Wednesday, February 20, 2013

சினிமா - விஸ்வரூபம், இலக்கிய சந்திப்பு - 27

விஸ்வரூபம்:
கடந்தவாரம் கோவை சென்ட்ரல் தியேட்டரில் மிகுந்த கூட்டத்தினிடையே காணச்சென்றேன்.திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.எங்கெங்கும் கமலின் அவதாரங்கள்....விஸ்வரூபமாய்...ஏகப்பட்ட தடைகள், வில்லங்கங்கள் என அத்தனையும் தாண்டி வெற்றிகரமாய்.....
புதிதாய் பல மாறுதல்களுடன் சென்ட்ரல் தியேட்டர் அமைக்கப்பட்டு இருக்கிறது.புதிய சவுண்ட் சிஸ்டத்தில் படம் நன்றாக இருக்கிறது. விறுவிறுப்பான, பிரம்மாண்டமான காட்சிகள் என விழிகள் விரிய வைக்கிறது.கமலின் நடிப்பில் இன்னுமொரு பரிமாணம்.
பெண் தன்மை மிக்க கேரக்டரில் மலையாள ஸ்டார் திலீப் சாந்துபொட்டு என்கிற படத்தில் மிக அம்சமாக நடித்து இருப்பார்.அவரின் குரல்வளமும் மேனரிசமும் அந்த படத்திற்கு அழகினை சேர்த்தது.அதில் படம் முழுவதும் பெண் தன்மை மிக்க கேரக்டரில் வாழ்ந்திருப்பார்.
                     
                                  
ஆனால் இந்த படத்தில் ஒரு சில சீன்களில் மட்டுமே தோன்றும் கமல் அவரையே மிஞ்சி இருப்பார்.அந்த ஒரு பாடல் போதும் கமலின் நடிப்பிற்கு...
கமல் எடுக்கும் ஆக்சன் விஸ்வரூபம் இரண்டு இடங்களில்...ஒன்று முதல் சண்டைக்காட்சி...அடுத்து ஹேர் கட் பண்ணி ஸ்டைலாக படியில் இறங்கும் காட்சி...தியேட்டரில் கைதட்டல் விசில் சத்தம் காதை பிளக்கிறது...ஆப்கன் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் டாகுமெண்ட்ரி போல இருந்தாலும் புதிதாய் காணும் ஆவலில் அதுவும் நன்றாகவே செல்கிறது.
படம் எதையுமே யோசிக்க வைக்க விடாமல் காட்சிகளில் ஒன்ற செய்கிறது.இந்த படத்திற்கு எதற்கு தடை விதித்தார்கள் என்று இன்னமும் புரியவில்லை.பல்வேறு உலக சினிமா பார்த்ததில்லை.திரைப்பட அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை..ஆனால் ஒரு சாதாரண ரசிகனாக என்னை ஈர்த்து விட்டிருக்கிறது.(இத்தனைக்கும் நான் கமல் ரசிகன் இல்லை.தீவிர ரஜினி ரசிகன்) மேலும் இந்த பதிவுலகில் பல்வேறு ஜாம்பவான்கள்  விஸ்வரூபம் பத்தி அலசி ஆராய்ந்து விட்டிருக்கின்றனர்.

அவர்களின்  பதிவுகள் தங்களின் பார்வைக்கு...மெட்ராஸ்பவன்

அட்ராசக்க

கோவை ஆவி

பிலாசபி பிரபாகரன்

 ஜாக்கி சேகர்

அகிலா

அப்புறம் முக்கியமா ஒண்ணு...
கோவையில் நடக்கிற இலக்கிய சந்திப்பு விழா 27 ம் நிகழ்வில் கோவை ஞானி தலைமையில் பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு பல்துறை சார்ந்த இலக்கிய ஆர்வலர்களின் மேற்பார்வையில்  கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

உலக சினிமா பாகம் - 1 
அறிமுக உரை 
இயக்குனர் ராம் (கற்றது தமிழ் ) 

உலக சினிமா பாகம் -2
அறிமுக உரை
ஆனந்த் (கோணங்கள் ஃபிலிம் சொஸைடி)
பீர் முகமதுவின் இரண்டு நூல்கள் 
அறிமுகம்
கோவை ஞானி மற்றும் அறிவன்

ரா.முருகனின் நாவல்
அறிமுகம்
சுப்ரபாரதிமணியன்
கோவை பதிவர்களின் புத்தகங்கள்  

அகிலாவின்
 சின்ன சின்ன சிதறல்கள்  குறித்து
கவிஞர் யாழி

கோவை மு சரளாவின்
மெளனத்தின் இரைச்சல்கள் குறித்து
கவிஞர் ப.தியாகு
ஜீவாவின்
கோவை நேரம் குறித்து
பொன் - இளவேனில்


 மேற்கண்ட புத்தகங்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இடம் : எஸ்பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி
மரக்கடை, கோவை
நாள் - 24.2.2013
நேரம் - 10.00 மணி முதல் 1.30 வரை

மற்றும் இன்னொரு நிகழ்ச்சி
தா இளங்கோவனின் ஆவணப்படம் ”மாதவிடாய்” சிறப்புரை மற்றும் திரையிடல் 

கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அதே தினம் மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற உள்ளது.

விரிவான பதிவிற்கு இனியவை கூறல்  பார்க்க

அன்புடன் வரவேற்கிறோம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

8 comments:

 1. இரு நிகழ்ச்சியும் விஸ்வரூபமாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தீவிர ரஜினி ரசிகனா !
  சொல்லவேயில்லை.

  ரஜினி ரசிகனாக இருந்து விஸ்வரூபத்தை
  பாராட்டி எழுதி உள்ளீர்களே...
  நீங்கள்தான் நிஜமான கலை ரசிகன்.

  இலக்கிய நிகழ்ச்சிகள் இரண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் மச்சி.. பரிந்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 4. கவிஞர்களின் ஆய்வில் தங்கள் புத்தகமும் ...வாழ்த்துக்கள் ஜீவா..

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றி! உங்களுடைய புத்தகத்தை விபிபியில் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? என் மெயில்முகவரி thalir.ssb@gmail.com தொடர்பு கொண்டால் மகிழ்வேன்!

  ReplyDelete
 6. விழா சிறக்க வாழ்த்துகள்

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....