Friday, March 10, 2017

பயணம் - கேரளா முதல் கோவை வரை

                               ஒரு வேலை விஷயமாக கேரளா வரை செல்ல வேண்டியிருந்தது.காலை பத்து மணிக்கு மேல் முன்னறிவிப்பின்றி கிளம்பினோம்.கோவையில் இருந்து பாலக்காடு வரை பைபாஸ் ரோடு நன்றாக இருக்கிறது.ஒரு சில இடங்களில் இன்னமும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.பாலக்காடு தாண்டி திருச்சூர் வரை இருக்கிற மலையெல்லாம் உடைத்தும் குடைந்தும் சாலைப்பணி நடந்து கொண்டிருக்கிறது.இருமருங்கிலும் வறட்சியை தாங்கி மரங்கள் இருக்க, வெயிலோ பயங்கரமாய் அடித்தது.முன்பெல்லாம் கேரளா செல்லும் போது மிக பசுமையாய் இருக்கும்.பார்க்க குளிர்ச்சியாய் இருக்கும்.ஆனால் அன்றோ வெறும் வறட்சி..மழை வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக இருந்தன.
                                வடக்கன்சேரி என்கிற ஊர் கொஞ்சம் மலைப்பாதையான ஊர்.அதிகம் டிராபிக் அந்த ஏரியாவில் ஏற்படும்.குதிரைவீரன் சாமி என்கிற கோவில் செல்லும் பாதையிலேயே இருக்கிறது.வாகனங்களில் செல்பவர்கள் காசை விட்டெறிந்து விட்டு செல்வார்கள் அந்த இடத்தில்.அதை பொறுக்குவதற்கென்றே ஒரு சில பேர் அங்கு இருப்பார்கள்.

                                 அந்த கோவிலை ஒட்டி இருபுறமும் மலைகளில் மரங்கள் அடர்த்தியாக இருக்கும்.மிக ரம்மியமாக இருக்கும் பார்க்க.ஆனால் இன்றோ மலைகள் உடைக்கப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்து இருப்பதில் அந்த கோவில் மட்டும் அப்படியே இருக்கிறது.கோவிலைச்சுற்றி சாலை வேலைப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அரைகுறையாக நாங்களும் குதிரை வீரன் சாமியை வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.
                                        திருச்சூர் தாண்டி மண்ணுத்தி என்கிற ஊரை அடைந்தவுடன் தூறல் ஆரம்பித்தது.கடும் வெயிலில் வந்த எங்களுக்கு மிக ரம்மியமாய் இருந்தது திடீர் மழை.அங்கு ஆரம்பித்த மழை கொச்சின், கொல்லம் வரை நீண்டது.கொச்சினில் மழையோடு கேரள அம்மணிகளையும் ரசிக்க வைத்தது  அங்கிருந்த சீதோஷ்ணநிலை.
                        கொச்சினில் இருந்து ஆலப்புழா வரை மழையோடு நாங்களும் பயணித்தோம்.அவ்வப்போது ஆங்காங்கே இளைப்பாறிக் கொண்டோம்.கொல்லம் வரும்வரை ஒவ்வொரு ஊரிலும் கோவில் திருவிழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
திருவிழாக்களில் கேரள ஸ்பெஷல் உடுப்பான கேரளா சாரியை கட்டிக்கொண்டு தேவதைகளாய் கைகளில் விளக்கு தீபத்தினை ஏந்திக்கொண்டு அம்மணிகள் வலம் வந்தது மனதோடு ஒரு மகிழ்வினை ஏற்படுத்தி இருந்தது.யானைகள் வேறு அம்பாரி சுமந்தபடி வரிசையாய் வந்துகொண்டிருந்தன.


கொல்லத்தில் கருநாகப்பள்ளி என்கிற ஊரில் இரவு உணவை ஆரம்பித்தோம்.அரிபத்திரி, சிக்கன் தந்தூரி, பீஃப் ஃப்ரை யுடனும் மேற்படியுடனும் இனிதாய் கழிந்தது.


                கொல்லத்தில் இரவு முழுக்க மழை பெய்து கேரளாவை குளிர வைத்தது.சனி இரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை திருவனந்தபுரம் அடைந்தோம்.

(இன்னும் கொஞ்சம் வரும்)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

8 comments:

  1. கொஞ்சம் அல்ல... நிறையவே வரட்டும்...

    வலைத்தளத்தையும் கவனிக்க ஹீரோ...!

    ReplyDelete
  2. தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

    ReplyDelete
  3. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தங்களது இந்த பதிவு..அருமை
    கேரளா அரிபத்திரி, சிக்கன் தந்தூரி, பீப் பிரை. சாப்பிடவேணும் என மனது ஏங்குது.
    கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில் கொஞ்சம் தணுப்பை தந்தது. கேரளாவில் பெய்கின்ற மழை மேகம், எழினி பைய பைய நகர்ந்து. நம் தமிழகத்திலும் கொட்ட வேண்டும் என்பது என் பெருவிருப்பம்.

    நன்றி..

    கண்ணன். ந
    http://oorsutrii.blogspot.in/

    ReplyDelete
  6. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  7. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete
  8. ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....