அம்பாஸிடர் கார்.
பிளசர் கார் என்றாலே அம்பாசிடர்தான் ஞாபகம் வரும்.முன்னும் பின்னும் ஒரே வடிவமைப்பில் பார்க்கவே அம்சமாய் இருக்கும்.வெள்ளை வெளேரென்ற காரின் நிறம் தான் உடனடி ஞாபகத்திற்கு வரும்.அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் முதல் மந்திரிகளின்
செல்லப்பிள்ளையாக இருந்த அம்பாசிடர் கார் சொகுசுக்கார்களின் வருகையில் ஓரங்கட்டப்பட்டு
உற்பத்தி நிறுத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகில் உத்தர்பாரா என்கிற இடத்தில் சி.கே பிர்லா
குழுமத்தின் ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவன
தயாரிப்பாக வெளிவந்து வெகு காலத்திற்கு இந்திய ரோடுகளை அலங்கரித்த ஓரே கார் அம்பாசிடர்
தான்..
70 ஆண்டுகளாக இந்தியாவில் தன்னந்தனியாய் கோலோச்சிக்கொண்டிருந்த அம்பாசிடர்
கார் தற்போது தன் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டுக்கார்களின் சொகுசுத்தன்மையில் போட்டி போட முடியாமல் இந்த
காரின் ஓட்டம் சுத்தமாய் நின்று போய்விட்டது.
சிறுவயதில் எங்கள் ஊருக்கு வரும் அம்பாசிடர் கார்களின் பின்னால் ஓடி அதனை
வேடிக்கைப்பார்த்ததும், பின் சொந்தமாய் சித்தப்பா வாங்கியதும் சும்மா நிற்கும்
காரில் ஏறி சீன் போட்டதும், அவ்வப்போது அவர்க்கு பெண்பார்க்கும் படலமாக திருச்சி,
முசிறி குளித்தலை, முக்கொம்பு, கரூர் என குடும்பத்தோடு பயணம் செய்ததும் இனி
ஞாபகங்களே...
இனி பழைய திரைப்படங்களிலும், எங்காவது டாக்சி ஸ்டேண்ட்களிலும் கண்டால் தான்
உண்டு....
படிக்காதவன் படத்தில் தலைவர் சொல்வாரே ....லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு......
அதுமாதிரி இனி என்ன சொன்னால் இந்த கார் எடுபடும் ?
நேசங்களுடன்
ஜீவானந்தம்