இப்போ சமீபத்துல ஒரு ஹோட்டல் திறந்திருக்காங்க.பேரு TWILIGHT.இந்த ஹோட்டலோட சிறப்பம்சம் என்னன்னா இரவு நேர ஹோட்டல்.ஒன்லி டோர் டெலிவரி.நோ டைனிங்.பேஸ்புக்ல அடிக்கடி இந்த கடை கண்ணுக்கு முன்னாடி வந்துட்டு போய்ட்டு இருந்தது.அதிலும் முக்கியமா பர்மா உணவுகள் இருக்கிறதா மெனு கார்டுல பார்த்தேன்.சாப்பிட்டு பார்க்கனும்ங்கிற ஆவலை தூண்டியது.அத்தோ இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை.கேள்விபட்டிருக்கேன்.
சென்னையில் ஒரு சில பகுதிகளில் பயங்கர பேமஸ் என்று.நிறைய யூ டியூப் வீடியோக்களில் இதன் செய்முறையை பார்த்ததோட சரி.எவ்ளோ முறை சென்னை சென்று இருந்தும் சுவைக்க வாய்ப்பு கிடைத்ததில்லை.இந்த கடையின் மெனுவில் பார்த்தவுடன் ஆர்டர் பண்ணேன்.மொபைல் ஆர்டர்தான்.இன்னும் SWIGGY யில் சேரல போல.பர்மீஸ் காம்போ, சிக்கன் 555, ஒரு நெய் சாதம்., சப்பாத்தி..இவ்ளோ தான்.ஒரு மணி நேரம் கரெக்டாக அட்ரஸ் தேடி வந்துவிட்டனர்.பார்சல் கொஞ்சம் ஹெவியாகவே இருந்தது.நல்ல பாக்கிங்.சில்வர் பாயில் பேப்பர்கள்.
பர்மீஸ் காம்போ வில் அத்தோ, மொய்ஞொ சூப், முட்டை பிரை, இன்னொரு அத்தோ கொஞ்சம் கார சாரமாய்..அத்தோ..
நூடூல்ஸ்தான் ஆனால் கொஞ்சம் பெரிய சைஸ்..ஆரஞ்சு நிறத்தில் நூடுல்ஸ்..
இதனுடன் பொரித்த வெங்காயம், உடைந்த அப்பள துண்டுகள் முதன்முறையாய் சாப்பிடுகிறேன்.கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.இதில் என்ன மிஸ்ஸிங் என்றால், ஒரு பேசினில் நூடுல்ஸ், முட்டைக்கோஸ், புதினா, புளிச்சாறு, மிளகாய் சாந்து எல்லாம் சேர்த்து கைகளால் பிரட்டி தரும் அந்த காட்சிதான் மிஸ்ஸிங்.கூடவே வறுத்த பூண்டுகளையும் காணோம்...காரம் குறைவு, புளிப்புத்தன்மை குறைவு.ஆனால் சூப்புடன் இதை பிரட்டி சாப்பிடும் போது நன்றாக இருக்கிறது.அடுத்த அத்தோ செம. சிக்கன் கலந்து நன்கு காரசாரமாக இருக்கிறது.சிக்கன் துண்டுகளுடன் பொரித்த வெங்காயம் பல்லில் படும் போது சுவை நன்றாகவே இருக்கிறது.
சிக்கன் 555. மூன்று பிளேவர்களில் மூன்று சுவைகளில் எலும்பில்லாத சிக்கன்.நல்ல சுவை.ஒவ்வொன்றும் தனித்தனி சுவையில் சூப்பராக இருக்கிறது.நெய் சாதம்..கொஞ்சம் டேஸ்ட் குறைவு.ஓகே ரகம்.பாசுமதி அரிசியோ என நினைக்கின்ற வகையில் அதில் சுவை என்பது இல்லை.முட்டை பிரை அவித்த முட்டையின் இடையில் பொரித்த வெங்காயம்.இரண்டு காம்பினேசனில் சாப்பிட நன்றாகவே இருக்கிறது.சப்பாத்தி மென்மை..பட்டு போன்ற மென்மை.கைபட்டதுமே பிய்ந்து வருகிறது.அவ்வளவு மென்மை.
மொத்தத்தில் இன்று ஆர்டர் பண்ணிய அனைத்தும் நன்றாகவே இருந்தது.கூடுதல் இலவச இணைப்பாக பனானா ஷேக்.இதுவும் நன்றாக இருக்கிறது.விலை வரியுடன் சேர்த்து ரூ.418 ஆனது.அனைத்தும் நன்றாகவே இருக்கிறது.இனி மற்ற உணவு வகைகளை இன்னொரு இரவில் ருசி பார்க்க வேண்டும்.மெனு கார்டில் வேறு ஊர்ப்பட்ட வெரைட்டிகளை கொடுத்திருக்கிறார்கள் எத்தனை இரவு ஆகப்போகிறதோ என்று தெரியவில்லை.பார்ப்போம்.கோவையில் உருவாகியுள்ள இரண்டாவது புதிய இரவு ஹோட்டல்.இரவு 7 மணி முதல் காலை 4 மணி வரை செயல்படும் என்றிருக்கிறார்கள்.டைம் கிடைக்கும் போது சாப்பிட்டு பாருங்கள்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
சூப்பர்...!
ReplyDeleteஅருமை
ReplyDelete