அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்..
இந்த கடை காந்திபுரம் நூறடி ரோட்டில் இருக்கிறது கல்யாண் சில்க்ஸ் எதிரில் ஆறாவது வீதியின் நுழைவில்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்..
------------------------------------------------------------
இந்த வருடத்தின் முதல் பதிவை கோவை மெஸ் வழியாக கொஞ்சம் அசைவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.அப்பொழுது தான் வருடம் முழுக்க நல்லா புல் கட்டு கட்டலாம்.....என நினைக்கிறேன்...
------------------------------------------------------------
கோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை
இந்த கடை பகலில் மீன் வியாபாரமாகவும், சாயந்திரம் முதல் இரவு 10 மணி வரை ஒரு மினி ஹோட்டலாகவும் நடக்கிறது.மதியம் மீன் குழம்பு சாப்பாடு என தனி ஹோட்டலாக இந்த கடையின் பின்புறம் நடக்கிறது..
சாயந்திரம் நேரம் இந்த வழியாக செல்லும் போது அடிக்கும் மீன் வாசனை இந்த கடைக்கு நம்மை அழைத்து செல்லும்.ஏற்கனவே நிறைய தடவை இங்கு சாப்பிட்டு இருக்கிறேன்.
அனைத்து வித மீன்களும் மசாலாவுடன் ஊறிக் கொண்டு நம்மை வாங்க சொல்லி தூண்டும்.கூடவே விலைப்பட்டியலுடன்...
வரிசையா இருக்கிற மீனை வேடிக்கை பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் விலையையும் பார்த்துட்டு எது நல்ல பெரிய மீனா இருக்கோ அதை ஆர்டர் பண்ணினோம்..அதுக்கு முன்னாடி நண்டு சூப்.....சுட..சுட...அதை ஊதி ஊதி குடிப்பதில் தான் எத்தனை சுகம்....சின்ன கப் தான்...ஆனா விலை அதிகம் பண்ணிட்டாங்க...
இந்த கடையின் ஸ்பெசல் என்னவென்றால் நண்டு சூப்....மிக டேஸ்டாக இருக்கும்..தனியாக நண்டு வறுவலும் கிடைக்கும்...கடைக்கு நுழையும் முன்பே ஒரு பக்கம் பாத்திரத்தில் கொதித்துக்கொண்டு இருக்கும் சூப்..அடுத்த பக்கத்தில் எண்ணையில் நீந்தி கொண்டிருக்கும் மீன்கள்....

கடை ரொம்ப சின்னது
தான்...ஆனா விற்பனை அமோகம்..எப்பவும் கூட்டம் இருந்துகிட்டே இருக்கும்.ஆர்டர்
பண்ணிட்டு உட்கார்ந்தா சுடச்சுட நம்ம இடத்திற்கு வரும்..மீனுக்கு தொட்டுக்கொள்ள
கொத்தமல்லி சட்னி வைப்பாங்க..அது செம டேஸ்டா இருக்கும்...
இந்த கடை காந்திபுரம் நூறடி ரோட்டில் இருக்கிறது கல்யாண் சில்க்ஸ் எதிரில் ஆறாவது வீதியின் நுழைவில்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோ. நல்ல நாள் அதுவுமா? கவுச்சி வாடையா?(பொறாமைதான் காரணம். இன்னிக்கு எங்க பாட்டிக்கு டிவசம் வந்து தொலைச்சதால எங்க வீட்டுல சைவம்தான் :-(
ReplyDeleteயக்கோவ்...ஏன்..ஏன்..இப்படி..நல்ல நாள் அதுவுமா அசைவம் சாப்பிடாம.....
Delete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நன்றி...வாழ்த்துக்கள்...
Deleteஜீவா,
ReplyDeleteஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நல்லா காரம்சாரமா,மசலா மணக்குது பதிவு ...ஆனா மீன் வறுவல் விலை எல்லாம் கூட இருக்கு.
கோவையில் கடல்மீன்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்படுவதால் விலை கூட இருக்கு போல.
வாங்க வவ்வால்...உங்க பின்னூட்டம் ரொம்ப குறைவா இருக்கு.,..ஏன் ?
Deleteகோவை வரும்போது கட்டாயம் இந்த கடைக்கு போகனும்போல இருக்கு உங்கள் பதிவால்.!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாங்க...
Deleteவருகை தந்த அனைவருக்கும் நன்றி..இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅப்படியே எங்க கடைக்கும் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் செய்திருக்கலாமில்ல?
ReplyDeleteரெகுலர் கஷ்டமர் போல ..
வரும்போது கொஞ்சம் நம்பளையும் கூப்பிடுங்க...எப்பவும் போல நீங்களே பணம் கொடுத்துடுங்க..:)
உங்க கடைக்கு எதுத்தாப்லயே இருக்கு..ஏன் போறது இல்ல..என்னை மாதிரி எவனாது சிக்குவான்ணு வெயிட் பண்றீங்களா...?
Deleteகட்டுரை அருமை ஜீவா.
ReplyDeleteவித்தியாசமான கடைதான். மல்லு கடையோ? ஜோஸ் ஸ்பெல்லிங் கேரளா மாதிரி தெரியலையே!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
மல்லு அல்ல..தூத்துக்குடி அண்ணாச்சி...
Deletesuperb.
ReplyDeletetrichy roadil, volumbus arugil jose meen kadaiyun innoru branch ulladhu.
ஓ..தகவலுக்கு நன்றி....
Delete