சும்மா போர் அடிக்குதேன்னு எங்கயாவது போலாம்னு நினைச்சு கோவை கொண்டாட்டம் போனோம். அங்க போனா இன்னும் மோசம் ....காத்து வாங்குது ...
அப்புறம் என்ன பண்றது ...வந்ததுக்கு குளிப்போம் அப்படின்னு வாட்டர் கேம்ஸ்ல விளையாட ஆரம்பிச்சோம் ....அப்புறம் 1 மணிக்கு மேலதான் கூட்டம் வர ஆரம்பிச்சது ....4 மணிக்கு கிளம்பிட்டோம் ...ஒரே பசி .திண்டுக்கல் வேணு பிரியாணி போனா அங்க ஒரே கூட்டம் ...அடப்பாவிகளா ...4 மணிக்கு மேலயும் சாப்பிட றாங்களே ..இது எப்போ செரிச்சு ஜீரணம் ஆகுறது , ராத்திரி எப்போ சாப்பிடுவாங்க .. அப்படின்னு நினைச்சி பேசிட்டு இருந்தோம் ..டேபிள் காலி ஆச்சு உள்ள புகுந்துட்டோம் ...நம்மள மாதிரித்தான் இவங்களும் எங்கயாவது போயிருக்கும் .....என்ன கோலா உருண்டை இல்லாம போய்டுச்சு ...பிரியாணி , வறுவல் சாப்பிட்டு வந்தோம்.
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....