ஓலா(OLA)வின் கட்டணக்கொள்ளை
கடந்த சனிக்கிழமை அன்று கோவை காந்திபுரம் கணபதி சில்க்ஸ் நிறுத்தத்திலிருந்து கொடிசியா விற்கு ஓலா வில் பயணித்தேன்.
சில்லறைத்தட்டுப்பாடு மற்றும் ட்ரைவர் பேட்டா இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக ஓலா மணி ( OLA MONEY) யில் வரவு செலவு வைத்து இருப்பதால் அன்று சென்ற கட்டணத்தினை உடனடியாக கழித்துக்கொண்டனர். அன்று போன கிலோ மீட்டர் தூரம் 9 கிலோமீட்டருக்குள் இருக்கும்.ரூ 154 ஐ எடுத்துக்கொண்டனர்.
பிறகு கொடிசியாவில் எனது வேலை முடிந்தவுடன் திரும்பவும் ஓலா வில் புக் பண்ணி வண்டி ஏறினேன்.மீண்டும் புறப்பட்ட இடமேதான்.அதே தூரம்.அதே வழித்தடம்.ஆனால் வந்த தொகையோ ரூ.255.எப்படி என்று ட்ரைவரிடம் வினவ, உங்களுக்கு 1 .6 டைம்ஸ் பீக் சார்ஜ் போட்டு இருக்கின்றனர் என்றார்.எனக்கு எதுவும் புக் பண்ணும்போது பீக் சார்ஜ் காட்டவில்லை என்றேன்.புக் பண்ணுவதற்கு முன்னாடி காட்டிட்டா எப்படி புக் பண்ணுவீங்க, புக் பண்ணியவுடன் மெசேஜ் வந்திருக்கும் பாருங்கள் என்றார்.அப்பொழுது தான் கவனித்தேன். அவர்கள் அனுப்பிய மெசேஜில் 1.6 டைம்ஸ் சார்ஜ் செய்யப்படும் என இருக்கிறது.
சனிக்கிழமை அதுவும் மதியம் ஒரு மணிக்கு மேல் மாலை நான்கு வரை அவினாசி சாலையில் அதிகம் வாகன நெரிசல் இருக்காது.இதற்கு எதற்கு பீக் அவர்ஸ் சார்ஜ் போட்டு இருக்கின்றனர்?
ஓலா அப்ளிகேசனில் புக் பண்ணும் போது இந்த மாதிரி பீக் அவர்ஸ் காட்டப்படவில்லை.ஆனால் புக் பண்ணியவுடன் மெசேஜ் அனுப்பி இப்படி கஸ்டமருக்கு தெரியாமலே கொள்ளை அடிக்கின்றனர்.புக் பண்ணுவதற்கு முன்னால் தெரிந்தால் புக் பண்ணாமலே இருப்போம்.அதனால் புக் பண்ணியவுடன் கன்பர்மேசன் மெசேஜில் இந்தமாதிரி பீக் சார்ஜ் போட்டுவிடுகின்றனர்.நாமும் எப்பவும் வரும் ஓலா மெசேஜ் தானே என்று படிக்காமல் விட்டு விடுகிறோம்.
பிறகு ட்ரிப் கேன்சல் பண்ணிவிட்டால் நமது அக்கவுண்ட்டில் இருந்து கேன்சல் சார்ஜ் தொகையை ஆட்டோமேட்டிக்காக எடுத்துவிடுவர் ஓலா மணியில் இருந்து.
வாடிக்கையாளரிடம் ஓலா மணி இல்லை என்றால் எப்போதாவது அவர் பயணிக்கும்போது அது ஒரு மாதமோ அல்லது ஆறு மாதமோ கழித்து இருந்தாலும் அவர் கேன்சல் பண்ண சார்ஜை மீண்டும் பயணிக்கும்போது பில் பண்ணி விடுவர்.பக்கா அப்டேட்
சாப்ட்வேர்.
நீங்கள் பயணிக்கும் தூரத்தில் சிக்னலில் காத்திருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் வெயிட்டிங் சார்ஜ் போடப்படுகிறது.சாரி கொள்ளையடிக்கப்படுகிறது.
ஓலாவின் பெயரில் வண்டி ஓட்டும் வாடகை மற்றும் சொந்த கார்களை வைத்திருப்பவர்களுக்கு பர்சன்டேஜ் அடிப்படையில் பணம் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அதிக பர்சன்டேஜ் எடுத்து கொள்ளை அடிக்கின்றனர்.
ரேட் கார்டில் ஒரு தொகை இருக்கிறது.ஆனால் பில் பண்ணுவதோ வேறு மாதிரி இருக்கிறது.
ஓலா ட்ரைவர்கள் யாராவது தப்பு செய்து காவல் துறை வசம் மாட்டினால், உடனடியாக அவர்களை டெர்மினேட் பண்ணி எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டுவிடுவார்கள்.எதற்கும் கோர்ட் கேஸ் என்று அலைவதில்லை.சமீபத்தில் நடந்த சென்னை சம்பவம் இதற்கு உதாரணம்.
ஆட்டோக்காரன் கொள்ளை அடிக்கிறான்னு இவங்ககிட்ட வந்தால் இவனுங்க டெக்னாலஜியை பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார்கள்.
எளிதில் புக் பண்ணும் முறை, சரியான நேரத்தில் வருவது, ட்ரைவர் ரெஸ்பான்ஸ், துல்லியமான பில் என எல்லாம் இருந்தாலும் ஒரே தூரத்திற்கு, ஒரே வழித்தடத்திற்கு மாறுபட்ட பில் பண்ணுவதில் ஓலாவிற்கு நிகர் ஓலா தான்.கிட்டத்தட்ட
கொடிசியாவிற்கு நிறைய முறை போய் வந்து இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் ஒரு தொகை.
என்னதான் டெக்னாலஜியை பயன்படுத்தி எளிது படுத்தினாலும் கொள்ளை அடிப்பதில் ஏதாவது சந்துபொந்தை கண்டுபிடித்து விடுகின்றனர்.
இனி கொஞ்சம் கொஞ்சமாய் ஓலாவை புறக்கணித்து வேறொரு கால்டாக்ஸிக்கு மாறிவிட வேண்டும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
In some cities, during high demand time, the revised Rate Card for your Ola ride will be shown before you confirm your booking. The revised rate card will indicate the fare increase including the revised base fare, per km charge, and ride time charge.
ReplyDeleteWe at Ola believe in transparent pricing. You will always be informed if peak pricing is applicable on your ride before you confirm your booking.
----- in ola site....Can we approach consumer forum
பீக் அவர்களில் புக் பண்ணும் போது 1.6 அல்லது 1.3 இப்படி காட்டும்.ஆனால் அன்று மதியம் புக் பண்ணியபோது காட்டப்படவில்லை.ஆனால் மெசேஜில் மட்டுமே வந்தது.நிறைய முறை சென்றிருக்கிறேன் மதிய நேரங்களில் அப்போதெல்லாம் பீக் அவர் காட்டப்படவில்லை.
Deleteஓலா ஒண்ணும் தர்மத்துக்கு நடத்தப் படுவதில்லை.
ReplyDeleteநான் பெங்களூரில் சூடு வச்ச மீட்டர் ஆட்டோக்களிலும், சென்னையில், திருச்சியில் மீட்டர் போடாத ஆட்டோக்களிலும் கொள்ளை கொள்ளையாக பணத்தை கொடுத்த பின், இப்போது ஓலாவில் மிகவும் குறைந்த கட்டணத்தில் செல்கிறேன்.
நாமளும் ஒண்ணும் இலவசமா போறதில்லையே.ஒரே தூரத்திற்கு மாறுபட்ட விலை ஏன் என்பது தான் கேள்வி.உண்மையைச் சொன்னால் மற்ற கொள்ளைக்காரர்களுக்கு ஓலா கொள்ளையன் எவ்ளோ பெட்டர்
Deleteஓலா மணி ( OLA MONEY) யில் வரவு செலவு வைத்து இருப்பதால்தான் கொள்ளை அடிக்கிறார்கள்.
ReplyDeleteகண்டிப்பாக.
Deleteஅருமை
ReplyDeleteநன்றி
Delete