்டி கொண்டு இருக்கிறார்கள்.அங்கேயும் அரங்குகள் வர இருக்கிறது.


நகரத்திற்கு வெளியே கவுண்டம்பாளையம், துடியலூர், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, பேரூர், வேலாண்டிபாளையம் இப்படி ஊருக்கு வெளியே  நிறைய தியேட்டர்கள் இருக்கின்றன..

வருத்தம்: கடந்த சில வருடங்களில் நிறைய தியேட்டர்கள் மூடப் பட்டு விட்டன (கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்) ...இது இன்னும் தொடரும் என்பது தான் உண்மை...

கிசுகிசு : எப்படியோ இப்போதைக்கு இருக்கிற போட்டோ வச்சி ஒரு பதிவை தேத்திட்டேன்..இனி மத்த தியேட்டர் களை போட்டோ எடுத்து அப்லோட் பண்ணனும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, March 19, 2012

இந்த வாரம் -பல் வலி வாரம்.....


பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் அப்படின்னு நினைக்காதீங்க மக்களே .....( தேங்க்ஸ் விஜய்காந்த்) சாரி பதிவர்களே.....

பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது.கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.பல்லு தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம்.பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம் பற்குழி போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள பாதுகாக்கப்படும்.


இப்போ அதுக்கு எவ்வளவோ ட்ரீட்மென்ட் வந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட அனுபவம் பத்தி கொஞ்ச நேரம்......

கடந்த ஒரு வாரமா பல் வலி ஏற்பட்ட காரணத்தினால் நம்ம வீட்டு பக்கம் இருக்கிற டென்டல் கிளினிக் போய் டாக்டரை பார்த்தேன்.எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் கடைவாய் பல் ஒன்று எக்கு தப்பா முளைத்து பக்கத்து கடைவாய் பல்லை மோதி இருந்து இருக்கிறது. பக்கத்து பல்லும சொத்தை ஆகி இருக்கிறது, அதனால் ஏற்பட்ட வலி தான் என்றெண்ணி அந்த பல்லை பிடுங்க சொன்னேன். இப்போதைக்கு இந்த பல்லை பிடுங்கி ஸ்டிச்சிங் போட்டு இது ஆறின வுடன் அந்த பல்லுக்கு ட்ரீட்மென்ட் எடுத்து கொள்ளலாம் என்றார்கள்.
ஊசிலாம் போட்டு கொஞ்ச நேரம் கழித்து கத்தி கபடா இருக்கிற பெட்டியை கொண்டு வச்சு வாயை திறக்க சொல்லி பிடுங்க ஆரம்பிச்சாங்க..நான் கண்ணுல தண்ணீர் தெறிக்குதுன்னு கண்ணை மூடிகிட்டேன்...என்னை கண்ணை திறக்க சொன்னாங்க...ஓபன் பண்ணி பார்த்தால் என் வாய் ஒரு ஸ்டாண்ட் போல...ஏகப்பட்ட கருவிகளை வச்சிஇருக்காங்க.நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....என்னென்னமோ பண்ணி முடியல. கடைவாய் பல் ரொம்ப ஸ்ட்ராங் போல. தாடை லாம் வலி.ரொம்ப நேரம் போராட்டம் பண்ணி கட் பண்ணினாங்க... அப்பாடா...முடியல... அப்புறம் இடுப்புல வலி ஊசி போட்டு அனுப்பினார்கள் கூடவே மருந்தும் மாத்திரையும்.அப்புறம் பிடிங்கின பல்லையும்....

ஒரு வாரம் கழித்து மீண்டும் வலி எடுக்கவே மறுபடியும் சென்றேன்.பக்கத்து பல் மோதியதால் கேப் விழுந்து சொத்தை வந்ததினால் வலி. அந்த பல்லையும் பிடுங்க சொன்னேன். ..அதனால அதற்கு டாக்டர் ஒரே இடத்தில் அதுவும் கடைவாய் பற்கள இரண்டும் எடுக்க கூடாது..(காரணம்...கன்னத்தில் டொக்கு விழுந்திடும், உணவுகள் அரைக்க மேல் பல்லுடன் கீழ் பல் பட வேணுமாம்..) என்றும் ரூட் கெனால் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும் என்றார்கள். (பல் பிடுங்க 100 ரூபாய் தான்...ஆனா ROOT CANAL TREATMENT க்கு 2000. என்ன பண்றது நம்ம நேரம் இப்படி இருக்கே..) சரின்னு சொல்லவே அவங்க வேலையை ஆரம்பித்தார்கள்.

முதலில் மரத்து போகும் ஊசியை கடைவாய் உள்ளே  குத்தி னார்கள்.பாதி கன்னம் மற்றும் பாதி உதடு மரத்து போய் விட்டது.அதுக்கப்புறம் வாயை பொளந்தவன் தான் சும்மா அரை மணி நேரம்.....ஓ ன்னு... அவங்க பாட்டுக்கு பல்லில் ஓட்டை போட ஆரம்பித்தாங்க..ஓட்டை போட்டவுடன் கைப்பிடி உள்ள ஊசிகளை சைஸ் வாரியா எடுத்து அந்த ஓட்டை யில் விட்டு துழாவி துழாவி உள்ளே பாதிக்கப்பட்டு இருக்கிற திசு களை எடுக்க ஆரம்பித்தார்.இப்படியே அரை மணிநேரம் வாயை பொளந்து கொண்டே இருந்தேன்.எல்லாம் சுத்தம் செய்த வுடன் அதுக்கு அப்புறம் நிறைய ஊசிகளை அந்த ஓட்டையில் விட்டு அடைத்து கிரைண்டிங் செய்ய ஆரம்பித்தார்.

அப்புறம் அந்த பல் உடையாமல் இருக்க அதற்கு கேப் போடணும் என்று சொல்லி இரண்டு வித கேப் களை காட்டினார்.மெடல் கேப், செராமிக் கேப் என இரண்டு வகை..மெடல் கேப் விலை குறைவு கருப்பு கலரில் இருக்கும். செராமிக் கேப் விலை அதிகம் பல்லின் நிறத்தில் இருக்கும். (கருப்பு தான்  போட சொன்னேன் ஹி ஹி அதுதானே விலை கம்மி யாச்சே...அதுக்கு டாக்டரு உள்ளே கருப்பா தெரியுமுன்னு சொல்ல///எப்பவும் நான் என்ன வாயை தொறந்து கிட்டா போக போறேன் எல்லாரும் பார்க்கிற மாதிரி அப்படின்னு சொல்ல... அப்படி இப்படி சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க...எப்படியோ அவங்க கிளினிக்க்கு வாடகை கிடைச்சிடுச்சு.....) சரின்னு செராமிக் போட சொன்னேன்.


அதுக்கு அப்புறம் பல்லின் அளவு எடுக்கணும் என்று சொல்லி ஒரு மஞ்ச கலர் பேஸ்ட் ஐ பல் செட் மாதிரி இருக்கிற ஒரு கருவியில் அமுக்கி அன் பல்லின் மேல் வைத்து அச்சு எடுத்தாரு, நல்ல பைனாப்பிள் சுவையுடன் இருக்குதேன்னு அதை டேஸ்ட் பண்ணங்குள்ள எடுத்து விட்டார்.... அப்புறம் மேல் , கீழ் பற்களின் அளவை எடுத்து கொண்டார்...இனி கேப் செய்து வந்தவுடன் அந்த பல்லில் மாட்ட வேணும்...(அடுத்த பதிவுலாம் இல்லை)


எப்படியோ பல்லை பிடிங்கி யாச்சு.கிட்ட தட்ட 7000 பக்கம் வந்து விட்டது.பல் பிடுங்க 2000 ரூட் கெனால் 2000 செராமிக் கேப் 2000 அப்புறம் மருந்து மாத்திரைகள் என 850 ஆகி விட்டது....
இரண்டு வருடம் முன்பே வேறொரு மருத்துவ மனையில் பல் சுத்தம் செய்யும் போது சொன்னார்கள் ,அப்பவே அந்த பல்லை பிடிங்கி இருந்தால் இப்போ  இவ்ளோ வலியும் வேதனையும் அப்புறம் முக்கியமா விலையும் இருந்து இருக்காது. லேட்டாதான் உறைக்குது என்ன பண்றது.....எல்லாம் நம்ம நேரம்....

அதுக்கு தான் சொல்றேன்....மீண்டும் முதல் வரிக்கு வாங்க.....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, March 17, 2012

சண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை - 3


    கோவையில் எத்தனையோ மார்க்கெட் கள் இருக்கு.உக்கடம் மீன் மார்க்கெட் சாய்பாபா கோவில் MGR மார்க்கெட், புது பஸ்ஸ்டாண்ட், அண்ணா காய்கறி மார்க்கெட், பூமார்க்கெட் அப்புறம் பழைய இரும்பு மார்க்கெட் இது மாதிரி நிறைய.....இத விட ஒரு மார்க்கெட் ரொம்ப பேமஸ்.....அது.....
சண்டே மார்க்கெட் ( SUNDAY MARKET ) ...(cheep and Best)

 
கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோடு பார்க் கேட் சிக்னல் அருகில் இருக்கு...ஒரு நாள் மட்டுமே பல லட்சங்களில் / கோடிகளில் இங்கு வியாபாரம் சக்கை போடு போடும்.எந்த ஒரு படோபடமும், விளம்பரங்களோ இல்லாத ஏரியா...அனைத்து வகை துணிகளின் சங்கமம் இங்குதான்.அதிகம் ரெடிமேட் வகை துணிகள் இங்கு கிடைக்கும்.அதிகமா திருப்பூர் டீ சர்ட் வகைகளின் வரத்து இருக்கும்.கோவையில் உள்ள பிரபலமான கடைகளில் இருக்கின்ற விலை அதிகமான துணிகள் கூட இங்கு மிக சல்லிசாக கிடைக்கும். அனைத்து துணிகளின் விலைகள் மிக ரொம்ப குறைவாக கட்டு படி ஆகிற விலையில் கிடைக்கும்.
 
   
 கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன.ஏழை பாழைகள், நடுத்தர வர்க்க மக்கள், முக்கியமா வேறு மாநில ஆட்கள் இவர்களின் துணி தேவைக்கு சொர்க்க புரியாக இந்த மார்க்கெட் இருக்கிறது.விண்டோ ஷாப்பிங் செய்யும் மேல் தட்டு மக்களின் வருகையும் அதிகமாய் இருக்கும்


 



2 ரூபாய் கர்சீப் முதல் 1000 ரூபாய் வரைக்கும் இங்கு  கிடைக்கும்.சனி மற்றும் ஞாயிறு காலையில் இருந்தே கூட்டம் மொய்க்க ஆரம்பித்து விடும்.தி நகர் ரங்கநாதன் தெரு போல கூட்டம் இல்லைனாலும் இங்கு அளவுக்கு அதிகமாகவே மக்கள் கூட்டம் மொய்க்கும்.சிறிய பரப்பளவு தான் இருக்கும்...அதற்குள் வகை வகையாய் துணி ரகங்கள்.அப்புறம் இந்த இரண்டு நாட்களில் மட்டும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பார்க் கேட் வரையிலும் இரு புறமும் கடைகள் நிறைந்து இருக்கும்.

மக்களின் வருகை சாரை சாரையா இருக்கும்.இதுல நம்ம காதல் பட்சிகளும் பொழுது போக்க இடம் இல்லாமல் பார்க் சுத்தி பார்த்துட்டு அப்படியே சும்மா டைம் பாஸுக்கு வருவதும் உண்டு. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஷாப்பிங் அனுபவத்தை செலவில்லாமல் இது கொடுக்கிறது.

பேரம் பேசி வாங்கணும் இல்லை எனில் அதிக விலை கொடுக்க நேரிடும்..அவங்களே விலை ஏத்தி தான் சொல்லுவாங்க..நாம தான் அடம பிடிச்சு விலையை குறைச்சு கேட்டு வாங்கணும்.மொத்தத்தில் சண்டே மார்க்கெட் சீப் அண்ட் பெஸ்ட்....சனி ஞாயிறு களில் இங்கு செல்லலாம்.
பக்கத்திலேயே நேரு ஸ்டேடியம், வ ஊ சி பார்க், மத்திய சிறை சாலை யும் இருக்கு.
இதையும் கொஞ்சம் பாருங்க


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...