Friday, September 7, 2012

ஸ்ரீ சித்திர புத்திர எமதர்ம ராஜா கோவில், வெள்ளலூர், கோவை

          கடந்த  ரெண்டு மூணு நாளாவே மனசுக்குள் ஒரு பயம்.வண்டி ஓட்டும் போது கூட கவனம் சிதற ஆரம்பிக்குது.இதை இப்படியே விட்டு விட்டா நாம நாமளா ( நார்மலா ) இருக்க முடியாது இதை எப்படி நிவர்த்தி பண்ணலாம் அப்படின்னு யோசிச்சு பேசாம சரண் அடைந்து விடலாம் என்று எண்ணி போனது
எம தர்ம ராஜா கோவிலுக்கு...
கோவையில் சிங்காநல்லூர் அருகில் இருக்கிற வெள்ளலூர் என்கிற ஊரில் சித்திர குப்தனுடன் குடி கொண்டு இருக்கிறார்  எம தர்ம ராஜா.
சுற்றிலும் வயல் நிறைந்த பகுதியில் தனியாய் இருக்கிறது கோவில்.அருகில் வீடுகளும் இருக்கின்றன.கோவில் மிக அமைதியாக இருக்கிறது.கோவிலின் நிறம் நம்முள் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.வட இந்திய கோவில் போல் கலர் கலராய் வண்ணம் பூச பட்டு இருக்கிறது.
நிசப்தம்..எங்கெங்கும்..
கருவறையில் எம தர்ம ராஜா தனது வாகனத்தில் அமர்ந்த படி இருக்கிறார். அருகில் சித்திர குப்தன்.விருப்பம் போல வணங்கினேன்.விட்டு செல்ல மனம் இல்லாமல்.
கோவிலின் வெளி பிரகாரத்தில் எமனின் தண்டனைகள் என ஒரு பிளக்ஸ் போர்டு வைத்து இருக்கின்றனர்.சகல வித கஷ்டங்கள் அனைத்துக்கும்   பரிகாரம் செய்ய வேண்டிய முறைகள் கொடுத்து இருக்கின்றனர்.
மரண பயம் ஏற்படுவர்களுக்கு இந்த கோவில் ஒரு மருந்தாக இருக்கிறது.
 
 
 
 
 
 
 
                                   (கருவறையில் உள்ளபடியே வெளியில் எம தர்ம ராஜா உருவ படம்)

இக்கோவில்  தல வரலாறு தெரியவில்லை.இக்கோவில்  பிரகாரத்தில் கணபதி சன்னதி ஒன்று இருக்கிறது.இங்கு சித்திரை பவுர்ணமி அன்று சித்திரை வாணி பொங்கல் மிக விமரிசையாக கொண்டாடப்படும்.பரிகாரம் செய்பவர்கள் தினந்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றனர்.வேண்டிய எண்ணம் கைகூடும் என்ற நம்பிக்கை கண்களில் தெரிய வேண்டியபடியே வெளியேறினேன்.
கோவிலுக்கு செல்லும் வழி :கோவை , சிங்காநல்லூர் டு வெள்ளலூர் (6  கி மீ தூரம் இருக்கும்)
நடை திறப்பு : காலை 8 முதல் மாலை 5 வரை.

கண்டிப்பாக  வணங்க வேண்டிய தெய்வம்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்





9 comments:

  1. அருமையான தகவல்.அழகான நடையுடன் பதிவிட்டுள்ளீர்கள்.
    கோவை அவ்வளவு பழக்கமில்லை. புதிதாய் இருக்கிறது. உங்களின் மூலம் பழகிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  2. எமதர்மருக்கு காஞ்சியில் ஒரு கோவில் இருக்கு. இங்கேயும் இருக்கா? ஆச்சரியம்

    ReplyDelete
  3. நண்பா ,பயத்துடன் வணங்க வேண்டிய ஒரே பகவான் .
    பகிர்வு அருமை

    ReplyDelete
  4. முக்கியமான கோவில் ஆச்சே... படங்களுடன் பகிர்வு அருமை... நன்றி...

    ReplyDelete
  5. புதிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அடடா, உங்களை என்னமோ நினைச்சேன். ஆனா, இப்படி பயந்து போய் கோவிலுக்கெல்லாம் போய் வர்றீங்களே!

    ReplyDelete
  6. எமனுக்கென்று உங்கள் ஊரில் ஒரு கோவில்.. புதிய செய்தி. அடுத்த முறை கோவை வரும்போது செல்ல முயற்சிக்கிறேன்...

    ReplyDelete
  7. ஆமா மச்சி வண்டி ஓட்டும் போது எனக்கம் மனம் தள்ளாடுது...

    ஒரு எட்டு போய்ட்டு வரனும்...

    நீங்க ஏன் செல்லும் இடத்தில் எல்லாம் அங்கிருப்பவர்களிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிடக்கூடாது....

    ReplyDelete
  8. கோவையில் தேவர் இன அகமுடைய தேவர் கட்டிய
    ஸ்ரீ சித்திர புத்திர எமதர்ம ராஜா கோவில், வெள்ளலூர், கோவை
    =====================================
    கோயம்புத்தூரில் எமதர்மராஜா கோயிலை வெள்ளளூரில் அகமுடைய தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய பின்பே அதன் தோற்றம் தொடங்கியது.
    நஞ்சப்ப தேவர் என்ற முக்குலத்து அகமுடைய தேவர் என்பவர் தலைமையிலான படைகளை அனுப்பி கொங்கு மண்டத்தை திருமலை நாயக்கர் கைப்பற்றினார், அந்த பகுதியை நிர்வகிக்க தன் படையில் சிறப்பாக வீரம் செறிந்த போர் செய்த தமிழ் போர்க்குடி தேவர் இன நஞ்சப்ப தேவரிடம் அந்த பகுதியை நிர்வகிக்கும் ஆளுநர் பொறுப்பை கொடுத்தார்,ஆகையால் பெருமளவு முக்குலத்து அகமுடைய தேவர் இன மக்கள் சூளூர், இருகூர், கோவை இராமநாதபுரம், குறிச்சி, வெள்ளளூர், பொளுவம்பட்டி, பேரூர் போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    (கோவை மருதமலையை சீரமைத்த வள்ளல் சாண்டோ சின்னப்ப தேவர் போன்ற முக்குலத்து அகமுடைய தேவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் தான், இன்றும் கோவை ராமாநாதபுரம் தேவர் இன மக்கள் பெருன்பான்மையாக வாழ்கிறார்கள் அதன் ரகசியம் இந்த நச்சப்ப தேவர் படையே - மேலும் கொங்கு தீரன் சின்னமலைக்கு போர்ப்பயிற்சி கொடுத்து அவரின் தளபதியாக இருந்த கருப்ப சேர்வை தேவன் இந்த நஞ்சப்ப தேவர் வம்சமே )

    ஒரு நாள் எமதர்மன் நஞ்சப்ப தேவரின் கனவில்தோண்றி தனக்கு நொய்யல் ஆற்றின் அருகே கோயில் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,
    அதன்பிறகு வெள்ளளூரில் அந்த இடத்தை கண்ட நஞ்சப்ப தேவர் அது ஒரு விவசாய நிலம் என்றும் அதன் உரிமையாளர் அந்தனர் என்பதையும் அறிந்து கொண்டார் பின்னர் ஆட்களை அனுப்பி நடந்தவற்றை விளக்கி கூறி அந்த இடத்தை தன் பொறுப்பில் எடுத்து .பின்னர் அந்த இடத்தில் நஞ்சப்ப தேவர் எமனுக்கு கோயில் கட்டினார்.
    மற்ற கடவுளை போல நல்ல நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது இல்லை ஞாயிறுதோறும் 12.30 மணிக்கு எம கண்ட நேரத்தில் தான் இங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.தெற்கு நோக்கி அவருக்கு பிடித்த திசையில் கையில் பாசக்கயிரோடு எருமை மாட்டின் மீது அமர்ந்த படி சிலை உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. அரிய தகவல்கள்...மிக்க நன்றி

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....