Tuesday, March 21, 2017

கரம் - 27

பார்த்த படங்கள்:
புலிமுருகன்: காட்டில் வாழும் மனிதர்களை கொல்லும் புலியை, மக்களுக்காக புலியை கொல்லும் ஒருவனின் கதை.இடையிடையே ஹீரோவின் கஞ்சா கடத்தல், சந்தன மரம் கடத்தல் என ஹீரோயிச காட்சிகள்.இதனிடையே கடத்தல் மாஃபியாவுடன் பகை, போலீஸ் துரத்தல், வில்லன் புலிமுருகனை தேடுவது, புலிமுருகனின் காதல், ஊடல் கூடல், செண்டிமெண்ட், என பக்கா கமர்சியல் படம்.எப்பவும் போல கம்பிளீட் ஆக்டர் மோகன்லால் ஸ்மார்ட்.புலி வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது.படம் பார்த்ததில் இருந்து புலிமுருகனின் தீம் சாங்க் முருகா...முருகா...புலிமுருகா முணுமுணுக்க வைக்கிறது.
  
அச்சமின்றி :
மிகவும் சுவாரஸ்யமான படம்.விறுவிறுப்பான காட்சிகளுடன் மிகவும் நன்றாகவே இருக்கிறது.கல்விக்கொள்ளை பற்றி பேசும் படம்.காமெடி, ஆக்சன் என நன்றாகவே இருக்கிறது.விஜய் வசந்த் பிக்பாக்கெட் காரனாக வாழ்ந்திருக்கிறார்.சமுத்திரகனி போலீஸாக வருகிறார்.படம் மிகவும் அருமை...

துருவங்கள் பதினாறு :
செம கிரைம் திரில்லர் படம்.பார்க்க பார்க்க வியப்பூட்டும் திருப்பங்களை தந்து கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு காட்சியும் அபாரம்.சலிப்பு தராத மேக்கிங்.பாடல்கள் இல்லாத மிக நேர்த்தியான விறுவிறுப்பான அற்புத படைப்பு. ரகுமானின் பெயர் பொறித்து வைக்க வேண்டிய படம்.


படித்தது :
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்..
கொஞ்சம் கூட சுவாரஸ்யமே இல்லாத எழுத்து நடை.பழங்குடிகளை பற்றி அறிந்து கொள்ளலாம் என நினைத்தால் அது சுத்த வேஸ்ட்.கட்டுரைத் தொகுப்பு போல் இருக்கிறது.புத்தகத்தினை படிக்கவே அலுப்பாக இருக்கிறது.பத்துப்பக்கங்கள், அப்புறம் இடையிடையே கொஞ்சம் புரட்டல் அவ்வளவுதான்.எடுத்து வைத்து விட்டேன்.இந்த புத்தகத்தினை ரிட்டன் அனுப்புவது குறித்து யோசிக்கனும்.
இதை எப்படி காலச்சுவடு கிளாசிக் வாழ்க்கை வரலாறு கேட்டகிரியில் சேர்த்தது என்று தெரியவில்லை. காசுக்கு கேடு, பகார்டி வாங்கி இருக்கலாம். மனமாவது சந்தோசம் அடைந்திருக்கும்.




1 comment:

  1. சிறப்பாக அலசி உள்ளீர்கள்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....