Thursday, March 1, 2012

விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....

 விஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....
எதேச்சையாக இன்னிக்கு டிவி பக்கம் ஒதுங்குனதில் சூர்யா நடத்துகிற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது..பார்த்தவுடன் ஏன்டா பார்த்தோம் என்றாகி விட்டது.கேள்வியா அது...ரொம்ப கேனத்தனமா.....(இதை விட பொருத்தமான வார்த்தை இல்லை ).இத பார்த்தோம் எனில் இருக்கிற கேள்வி ஞானம் , பொது அறிவு எல்லாம் போய் தொலைந்து விடும் என்று நினைக்கிறேன்.இதுக்கா இம்புட்டு விளம்பரம்...இத நடத்த சூர்யா வேற....எப்படித்தான் இவரோட அகரம் பவுண்டேசன்ல புள்ளைங்க எல்லாம் படிக்குதோ...அப்படின்னு மக்கள் நினைத்து விட மாட்டார்கள் ....? எப்படியோ சம்பாதிக்கணும் அப்படின்னு களத்துல இறங்கிடுச்சு இந்த விஜய் டிவி.அப்புறம் என்ன பண்றது...மக்களை கவர வேற வழி....சூர்யா ஓகே. கேள்வி ரொம்ப மட்டமா இருந்தாதான் TRP ரேட் ஏறும்...ஏற்கனவே SMS  அனுப்பி ஏகப்பட்ட கோடிகளை சம்பாதித்து விட்டது .இனி வருவது எல்லாம் லாபமே....என்ன பண்றது...ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.





 இன்னும் என்னென்ன வெல்லாம் கேட்பாங்களோ...
நயனோட கடைசி காதலன் யார் ..?.
A )சிம்பு B ) ஆர்யா c ) பிரபு தேவா D ) விஜய் 
விஜய் யின் துப்பாக்கி யில் உள்ள தோட்டா எத்தனை.?
A ) 6            B ) 4                c ) 3              D )      ௨
அம்புலி எந்த வகை படம்
A ) 5D           B ) 4 D           C )   3 D     D )      7D

இதை விட மோசமா இன்னொண்ணு இருக்கு ..ராஜ் டிவி
அய்யா சாமிகளா....ஆளை விடுங்கப்பா/////////

நேசங்களுடன்
ஜீவானந்தம் 

7 comments:

  1. என்ன பண்றது...நாமெல்லாம் முட்டாளா இருக்கிறோம்...

    ReplyDelete
  2. லொள்ளு சபா டீம் தான் கேள்வி தயார் பன்றாங்களோ?

    ReplyDelete
  3. கோவை நேரம் பிளாக்குல அசைவ போஸ்ட் எத்தனை?சைவ போஸ்ட் எத்தனைன்னு கேட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை

    ReplyDelete
  4. இப்பநான் பெங்களூர்லே இருக்கின்றேன்.ஒரு அமெரிக்கத் தமிழரோடு பேசினேன். அவர் நம்மத் தமிழ்நாட்டு மக்கள் ரசனையைப் பற்றிக் கூறினது எனக்கு மிக்க தலைக்குனிவை ஏற்படுத்தியது. தமிழ்ச் சேனல்களின் முன்னோடி ’விஜய் டிவி’ என்ற நினைப்பில் மண் அள்ளிப் போட்டது ஒரு கோடி நிகழ்ச்சி.

    ReplyDelete
  5. "தமிழ்ச் சேனல்களின் முன்னோடி ’விஜய் டிவி’ " என்று யார் சொன்னது?

    ReplyDelete
  6. நானும் அந்த நிகழ்சிய பார்த்தன் படு மோசம்தான்........... tamilansathya.blogspot.com

    ReplyDelete
  7. நான் கூட தவறவிடுகிறேன் என்று எண்ணினேன், உண்மையில் தப்பிச்சுட்டேன்..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....