Thursday, December 6, 2012

சமையல் - அசைவம் - குடல் குழம்பு

போன வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான்.(அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்)குடல் குழம்பு, பெப்பர் மட்டன் பிரை.இரண்டும் செய்தேன்..செம டேஸ்ட்.சூடான இட்லிக்கு இது செம மேட்ச்.இதுல குடல் குழம்பு மட்டும் செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
ஆட்டு குடல் - 750 கிராம்
பெ.வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசா வுடன் )
இஞ்சி பூண்டு - விழுது
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி, புதினா - தேவையான அளவு

செய்முறை :
முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் )
குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் நறுக்கின வெங்காயம் வதக்கி கொள்ளவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.(பூண்டு பல் கொஞ்சம்) நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரில் இருந்து வெந்த குடலை இதில் போட்டு பிரட்டவும். இதுவும் நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்...இட்லிக்கு சரியான டிஷ் இது தான்.

 
 
 
 
 

 
 

வெறும் குடல் வறுவல் மட்டும் என்றால் தேங்காய் சேர்க்காமல் இருந்தால் போதும். நன்கு வதக்கியவுடன் பரிமாறலாம்.

இதைவிட மிக எளிய முறை ஒன்று இருக்கிறது.
(பதினைந்து டு இருபது நிமிடம்).

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, இதெல்லாம் போட்டு பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, குடல், உப்பு, மிளகாய்,மஞ்சள், மல்லித்தூள், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா தழை இதெல்லாம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலக்கிவிட்டு மூடி போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விட்டு இறக்கி விடவும்.அப்புறம்  விசில் இறங்கியவுடன் பரிமாறலாம்.
இதுவும் நன்றாக இருக்கும்.ஆச்சி, அன்னபூர்ணா, போன்ற மட்டன் மசாலாக்களையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் ருசி அதிகமாகும்..

இட்லியும் பெப்பர் மட்டன் பிரை : புகைப்படம் மட்டும்.

கிசுகிசு : ஞாயிறு அன்னிக்கு எப்பவும் விசேசம் தான்...காலையில் எட்டு எட்டரை மணிக்குள் குடல் வறுவல் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


24 comments:

  1. மட்டன் சமாசாரம் எல்லாம் இப்ப பாத்து ரசிக்கிறதோடு சரி. கொலஸ்டிரால்.

    குடல் வறுவல், குழம்பு மதுரை காரைக்குடி பகுதியில் சாப்பிட்டிருக்கிறேன். மதுரை பகுதியில் இப்போதெல்லாம் ஆங்கிலோ இந்திய உணவகங்கள் இருக்கின்றனவா தெரியாது - பின்னி எடுத்திருப்பாங்க குடல் வறுவல், குடல் பூண்டு குழம்பு எல்லாம். அந்த நாள்!

    ReplyDelete
  2. வணக்கம் அப்பாதுரை சார்...மலரும் நினைவுகளுக்கு போய்டீங்க...வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  3. காலையில் எட்டு எட்டரை மணிக்குள் குடல் வறுவல் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்.... // ஹஹஹ ரொம்ப இயல்பா இருக்கீங்க.
    சமையல் செய் முறை சூப்பர். பயன்படுத்திக்கொள்கிறேன். குடலுக்குப்பதில் வேறு அசைவ வகை சமையலுக்கு உபயோகித்துக்கொள்கிறேன். குடல் என்றால் எனக்குக் குடலைப்பிரட்டும்.
    படங்கள் கண்களுக்கு விருந்து..

    ReplyDelete
  4. சமையலுக்கு மெனக்கெட்டதை விட போட்டோ எடுக்க ரொம்ப மெனக்கெட்டிருக்கீங்க.... நல்ல பதிவு... நன்றி...

    ReplyDelete
  5. மச்சி எல்லா போட்டோவையும் எடுத்தே, ஆனா அடுப்ப பத்த வக்கிறத வுட்டுட்டியே? என்னமோ போ.

    ReplyDelete
  6. ஒரு லெக் பீஸ் பார்சல்!

    #யோவ்...... இனிமே நமீதா சமையல் பண்றமாரியோ, இல்ல இலியானா இடியாப்பம் செய்யுறமாரியோ போட்டோவப் போட்டாத்தான் வருவேன்... ராஸ்கல்ஸ்

    ReplyDelete
  7. நலம்தானா, நலம்தானா, குடலும் ஈரலும் நலம்தானா??

    சும்மா சொல்லக்கூடாது மச்சி, உன் சமையலோட டேஸ்ட் அமர்க்களம்..அதும் நீ செய்யிற குடல் வறுவல் இருக்கே..ஏ ஒன்! (சாமி சரணம்..!)

    ReplyDelete
  8. சைவமா இருந்தாலும், இந்த பதிவை பாராட்ட ஏன் வந்தேன்னா.. வீட்ல மனைவிக்கு ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்து கிச்சனை ஷேர் பண்ணிகிட்டதால. தொடர்க!

    ReplyDelete
  9. சைவமா இருந்தாலும், இந்த பதிவை பாராட்ட ஏன் வந்தேன்னா.. வீட்ல மனைவிக்கு ஒரு நாள் ரெஸ்ட் கொடுத்து கிச்சனை ஷேர் பண்ணிகிட்டதால. தொடர்க!

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா செய்து இருக்கிங்க... குடல் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது...
    ongoing event: http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html

    ReplyDelete
  11. விஜி /// வாங்க விஜி...குடலுக்கு பதிலா மட்டன், சிக்கன் போட்டாலும் நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  12. ஸ்கூல் பையன் /// வாங்க..வாங்க..போட்டோ எடுக்கிறது ஈஸி..சமைக்கிறது தான் கஷ்டம்...

    ReplyDelete
  13. ஆரூர்மூனா/// மாம்ஸ்...பத்தவைக்க மறந்துட்டேன்..ஹி ஹி ஹி

    ReplyDelete
  14. வெளங்காதவன்///
    யோவ்...குடல் வருவல் செய்யும் போது லெக் பீஸா...? நமிதா இலியானா இருந்தா தான் வருவியா...நீ வெளங்க மாட்ட..

    ReplyDelete
  15. ஆவி// சாமியே சரணம்...இந்த வாரம் உன்னை கூப்பிடல...

    ReplyDelete
  16. உஷா ///
    நம்ம அம்மனிக்கு சப்போர்ட்டா......வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  17. என் இனிய இல்லம் ///
    வாங்க ஒரு நாளைக்கு...நம்ம ஊருக்கு...

    ReplyDelete
  18. ஆகா பெப்பர் மட்டன் ப்ரை, இப்பவே நாவில் எச்சில் ஊறுதே

    ReplyDelete
  19. photos romba arumai ,, parkkave nalla iruku ,, mouth watering

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஒரு நாளைக்கு...சுவையா சாப்பிடலாம்

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....