நம்மவீடு வசந்தபவன்
திருச்சியில் சாரதாஸ் அருகே
சின்னதாய் பத்துக்கு பத்து அறையில் 1969 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வசந்தபவன்
ஹோட்டல் இன்று சென்னையில் பல கிளைகளை பரப்பி ஓரு ஆலமரமாய் நிற்கின்றது.சென்னையில்
மட்டும் கிட்டத்தட்ட பதினான்கு கிளைகளை கொண்டிருக்கிறது.தற்போது கோவையில் தன் முதல்
கிளையை வேரூன்ற தொடங்கியிருக்கிறது.கோவை சாய்பாபா காலனியில் ஸ்டேட் பேங்க் வங்கி
எதிரில் மிக பிரம்மாண்டமாய் இருக்கிறது...ஆட்டோமேடிக் கதவுகள் திறக்க ஏசியின்
சில்லிப்பை உணர்ந்தபடி உள் நுழைந்தோம்.
முதலில் வரவேற்பது ஸ்வீட் ஸ்டால் மற்றும் பார்சல் பகுதி.அதை அடுத்து
உணவக ஏரியாவுக்குள் நுழைந்ததும் மிக விசாலமாக இருக்கிறது ஹால். இன்டீரியர் மிக
நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.யூனிபார்மிட்ட யுவதிகள் அழகாய் பரிமாறிக்
கொண்டிருக்கிறார்கள்.சோபாக்கள் இடப்பட்ட டேபிள்கள் அனைத்தும்
நிரம்பியிருக்கின்றன.
அதிகம் அம்மணிகளே ஆக்ரமித்து இருக்கின்றனர்.நாங்களும்
ஒரு டேபிளை அடைந்தோம்.முதலில் மெனு கார்டு இல்லை.. இல்லை.. ஒரு புத்தகத்தை
கொடுத்துவிட்டு போனார்.புரட்டிப் பார்த்ததில் சைவத்தில் இத்தனை மெனுக்களா என
ஆச்சர்யப்பட்டு போனோம்.
ஸ்டார்டரில் இருந்து ஐஸ்கிரீம்
வரைக்கும் அத்தனையும் இருக்கின்றன.மெனு புத்தகத்தை கொடுத்துவிட்டுப் போன இரண்டாவது
நிமிடமே சர்வர் கையில் டேப் போடு வந்து நிற்க, என்ன பாஸ்..இவ்ளோ பெரிய புத்தகத்தை
படிக்க வேணாமா..போய்ட்டு லேட்டா வாங்க என அவரை அனுப்பிவிட்டு, ஆற அமர எல்லா
மெனுக்களையும் பார்த்தபின், கூட வந்த நண்பர் ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாமா என கேட்க
அதையே முடிவு செய்து ஆர்டர் செய்தோம்.முதலில் வெஜ் கார்ன் சூப் வந்தது.அதை
முடித்தவுடன் தட்டில் வாழை இலை போட்டு அழகாய் வரிசையாய் பொரியல், குழம்பு சாம்பார்
ரசம் இருக்கிற கிண்ணங்கள் ஒரு பத்து பன்னிரண்டு வைக்கப்பட்டு, நடுவில் ஒரு
சப்பாத்தியும் இருக்க, அந்த தட்டினை டேபிளில் வைத்துவிட்டு போக, கூடவே பெரிய
அப்பளம் ஒன்றும் வந்து சேர்ந்தது.
கடைசியாய் பாசிபருப்பு பாயசம் சுவையோ
சுவை.பாசிப்பருப்புடன் சுண்டலை உடைத்து வேக வைத்து சேர்த்திருக்கிறார்கள்.செம
டேஸ்டாக இருக்கிறது.நடு நடுவே திராட்சை பல்லில் பட செம டேஸ்டாய்
இருக்கிறது.கடைசியாய் வெண்ணிலா ஐஸ்கீரிம்.விலை கோவைக்கு ஏற்றார்போல இருக்கிறது.
இரண்டு சாப்பாடு
ரூ.326.சைவப்பிரியர்களுக்கு ஏற்ற ஹோட்டல்.அன்னபூர்ணாவிற்கு செம காம்பெடிசன்
கொடுக்கும்..
அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க.அம்மணிகள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு..ஞாயிற்றுக் கிழமை யாரும் வீட்ல சமைக்கவே மாட்டாங்க போல...
அந்தப்பக்கம் போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க.அம்மணிகள் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு..ஞாயிற்றுக் கிழமை யாரும் வீட்ல சமைக்கவே மாட்டாங்க போல...
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
சைவ ஹோட்டலில் நீங்களா...!!!
ReplyDeleteவம்படியா இழுத்துட்டு போய்ட்டாங்க,,,,
Deleteஇந்த உணவகம் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா காரி துப்பி எழுதியிருக்கார்
ReplyDeleteரசம் மாதிரி குழம்பு , மாட்டு மூத்திரம் மாதிரி ரசம் என்று
புதிதாக ஆரம்பித்து இருக்கிறார்கள் இங்கு.ஓரளவுக்கு சைவம் நன்றாகவே இருக்கிறது.மாட்டு மூத்திரத்திரத்தை அவர் டேஸ்ட் பண்ணியிருப்பார் போல.இதுவரைக்கும் நான் இல்லை
Deleteவேலூரிலும் இந்த கிளை இருக்கு, டேஸ்ட் ஓகே ரகம். ஆனா, சாதம் மட்டும் நெய் மாதிரிதான் பரிமாறப்படுது.
ReplyDeleteஅப்படியா...இங்க நெய் என்பதே இல்லை...
Delete