Monday, April 1, 2013

சமையல் - அசைவம் - மீன் குழம்பு

வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் மீன் குழம்பு வைத்தேன்..செம டேஸ்ட்.சாப்பாட்டிற்கு இது செம மேட்ச்.அதுவும் மீன் குழம்பு வச்சி அடுத்த நாள் சாப்பிட்டா இன்னும் செம டேஸ்ட்....

நித்தம் நித்தம் நெல்லுஞ்சோறு....
நெய் மணக்கும் கத்தரிக்காய்..
நேத்து வச்ச மீன் குழம்பு.....
என்னை இழுக்குதய்யா......

ஊளி மீன், மத்தி மீன் இரண்டும் வாங்கினேன்...எந்த மீன் வாங்கினாலும் செய்முறை ஒண்ணுதான்..
செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
மீன் - 1 கிலோ
சி - வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது
பூண்டு - 20 பல்
புளி - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி - நறுக்கியது கொஞ்சம்
பட்டை, கிராம்பு, - கொஞ்சம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு

செய்முறை :
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.( மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் )
ஒரு பாத்திரத்தில் புளி கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும்.அதில் தக்காளியையும் அரைத்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு , கறிவேப்பிலை, வெந்தயம் போட்டு வதக்கவேண்டும்.பின் அரிந்த பூண்டு, நறுக்கிய இஞ்சி போட்டு வதக்க வேண்டும்.பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
பின் கரைத்து வைத்திருக்கிற புளி தக்காளி கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.அதில் மஞ்சள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான  உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பின் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்தவுடன் அலசி வைத்துள்ள மீனை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து நிறுத்திவிடவும்.
பின் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான மீன் குழம்பு தயார்...
(அதுக்கு முன்னாடி மறக்காம அடுப்பை பத்தவச்சிடுங்க...இல்லேனா ஆரூர்மூனா கேள்வி கேட்பாரு...)

தேங்காய் சேர்த்தால் குழம்பு கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.தேங்காய் இல்லாமலும் செய்யலாம்.மீன் மசாலாப்பொடி இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்..இன்னும் சுவை அதிகமாகும்..
மீன் குழம்பு இருக்கிற பாத்திரத்தினை மூட ஏதாவது துணி இருந்தால் பயன்படுத்தலாம்.அப்போதுதான் ஆவியாகும் நீரானது குழம்பில் சேராமல் இருக்கும்.

கிசுகிசு : ஞாயிறு அன்னிக்கு எப்பவும் விசேசம் தான்...காலையில் எட்டு எட்டரை மணிக்குள் குடல் வறுவல் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்....

சமையல் குடல் குழம்பு 
சமையல் - இரத்தப்பொரியல்
 

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


13 comments:

  1. பார்த்தாலே சாப்பிடணும் போலத் தோணுதே...

    ReplyDelete
  2. அப்பா எவளவு பூண்டு..!! ஆண்களின் சமையல்கள் அதிக பொருட்செலவில்.
    குழம்பைக் கண்ணாலே காட்டவில்லை. :(

    ReplyDelete
    Replies
    1. என்னது,,,,குழம்பு கண்ணுல காட்டலையா.....ஒரு பாத்திரத்தில் (கடைசி போட்டோ ) இருக்குமே...கொஞ்சமா....

      Delete
  3. படங்கள், பதிவு மட்டுமல்ல, மீன் குழம்பின் சுவையும் அருமை.. ரசித்து ருசித்து சாப்பிட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆவி...நீ செஞ்ச குடல் குழம்பு பத்தி எப்போ எழுதுவ...

      Delete
  4. செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

    அடுத்த நாள் இட்லி அல்லது தோசையோடு ஒரு கட்டு கட்டலாம்....!

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ்...அடுத்த நாள் பழைய சாதத்திற்கு சாப்பிட்டேன்...இன்னும் செம டேஸ்ட்..

      Delete
  5. உங்க சமயல் நல்லா இருக்கு நன்றி

    ReplyDelete
  6. தயவு செய்து இது போல் மொக்கையாக போட வேண்டாம் படிப்பவர்கள் மனது கஷ்ட படும்

    ReplyDelete
  7. very nice super



    nsk

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....