சிதம்பரம் போன போது பக்கத்துல தான் பாண்டிச்சேரி பார்டரு...போனா கொஞ்சம் குவாலிட்டியா நமக்கு வேண்டியதை சாப்பிட்டு விட்டு வரலாம் என்று உள் மனசு சொல்லியதால் தமிழக அரசாங்கத்தின் வருமானத்தை இன்று ஒரு நாள் தள்ளி வைக்கலாம் என்று நினைத்த படியே கடலூருக்கு பஸ் ஏறினேன்.ஆகவேண்டியதை எல்லாம் முடித்து விட்டு, சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போகலாம் என்று நிறைய பேரை கேட்டதில் அனைவரும் சொன்னது இந்த ஹோட்டலைத் தான்.
கடலூரில் உள்ள மிகப் பிரபலமான உணவகம் தேவி ஹோட்டல்.கடலூர் டூ சிதம்பரம் ரோட்டில் இருக்கிறது.கடலூரின் வெயிலுக்கு ஒதுங்க கூடிய ஏசி ரெஸ்டாரண்டாய் இந்த ஹோட்டல் இருக்கிறது.
ஏசி ஹோட்டல்.இன்டீரியர் அமைப்பில் அருமையாக இருக்கிறது.மதிய நேரம் என்பதால் என்னவோ கூட்டம் முண்டியடிக்கிறது.தோதான இடம் தேடி அமர்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் முழுக்க முழுக்க குடும்பங்கள் தான்.வீட்டில் யாரும் சமைப்பதில்லை போல....
உள் அமர்ந்ததும் முதலில் சூப் ஒன்றை தருகிறார்கள்.அதற்கு பின் ஆர்டர்.ஆர்டரிட்டதும் வரிசையாய் வந்து சேர்கிறது.இறால் பிரை. அளவான சைசில் உள்ள இறால்களுடன் மசால் சேர்ந்து செம ருசியாய் இருக்கிறது.அதே போல குடல் வறுவலும்.செம டேஸ்ட்.
அளவான காரத்துடன் மிக மிக அம்சமாய் இருக்கிறது.
இங்கே ஸ்பெசல் என சொல்லப்படும் மல்லி சிக்கன் பயங்கர சுவை.அமோகம்.மொறு மொறுவென்று சில்லியாக சாப்பிட சுவையாக இருக்கிறது.பச்சை பசேலென சுவையுடன் இருக்கிறது.
ஹோட்டல் நிறைந்து இருக்கிறது.கூட்டம் கூட்டமாய் குவிகிறார்கள்.விதவிதமான அனைத்து உணவுகளும் மிக ருசியாய் கிடைக்கிறது.
கடலூரில் தவற விடாத உணவகம் தேவி ஹோட்டல்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....