Thursday, July 12, 2012

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் - ஆதரவற்றோர் இல்லம்


பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம்
கோவையில் கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் செல்லும் வழியில் பதுவம்பள்ளி இருக்கிறது.இந்த ஊரில் இருந்து வலது பக்கம் செல்லும் ரோட்டில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நல்லகவுண்டன் பாளையம் என்கிற ஊரில் இந்த இல்லம் அமைந்து இருக்கிறது.
ஈரநெஞ்சம் அமைப்பினர் நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமிற்கு சென்றிருந்ததால் இந்த இல்லம் பற்றி அறிய நேர்ந்தது. ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களை காக்கும் ஒரு இல்லம். உள்ளே நுழைந்ததும்.....நிறைய மரங்கள் சுற்றுப் புறமெங்கும்.....நல்ல காற்றோட்ட வசதியுடன் பெரும் அமைதி தவழ்கிறது.ஒரே சீருடையில் உள்ள அனைத்து குழந்தைகளும் நம்மை கண்டதும் கை எடுத்து கும்பிட்டுச் சொல்கிற ஒரு வார்த்தை ‘’வணக்கம் ஜீவ ஆத்மா” இவர்களின் இந்த செய்கையை காணும் போது நம்மை அறியாமல் நமக்குள் ஓர் உணர்வு ஏற்படுகிறது.நாமும் பதில் வணக்கமாய் கும்பிட்டோம்.
இந்த இல்லம் குருஜி எனப்படுகிற தொண்டுள்ளம் கொண்ட ஒரு நபரால் நடத்தப்படுகிறது.மற்றும் இந்த இல்லத்திற்கு நிதி ஆதாரம் கருணையுடன் செயல்படுகிற தன்னார்வமிக்க தொண்டர்களால் செயல்படுத்தப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர்களும், அறுபதுக்கும் மேற்பட்ட முதியவர்களும், ஆதரவற்று இருக்கிற இவர்களை கவனித்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் இங்கேயே தங்கி இருக்கின்றனர்.இந்த இல்லத்திலேயே ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் இருக்கிறது. மேற்கொண்டு படிப்பவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர்.ஒருநாள் இவர்களுடன் இருந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ எனக்கு மன திருப்தி ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டதில் பெரும் மகிழ்ச்சியே.
                             (நாளைய கலெக்டர், ஆசிரியர்,என்ஜினீயர்)


இவர்களுடன் பேசியதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆசிரியர், கலெக்டர், போலீஸ் என ஒவ்வொருவரும் தனித்தனியாய் வேறுபடுகின்றனர்.ஒவ்வொரு முறையும் நம்மை ஆத்மா ஆத்மா என்று அழைத்து அவர்களுடன் நம்மை ஒன்ற செய்கின்றனர்.இந்த சேவா இல்லத்தில் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஆற்றியுள்ள பங்கு எண்ணிலடங்காதவை. குழந்தைகளுக்கு கல்விச்செலவு, பொழுது போக்கு நிகழ்வு, மருத்துவ நிகழ்வு, இலவச உணவு என நிறைய...
இவர்களை மாதிரியே இந்த இல்லத்தைப் பற்றி கேள்விப்படுகிற நிறைய பேர் உதவி செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

அதுமாதிரி உங்களோட குடும்ப நிகழ்வுகளை ஒருநாள் இங்கு நடத்துங்கள்.பிறந்த நாள் விழாவோ, கல்யாண நாளோ...இவர்களுடன் செலவு செய்யுங்கள்.நீங்கள் உன்னதமானவர்கள்.

முகவரி
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் 
நல்லகவுண்டன்பாளையம்
பதுவம்பள்ளி  அஞ்சல் 
கருமத்தம்பட்டி - அன்னூர் வழி
கோவை. 

Ph :9360622099; 9360622033,

நேசங்களுடன்
ஜீவானந்தம்

12 comments:

 1. நல்லதொரு பகிர்வு ஜீவா, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் மென்மேலும் தழைத்தோங்கட்டும்

  ReplyDelete
 2. மிக நல்ல விஷயம் ஜீவா. இத்தகைய இல்லங்களை ஆதரிப்பதும் வருடம் ஒரு முறை இங்கு சென்று உணவளித்து வருவதும் நல்ல விஷயம். ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்

  ReplyDelete
 3. மாப்ள நல்ல பதிவு...!கண்டிப்பா விஷேச நாட்களை நாம் இங்கு கழிக்கலாம்! தீவாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது....

  ReplyDelete
 4. அருமையான பகிர்வு மாப்ளே ஏதாவது பண்ணனும்

  ReplyDelete
 5. அருமையான அறிமுகம்! எங்கள் பகுதியிலும் இது மாதிரி தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஆஸ்ரமங்கள் உள்ளன. எங்கள் ஊரிலும் எயிட்ஸ் பாதித்த சிறுவர்களுக்கான காப்பகம் ஒன்று உள்ளது. இதைபடித்ததும் அந்த காப்பகம் பற்றி எழுத தோன்றுகிறது! அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை!

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 7. நல்லா மனிதர்

  நல்லா முயற்சி எல்லாம் வளம் பெற்று வாழ்கா வளமுடன் குழந்தைகள் ஒரு தெய்வம் உடன் வாழும் வாழ்க்கை ஒரு தவம்

  ReplyDelete
 8. இனிய நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி 🙏 என்னால் முடிந்ததை நானும் முயலுவேன் பிறரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....