Monday, April 18, 2016

ஏர்டெல் - தொடரும் கொள்ளை

ஏர்டெல்லின் தொடரும் கொள்ளை.
ஏர்டெல் இப்போதெல்லாம் சர்வீஸ் சரியில்லை.நெட்வொர்க்கும் சரியாய் கிடைப்பதில்லை.ஆனால் பணம் மட்டும் பிடுங்குவதில் நம்பர் ஒன்.போஸ்ட் பெய்டு கனெக்சன் வச்சிருந்தேன்.பில் கட்டி மாள முடியவில்லை. இஷ்டத்துக்கு மாதா மாதம் பில் வந்து கொண்டிருந்தது.அதனால் சமீபத்தில் பிரிபெய்டாக மாற்றிக்கொண்டேன்.இப்போது தேவைப்படும் போது ரீ சார்ஜ் செய்து கொள்கிறேன்.இரண்டு மாதங்கள் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.அதுக்கப்புறம் தான் ஆரம்பித்தது வினை.

ஏர்டெல் ஆப் ஒன்றை டவுன்லோட் பண்ணி அதில் உள்ள ஆபர்களை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.1ஜிபிக்கு மேல் வாங்கினால் 250 MB ஃபிரீ என்கிற ஆபரில் 3G யை பயன்படுத்திக் கொண்டிருந்தேன்.போன மாதம் 1GB ஆப் மூலம் வாங்கியபோது 250 எம்பி தரவேயில்லை.கஸ்டமர் கேரில் விசாரித்தால் அதுமாதிரி எந்த ஒரு ஆபரும் இல்லை என்கிறார்கள்.நானும் மை ஏர்டெல் ஆப் பில் இருக்கிறது என்கிறேன்.நம்பமாட்டேன் என்கிறார்கள் கஸ்டமர் கேரில்.கடுப்பில் திட்டிவிட்டு போனை வைத்து விட்டேன்.
பிறகு ஆப்பில் உள்ள ஆபர்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து ஏர்டெல் 121 க்கு மெயில் அனுப்பினேன்.எனது பேலன்ஸ் நெட் உபயோகத்தினையும் ஸ்கீரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன்.



அடுத்த நாள் மெயில் வந்தது.அந்த 250 எம்பிக்காக ரூ 100 எனது அக்கௌண்டில் வரவு வைத்து உள்ளதாக சொல்லி இருந்தார்கள்.மெசேஜ் கூட அனுப்பி வைத்து இருந்தார்கள்.ஓ கே மிக்க சந்தோசம் என மெயில் அனுப்பிவிட்டேன்.
இந்த மாதம் அதே பஞ்சாயத்து.மை ஏர்டெல் ஆப் மூலம் ஆபரை தெரிந்து கொண்டு 1 ஜிபி பிளஸ் 250 எம்பி தேர்வு செய்து ஓகே பண்ண, எனது மெயின் பேலன்ஸில் இருந்து பணத்தினை வரவு வைத்துக்கொண்டார்கள்.எவ்ளோ என்று பார்த்தால் ரூ 530 எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து எந்த ஒரு மெசேஜ் மற்றும் லேட்டஸ்ட் டிரான்ஸாக்சன் என்று எதுவும் இல்லை.நெட் பேக்கும் ஆட் ஆகவில்லை.ஆனால் பணம் மட்டும் கழிந்துவிட்டிருக்கிறது.

உடனே கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டால் மீண்டும் அதே விளக்கெண்ணைய் நியாயம் தான் பேசுகிறார்கள்.உங்களுக்கு 265 எடுத்துக்கொண்டார்கள்.மேலும் டேட்டா யூஸ் பண்ணியதால் மெயின் பேலன்ஸில் இருந்து அமெளண்டை எடுத்து இருக்கிறோம் என சொல்ல இன்னும் செம கடுப்பாகி விட்டது.நானே டேட்டா லிமிட் செட் செய்துவிட்டுத்தான் நெட் உபயோகப்படுத்துவேன்.இதில் எப்படி ஐந்து நிமிடத்திற்குள் 265 செலவாகும்.அந்த கஸ்டமர் கேர் ஆளை ஒரு வழி ஆக்கிவிட்டுத்தான் போனை கட் செய்தேன்.

ஏர்டெல்லில் ஃப்ராடுத்தனம் ஏற்கனவே அறிந்திருந்தபடியால் எல்லாத்தையும் முன்பே ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்திருந்தேன்.அதை அப்படியே 121க்கு மெயில் அனுப்பி கொஞ்சம் கன்னாபின்னாவென்று திட்டி அனுப்பியிருந்தேன்.
கஸ்டமர்கேரும் மிக வேஸ்ட் என்று சொல்லியிருந்தேன்.
அப்புறம் எங்கிருந்தோ ஒரு கால் வந்தது.டெக்னிக்கல் மிஸ்டேக் என்று சொல்லி, அந்த பணத்தினை ரீபண்ட் பண்ணியிருப்பதாக சொல்லி முற்றுப்புள்ளி வைத்தனர்.
நாம் மெயில் ஆண்ட்ராய்டு என எல்லாம் அறிந்திருந்தும் நம்மிடம் ஆட்டையை போடுகிறார்கள்.ஒன்றும் தெரியாத எத்தனையோ பேரிடம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருப்பார்கள்.ஒரு பைசா, இரண்டு பைசா என கொள்ளைஅடிக்கிறார்கள்.இந்தியா முழுக்க இப்படி கொள்ளை அடித்தால் எவ்வளவு சம்பாதிப்பார்கள்.
இனி ஏர்டெல்லில் எந்த ஒரு ஆபரையும் பெறுவதற்கு முன்னால், ரீசார்ஜ் செய்வதற்கு முன்னால் உங்களின் அத்தனை பேலன்ஸ்களையும் ஸ்கீரின்சாட் எடுத்துக்கொள்ளுங்கள்.அப்படி எடுக்க முடியவில்லை எனில் மற்றொரு போன் மூலம் போட்டோ எடுத்துக்கொண்டு ரீசார்ஜ் செய்யுங்கள்..
நாம் நினைப்போம் ஒரு ரூபாய் தானே என்று...ஆனால் இந்தியாவில் உள்ள எத்தனை கோடி ஏர்டெல் கனெக்சனில் இருந்து எடுத்தால் எவ்வளவு கிடைக்கும் அவர்களுக்கு...
பிரிபெய்டில் ஜோஸ்யம், கேம்ஸ், கிரிக்கெட், பாட்டு, என எல்லாத்துக்கும் கொள்ளை அடிக்கின்றனர்.தெரியாத்தனமாய் நம்பரை அழுத்திவிட்டாலும் காசு உடனடியாக பிடுங்குகின்றனர்.ஏர்டெல் எனில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.3 ஜி 4ஜி என சொல்கிறார்கள் ஆனால் நெட்வொர்க் என்பது சுத்தமாய் இல்லை.டுபாக்கூர் விளம்பரங்களை போட்டு மக்களை ஏமாத்துகின்றனர்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்




8 comments:

  1. இணையத்தில் airtel.in-ல் ரிஜிஸ்தர் செய்து லாகின் செய்து Manage services-ல் 3ஜி செலக்ட் செய்தால் 1gb 28 நாட்களுக்கு ரூ. 127 தான். மெயின் அக்கவுண்டில் இருந்து கழித்துக் கொள்வார்கள். இது பிரவுசர் மூலமாக லாகின் செய்தால் மட்டுமே. ஆப்பில் இல்லை.

    - மாயவரத்தான்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி...இனி இந்த முறையில் டாப் அப் பண்ணிக்கிறேன்

      Delete
  2. எப்போதும் விழிப்பாகவே இருக்க முடியாது. நான் தனியாக ஒரு வைஃபை டேட்டா கார்டை வாங்கி விட்டேன். பிரச்சினை ஓவர்.

    ReplyDelete
    Replies
    1. வை ஃபை இருக்கு..ஆனாலும் மொபைலில் எங்காவது தேவைப்படும் அல்லவா...

      Delete
  3. இது போல் ஏமாந்தநபர்கள் ஏராளம் ஏராளம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க...இன்னமும் ஏமாறுகிறார்கள்

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....