வணக்கம்....
ரொம்ப நாளாகவே இந்த பக்கம் வரமுடிவதில்லை.ஓயாத வேலைப்பளு வேறு.நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்று நினைப்பதோடு சரி.கால நேரம் ஒத்துழைப்பதில்லை.மற்றவர்களின் பதிவுகளையும் படிப்பது அரிதாகிவிட்டது.இனி தொடர்ந்து வாசிப்பை, எழுதுவதை அதிகரிக்க வேண்டும்.
கடந்த வருட தவறுகள் இந்த வருடத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இந்த வருடத்தை அணு அணுவாய் ரசித்து இன்புறவேண்டும் என்கிற ஒரே ஆவல் தான் இருக்கிறது.
இந்த வருடத்தில் முதல் தொடக்கமே ஒரு சோக நிகழ்வு தான்.மிக நெருங்கிய நண்பரின் தாயார் திடீரென்று காலமாகிவிட்டார்.தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள கள்ளக்குறிச்சி வரை பயணமானேன்.இந்த வருடத்தின் முதல் பயணம் சோகத்துடனே ஆரம்பித்து இருக்கிறது...இனி வருபவை அனைத்தும் நல்லவையாக இருக்கட்டும் என நம்புவோம்....
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அப்புறம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
தை பிறந்தால் வழி பிறக்கும்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்ப்வே பொங்கல் வாழ்த்துகளா!? ரைட்டு
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDelete2016 தைப்பொங்கல் நாளில்
ReplyDeleteகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!