Monday, February 18, 2013

கோவை மெஸ் – ஞானம் காபி பார், கும்பகோணம்


ஒரு காலைப்பொழுதில் 5 மணி அளவில் கும்பகோணம் சென்றபோது பசியின் பார்வை இந்த ஹோட்டலுக்கு திரும்பியது.எம்மை வரவேற்ற நம்ம சொந்தக்காரர் இந்த கடையில் சுவை நன்றாக இருக்கும் ஆனால் சைவம் தான் என்று சொல்லவும் மனம் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் தற்போதைக்கு பசியை தள்ளி வைப்போம் என்று எண்ணி இந்த ஹோட்டலுக்கு சென்றோம்...

ஓட்டு வீடுதான்.சின்ன கடை.நாலைந்து டேபிள் தான் இருக்கிறது. எந்தவித உள் அலங்காரமும் இல்லை..உள் நுழைந்ததும் கடப்பா கல் போட்ட மரபெஞ்சுகள் இருபுறமும் இருக்கின்றன.சுட சுட இட்லி, மற்றும் பூரி ரெடியாகி இருந்தது. அந்த பச்சை இலையில் இட்லி சூடாய் வைக்க ஆவி பறந்தது.இட்லி ரொம்ப மெது மெதுவென்று..சாம்பார் ஊற்றவும் அதில் ஊறிய இட்லி ஒரு விள்ளலை எடுத்து சாப்பிட ஆஹா....என்ன ருசி...
சாம்பாரும் சட்னியும் போட்டி போட்டுக்கொண்டு சுவையை கூட்டின.வெறும் சைவம் தான்..ஆனால் நல்ல சுவை.அக்ரஹாரத்து ஹோட்டல் போன்ற சுவையில் இருக்கிறது.அதுபோலவே பூரி மற்றும் கிழங்கு மசால்.நன்றாக இருக்கிறது.காலையிலேயே கடை நிறைய ஆரம்பிக்கிறது வாடிக்கையாளர்களால்....
அதுபோலவே காபி...சுவை ஊரைக்கூட்டுகிறது.எப்போதும் பால் கொதித்துக்கொண்டு இருக்கிறது.காபி டிகாசன் தனியாய் ஒரு பாத்திரத்தில் ரெடி பண்ணி வைத்திருக்கின்றனர்.சுத்தமான பாலில் டிகாசன் கலந்து கும்பகோணம் காபி தருகின்றனர்.
அந்த காலை வேலையில் இவ்ளோ சீக்கிரமாக கிடைக்காது எந்த கடையிலும்..ஆனால் இந்த ஞானம் மெஸ்ஸில் காலை 5 மணிக்கே ரெடியாகி விடுமாம்.தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் இருக்கிறது.இந்த மெஸ்ஸின் உரிமையாளர் ஒரு இளம் கல்லூரி பேராசிரியர்.

கிசுகிசு : இந்த மெஸ் அருகிலேயே நம்ம கடை இருக்கிறது.வெளிப்பக்கம் பூட்டிய மாதிரி இருக்கிறது.ஆனால் உள்ளே வியாபாரம் பிச்சிக்கிறது.24 hrs சர்வீஸ்.காலை வேலையில் சந்தைக்கு வரும் ஆட்கள் தான் இங்கும் ஒரு வருகையை போடுகின்றனர்.அன்று மட்டும் புதிதாய் கோவையில் இருந்து ஒருத்தர்....ஹி ஹி ஹி

அப்புறம் கும்பகோணத்தில் நகர்வலம் வந்தபோது கிளிக்கியவை..
பூ மார்க்கெட்டில்  விற்பனைக்கு மலர்கள்...
ஏகப்பட்ட கோவில்கள்...சந்து பொந்தெல்லாம் எதாவது கோவில் இருக்கிறது.
 
 
 
 
 
 
 

நேசங்களுடன்
ஜீவானந்தம்

9 comments:

  1. காலை 'முதல்' டிபன் முடிந்தது... நல்ல படங்கள்...

    ReplyDelete
  2. தங்களின் முதல் வருகைக்கு நன்றி..
    எப்பவும் ஆன்லைனிலேயே இருப்பீர்கள் போல..

    ReplyDelete
  3. பார்த்தாலே சாப்பிடணும் போலத் தோணுதே... அருமை...

    ReplyDelete
  4. எளிமை, அருமை!! "பழைய சோறு" என்னாச்சு??

    ReplyDelete
  5. படிக்கும் போதே சுவையாக உள்ளது நண்பரே அறியத்தந்தமைக்கு நன்றி

    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete
  6. அழகிய படங்கள், தகவல்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  7. இந்த, இட்லி பூரி சாம்பார் வடை சட்னியைப் பார்த்து மிரண்டுப்போய் ஊர் திரும்பினார்கள் என் பிள்ளைகள் - தமிழக பயணத்தின் போது.
    நீங்கள் சொல்லும்போதே என் நாவில் எச்சில் ஊறுகிறது.

    ReplyDelete
  8. அருமையானபகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. கிசுகிசு நன்றி மாப்ள

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....