Tuesday, March 10, 2015

செல்வமகள் சேமிப்பு திட்டம் - சுகன்யா சம்ரிதி திட்டம்

சுகன்யா சம்ரிதி திட்டம்:
உங்க வீட்டில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இருக்கிறதா...அப்படியென்றால் இந்த திட்டத்தில் உடனே சேருங்கள்..

                                                            பிரதமரால் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் இது.பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர்களோ அல்லது காப்பாளர்களோ ரூபாய் 1000 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.பின் மாதா மாதம் 100ன் மடங்குகளில் குறைந்த பட்சம் 1000 முதல்  அதிக பட்சமாய் 150000 வரை ஒவ்வொரு நிதியாண்டிலும் செலுத்தலாம்.ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.ஆனால் 150000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதன் வருடாந்திர வட்டி விகிதம் 9.1% கூட்டு வட்டி.

சேமிப்பு கணக்கு துவங்கியதில் இருந்து 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.பின் குழந்தைக்கு 21 வயது ஆனவுடன் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தபின் இருப்புத்தொகையில் இருந்து கல்விக்காக அல்லது திருமணத்திற்காக 50% பணம் பெற்றுக்கொள்ளலாம்.
வாரிசு நியமனம் இல்லை.

துவக்க சலுகையாக 2.12.2013 ல் இருந்து பிறந்த பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு
அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தினை அணுகுங்கள்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

  1. அட...!

    முழுத்தொகை எப்போது கிடைக்கும்....?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....